Thursday, June 30, 2016

Sanggeetham 109 | சங்கீதம் 109 | Psalms 109

நான்  துதிக்கும்  தேவனே,  மவுனமாயிராதேயும்.  (சங்கீதம்  109:1)

naan  thuthikkum  theavanea,  mavunamaayiraatheayum.  (sanggeetham  109:1)

துன்மார்க்கனுடைய  வாயும்,  கபட்டுவாயும்,  எனக்கு  விரோதமாய்த்  திறந்திருக்கிறது;  கள்ளநாவினால்  என்னோடே  பேசுகிறார்கள்.  (சங்கீதம்  109:2)

thunmaarkkanudaiya  vaayum,  kabattuvaayum,  enakku  viroathamaayth  thi’ranthirukki’rathu;  ka'l'lanaavinaal  ennoadea  peasugi’raarga'l.  (sanggeetham  109:2)

பகையுண்டாக்கும்  வார்த்தைகளால்  என்னைச்  சூழ்ந்துகொண்டு,  முகாந்தரமில்லாமல்  என்னோடே  போர்செய்கிறார்கள்.  (சங்கீதம்  109:3)

pagaiyu'ndaakkum  vaarththaiga'laal  ennaich  soozhnthuko'ndu,  mugaantharamillaamal  ennoadea  poarseygi’raarga'l.  (sanggeetham  109:3)

என்  சிநேகத்துக்குப்  பதிலாக  என்னை  விரோதிக்கிறார்கள்,  நானோ  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.  (சங்கீதம்  109:4)

en  sineagaththukkup  bathilaaga  ennai  viroathikki’raarga'l,  naanoa  jebampa'n'nikko'ndirukki’rean.  (sanggeetham  109:4)

நன்மைக்குப்  பதிலாக  எனக்குத்  தீமைசெய்கிறார்கள்,  என்  சிநேகத்துக்குப்  பதிலாக  என்னைப்  பகைக்கிறார்கள்.  (சங்கீதம்  109:5)

nanmaikkup  bathilaaga  enakkuth  theemaiseygi’raarga'l,  en  sineagaththukkup  bathilaaga  ennaip  pagaikki’raarga'l.  (sanggeetham  109:5)

அவனுக்கு  மேலாகத்  துஷ்டனை  ஏற்படுத்திவையும்,  சாத்தான்  அவன்  வலதுபக்கத்தில்  நிற்பானாக.  (சங்கீதம்  109:6)

avanukku  mealaagath  thushdanai  ea’rpaduththivaiyum,  saaththaan  avan  valathupakkaththil  ni’rpaanaaga.  (sanggeetham  109:6)

அவன்  நியாயம்  விசாரிக்கப்படும்போது  குற்றவாளியாகக்கடவன்;  அவன்  ஜெபம்  பாவமாகக்கடவது.  (சங்கீதம்  109:7)

avan  niyaayam  visaarikkappadumpoathu  kut’ravaa'liyaagakkadavan;  avan  jebam  paavamaagakkadavathu.  (sanggeetham  109:7)

அவன்  நாட்கள்  கொஞ்சமாகக்கடவது;  அவன்  உத்தியோகத்தை  வேறொருவன்  பெறக்கடவன்.  (சங்கீதம்  109:8)

avan  naadka'l  kognchamaagakkadavathu;  avan  uththiyoagaththai  vea’roruvan  pe’rakkadavan.  (sanggeetham  109:8)

அவன்  பிள்ளைகள்  திக்கற்றவர்களும்,  அவன்  மனைவி  விதவையுமாகக்கடவர்கள்.  (சங்கீதம்  109:9)

avan  pi'l'laiga'l  thikkat’ravarga'lum,  avan  manaivi  vithavaiyumaagakkadavarga'l.  (sanggeetham  109:9)

அவன்  பிள்ளைகள்  அலைந்து  திரிந்து  பிச்சையெடுத்து,  தங்கள்  பாழான  வீடுகளிலிருந்து  இரந்துண்ணக்கடவர்கள்.  (சங்கீதம்  109:10)

avan  pi'l'laiga'l  alainthu  thirinthu  pichchaiyeduththu,  thangga'l  paazhaana  veeduga'lilirunthu  iranthu'n'nakkadavarga'l.  (sanggeetham  109:10)

கடன்  கொடுத்தவன்  அவனுக்கு  உள்ளதெல்லாவற்றையும்  அபகரித்துக்கொள்வானாக;  அவன்  பிரயாசத்தின்  பலனை  அந்நியர்  பறித்துக்கொள்ளக்கடவர்கள்.  (சங்கீதம்  109:11)

kadan  koduththavan  avanukku  u'l'lathellaavat’raiyum  abagariththukko'lvaanaaga;  avan  pirayaasaththin  palanai  anniyar  pa’riththukko'l'lakkadavarga'l.  (sanggeetham  109:11)

அவனுக்கு  ஒருவரும்  இரக்கங்  காண்பியாமலும்,  அவனுடைய  திக்கற்ற  பிள்ளைகளுக்குத்  தயவுசெய்யாமலும்  போவார்களாக.  (சங்கீதம்  109:12)

avanukku  oruvarum  irakkang  kaa'nbiyaamalum,  avanudaiya  thikkat’ra  pi'l'laiga'lukkuth  thayavuseyyaamalum  poavaarga'laaga.  (sanggeetham  109:12)

அவன்  சந்ததியார்  நிர்மூலமாகக்கடவர்கள்;  இரண்டாந்தலைமுறையில்  அவர்கள்  பேர்  அற்றுப்போவதாக.  (சங்கீதம்  109:13)

avan  santhathiyaar  nirmoolamaagakkadavarga'l;  ira'ndaanthalaimu’raiyil  avarga'l  pear  at’ruppoavathaaga.  (sanggeetham  109:13)

அவன்  பிதாக்களின்  அக்கிரமம்  கர்த்தருக்கு  முன்பாக  நினைக்கப்படக்கடவது,  அவன்  தாயின்  பாவம்  நீங்காமலிருப்பதாக.  (சங்கீதம்  109:14)

avan  pithaakka'lin  akkiramam  karththarukku  munbaaga  ninaikkappadakkadavathu,  avan  thaayin  paavam  neenggaamaliruppathaaga.  (sanggeetham  109:14)

அவைகள்  நித்தமும்  கர்த்தருக்கு  முன்பாக  இருக்கக்கடவது;  அவர்கள்  பேர்  பூமியிலிராமல்  நிர்மூலமாவதாக.  (சங்கீதம்  109:15)

avaiga'l  niththamum  karththarukku  munbaaga  irukkakkadavathu;  avarga'l  pear  boomiyiliraamal  nirmoolamaavathaaga.  (sanggeetham  109:15)

அவன்  தயைசெய்ய  நினையாமல்,  சிறுமையும்  எளிமையுமானவனைத்  துன்பப்படுத்தி,  மனமுறிவுள்ளவனைக்  கொலைசெய்யும்படி  தேடினானே.  (சங்கீதம்  109:16)

avan  thayaiseyya  ninaiyaamal,  si’rumaiyum  e'limaiyumaanavanaith  thunbappaduththi,  manamu’rivu'l'lavanaik  kolaiseyyumpadi  theadinaanea.  (sanggeetham  109:16)

சாபத்தை  விரும்பினான்,  அது  அவனுக்கு  வரும்;  அவன்  ஆசீர்வாதத்தை  விரும்பாமற்போனான்,  அது  அவனுக்குத்  தூரமாய்  விலகிப்போம்.  (சங்கீதம்  109:17)

saabaththai  virumbinaan,  athu  avanukku  varum;  avan  aaseervaathaththai  virumbaama’rpoanaan,  athu  avanukkuth  thooramaay  vilagippoam.  (sanggeetham  109:17)

சாபத்தை  அவன்  தனக்கு  அங்கியாக  உடுத்திக்கொண்டான்;  அது  அவன்  உள்ளத்தில்  தண்ணீரைப்போலவும்,  அவன்  எலும்புகளில்  எண்ணெயைப்போலவும்  பாயும்.  (சங்கீதம்  109:18)

saabaththai  avan  thanakku  anggiyaaga  uduththikko'ndaan;  athu  avan  u'l'laththil  tha'n'neeraippoalavum,  avan  elumbuga'lil  e'n'neyaippoalavum  paayum.  (sanggeetham  109:18)

அது  அவன்  மூடிக்கொள்ளுகிற  வஸ்திரமாகவும்,  நித்தமும்  கட்டிக்கொள்ளுகிற  கச்சையாகவும்  இருப்பதாக.  (சங்கீதம்  109:19)

athu  avan  moodikko'l'lugi’ra  vasthiramaagavum,  niththamum  kattikko'l'lugi’ra  kachchaiyaagavum  iruppathaaga.  (sanggeetham  109:19)

இதுதான்  என்னை  விரோதிக்கிறவர்களுக்கும்,  என்  ஆத்துமாவுக்கு  விரோதமாய்த்  தீங்கு  பேசுகிறவர்களுக்கும்  கர்த்தரால்  வரும்  பலன்.  (சங்கீதம்  109:20)

ithuthaan  ennai  viroathikki’ravarga'lukkum,  en  aaththumaavukku  viroathamaayth  theenggu  peasugi’ravarga'lukkum  karththaraal  varum  palan.  (sanggeetham  109:20)

ஆண்டவராகிய  கர்த்தாவே,  நீர்  உமது  நாமத்தினிமித்தம்  என்னை  ஆதரித்து,  உமது  கிருபை  நலமானதினால்,  என்னை  விடுவித்தருளும்.  (சங்கீதம்  109:21)

aa'ndavaraagiya  karththaavea,  neer  umathu  naamaththinimiththam  ennai  aathariththu,  umathu  kirubai  nalamaanathinaal,  ennai  viduviththaru'lum.  (sanggeetham  109:21)

நான்  சிறுமையும்  எளிமையுமானவன்,  என்  இருதயம்  எனக்குள்  குத்துண்டிருக்கிறது.  (சங்கீதம்  109:22)

naan  si’rumaiyum  e'limaiyumaanavan,  en  iruthayam  enakku'l  kuththu'ndirukki’rathu.  (sanggeetham  109:22)

சாயும்  நிழலைப்போல்  அகன்று  போனேன்;  வெட்டுக்கிளியைப்போல்  பறக்கடிக்கப்படுகிறேன்.  (சங்கீதம்  109:23)

saayum  nizhalaippoal  agan’ru  poanean;  vettukki'liyaippoal  pa’rakkadikkappadugi’rean.  (sanggeetham  109:23)

உபவாசத்தினால்  என்  முழங்கால்கள்  தளர்ச்சியடைகிறது;  என்  மாம்சம்  புஷ்டியற்று  உலர்ந்து  போகிறது.  (சங்கீதம்  109:24)

ubavaasaththinaal  en  muzhangkaalga'l  tha'larchchiyadaigi’rathu;  en  maamsam  pushdiyat’ru  ularnthu  poagi’rathu.  (sanggeetham  109:24)

நான்  அவர்களுக்கு  நிந்தையானேன்;  அவர்கள்  என்னைப்  பார்த்து,  தங்கள்  தலையைத்  துலுக்குகிறார்கள்.  (சங்கீதம்  109:25)

naan  avarga'lukku  ninthaiyaanean;  avarga'l  ennaip  paarththu,  thangga'l  thalaiyaith  thulukkugi’raarga'l.  (sanggeetham  109:25)

என்  தேவனாகிய  கர்த்தாவே  எனக்குச்  சகாயம்பண்ணும்;  உமது  கிருபையின்படி  என்னை  இரட்சியும்.  (சங்கீதம்  109:26)

en  theavanaagiya  karththaavea  enakkuch  sagaayampa'n'num;  umathu  kirubaiyinpadi  ennai  iradchiyum.  (sanggeetham  109:26)

இது  உமது  கரம்  என்றும்,  கர்த்தாவே,  தேவரீர்  இதைச்  செய்தீர்  என்றும்,  அவர்கள்  அறிவார்களாக.  (சங்கீதம்  109:27)

ithu  umathu  karam  en’rum,  karththaavea,  theavareer  ithaich  seytheer  en’rum,  avarga'l  a’rivaarga'laaga.  (sanggeetham  109:27)

அவர்கள்  சபித்தாலும்,  நீர்  ஆசீர்வதியும்;  அவர்கள்  எழும்பினாலும்  வெட்கப்பட்டுப்போவார்களாக;  உமது  அடியானோ  மகிழக்கடவன்.  (சங்கீதம்  109:28)

avarga'l  sabiththaalum,  neer  aaseervathiyum;  avarga'l  ezhumbinaalum  vedkappattuppoavaarga'laaga;  umathu  adiyaanoa  magizhakkadavan.  (sanggeetham  109:28)

என்  விரோதிகள்  இலச்சையால்  மூடப்பட்டு,  தங்கள்  வெட்கத்தைச்  சால்வையைப்போல்  தரித்துக்கொள்ளக்கடவர்கள்.  (சங்கீதம்  109:29)

en  viroathiga'l  ilachchaiyaal  moodappattu,  thangga'l  vedkaththaich  saalvaiyaippoal  thariththukko'l'lakkadavarga'l.  (sanggeetham  109:29)

கர்த்தரை  நான்  என்  வாயினால்  மிகவும்  துதித்து,  அநேகர்  நடுவிலே  அவரைப்  புகழுவேன்.  (சங்கீதம்  109:30)

karththarai  naan  en  vaayinaal  migavum  thuthiththu,  aneagar  naduvilea  avaraip  pugazhuvean.  (sanggeetham  109:30)

ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கிறவர்களினின்று  எளியவனுடைய  ஆத்துமாவை  இரட்சிக்கும்படி  அவர்  அவன்  வலதுபாரிசத்தில்  நிற்பார்.  (சங்கீதம்  109:31)

aakkinaikku'l'laagath  theerkki’ravarga'linin’ru  e'liyavanudaiya  aaththumaavai  iradchikkumpadi  avar  avan  valathupaarisaththil  ni’rpaar.  (sanggeetham  109:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!