Sunday, June 12, 2016

Sanggeetham 20 | சங்கீதம் 20 | Psalms 20

ஆபத்துநாளிலே  கர்த்தர்  உமது  ஜெபத்தைக்  கேட்பாராக;  யாக்கோபின்  தேவனுடைய  நாமம்  உமக்கு  உயர்ந்த  அடைக்கலமாவதாக.  (சங்கீதம்  20:1)

aabaththunaa'lilea  karththar  umathu  jebaththaik  keadpaaraaga;  yaakkoabin  theavanudaiya  naamam  umakku  uyarntha  adaikkalamaavathaaga.  (sanggeetham  20:1)

அவர்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  உமக்கு  ஒத்தாசையனுப்பி,  சீயோனிலிருந்து  உம்மை  ஆதரிப்பாராக.  (சங்கீதம்  20:2)

avar  parisuththa  sthalaththilirunthu  umakku  oththaasaiyanuppi,  seeyoanilirunthu  ummai  aatharippaaraaga.  (sanggeetham  20:2)

நீர்  செலுத்தும்  காணிக்கைகளையெல்லாம்  அவர்  நினைத்து,  உமது  சர்வாங்க  தகனபலியைப்  பிரியமாய்  ஏற்றுக்கொள்வாராக.  (சேலா.)  (சங்கீதம்  20:3)

neer  seluththum  kaa'nikkaiga'laiyellaam  avar  ninaiththu,  umathu  sarvaangga  thaganabaliyaip  piriyamaay  eat’rukko'lvaaraaga.  (sealaa.)  (sanggeetham  20:3)

அவர்  உமது  மனவிருப்பத்தின்படி  உமக்குத்  தந்தருளி,  உமது  ஆலோசனைகளையெல்லாம்  நிறைவேற்றுவாராக.  (சங்கீதம்  20:4)

avar  umathu  manaviruppaththinpadi  umakkuth  thantharu'li,  umathu  aaloasanaiga'laiyellaam  ni’raiveat’ruvaaraaga.  (sanggeetham  20:4)

நாங்கள்  உமது  இரட்சிப்பினால்  மகிழ்ந்து,  எங்கள்  தேவனுடைய  நாமத்திலே  கொடியேற்றுவோம்;  உமது  வேண்டுதல்களையெல்லாம்  கர்த்தர்  நிறைவேற்றுவாராக.  (சங்கீதம்  20:5)

naangga'l  umathu  iradchippinaal  magizhnthu,  engga'l  theavanudaiya  naamaththilea  kodiyeat’ruvoam;  umathu  vea'nduthalga'laiyellaam  karththar  ni’raiveat’ruvaaraaga.  (sanggeetham  20:5)

கர்த்தர்  தாம்  அபிஷேகம்பண்ணினவரை  இரட்சிக்கிறார்  என்பதை  இப்பொழுது  அறிந்திருக்கிறேன்;  தமது  வலதுகரம்  செய்யும்  இரட்சிப்பின்  வல்லமைகளைக்  காண்பித்து,  தமது  பரிசுத்த  வானத்திலிருந்து  அவருடைய  ஜெபத்தைக்  கேட்பார்.  (சங்கீதம்  20:6)

karththar  thaam  abisheagampa'n'ninavarai  iradchikki’raar  enbathai  ippozhuthu  a’rinthirukki’rean;  thamathu  valathukaram  seyyum  iradchippin  vallamaiga'laik  kaa'nbiththu,  thamathu  parisuththa  vaanaththilirunthu  avarudaiya  jebaththaik  keadpaar.  (sanggeetham  20:6)

சிலர்  இரதங்களைக்குறித்தும்,  சிலர்  குதிரைகளைக்குறித்தும்  மேன்மைபாராட்டுகிறார்கள்;  நாங்களோ  எங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைக்குறித்தே  மேன்மைபாராட்டுவோம்.  (சங்கீதம்  20:7)

silar  irathangga'laikku’riththum,  silar  kuthiraiga'laikku’riththum  meanmaipaaraattugi’raarga'l;  naangga'loa  engga'l  theavanaagiya  karththarudaiya  naamaththaikku’riththea  meanmaipaaraattuvoam.  (sanggeetham  20:7)

அவர்கள்  முறிந்து  விழுந்தார்கள்;  நாங்களோ  எழுந்து  நிமிர்ந்து  நிற்கிறோம்.  (சங்கீதம்  20:8)

avarga'l  mu’rinthu  vizhunthaarga'l;  naangga'loa  ezhunthu  nimirnthu  ni’rki’roam.  (sanggeetham  20:8)

கர்த்தாவே,  இரட்சியும்;  நாங்கள்  கூப்பிடுகிற  நாளிலே  ராஜா  எங்களுக்குச்  செவிகொடுப்பாராக.  (சங்கீதம்  20:9)

karththaavea,  iradchiyum;  naangga'l  kooppidugi’ra  naa'lilea  raajaa  engga'lukkuch  sevikoduppaaraaga.  (sanggeetham  20:9)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!