Sunday, June 12, 2016

Sanggeetham 19 | சங்கீதம் 19 | Psalms 19

வானங்கள்  தேவனுடைய  மகிமையை  வெளிப்படுத்துகிறது,  ஆகாயவிரிவு  அவருடைய  கரங்களின்  கிரியையை  அறிவிக்கிறது.  (சங்கீதம்  19:1)

vaanangga'l  theavanudaiya  magimaiyai  ve'lippaduththugi’rathu,  aagaayavirivu  avarudaiya  karangga'lin  kiriyaiyai  a’rivikki’rathu.  (sanggeetham  19:1)

பகலுக்குப்  பகல்  வார்த்தைகளைப்  பொழிகிறது,  இரவுக்கு  இரவு  அறிவைத்  தெரிவிக்கிறது.  (சங்கீதம்  19:2)

pagalukkup  pagal  vaarththaiga'laip  pozhigi’rathu,  iravukku  iravu  a’rivaith  therivikki’rathu.  (sanggeetham  19:2)

அவைகளுக்குப்  பேச்சுமில்லை,  வார்த்தையுமில்லை,  அவைகளின்  சத்தம்  கேட்கப்படுவதுமில்லை.  (சங்கீதம்  19:3)

avaiga'lukkup  peachchumillai,  vaarththaiyumillai,  avaiga'lin  saththam  keadkappaduvathumillai.  (sanggeetham  19:3)

ஆகிலும்  அவைகளின்  சத்தம்  பூமியெங்கும்,  அவைகளின்  வசனங்கள்  பூச்சக்கரத்துக்  கடைசிவரைக்கும்  செல்லுகிறது;  அவைகளில்  சூரியனுக்கு  ஒரு  கூடாரத்தை  ஸ்தாபித்தார்.  (சங்கீதம்  19:4)

aagilum  avaiga'lin  saththam  boomiyenggum,  avaiga'lin  vasanangga'l  poochchakkaraththuk  kadaisivaraikkum  sellugi’rathu;  avaiga'lil  sooriyanukku  oru  koodaaraththai  sthaabiththaar.  (sanggeetham  19:4)

அது  தன்  மணவறையிலிருந்து  புறப்படுகிற  மணவாளனைப்போலிருந்து,  பராக்கிரமசாலியைப்போல்  தன்  பாதையில்  ஓட  மகிழ்ச்சியாயிருக்கிறது.  (சங்கீதம்  19:5)

athu  than  ma'nava’raiyilirunthu  pu’rappadugi’ra  ma'navaa'lanaippoalirunthu,  baraakkiramasaaliyaippoal  than  paathaiyil  oada  magizhchchiyaayirukki’rathu.  (sanggeetham  19:5)

அது  வானங்களின்  ஒரு  முனையிலிருந்து  புறப்பட்டு,  அவைகளின்  மறுமுனைவரைக்கும்  சுற்றியோடுகிறது;  அதின்  காந்திக்கு  மறைவானது  ஒன்றுமில்லை.  (சங்கீதம்  19:6)

athu  vaanangga'lin  oru  munaiyilirunthu  pu’rappattu,  avaiga'lin  ma’rumunaivaraikkum  sut’riyoadugi’rathu;  athin  kaanthikku  ma’raivaanathu  on’rumillai.  (sanggeetham  19:6)

கர்த்தருடைய  வேதம்  குறைவற்றதும்,  ஆத்துமாவை  உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;  கர்த்தருடைய  சாட்சி  சத்தியமும்,  பேதையை  ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.  (சங்கீதம்  19:7)

karththarudaiya  veatham  ku’raivat’rathum,  aaththumaavai  uyirppikki’rathumaayirukki’rathu;  karththarudaiya  saadchi  saththiyamum,  peathaiyai  gnaaniyaakkugi’rathumaayirukki’rathu.  (sanggeetham  19:7)

கர்த்தருடைய  நியாயங்கள்  செம்மையும்,  இருதயத்தைச்  சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது;  கர்த்தருடைய  கற்பனை  தூய்மையும்,  கண்களைத்  தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.  (சங்கீதம்  19:8)

karththarudaiya  niyaayangga'l  semmaiyum,  iruthayaththaich  santhoashippikki’rathumaayirukki’rathu;  karththarudaiya  ka’rpanai  thooymaiyum,  ka'nga'laith  the'livikki’rathumaayirukki’rathu.  (sanggeetham  19:8)

கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயம்  சுத்தமும்,  என்றைக்கும்  நிலைக்கிறதுமாயிருக்கிறது;  கர்த்தருடைய  நியாயங்கள்  உண்மையும்,  அவைகள்  அனைத்தும்  நீதியுமாயிருக்கிறது.  (சங்கீதம்  19:9)

karththarukkup  bayappadugi’ra  bayam  suththamum,  en’raikkum  nilaikki’rathumaayirukki’rathu;  karththarudaiya  niyaayangga'l  u'nmaiyum,  avaiga'l  anaiththum  neethiyumaayirukki’rathu.  (sanggeetham  19:9)

அவைகள்  பொன்னிலும்,  மிகுந்த  பசும்பொன்னிலும்  விரும்பப்படத்தக்கதும்,  தேனிலும்  தேன்கூட்டிலிருந்து  ஒழுகும்  தெளிதேனிலும்  மதுரமுள்ளதுமாய்  இருக்கிறது.  (சங்கீதம்  19:10)

avaiga'l  ponnilum,  miguntha  pasumponnilum  virumbappadaththakkathum,  theanilum  theankoottilirunthu  ozhugum  the'litheanilum  mathuramu'l'lathumaay  irukki’rathu.  (sanggeetham  19:10)

அன்றியும்  அவைகளால்  உமது  அடியேன்  எச்சரிக்கப்படுகிறேன்;  அவைகளைக்  கைக்கொள்ளுகிறதினால்  மிகுந்த  பலன்  உண்டு.  (சங்கீதம்  19:11)

an’riyum  avaiga'laal  umathu  adiyean  echcharikkappadugi’rean;  avaiga'laik  kaikko'l'lugi’rathinaal  miguntha  palan  u'ndu.  (sanggeetham  19:11)

தன்  பிழைகளை  உணருகிறவன்  யார்?  மறைவான  குற்றங்களுக்கு  என்னை  நீங்கலாக்கும்.  (சங்கீதம்  19:12)

than  pizhaiga'lai  u'narugi’ravan  yaar?  ma’raivaana  kut’rangga'lukku  ennai  neenggalaakkum.  (sanggeetham  19:12)

துணிகரமான  பாவங்களுக்கு  உமது  அடியேனை  விலக்கிக்காரும்,  அவைகள்  என்னை  ஆண்டுகொள்ள  ஒட்டாதிரும்;  அப்பொழுது  நான்  உத்தமனாகி,  பெரும்பாதகத்துக்கு  நீங்கலாயிருப்பேன்.  (சங்கீதம்  19:13)

thu'nigaramaana  paavangga'lukku  umathu  adiyeanai  vilakkikkaarum,  avaiga'l  ennai  aa'nduko'l'la  ottaathirum;  appozhuthu  naan  uththamanaagi,  perumpaathagaththukku  neenggalaayiruppean.  (sanggeetham  19:13)

என்  கன்மலையும்  என்  மீட்பருமாகிய  கர்த்தாவே,  என்  வாயின்  வார்த்தைகளும்,  என்  இருதயத்தின்  தியானமும்,  உமது  சமுகத்தில்  பிரீதியாயிருப்பதாக.  (சங்கீதம்  19:14)

en  kanmalaiyum  en  meedparumaagiya  karththaavea,  en  vaayin  vaarththaiga'lum,  en  iruthayaththin  thiyaanamum,  umathu  samugaththil  pireethiyaayiruppathaaga.  (sanggeetham  19:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!