தேவனே,
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.
(சங்கீதம் 108:1)
theavanea, en iruthayam
aayaththamaayirukki’rathu; naan paadik keerththanampa'n'nuvean; en magimaiyum paadum. (sanggeetham
108:1)
வீணையே, சுரமண்டலமே,
விழியுங்கள், நான் அதிகாலையில்
விழிப்பேன். (சங்கீதம் 108:2)
vee'naiyea, surama'ndalamea, vizhiyungga'l, naan athikaalaiyil vizhippean.
(sanggeetham 108:2)
கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக்
கீர்த்தனம்பண்ணுவேன். (சங்கீதம் 108:3)
karththaavea, janangga'lukku'l'lea ummaiththuthippean; jaathiga'lukku'l'lea ummaik
keerththanampa'n'nuvean. (sanggeetham 108:3)
உமது
கிருபை வானங்களுக்கு மேலாகவும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள்
பரியந்தமும் எட்டுகிறது. (சங்கீதம்
108:4)
umathu kirubai vaanangga'lukku mealaagavum, umathu saththiyam meagama'ndalangga'l pariyanthamum ettugi’rathu. (sanggeetham
108:4)
தேவனே,
வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. (சங்கீதம்
108:5)
theavanea, vaanangga'lukku mealaaga uyarnthirum; umathu
magimai
boomiyanaiththinmealum uyarnthiruppathaaga. (sanggeetham
108:5)
உமது
பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து,
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
(சங்கீதம் 108:6)
umathu piriyar viduvikkappadumporuttu, umathu
valathukaraththinaal iradchiththu, engga'l jebaththaik keattaru'lum. (sanggeetham 108:6)
தேவன்
தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார்,
ஆகையால் களிகூருவேன்; சீகேமைப்
பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை
அளந்துகொள்ளுவேன். (சங்கீதம் 108:7)
theavan thamathu parisuththaththaikko'ndu vi'lambinaar, aagaiyaal ka'likooruvean; seekeamaip panggittu, sukkoaththin pa'l'laththaakkai a'lanthuko'l'luvean. (sanggeetham
108:7)
கீலேயாத் என்னுடையது,
மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம்
என் தலையின் பெலன்,
யூதா என் நியாயப்பிரமாணிகன். (சங்கீதம்
108:8)
keeleayaath ennudaiyathu, manaaseayum ennudaiyathu;
eppiraayeem en thalaiyin
belan,
yoothaa en niyaayappiramaa'nigan. (sanggeetham
108:8)
மோவாப்
என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல்
என் பாதரட்சையை எறிவேன்;
பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன். (சங்கீதம்
108:9)
moavaab
en paathapaaththiram; eathoaminmeal
en paatharadchaiyai e’rivean; pelisthiyaavin meal aarpparippean. (sanggeetham
108:9)
அரணான
பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன்
யார்? ஏதோம்மட்டும் எனக்கு
வழிகாட்டுகிறவன் யார்? (சங்கீதம்
108:10)
ara'naana patta'naththi’rku'l ennai nadaththikko'ndu poagi’ravan yaar? eathoammattum enakku vazhikaattugi’ravan yaar?
(sanggeetham 108:10)
எங்கள்
சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
(சங்கீதம் 108:11)
engga'l seanaiga'loadea pu’rappadaamaliruntha theavareerallavaa? engga'laith tha'l'livittiruntha theavareerallavaa? (sanggeetham
108:11)
இக்கட்டில் எங்களுக்கு
உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. (சங்கீதம்
108:12)
ikkattil
engga'lukku uthaviseyyum; manushanudaiya uthavi
viruthaa. (sanggeetham 108:12)
தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை
மிதித்துப்போடுவார். (சங்கீதம் 108:13)
theavanaalea baraakkiramagnseyvoam; avarea
engga'l saththurukka'lai mithiththuppoaduvaar. (sanggeetham
108:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!