Thursday, June 30, 2016

Sanggeetham 110 | சங்கீதம் 110 | Psalms 110

கர்த்தர்  என்  ஆண்டவரை  நோக்கி:  நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்,  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்றார்.  (சங்கீதம்  110:1)

karththar  en  aa'ndavarai  noakki:  naan  ummudaiya  saththurukka'lai  umakkup  paathapadiyaakkip  poadumvaraikkum,  neer  ennudaiya  valathupaarisaththil  udkaarum  en’raar.  (sanggeetham  110:1)

கர்த்தர்  சீயோனிலிருந்து  உமது  வல்லமையின்  செங்கோலை  அனுப்புவார்;  நீர்  உம்முடைய  சத்துருக்களின்  நடுவே  ஆளுகைசெய்யும்.  (சங்கீதம்  110:2)

karththar  seeyoanilirunthu  umathu  vallamaiyin  senggoalai  anuppuvaar;  neer  ummudaiya  saththurukka'lin  naduvea  aa'lugaiseyyum.  (sanggeetham  110:2)

உமது  பராக்கிரமத்தின்  நாளிலே  உம்முடைய  ஜனங்கள்  மனப்பூர்வமும்  பரிசுத்த  அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்;  விடியற்காலத்துக்  கர்ப்பத்தில்  பிறக்கும்  பனிக்குச்  சமானமாய்  உம்முடைய  யௌவன  ஜனம்  உமக்குப்  பிறக்கும்.  (சங்கீதம்  110:3)

umathu  baraakkiramaththin  naa'lilea  ummudaiya  janangga'l  manappoorvamum  parisuththa  alanggaaramumu'l'lavarga'laayiruppaarga'l;  vidiya’rkaalaththuk  karppaththil  pi’rakkum  panikkuch  samaanamaay  ummudaiya  yauvana  janam  umakkup  pi’rakkum.  (sanggeetham  110:3)

நீர்  மெல்கிசேதேக்கின்  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  கர்த்தர்  ஆணையிட்டார்;  மனம்  மாறாமலுமிருப்பார்.  (சங்கீதம்  110:4)

neer  melkiseatheakkin  mu’raimaiyinpadi  en’ren’raikkum  aasaariyaraayirukki’reer  en’ru  karththar  aa'naiyittaar;  manam  maa’raamalumiruppaar.  (sanggeetham  110:4)

உம்முடைய  வலதுபாரிசத்திலிருக்கிற  ஆண்டவர்,  தமது  கோபத்தின்  நாளிலே  ராஜாக்களை  வெட்டுவார்.  (சங்கீதம்  110:5)

ummudaiya  valathupaarisaththilirukki’ra  aa'ndavar,  thamathu  koabaththin  naa'lilea  raajaakka'lai  vettuvaar.  (sanggeetham  110:5)

அவர்  ஜாதிகளுக்குள்  நியாயந்தீர்ப்பார்;  எல்லா  இடங்களையும்  பிரேதங்களால்  நிரப்புவார்;  விஸ்தாரமான  தேசங்களின்மேல்  தலைவர்களாயிருக்கிறவர்களை  நொறுக்கிப்போடுவார்.  (சங்கீதம்  110:6)

avar  jaathiga'lukku'l  niyaayantheerppaar;  ellaa  idangga'laiyum  pireathangga'laal  nirappuvaar;  visthaaramaana  theasangga'linmeal  thalaivarga'laayirukki’ravarga'lai  no’rukkippoaduvaar.  (sanggeetham  110:6)

வழியிலே  அவர்  நதியில்  குடிப்பார்;  ஆகையால்  அவர்  தமது  தலையை  எடுப்பார்.  (சங்கீதம்  110:7)

vazhiyilea  avar  nathiyil  kudippaar;  aagaiyaal  avar  thamathu  thalaiyai  eduppaar.  (sanggeetham  110:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!