Sunday, June 12, 2016

Sanggeetham 14 | சங்கீதம் 14 | Psalms 14

தேவன்  இல்லை  என்று  மதிகெட்டவன்  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்ளுகிறான்.  அவர்கள்  தங்களைக்  கெடுத்து,  அருவருப்பான  கிரியைகளைச்  செய்துவருகிறார்கள்;  நன்மைசெய்கிறவன்  ஒருவனும்  இல்லை.  (சங்கீதம்  14:1)

theavan  illai  en’ru  mathikettavan  than  iruthayaththil  sollikko'l'lugi’raan.  avarga'l  thangga'laik  keduththu,  aruvaruppaana  kiriyaiga'laich  seythuvarugi’raarga'l;  nanmaiseygi’ravan  oruvanum  illai.  (sanggeetham  14:1)

தேவனைத்  தேடுகிற  உணர்வுள்ளவன்  உண்டோ  என்று  பார்க்க,  கர்த்தர்  பரலோகத்திலிருந்து  மனுபுத்திரரைக்  கண்ணோக்கினார்.  (சங்கீதம்  14:2)

theavanaith  theadugi’ra  u'narvu'l'lavan  u'ndoa  en’ru  paarkka,  karththar  paraloagaththilirunthu  manupuththiraraik  ka'n'noakkinaar.  (sanggeetham  14:2)

எல்லாரும்  வழிவிலகி,  ஏகமாய்க்  கெட்டுப்போனார்கள்;  நன்மைசெய்கிறவன்  இல்லை,  ஒருவனாகிலும்  இல்லை.  (சங்கீதம்  14:3)

ellaarum  vazhivilagi,  eagamaayk  kettuppoanaarga'l;  nanmaiseygi’ravan  illai,  oruvanaagilum  illai.  (sanggeetham  14:3)

அக்கிரமக்காரரில்  ஒருவனுக்கும்  அறிவுஇல்லையோ?  அப்பத்தைப்  பட்சிக்கிறதுபோல,  என்  ஜனத்தைப்  பட்சிக்கிறார்களே;  அவர்கள்  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுகிறதில்லை.  (சங்கீதம்  14:4)

akkiramakkaararil  oruvanukkum  a’rivuillaiyoa?  appaththaip  padchikki’rathupoala,  en  janaththaip  padchikki’raarga'lea;  avarga'l  karththaraith  thozhuthuko'l'lugi’rathillai.  (sanggeetham  14:4)

அங்கே  அவர்கள்  மிகவும்  பயந்தார்கள்;  தேவன்  நீதிமானுடைய  சந்ததியோடே  இருக்கிறாரே.  (சங்கீதம்  14:5)

anggea  avarga'l  migavum  bayanthaarga'l;  theavan  neethimaanudaiya  santhathiyoadea  irukki’raarea.  (sanggeetham  14:5)

சிறுமைப்பட்டவனுக்குக்  கர்த்தர்  அடைக்கலமாயிருக்கிறார்  என்று  சொல்லி,  நீங்கள்  அவனுடைய  ஆலோசனையை  அலட்சியம்பண்ணினீர்கள்.  (சங்கீதம்  14:6)

si’rumaippattavanukkuk  karththar  adaikkalamaayirukki’raar  en’ru  solli,  neengga'l  avanudaiya  aaloasanaiyai  aladchiyampa'n'nineerga'l.  (sanggeetham  14:6)

சீயோனிலிருந்து  இஸ்ரவேலுக்கு  இரட்சிப்பு  வருவதாக;  கர்த்தர்  தம்முடைய  ஜனத்தின்  சிறையிருப்பைத்  திருப்பும்போது,  யாக்கோபுக்குக்  களிப்பும்,  இஸ்ரவேலுக்கு  மகிழ்ச்சியும்  உண்டாகும்.  (சங்கீதம்  14:7)

seeyoanilirunthu  isravealukku  iradchippu  varuvathaaga;  karththar  thammudaiya  janaththin  si’raiyiruppaith  thiruppumpoathu,  yaakkoabukkuk  ka'lippum,  isravealukku  magizhchchiyum  u'ndaagum.  (sanggeetham  14:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!