Saturday, June 11, 2016

Sanggeetham 2 | சங்கீதம் 2 | Psalms 2

ஜாதிகள்  கொந்தளித்து,  ஜனங்கள்  விருதாக்காரியத்தைச்  சிந்திப்பானேன்?  (சங்கீதம்  2:1)

jaathiga'l  kontha'liththu,  janangga'l  viruthaakkaariyaththaich  sinthippaanean?  (sanggeetham  2:1)

கர்த்தருக்கு  விரோதமாகவும்,  அவர்  அபிஷேகம்பண்ணினவருக்கு  விரோதமாகவும்,  பூமியின்  ராஜாக்கள்  எழும்பிநின்று,  அதிகாரிகள்  ஏகமாய்  ஆலோசனைபண்ணி:  (சங்கீதம்  2:2)

karththarukku  viroathamaagavum,  avar  abisheagampa'n'ninavarukku  viroathamaagavum,  boomiyin  raajaakka'l  ezhumbinin’ru,  athigaariga'l  eagamaay  aaloasanaipa'n'ni:  (sanggeetham  2:2)

அவர்கள்  கட்டுகளை  அறுத்து,  அவர்கள்  கயிறுகளை  நம்மைவிட்டு  எறிந்துபோடுவோம்  என்கிறார்கள்.  (சங்கீதம்  2:3)

avarga'l  kattuga'lai  a’ruththu,  avarga'l  kayi’ruga'lai  nammaivittu  e’rinthupoaduvoam  engi’raarga'l.  (sanggeetham  2:3)

பரலோகத்தில்  வீற்றிருக்கிறவர்  நகைப்பார்;  ஆண்டவர்  அவர்களை  இகழுவார்.  (சங்கீதம்  2:4)

paraloagaththil  veet’rirukki’ravar  nagaippaar;  aa'ndavar  avarga'lai  igazhuvaar.  (sanggeetham  2:4)

அப்பொழுது  அவர்  தமது  கோபத்திலே  அவர்களோடே  பேசி,  தமது  உக்கிரத்திலே  அவர்களைக்  கலங்கப்பண்ணுவார்.  (சங்கீதம்  2:5)

appozhuthu  avar  thamathu  koabaththilea  avarga'loadea  peasi,  thamathu  ukkiraththilea  avarga'laik  kalanggappa'n'nuvaar.  (sanggeetham  2:5)

நான்  என்னுடைய  பரிசுத்த  பர்வதமாகிய  சீயோன்மீதில்  என்னுடைய  ராஜாவை  அபிஷேகம்பண்ணி  வைத்தேன்  என்றார்.  (சங்கீதம்  2:6)

naan  ennudaiya  parisuththa  parvathamaagiya  seeyoanmeethil  ennudaiya  raajaavai  abisheagampa'n'ni  vaiththean  en’raar.  (sanggeetham  2:6)

தீர்மானத்தின்  விவரம்  சொல்லுவேன்;  கர்த்தர்  என்னை  நோக்கி:  நீர்  என்னுடைய  குமாரன்,  இன்று  நான்  உம்மை  ஜெநிப்பித்தேன்;  (சங்கீதம்  2:7)

theermaanaththin  vivaram  solluvean;  karththar  ennai  noakki:  neer  ennudaiya  kumaaran,  in’ru  naan  ummai  jenippiththean;  (sanggeetham  2:7)

என்னைக்  கேளும்,  அப்பொழுது  ஜாதிகளை  உமக்குச்  சுதந்தரமாகவும்,  பூமியின்  எல்லைகளை  உமக்குச்  சொந்தமாகவும்  கொடுப்பேன்;  (சங்கீதம்  2:8)

ennaik  kea'lum,  appozhuthu  jaathiga'lai  umakkuch  suthantharamaagavum,  boomiyin  ellaiga'lai  umakkuch  sonthamaagavum  koduppean;  (sanggeetham  2:8)

இருப்புக்கோலால்  அவர்களை  நொறுக்கி,  குயக்கலத்தைப்போல்  அவர்களை  உடைத்துப்போடுவீர்  என்று  சொன்னார்.  (சங்கீதம்  2:9)

iruppukkoalaal  avarga'lai  no’rukki,  kuyakkalaththaippoal  avarga'lai  udaiththuppoaduveer  en’ru  sonnaar.  (sanggeetham  2:9)

இப்போதும்  ராஜாக்களே,  உணர்வடையுங்கள்,  பூமியின்  நியாயாதிபதிகளே,  எச்சரிக்கையாயிருங்கள்.  (சங்கீதம்  2:10)

ippoathum  raajaakka'lea,  u'narvadaiyungga'l,  boomiyin  niyaayaathibathiga'lea,  echcharikkaiyaayirungga'l.  (sanggeetham  2:10)

பயத்துடனே  கர்த்தரைச்  சேவியுங்கள்,  நடுக்கத்துடனே  களிகூருங்கள்.  (சங்கீதம்  2:11)

bayaththudanea  karththaraich  seaviyungga'l,  nadukkaththudanea  ka'likoorungga'l.  (sanggeetham  2:11)

குமாரன்  கோபங்கொள்ளாமலும்,  நீங்கள்  வழியிலே  அழியாமலும்  இருக்கும்படிக்கு,  அவரை  முத்தஞ்  செய்யுங்கள்;  கொஞ்சக்காலத்திலே  அவருடைய  கோபம்  பற்றியெரியும்;  அவரை  அண்டிக்கொள்ளுகிற  யாவரும்  பாக்கியவான்கள்.  (சங்கீதம்  2:12)

kumaaran  koabangko'l'laamalum,  neengga'l  vazhiyilea  azhiyaamalum  irukkumpadikku,  avarai  muththagn  seyyungga'l;  kognchakkaalaththilea  avarudaiya  koabam  pat’riyeriyum;  avarai  a'ndikko'l'lugi’ra  yaavarum  baakkiyavaanga'l.  (sanggeetham  2:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!