Sunday, June 12, 2016

Sanggeetham 17 | சங்கீதம் 17 | Psalms 17

கர்த்தாவே,  நியாயத்தைக்  கேட்டருளும்,  என்  கூப்பிடுதலைக்  கவனியும்;  கபடமில்லாத  உதடுகளினின்று  பிறக்கும்  என்  விண்ணப்பத்திற்குச்  செவிகொடும்.  (சங்கீதம்  17:1)

karththaavea,  niyaayaththaik  keattaru'lum,  en  kooppiduthalaik  kavaniyum;  kabadamillaatha  uthaduga'linin’ru  pi’rakkum  en  vi'n'nappaththi’rkuch  sevikodum.  (sanggeetham  17:1)

உம்முடைய  சந்நிதியிலிருந்து  என்  நியாயம்  வெளிப்படுவதாக;  உம்முடைய  கண்கள்  நியாயமானவைகளை  நோக்குவதாக.  (சங்கீதம்  17:2)

ummudaiya  sannithiyilirunthu  en  niyaayam  ve'lippaduvathaaga;  ummudaiya  ka'nga'l  niyaayamaanavaiga'lai  noakkuvathaaga.  (sanggeetham  17:2)

நீர்  என்  இருதயத்தைப்  பரிசோதித்து,  இராக்காலத்தில்  அதை  விசாரித்து,  என்னைப்  புடமிட்டுப்பார்த்தும்  ஒன்றும்  காணாதிருக்கிறீர்;  என்  வாய்  மீறாதபடிக்குத்  தீர்மானம்பண்ணினேன்.  (சங்கீதம்  17:3)

neer  en  iruthayaththaip  parisoathiththu,  iraakkaalaththil  athai  visaariththu,  ennaip  pudamittuppaarththum  on’rum  kaa'naathirukki’reer;  en  vaay  mee’raathapadikkuth  theermaanampa'n'ninean.  (sanggeetham  17:3)

மனுஷரின்  செய்கைகளைக்குறித்து,  நான்  உம்முடைய  உதடுகளின்  வாக்கினாலே  துஷ்டனுடைய  பாதைகளுக்கு  விலக்கமாய்  என்னைக்  காத்துக்  கொள்ளுகிறேன்.  (சங்கீதம்  17:4)

manusharin  seygaiga'laikku’riththu,  naan  ummudaiya  uthaduga'lin  vaakkinaalea  thushdanudaiya  paathaiga'lukku  vilakkamaay  ennaik  kaaththuk  ko'l'lugi’rean.  (sanggeetham  17:4)

என்  காலடிகள்  வழுவாதபடிக்கு,  என்  நடைகளை  உமது  வழிகளில்  ஸ்திரப்படுத்தும்.  (சங்கீதம்  17:5)

en  kaaladiga'l  vazhuvaathapadikku,  en  nadaiga'lai  umathu  vazhiga'lil  sthirappaduththum.  (sanggeetham  17:5)

தேவனே,  நான்  உம்மை  நோக்கிக்  கெஞ்சுகிறேன்,  எனக்குச்  செவிகொடுக்கிறீர்;  என்னிடத்தில்  உம்முடைய  செவியைச்  சாய்த்து,  என்  வார்த்தையைக்  கேட்டருளும்.  (சங்கீதம்  17:6)

theavanea,  naan  ummai  noakkik  kegnchugi’rean,  enakkuch  sevikodukki’reer;  ennidaththil  ummudaiya  seviyaich  saayththu,  en  vaarththaiyaik  keattaru'lum.  (sanggeetham  17:6)

உம்மை  நம்புகிறவர்களை  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்களினின்று  உமது  வலதுகரத்தினால்  தப்புவித்து  இரட்சிக்கிறவரே!  உம்முடைய  அதிசயமான  கிருபையை  விளங்கப்பண்ணும்.  (சங்கீதம்  17:7)

ummai  nambugi’ravarga'lai  avarga'lukku  viroathamaay  ezhumbugi’ravarga'linin’ru  umathu  valathukaraththinaal  thappuviththu  iradchikki’ravarea!  ummudaiya  athisayamaana  kirubaiyai  vi'langgappa'n'num.  (sanggeetham  17:7)


கண்மணியைப்போல  என்னைக்  காத்தருளும்.  (சங்கீதம்  17:8)

ka'nma'niyaippoala  ennaik  kaaththaru'lum.  (sanggeetham  17:8)

என்னை  ஒடுக்குகிற  துன்மார்க்கருக்கும்,  என்னைச்  சூழ்ந்துகொள்ளுகிற  என்  பிராணப்பகைஞருக்கும்  மறைவாக,  உம்முடைய  செட்டைகளின்  நிழலிலே  என்னைக்  காப்பாற்றும்.  (சங்கீதம்  17:9)

ennai  odukkugi’ra  thunmaarkkarukkum,  ennaich  soozhnthuko'l'lugi’ra  en  piraa'nappagaignarukkum  ma’raivaaga,  ummudaiya  settaiga'lin  nizhalilea  ennaik  kaappaat’rum.  (sanggeetham  17:9)

அவர்கள்  நிணந்துன்னியிருக்கிறார்கள்,  தங்கள்  வாயினால்  வீம்பு  பேசுகிறார்கள்.  (சங்கீதம்  17:10)

avarga'l  ni'nanthunniyirukki’raarga'l,  thangga'l  vaayinaal  veembu  peasugi’raarga'l.  (sanggeetham  17:10)

நாங்கள்  செல்லும்  பாதைகளில்  இப்பொழுது  எங்களை  வளைந்துகொண்டார்கள்;  எங்களைத்  தரையிலே  தள்ளும்படி  அவர்கள்  கண்கள்  எங்களை  நோக்கிக்கொண்டிருக்கிறது.  (சங்கீதம்  17:11)

naangga'l  sellum  paathaiga'lil  ippozhuthu  engga'lai  va'lainthuko'ndaarga'l;  engga'laith  tharaiyilea  tha'l'lumpadi  avarga'l  ka'nga'l  engga'lai  noakkikko'ndirukki’rathu.  (sanggeetham  17:11)

பீறுகிறதற்கு  ஆவலுள்ள  சிங்கத்துக்கும்,  மறைவிடங்களில்  பதிவிருக்கிற  பாலசிங்கத்துக்கும்  ஒப்பாயிருக்கிறார்கள்.  (சங்கீதம்  17:12)

pee’rugi’ratha’rku  aavalu'l'la  singgaththukkum,  ma’raividangga'lil  pathivirukki’ra  baalasinggaththukkum  oppaayirukki’raarga'l.  (sanggeetham  17:12)

கர்த்தாவே,  நீர்  எழுந்திருந்து,  அவனுக்கு  எதிரிட்டு,  அவனை  மடங்கடியும்;  கர்த்தாவே,  என்  ஆத்துமாவைத்  துன்மார்க்கனுடைய  கைக்கு  உம்முடைய  பட்டயத்தினால்  தப்புவியும்.  (சங்கீதம்  17:13)

karththaavea,  neer  ezhunthirunthu,  avanukku  ethirittu,  avanai  madanggadiyum;  karththaavea,  en  aaththumaavaith  thunmaarkkanudaiya  kaikku  ummudaiya  pattayaththinaal  thappuviyum.  (sanggeetham  17:13)

மனுஷருடைய  கைக்கும்,  இம்மையில்  தங்கள்  பங்கைப்  பெற்றிருக்கிற  உலகமக்களின்  கைக்கும்  உம்முடைய  கரத்தினால்  என்னைத்  தப்புவியும்;  அவர்கள்  வயிற்றை  உமது  திரவியத்தினால்  நிரப்புகிறீர்;  அவர்கள்  புத்திரபாக்கியத்தினால்  திருப்தியடைந்து,  தங்களுக்கு  மீதியான  பொருளைத்  தங்கள்  குழந்தைகளுக்கு  வைக்கிறார்கள்.  (சங்கீதம்  17:14)

manusharudaiya  kaikkum,  immaiyil  thangga'l  panggaip  pet’rirukki’ra  ulagamakka'lin  kaikkum  ummudaiya  karaththinaal  ennaith  thappuviyum;  avarga'l  vayit’rai  umathu  thiraviyaththinaal  nirappugi’reer;  avarga'l  puththirabaakkiyaththinaal  thirupthiyadainthu,  thangga'lukku  meethiyaana  poru'laith  thangga'l  kuzhanthaiga'lukku  vaikki’raarga'l.  (sanggeetham  17:14)

நானோ  நீதியில்  உம்முடைய  முகத்தைத்  தரிசிப்பேன்;  நான்  விழிக்கும்போது  உமது  சாயலால்  திருப்தியாவேன்.  (சங்கீதம்  17:15)

naanoa  neethiyil  ummudaiya  mugaththaith  tharisippean;  naan  vizhikkumpoathu  umathu  saayalaal  thirupthiyaavean.  (sanggeetham  17:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!