Sunday, June 12, 2016

Sanggeetham 16 | சங்கீதம் 16 | Psalms 16

தேவனே,  என்னைக்  காப்பாற்றும்,  உம்மை  நம்பியிருக்கிறேன்.  (சங்கீதம்  16:1)

theavanea,  ennaik  kaappaat’rum,  ummai  nambiyirukki’rean.  (sanggeetham  16:1)

என்  நெஞ்சமே,  நீ  கர்த்தரை  நோக்கி:  தேவரீர்  என்  ஆண்டவராயிருக்கிறீர்,  என்  செல்வம்  உமக்கு  வேண்டியதாயிராமல்;  (சங்கீதம்  16:2)

en  negnchamea,  nee  karththarai  noakki:  theavareer  en  aa'ndavaraayirukki’reer,  en  selvam  umakku  vea'ndiyathaayiraamal;  (sanggeetham  16:2)

பூமியிலுள்ள  பரிசுத்தவான்களுக்கும்,  நான்  என்  முழுப்  பிரியத்தையும்  வைத்திருக்கிற  மகாத்துமாக்களுக்கும்,  அது  வேண்டியதாயிருக்கிறது  என்று  சொன்னாய்.  (சங்கீதம்  16:3)

boomiyilu'l'la  parisuththavaanga'lukkum,  naan  en  muzhup  piriyaththaiyum  vaiththirukki’ra  mahaaththumaakka'lukkum,  athu  vea'ndiyathaayirukki’rathu  en’ru  sonnaay.  (sanggeetham  16:3)

அந்நிய  தேவனை  நாடிப்  பின்பற்றுகிறவர்களுக்கு  வேதனைகள்  பெருகும்;  அவர்கள்  செலுத்துகிற  இரத்த  பானபலிகளை  நான்  செலுத்தமாட்டேன்,  அவர்கள்  நாமங்களை  என்  உதடுகளினால்  உச்சரிக்கவுமாட்டேன்.  (சங்கீதம்  16:4)

anniya  theavanai  naadip  pinpat’rugi’ravarga'lukku  veathanaiga'l  perugum;  avarga'l  seluththugi’ra  iraththa  baanabaliga'lai  naan  seluththamaattean,  avarga'l  naamangga'lai  en  uthaduga'linaal  uchcharikkavumaattean.  (sanggeetham  16:4)

கர்த்தர்  என்  சுதந்தரமும்  என்  பாத்திரத்தின்  பங்குமானவர்;  என்  சுதந்தரத்தை  தேவரீர்  காப்பாற்றுகிறீர்.  (சங்கீதம்  16:5)

karththar  en  suthantharamum  en  paaththiraththin  panggumaanavar;  en  suthantharaththai  theavareer  kaappaat’rugi’reer.  (sanggeetham  16:5)

நேர்த்தியான  இடங்களில்  எனக்குப்  பங்கு  கிடைத்தது;  ஆம்,  சிறப்பான  சுதந்தரம்  எனக்கு  உண்டு.  (சங்கீதம்  16:6)

nearththiyaana  idangga'lil  enakkup  panggu  kidaiththathu;  aam,  si’rappaana  suthantharam  enakku  u'ndu.  (sanggeetham  16:6)

எனக்கு  ஆலோசனை  தந்த  கர்த்தரைத்  துதிப்பேன்;  இராக்காலங்களிலும்  என்  உள்ளிந்திரியங்கள்  என்னை  உணர்த்தும்.  (சங்கீதம்  16:7)

enakku  aaloasanai  thantha  karththaraith  thuthippean;  iraakkaalangga'lilum  en  u'l'linthiriyangga'l  ennai  u'narththum.  (sanggeetham  16:7)

கர்த்தரை  எப்பொழுதும்  எனக்கு  முன்பாக  வைத்திருக்கிறேன்;  அவர்  என்  வலதுபாரிசத்தில்  இருக்கிறபடியால்  நான்  அசைக்கப்படுவதில்லை.  (சங்கீதம்  16:8)

karththarai  eppozhuthum  enakku  munbaaga  vaiththirukki’rean;  avar  en  valathupaarisaththil  irukki’rapadiyaal  naan  asaikkappaduvathillai.  (sanggeetham  16:8)

ஆகையால்  என்  இருதயம்  பூரித்தது,  என்  மகிமை  களிகூர்ந்தது;  என்  மாம்சமும்  நம்பிக்கையோடே  தங்கியிருக்கும்.  (சங்கீதம்  16:9)

aagaiyaal  en  iruthayam  pooriththathu,  en  magimai  ka'likoornthathu;  en  maamsamum  nambikkaiyoadea  thanggiyirukkum.  (sanggeetham  16:9)

என்  ஆத்துமாவைப்  பாதாளத்தில்  விடீர்;  உம்முடைய  பரிசுத்தவானை  அழிவைக்  காணவொட்டீர்.  (சங்கீதம்  16:10)

en  aaththumaavaip  paathaa'laththil  videer;  ummudaiya  parisuththavaanai  azhivaik  kaa'navotteer.  (sanggeetham  16:10)

ஜீவமார்க்கத்தை  எனக்குத்  தெரியப்படுத்துவீர்;  உம்முடைய  சமுகத்தில்  பரிபூரண  ஆனந்தமும்,  உம்முடைய  வலதுபாரிசத்தில்  நித்திய  பேரின்பமும்  உண்டு.  (சங்கீதம்  16:11)

jeevamaarkkaththai  enakkuth  theriyappaduththuveer;  ummudaiya  samugaththil  paripoora'na  aananthamum,  ummudaiya  valathupaarisaththil  niththiya  pearinbamum  u'ndu.  (sanggeetham  16:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!