Sunday, June 12, 2016

Sanggeetham 18 | சங்கீதம் 18 | Psalms 18

என்  பெலனாகிய  கர்த்தாவே,  உம்மில்  அன்புகூருவேன்.  (சங்கீதம்  18:1)

en  belanaagiya  karththaavea,  ummil  anbukooruvean.  (sanggeetham  18:1)

கர்த்தர்  என்  கன்மலையும்,  என்  கோட்டையும்,  என்  இரட்சகரும்,  என்  தேவனும்,  நான்  நம்பியிருக்கிற  என்  துருகமும்,  என்  கேடகமும்,  என்  இரட்சணியக்  கொம்பும்,  என்  உயர்ந்த  அடைக்கலமுமாயிருக்கிறார்.  (சங்கீதம்  18:2)

karththar  en  kanmalaiyum,  en  koattaiyum,  en  iradchagarum,  en  theavanum,  naan  nambiyirukki’ra  en  thurugamum,  en  keadagamum,  en  iradcha'niyak  kombum,  en  uyarntha  adaikkalamumaayirukki’raar.  (sanggeetham  18:2)

துதிக்குப்  பாத்திரராகிய  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  அதனால்  என்  சத்துருக்களுக்கு  நீங்கலாகி  இரட்சிக்கப்படுவேன்.  (சங்கீதம்  18:3)

thuthikkup  paaththiraraagiya  karththarai  noakkik  kooppiduvean;  athanaal  en  saththurukka'lukku  neenggalaagi  iradchikkappaduvean.  (sanggeetham  18:3)

மரணக்கட்டுகள்  என்னைச்  சுற்றிக்கொண்டது;  துர்ச்சனப்பிரவாகம்  என்னைப்  பயப்படுத்தினது.  (சங்கீதம்  18:4)

mara'nakkattuga'l  ennaich  sut’rikko'ndathu;  thurchsanappiravaagam  ennaip  bayappaduththinathu.  (sanggeetham  18:4)

பாதாளக்கட்டுகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  மரணக்கண்ணிகள்  என்மேல்  விழுந்தது.  (சங்கீதம்  18:5)

paathaa'lakkattuga'l  ennaich  soozhnthuko'ndathu;  mara'nakka'n'niga'l  enmeal  vizhunthathu.  (sanggeetham  18:5)

எனக்கு  உண்டான  நெருக்கத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு,  என்  தேவனை  நோக்கி  அபயமிட்டேன்;  தமது  ஆலயத்திலிருந்து  என்  சத்தத்தைக்  கேட்டார்,  என்  கூப்பிடுதல்  அவர்  சந்நிதியில்  போய்,  அவர்  செவிகளில்  ஏறிற்று.  (சங்கீதம்  18:6)

enakku  u'ndaana  nerukkaththilea  karththarai  noakkik  kooppittu,  en  theavanai  noakki  abayamittean;  thamathu  aalayaththilirunthu  en  saththaththaik  keattaar,  en  kooppiduthal  avar  sannithiyil  poay,  avar  seviga'lil  ea’rit’ru.  (sanggeetham  18:6)

அப்பொழுது  பூமி  அசைந்து  அதிர்ந்தது,  அவர்  கோபங்கொண்டபடியால்  பர்வதங்களின்  அஸ்திபாரங்கள்  குலுங்கி  அசைந்தது.  (சங்கீதம்  18:7)

appozhuthu  boomi  asainthu  athirnthathu,  avar  koabangko'ndapadiyaal  parvathangga'lin  asthibaarangga'l  kulunggi  asainthathu.  (sanggeetham  18:7)

அவர்  நாசியிலிருந்து  புகை  எழும்பிற்று,  அவர்  வாயிலிருந்து  பட்சிக்கிற  அக்கினி  புறப்பட்டது;  அதனால்  தழல்  மூண்டது.  (சங்கீதம்  18:8)

avar  naasiyilirunthu  pugai  ezhumbit’ru,  avar  vaayilirunthu  padchikki’ra  akkini  pu’rappattathu;  athanaal  thazhal  moo'ndathu.  (sanggeetham  18:8)

வானங்களைத்  தாழ்த்தி  இறங்கினார்;  அவர்  பாதங்களின்கீழ்  காரிருள்  இருந்தது.  (சங்கீதம்  18:9)

vaanangga'laith  thaazhththi  i’rangginaar;  avar  paathangga'linkeezh  kaariru'l  irunthathu.  (sanggeetham  18:9)

கேருபீன்மேல்  ஏறி  வேகமாய்ச்  சென்றார்;  காற்றின்  செட்டைகளைக்  கொண்டு  பறந்தார்.  (சங்கீதம்  18:10)

kearubeenmeal  ea’ri  veagamaaych  sen’raar;  kaat’rin  settaiga'laik  ko'ndu  pa’ranthaar.  (sanggeetham  18:10)

இருளைத்  தமக்கு  மறைவிடமாக்கினார்;  கரும்புனல்களையும்,  ஆகாயத்துக்  கார்மேகங்களையும்  தம்மைச்  சூழக்  கூடாரமாக்கினார்.  (சங்கீதம்  18:11)

iru'laith  thamakku  ma’raividamaakkinaar;  karumpunalga'laiyum,  aagaayaththuk  kaarmeagangga'laiyum  thammaich  soozhak  koodaaramaakkinaar.  (sanggeetham  18:11)

அவருடைய  சந்நிதிப்  பிரகாசத்தினால்  அவருடைய  மேகங்கள்  பறந்து  விலகிற்று,  கல்மழையும்  நெருப்புத்தழலும்  விழுந்தது.  (சங்கீதம்  18:12)

avarudaiya  sannithip  piragaasaththinaal  avarudaiya  meagangga'l  pa’ranthu  vilagit’ru,  kalmazhaiyum  neruppuththazhalum  vizhunthathu.  (sanggeetham  18:12)

கர்த்தர்  வானங்களிலே  குமுறினார்,  உன்னதமானவர்  தமது  சத்தத்தைத்  தொனிக்கப்பண்ணினார்;  கல்மழையும்  நெருப்புத்தழலும்  விழுந்தது.  (சங்கீதம்  18:13)

karththar  vaanangga'lilea  kumu’rinaar,  unnathamaanavar  thamathu  saththaththaith  thonikkappa'n'ninaar;  kalmazhaiyum  neruppuththazhalum  vizhunthathu.  (sanggeetham  18:13)

தம்முடைய  அம்புகளை  எய்து,  அவர்களைச்  சிதறடித்தார்;  மின்னல்களைப்  பிரயோகித்து,  அவர்களைக்  கலங்கப்பண்ணினார்.  (சங்கீதம்  18:14)

thammudaiya  ambuga'lai  eythu,  avarga'laich  sitha’radiththaar;  minnalga'laip  pirayoagiththu,  avarga'laik  kalanggappa'n'ninaar.  (sanggeetham  18:14)

அப்பொழுது  கர்த்தாவே,  உம்முடைய  கண்டிதத்தினாலும்  உம்முடைய  நாசியின்  சுவாசக்காற்றினாலும்  தண்ணீர்களின்  மதகுகள்  திறவுண்டு,  பூதலத்தின்  அஸ்திபாரங்கள்  காணப்பட்டது.  (சங்கீதம்  18:15)

appozhuthu  karththaavea,  ummudaiya  ka'ndithaththinaalum  ummudaiya  naasiyin  suvaasakkaat’rinaalum  tha'n'neerga'lin  mathaguga'l  thi’ravu'ndu,  poothalaththin  asthibaarangga'l  kaa'nappattathu.  (sanggeetham  18:15)

உயரத்திலிருந்து  அவர்  கை  நீட்டி,  என்னைப்  பிடித்து,  ஜலப்பிரவாகத்திலிருக்கிற  என்னைத்  தூக்கிவிட்டார்.  (சங்கீதம்  18:16)

uyaraththilirunthu  avar  kai  neetti,  ennaip  pidiththu,  jalappiravaagaththilirukki’ra  ennaith  thookkivittaar.  (sanggeetham  18:16)

என்னிலும்  அதிக  பலவான்களாயிருந்த  என்  பலத்த  சத்துருவுக்கும்  என்னைப்  பகைக்கிறவர்களுக்கும்  என்னை  விடுவித்தார்.  (சங்கீதம்  18:17)

ennilum  athiga  balavaanga'laayiruntha  en  balaththa  saththuruvukkum  ennaip  pagaikki’ravarga'lukkum  ennai  viduviththaar.  (sanggeetham  18:17)

என்  ஆபத்துநாளில்  எனக்கு  எதிரிட்டு  வந்தார்கள்;  கர்த்தரோ  எனக்கு  ஆதரவாயிருந்தார்.  (சங்கீதம்  18:18)

en  aabaththunaa'lil  enakku  ethirittu  vanthaarga'l;  karththaroa  enakku  aatharavaayirunthaar.  (sanggeetham  18:18)

அவர்  விசாலமான  இடத்திலே  என்னைக்  கொண்டுவந்து,  என்மேல்  பிரியமாயிருந்தபடியால்,  என்னைத்  தப்புவித்தார்.  (சங்கீதம்  18:19)

avar  visaalamaana  idaththilea  ennaik  ko'nduvanthu,  enmeal  piriyamaayirunthapadiyaal,  ennaith  thappuviththaar.  (sanggeetham  18:19)

கர்த்தர்  என்  நீதிக்குத்தக்கதாக  எனக்குப்  பதிலளித்தார்;  என்  கைகளின்  சுத்தத்திற்குத்தக்கதாக  எனக்குச்  சரிக்கட்டினார்.  (சங்கீதம்  18:20)

karththar  en  neethikkuththakkathaaga  enakkup  bathila'liththaar;  en  kaiga'lin  suththaththi’rkuththakkathaaga  enakkuch  sarikkattinaar.  (sanggeetham  18:20)

கர்த்தருடைய  வழிகளைக்  கைக்கொண்டுவந்தேன்;  நான்  என்  தேவனுக்குத்  துரோகம்பண்ணினதில்லை.  (சங்கீதம்  18:21)

karththarudaiya  vazhiga'laik  kaikko'nduvanthean;  naan  en  theavanukkuth  thuroagampa'n'ninathillai.  (sanggeetham  18:21)

அவருடைய  நியாயங்களையெல்லாம்  எனக்கு  முன்பாக  நிறுத்தினேன்;  அவருடைய  பிரமாணங்களை  நான்  தள்ளிப்போடவில்லை.  (சங்கீதம்  18:22)

avarudaiya  niyaayangga'laiyellaam  enakku  munbaaga  ni’ruththinean;  avarudaiya  piramaa'nangga'lai  naan  tha'l'lippoadavillai.  (sanggeetham  18:22)

அவர்  முன்பாக  நான்  மனவுண்மையாயிருந்து,  என்  துர்க்குணத்துக்கு  என்னை  விலக்கிக்  காத்துக்கொண்டேன்.  (சங்கீதம்  18:23)

avar  munbaaga  naan  manavu'nmaiyaayirunthu,  en  thurkku'naththukku  ennai  vilakkik  kaaththukko'ndean.  (sanggeetham  18:23)

ஆகையால்  கர்த்தர்  என்  நீதிக்கும்,  தம்முடைய  கண்களுக்கு  முன்னிருக்கிற  என்  கைகளின்  சுத்தத்திற்கும்  தக்கதாக  எனக்குப்  பலனளித்தார்.  (சங்கீதம்  18:24)

aagaiyaal  karththar  en  neethikkum,  thammudaiya  ka'nga'lukku  munnirukki’ra  en  kaiga'lin  suththaththi’rkum  thakkathaaga  enakkup  palana'liththaar.  (sanggeetham  18:24)

தயவுள்ளவனுக்கு  நீர்  தயவுள்ளவராகவும்,  உத்தமனுக்கு  நீர்  உத்தமராகவும்;  (சங்கீதம்  18:25)

thayavu'l'lavanukku  neer  thayavu'l'lavaraagavum,  uththamanukku  neer  uththamaraagavum;  (sanggeetham  18:25)

புனிதனுக்கு  நீர்  புனிதராகவும்,  மாறுபாடுள்ளவனுக்கு  நீர்  மாறுபடுகிறவராகவும்  தோன்றுவீர்.  (சங்கீதம்  18:26)

punithanukku  neer  punitharaagavum,  maa’rupaadu'l'lavanukku  neer  maa’rupadugi’ravaraagavum  thoan’ruveer.  (sanggeetham  18:26)

தேவரீர்  சிறுமைப்பட்ட  ஜனத்தை  இரட்சிப்பீர்;  மேட்டிமையான  கண்களைத்  தாழ்த்துவீர்.  (சங்கீதம்  18:27)

theavareer  si’rumaippatta  janaththai  iradchippeer;  meattimaiyaana  ka'nga'laith  thaazhththuveer.  (sanggeetham  18:27)

தேவரீர்  என்  விளக்கை  ஏற்றுவீர்;  என்  தேவனாகிய  கர்த்தர்  என்  இருளை  வெளிச்சமாக்குவார்.  (சங்கீதம்  18:28)

theavareer  en  vi'lakkai  eat’ruveer;  en  theavanaagiya  karththar  en  iru'lai  ve'lichchamaakkuvaar.  (sanggeetham  18:28)

உம்மாலே  நான்  ஒரு  சேனைக்குள்  பாய்ந்துபோவேன்;  என்  தேவனாலே  ஒரு  மதிலைத்  தாண்டுவேன்.  (சங்கீதம்  18:29)

ummaalea  naan  oru  seanaikku'l  paaynthupoavean;  en  theavanaalea  oru  mathilaith  thaa'nduvean.  (sanggeetham  18:29)

தேவனுடைய  வழி  உத்தமமானது;  கர்த்தருடைய  வசனம்  புடமிடப்பட்டது;  தம்மை  நம்புகிற  அனைவருக்கும்  அவர்  கேடகமாயிருக்கிறார்.  (சங்கீதம்  18:30)

theavanudaiya  vazhi  uththamamaanathu;  karththarudaiya  vasanam  pudamidappattathu;  thammai  nambugi’ra  anaivarukkum  avar  keadagamaayirukki’raar.  (sanggeetham  18:30)

கர்த்தரையல்லாமல்  தேவன்  யார்?  நம்முடைய  தேவனையன்றிக்  கன்மலையும்  யார்?  (சங்கீதம்  18:31)

karththaraiyallaamal  theavan  yaar?  nammudaiya  theavanaiyan’rik  kanmalaiyum  yaar?  (sanggeetham  18:31)

என்னைப்  பலத்தால்  இடைகட்டி,  என்  வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்  தேவனே.  (சங்கீதம்  18:32)

ennaip  balaththaal  idaikatti,  en  vazhiyaich  sevvaippaduththugi’ravar  theavanea.  (sanggeetham  18:32)

அவர்  என்  கால்களை  மான்களுடைய  கால்களைப்போலாக்கி,  என்னுடைய  உயர்தலங்களில்  என்னை  நிறுத்துகிறார்.  (சங்கீதம்  18:33)

avar  en  kaalga'lai  maanga'ludaiya  kaalga'laippoalaakki,  ennudaiya  uyarthalangga'lil  ennai  ni’ruththugi’raar.  (sanggeetham  18:33)

வெண்கல  வில்லும்  என்  புயங்களால்  வளையும்படி,  என்  கைகளை  யுத்தத்திற்குப்  பழக்குவிக்கிறார்.  (சங்கீதம்  18:34)

ve'ngala  villum  en  puyangga'laal  va'laiyumpadi,  en  kaiga'lai  yuththaththi’rkup  pazhakkuvikki’raar.  (sanggeetham  18:34)

உம்முடைய  இரட்சிப்பின்  கேடகத்தையும்  எனக்குத்  தந்தீர்;  உம்முடைய  வலதுகரம்  என்னைத்  தாங்குகிறது;  உம்முடைய  காருணியம்  என்னைப்  பெரியவனாக்கும்.  (சங்கீதம்  18:35)

ummudaiya  iradchippin  keadagaththaiyum  enakkuth  thantheer;  ummudaiya  valathukaram  ennaith  thaanggugi’rathu;  ummudaiya  kaaru'niyam  ennaip  periyavanaakkum.  (sanggeetham  18:35)

என்  கால்கள்  வழுவாதபடிக்கு,  நான்  நடக்கிற  வழியை  அகலமாக்கினீர்.  (சங்கீதம்  18:36)

en  kaalga'l  vazhuvaathapadikku,  naan  nadakki’ra  vazhiyai  agalamaakkineer.  (sanggeetham  18:36)

என்  சத்துருக்களைப்  பின்தொடர்ந்து,  அவர்களைப்  பிடிப்பேன்;  அவர்களை  நிர்மூலமாக்கும்வரைக்கும்  திரும்பேன்.  (சங்கீதம்  18:37)

en  saththurukka'laip  pinthodarnthu,  avarga'laip  pidippean;  avarga'lai  nirmoolamaakkumvaraikkum  thirumbean.  (sanggeetham  18:37)

அவர்கள்  எழுந்திருக்கமாட்டாதபடிக்கு,  என்  பாதங்களின்கீழ்  விழத்தக்கதாக  அவர்களை  வெட்டினேன்.  (சங்கீதம்  18:38)

avarga'l  ezhunthirukkamaattaathapadikku,  en  paathangga'linkeezh  vizhaththakkathaaga  avarga'lai  vettinean.  (sanggeetham  18:38)

யுத்தத்திற்கு  நீர்  என்னைப்  பலத்தால்  இடைகட்டி,  என்மேல்  எழும்பினவர்களை  என்  கீழ்  மடங்கப்பண்ணினீர்.  (சங்கீதம்  18:39)

yuththaththi’rku  neer  ennaip  balaththaal  idaikatti,  enmeal  ezhumbinavarga'lai  en  keezh  madanggappa'n'nineer.  (sanggeetham  18:39)

நான்  என்  பகைஞரைச்  சங்கரிக்கும்படியாக,  என்  சத்துருக்களின்  பிடரியை  எனக்கு  ஒப்புக்கொடுத்தீர்.  (சங்கீதம்  18:40)

naan  en  pagaignaraich  sanggarikkumpadiyaaga,  en  saththurukka'lin  pidariyai  enakku  oppukkoduththeer.  (sanggeetham  18:40)

அவர்கள்  கூப்பிடுகிறார்கள்,  அவர்களை  இரட்சிப்பார்  ஒருவருமில்லை;  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகிறார்கள்,  அவர்களுக்கு  அவர்  உத்தரவு  கொடுக்கிறதில்லை.  (சங்கீதம்  18:41)

avarga'l  kooppidugi’raarga'l,  avarga'lai  iradchippaar  oruvarumillai;  karththarai  noakkik  kooppidugi’raarga'l,  avarga'lukku  avar  uththaravu  kodukki’rathillai.  (sanggeetham  18:41)

நான்  அவர்களைக்  காற்றுமுகத்திலே  பறக்கிற  தூளாக  இடித்து,  தெருக்களிலுள்ள  சேற்றைப்போல்  அவர்களை  எறிந்துபோடுகிறேன்.  (சங்கீதம்  18:42)

naan  avarga'laik  kaat’rumugaththilea  pa’rakki’ra  thoo'laaga  idiththu,  therukka'lilu'l'la  seat’raippoal  avarga'lai  e’rinthupoadugi’rean.  (sanggeetham  18:42)

ஜனங்களின்  சண்டைகளுக்கு  நீர்  என்னைத்  தப்புவித்து,  ஜாதிகளுக்கு  என்னைத்  தலைவனாக்குகிறீர்;  நான்  அறியாத  ஜனங்கள்  என்னைச்  சேவிக்கிறார்கள்.  (சங்கீதம்  18:43)

janangga'lin  sa'ndaiga'lukku  neer  ennaith  thappuviththu,  jaathiga'lukku  ennaith  thalaivanaakkugi’reer;  naan  a’riyaatha  janangga'l  ennaich  seavikki’raarga'l.  (sanggeetham  18:43)

அவர்கள்  என்  சத்தத்தைக்  கேட்டவுடனே  எனக்குக்  கீழ்ப்படிகிறார்கள்;  அந்நியரும்  எனக்கு  இச்சகம்பேசி  அடங்குகிறார்கள்.  (சங்கீதம்  18:44)

avarga'l  en  saththaththaik  keattavudanea  enakkuk  keezhppadigi’raarga'l;  anniyarum  enakku  ichchagampeasi  adanggugi’raarga'l.  (sanggeetham  18:44)

அந்நியர்  முனைவிழுந்துபோய்,  தங்கள்  அரண்களிலிருந்து  தத்தளிப்பாய்ப்  புறப்படுகிறார்கள்.  (சங்கீதம்  18:45)

anniyar  munaivizhunthupoay,  thangga'l  ara'nga'lilirunthu  thaththa'lippaayp  pu’rappadugi’raarga'l.  (sanggeetham  18:45)

கர்த்தர்  ஜீவனுள்ளவர்;  என்  கன்மலையானவர்  துதிக்கப்படுவாராக;  என்  இரட்சிப்பின்  தேவன்  உயர்ந்திருப்பாராக.  (சங்கீதம்  18:46)

karththar  jeevanu'l'lavar;  en  kanmalaiyaanavar  thuthikkappaduvaaraaga;  en  iradchippin  theavan  uyarnthiruppaaraaga.  (sanggeetham  18:46)

அவர்  எனக்காகப்  பழிக்குப்  பழிவாங்கி,  ஜனங்களை  எனக்குக்  கீழ்ப்படுத்துகிற  தேவனானவர்.  (சங்கீதம்  18:47)

avar  enakkaagap  pazhikkup  pazhivaanggi,  janangga'lai  enakkuk  keezhppaduththugi’ra  theavanaanavar.  (sanggeetham  18:47)

அவரே  என்  சத்துருக்களுக்கு  என்னை  விலக்கி  விடுவிக்கிறவர்;  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்மேல்  என்னை  நீர்  உயர்த்தி,  கொடுமையான  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவிக்கிறீர்.  (சங்கீதம்  18:48)

avarea  en  saththurukka'lukku  ennai  vilakki  viduvikki’ravar;  enakku  viroathamaay  ezhumbugi’ravarga'lmeal  ennai  neer  uyarththi,  kodumaiyaana  manushanukku  ennaith  thappuvikki’reer.  (sanggeetham  18:48)

இதினிமித்தம்  கர்த்தாவே,  ஜாதிகளுக்குள்ளே  உம்மைத்  துதித்து,  உம்முடைய  நாமத்திற்குச்  சங்கீதம்  பாடுவேன்.  (சங்கீதம்  18:49)

ithinimiththam  karththaavea,  jaathiga'lukku'l'lea  ummaith  thuthiththu,  ummudaiya  naamaththi’rkuch  sanggeetham  paaduvean.  (sanggeetham  18:49)

தாம்  ஏற்படுத்தின  ராஜாவுக்கு  மகத்தான  இரட்சிப்பை  அளித்து,  தாம்  அபிஷேகம்பண்ணின  தாவீதுக்கும்  அவன்  சந்ததிக்கும்  சதாகாலமும்  கிருபை  செய்கிறார்.  (சங்கீதம்  18:50)

thaam  ea’rpaduththina  raajaavukku  magaththaana  iradchippai  a'liththu,  thaam  abisheagampa'n'nina  thaaveethukkum  avan  santhathikkum  sathaakaalamum  kirubai  seygi’raar.  (sanggeetham  18:50)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!