Thursday, June 30, 2016

Sanggeetham 106 | சங்கீதம் 106 | Psalms 106

அல்லேலூயா,  கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  நல்லவர்,  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  (சங்கீதம்  106:1)

allealooyaa,  karththaraith  thuthiyungga'l;  avar  nallavar,  avar  kirubai  en’rumu'l'lathu.  (sanggeetham  106:1)

கர்த்தருடைய  வல்லமையான  செய்கைகளைச்  சொல்லி,  அவருடைய  துதியையெல்லாம்  பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன்  யார்?  (சங்கீதம்  106:2)

karththarudaiya  vallamaiyaana  seygaiga'laich  solli,  avarudaiya  thuthiyaiyellaam  pirasthaabappaduththaththakkavan  yaar?  (sanggeetham  106:2)

நியாயத்தைக்  கைக்கொள்ளுகிறவர்களும்,  எக்காலத்திலும்  நீதியைச்செய்கிறவர்களும்  பாக்கியவான்கள்.  (சங்கீதம்  106:3)

niyaayaththaik  kaikko'l'lugi’ravarga'lum,  ekkaalaththilum  neethiyaichseygi’ravarga'lum  baakkiyavaanga'l.  (sanggeetham  106:3)

கர்த்தாவே,  நீர்  தெரிந்துகொண்டவர்களின்  நன்மையை  நான்  கண்டு,  உம்முடைய  ஜாதியின்  மகிழ்ச்சியால்  மகிழ்ந்து,  உம்முடைய  சுதந்தரத்தோடே  மேன்மைபாராட்டும்படிக்கு,  (சங்கீதம்  106:4)

karththaavea,  neer  therinthuko'ndavarga'lin  nanmaiyai  naan  ka'ndu,  ummudaiya  jaathiyin  magizhchchiyaal  magizhnthu,  ummudaiya  suthantharaththoadea  meanmaipaaraattumpadikku,  (sanggeetham  106:4)

உம்முடைய  ஜனங்களுக்கு  நீர்  பாராட்டும்  கிருபையின்படி  என்னை  நினைத்து,  உம்முடைய  இரட்சிப்பினால்  என்னைச்  சந்தித்தருளும்.  (சங்கீதம்  106:5)

ummudaiya  janangga'lukku  neer  paaraattum  kirubaiyinpadi  ennai  ninaiththu,  ummudaiya  iradchippinaal  ennaich  santhiththaru'lum.  (sanggeetham  106:5)

எங்கள்  பிதாக்களோடுங்கூட  நாங்களும்  பாவஞ்செய்து,  அக்கிரமம்  நடப்பித்து,  ஆகாமியம்பண்ணினோம்.  (சங்கீதம்  106:6)

engga'l  pithaakka'loadungkooda  naangga'lum  paavagnseythu,  akkiramam  nadappiththu,  aagaamiyampa'n'ninoam.  (sanggeetham  106:6)

எங்கள்  பிதாக்கள்  எகிப்திலே  உம்முடைய  அதிசயங்களை  உணராமலும்,  உம்முடைய  கிருபைகளின்  திரட்சியை  நினையாமலும்  போய்,  சிவந்த  சமுத்திர  ஓரத்திலே  கலகம்பண்ணினார்கள்.  (சங்கீதம்  106:7)

engga'l  pithaakka'l  egipthilea  ummudaiya  athisayangga'lai  u'naraamalum,  ummudaiya  kirubaiga'lin  thiradchiyai  ninaiyaamalum  poay,  sivantha  samuththira  oaraththilea  kalagampa'n'ninaarga'l.  (sanggeetham  106:7)

ஆனாலும்  அவர்  தமது  வல்லமையை  வெளிப்படுத்தும்படி,  தம்முடைய  நாமத்தினிமித்தம்  அவர்களை  இரட்சித்தார்.  (சங்கீதம்  106:8)

aanaalum  avar  thamathu  vallamaiyai  ve'lippaduththumpadi,  thammudaiya  naamaththinimiththam  avarga'lai  iradchiththaar.  (sanggeetham  106:8)

அவர்  சிவந்த  சமுத்திரத்தை  அதட்டினார்,  அது  வற்றிப்போயிற்று;  வெட்டாந்தரையில்  நடக்கிறதுபோல  அவர்களை  ஆழங்களில்  நடந்துபோகப்பண்ணினார்.  (சங்கீதம்  106:9)

avar  sivantha  samuththiraththai  athattinaar,  athu  vat’rippoayit’ru;  vettaantharaiyil  nadakki’rathupoala  avarga'lai  aazhangga'lil  nadanthupoagappa'n'ninaar.  (sanggeetham  106:9)

பகைஞன்  கைக்கு  அவர்களை  விலக்கி  இரட்சித்து,  சத்துருவின்  கைக்கு  அவர்களை  விலக்கி  மீட்டார்.  (சங்கீதம்  106:10)

pagaignan  kaikku  avarga'lai  vilakki  iradchiththu,  saththuruvin  kaikku  avarga'lai  vilakki  meettaar.  (sanggeetham  106:10)

அவர்கள்  சத்துருக்களைத்  தண்ணீர்கள்  மூடிக்கொண்டது;  அவர்களில்  ஒருவனும்  மீந்திருக்கவில்லை.  (சங்கீதம்  106:11)

avarga'l  saththurukka'laith  tha'n'neerga'l  moodikko'ndathu;  avarga'lil  oruvanum  meenthirukkavillai.  (sanggeetham  106:11)

அப்பொழுது  அவர்கள்  அவருடைய  வார்த்தைகளை  விசுவாசித்து,  அவருடைய  துதியைப்  பாடினார்கள்.  (சங்கீதம்  106:12)

appozhuthu  avarga'l  avarudaiya  vaarththaiga'lai  visuvaasiththu,  avarudaiya  thuthiyaip  paadinaarga'l.  (sanggeetham  106:12)

ஆனாலும்  சீக்கிரமாய்  அவருடைய  கிரியைகளை  மறந்தார்கள்;  அவருடைய  ஆலோசனைக்கு  அவர்கள்  காத்திராமல்,  (சங்கீதம்  106:13)

aanaalum  seekkiramaay  avarudaiya  kiriyaiga'lai  ma’ranthaarga'l;  avarudaiya  aaloasanaikku  avarga'l  kaaththiraamal,  (sanggeetham  106:13)

வனாந்தரத்திலே  இச்சையுள்ளவர்களாகி,  அவாந்தரவெளியிலே  தேவனைப்  பரீட்சைபார்த்தார்கள்.  (சங்கீதம்  106:14)

vanaantharaththilea  ichchaiyu'l'lavarga'laagi,  avaantharave'liyilea  theavanaip  pareedchaipaarththaarga'l.  (sanggeetham  106:14)

அப்பொழுது  அவர்கள்  கேட்டதை  அவர்களுக்குக்  கொடுத்தார்,  அவர்கள்  ஆத்துமாக்களிலோ  இளைப்பை  அனுப்பினார்.  (சங்கீதம்  106:15)

appozhuthu  avarga'l  keattathai  avarga'lukkuk  koduththaar,  avarga'l  aaththumaakka'liloa  i'laippai  anuppinaar.  (sanggeetham  106:15)

பாளயத்தில்  அவர்கள்  மோசேயின்மேலும்,  கர்த்தருடைய  பரிசுத்தனாகிய  ஆரோனின்மேலும்  பொறாமைகொண்டார்கள்.  (சங்கீதம்  106:16)

paa'layaththil  avarga'l  moaseayinmealum,  karththarudaiya  parisuththanaagiya  aaroaninmealum  po’raamaiko'ndaarga'l.  (sanggeetham  106:16)

பூமி  பிளந்து  தாத்தானை  விழுங்கி,  அபிராமின்  கூட்டத்தை  மூடிப்போட்டது.  (சங்கீதம்  106:17)

boomi  pi'lanthu  thaaththaanai  vizhunggi,  abiraamin  koottaththai  moodippoattathu.  (sanggeetham  106:17)

அவர்கள்  கூட்டத்தில்  அக்கினி  பற்றியெரிந்தது;  அக்கினிஜுவாலை  துன்மார்க்கரை  எரித்துப்போட்டது.  (சங்கீதம்  106:18)

avarga'l  koottaththil  akkini  pat’riyerinthathu;  akkinijuvaalai  thunmaarkkarai  eriththuppoattathu.  (sanggeetham  106:18)

அவர்கள்  ஓரேபிலே  ஒரு  கன்றுக்குட்டியையுண்டாக்கி,  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தை  நமஸ்கரித்தார்கள்.  (சங்கீதம்  106:19)

avarga'l  oareabilea  oru  kan’rukkuttiyaiyu'ndaakki,  vaarppikkappatta  vikkiragaththai  namaskariththaarga'l.  (sanggeetham  106:19)

தங்கள்  மகிமையைப்  புல்லைத்  தின்கிற  மாட்டின்  சாயலாக  மாற்றினார்கள்.  (சங்கீதம்  106:20)

thangga'l  magimaiyaip  pullaith  thingi’ra  maattin  saayalaaga  maat’rinaarga'l.  (sanggeetham  106:20)

எகிப்திலே  பெரிய  கிரியைகளையும்,  காமின்  தேசத்திலே  அதிசயங்களையும்,  சிவந்த  சமுத்திரத்தண்டையிலே  பயங்கரமானவைகளையும்  செய்தவராகிய,  (சங்கீதம்  106:21)

egipthilea  periya  kiriyaiga'laiyum,  kaamin  theasaththilea  athisayangga'laiyum,  sivantha  samuththiraththa'ndaiyilea  bayanggaramaanavaiga'laiyum  seythavaraagiya,  (sanggeetham  106:21)

தங்கள்  இரட்சகரான  தேவனை  மறந்தார்கள்.  (சங்கீதம்  106:22)

thangga'l  iradchagaraana  theavanai  ma’ranthaarga'l.  (sanggeetham  106:22)

ஆகையால்,  அவர்களை  நாசம்பண்ணுவேன்  என்றார்;  அப்பொழுது  அவரால்  தெரிந்துகொள்ளப்பட்ட  மோசே,  அவர்களை  அவர்  அழிக்காதபடிக்கு,  அவருடைய  உக்கிரத்தை  ஆற்றும்பொருட்டு,  அவருக்கு  முன்பாகத்  திறப்பின்  வாயிலே  நின்றான்.  (சங்கீதம்  106:23)

aagaiyaal,  avarga'lai  naasampa'n'nuvean  en’raar;  appozhuthu  avaraal  therinthuko'l'lappatta  moasea,  avarga'lai  avar  azhikkaathapadikku,  avarudaiya  ukkiraththai  aat’rumporuttu,  avarukku  munbaagath  thi’rappin  vaayilea  nin’raan.  (sanggeetham  106:23)

அவருடைய  வார்த்தையை  விசுவாசியாமல்,  இச்சிக்கப்படத்தக்க  தேசத்தை  அசட்டைபண்ணினார்கள்.  (சங்கீதம்  106:24)

avarudaiya  vaarththaiyai  visuvaasiyaamal,  ichchikkappadaththakka  theasaththai  asattaipa'n'ninaarga'l.  (sanggeetham  106:24)

கர்த்தருடைய  சத்தத்திற்குச்  செவிகொடாமல்,  தங்கள்  கூடாரங்களில்  முறுமுறுத்தார்கள்.  (சங்கீதம்  106:25)

karththarudaiya  saththaththi’rkuch  sevikodaamal,  thangga'l  koodaarangga'lil  mu’rumu’ruththaarga'l.  (sanggeetham  106:25)

அப்பொழுது  அவர்கள்  வனாந்தரத்திலே  மடியவும்,  அவர்கள்  சந்ததி  ஜாதிகளுக்குள்ளே  அழியவும்,  (சங்கீதம்  106:26)

appozhuthu  avarga'l  vanaantharaththilea  madiyavum,  avarga'l  santhathi  jaathiga'lukku'l'lea  azhiyavum,  (sanggeetham  106:26)

அவர்கள்  பற்பல  தேசங்களிலே  சிதறடிக்கப்படவும்,  அவர்களுக்கு  விரோதமாகத்  தம்முடைய  கையை  எடுத்தார்.  (சங்கீதம்  106:27)

avarga'l  pa’rpala  theasangga'lilea  sitha’radikkappadavum,  avarga'lukku  viroathamaagath  thammudaiya  kaiyai  eduththaar.  (sanggeetham  106:27)

அவர்கள்  பாகால்பேயோரைப்  பற்றிக்கொண்டு,  ஜீவனில்லாதவைகளுக்கு  இட்ட  பலிகளைப்  புசித்து,  (சங்கீதம்  106:28)

avarga'l  baagaalpeayoaraip  pat’rikko'ndu,  jeevanillaathavaiga'lukku  itta  baliga'laip  pusiththu,  (sanggeetham  106:28)

தங்கள்  கிரியைகளினால்  அவருக்குக்  கோபம்  மூட்டினார்கள்;  ஆகையால்  வாதை  அவர்களுக்குள்  புகுந்தது.  (சங்கீதம்  106:29)

thangga'l  kiriyaiga'linaal  avarukkuk  koabam  moottinaarga'l;  aagaiyaal  vaathai  avarga'lukku'l  pugunthathu.  (sanggeetham  106:29)

அப்பொழுது  பினெகாஸ்  எழுந்து  நின்று  நியாயஞ்செய்தான்;  அதினால்  வாதை  நிறுத்தப்பட்டது.  (சங்கீதம்  106:30)

appozhuthu  pinegaas  ezhunthu  nin’ru  niyaayagnseythaan;  athinaal  vaathai  ni’ruththappattathu.  (sanggeetham  106:30)

அது  தலைமுறை  தலைமுறையாக  என்றைக்கும்  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது.  (சங்கீதம்  106:31)

athu  thalaimu’rai  thalaimu’raiyaaga  en’raikkum  avanukku  neethiyaaga  e'n'nappattathu.  (sanggeetham  106:31)

மேரிபாவின்  தண்ணீர்களிடத்திலும்  அவருக்குக்  கடுங்கோபம்  மூட்டினார்கள்;  அவர்கள்  நிமித்தம்  மோசேக்கும்  பொல்லாப்பு  வந்தது.  (சங்கீதம்  106:32)

mearibaavin  tha'n'neerga'lidaththilum  avarukkuk  kadungkoabam  moottinaarga'l;  avarga'l  nimiththam  moaseakkum  pollaappu  vanthathu.  (sanggeetham  106:32)

அவர்கள்  அவன்  ஆவியை  விசனப்படுத்தினதினாலே,  தன்  உதடுகளினால்  பதறிப்பேசினான்.  (சங்கீதம்  106:33)

avarga'l  avan  aaviyai  visanappaduththinathinaalea,  than  uthaduga'linaal  patha’rippeasinaan.  (sanggeetham  106:33)

கர்த்தர்  தங்களுக்குச்  சொன்னபடி,  அவர்கள்  அந்த  ஜனங்களை  அழிக்கவில்லை.  (சங்கீதம்  106:34)

karththar  thangga'lukkuch  sonnapadi,  avarga'l  antha  janangga'lai  azhikkavillai.  (sanggeetham  106:34)

ஜாதிகளுடனே  கலந்து,  அவர்கள்  கிரியைகளைக்  கற்று;  (சங்கீதம்  106:35)

jaathiga'ludanea  kalanthu,  avarga'l  kiriyaiga'laik  kat’ru;  (sanggeetham  106:35)

அவர்களுடைய  விக்கிரகங்களைச்  சேவித்தார்கள்;  அவைகள்  அவர்களுக்குக்  கண்ணியாயிற்று.  (சங்கீதம்  106:36)

avarga'ludaiya  vikkiragangga'laich  seaviththaarga'l;  avaiga'l  avarga'lukkuk  ka'n'niyaayit’ru.  (sanggeetham  106:36)

அவர்கள்  தங்கள்  குமாரரையும்  தங்கள்  குமாரத்திகளையும்  பிசாசுகளுக்குப்  பலியிட்டார்கள்.  (சங்கீதம்  106:37)

avarga'l  thangga'l  kumaararaiyum  thangga'l  kumaaraththiga'laiyum  pisaasuga'lukkup  baliyittaarga'l.  (sanggeetham  106:37)

அவர்கள்  கானான்தேசத்து  விக்கிரகங்களுக்குப்  பலியிட்டு,  தங்கள்  குமாரர்  குமாரத்திகளுடைய  குற்றமில்லாத  இரத்தத்தைச்  சிந்தினார்கள்;  தேசம்  இரத்தத்தால்  தீட்டுப்பட்டது.  (சங்கீதம்  106:38)

avarga'l  kaanaantheasaththu  vikkiragangga'lukkup  baliyittu,  thangga'l  kumaarar  kumaaraththiga'ludaiya  kut’ramillaatha  iraththaththaich  sinthinaarga'l;  theasam  iraththaththaal  theettuppattathu.  (sanggeetham  106:38)

அவர்கள்  தங்கள்  கிரியைகளினால்  அசுத்தமாகி,  தங்கள்  செய்கைகளினால்  சோரம்போனார்கள்.  (சங்கீதம்  106:39)

avarga'l  thangga'l  kiriyaiga'linaal  asuththamaagi,  thangga'l  seygaiga'linaal  soarampoanaarga'l.  (sanggeetham  106:39)

அதினால்  கர்த்தருடைய  கோபம்  தமது  ஜனத்தின்மேல்  மூண்டது;  அவர்  தமது  சுதந்தரத்தை  அருவருத்தார்.  (சங்கீதம்  106:40)

athinaal  karththarudaiya  koabam  thamathu  janaththinmeal  moo'ndathu;  avar  thamathu  suthantharaththai  aruvaruththaar.  (sanggeetham  106:40)

அவர்களை  ஜாதிகளுடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவர்களுடைய  பகைஞர்  அவர்களை  ஆண்டார்கள்.  (சங்கீதம்  106:41)

avarga'lai  jaathiga'ludaiya  kaiyil  oppukkoduththaar;  avarga'ludaiya  pagaignar  avarga'lai  aa'ndaarga'l.  (sanggeetham  106:41)

அவர்களுடைய  சத்துருக்கள்  அவர்களை  ஒடுக்கினார்கள்;  அவர்களுடைய  கையின்கீழ்த்  தாழ்த்தப்பட்டார்கள்.  (சங்கீதம்  106:42)

avarga'ludaiya  saththurukka'l  avarga'lai  odukkinaarga'l;  avarga'ludaiya  kaiyinkeezhth  thaazhththappattaarga'l.  (sanggeetham  106:42)

அநேகந்தரம்  அவர்களை  விடுவித்தார்;  அவர்களோ  தங்கள்  யோசனையினால்  அவருக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணி,  தங்களுடைய  அக்கிரமத்தினால்  சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.  (சங்கீதம்  106:43)

aneagantharam  avarga'lai  viduviththaar;  avarga'loa  thangga'l  yoasanaiyinaal  avarukku  viroathamaayk  kalagampa'n'ni,  thangga'ludaiya  akkiramaththinaal  si’rumaippaduththappattaarga'l.  (sanggeetham  106:43)

அவர்கள்  கூப்பிடுதலை  அவர்  கேட்கும்போதோ,  அவர்களுக்கு  உண்டான  இடுக்கத்தை  அவர்  கண்ணோக்கி,  (சங்கீதம்  106:44)

avarga'l  kooppiduthalai  avar  keadkumpoathoa,  avarga'lukku  u'ndaana  idukkaththai  avar  ka'n'noakki,  (sanggeetham  106:44)

அவர்களுக்காகத்  தமது  உடன்படிக்கையை  நினைத்து,  தமது  மிகுந்த  கிருபையின்படி  மனஸ்தாபப்பட்டு,  (சங்கீதம்  106:45)

avarga'lukkaagath  thamathu  udanpadikkaiyai  ninaiththu,  thamathu  miguntha  kirubaiyinpadi  manasthaabappattu,  (sanggeetham  106:45)

அவர்களைச்  சிறைபிடித்த  யாவரும்  அவர்களுக்கு  இரங்கும்படி  செய்தார்.  (சங்கீதம்  106:46)

avarga'laich  si’raipidiththa  yaavarum  avarga'lukku  iranggumpadi  seythaar.  (sanggeetham  106:46)

எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நாங்கள்  உமது  பரிசுத்த  நாமத்தைப்போற்றி,  உம்மைத்  துதிக்கிறதில்  மேன்மைபாராட்டும்படி  எங்களை  இரட்சித்து,  எங்களை  ஜாதிகளிலிருந்து  சேர்த்தருளும்.  (சங்கீதம்  106:47)

engga'l  theavanaagiya  karththaavea,  naangga'l  umathu  parisuththa  naamaththaippoat’ri,  ummaith  thuthikki’rathil  meanmaipaaraattumpadi  engga'lai  iradchiththu,  engga'lai  jaathiga'lilirunthu  searththaru'lum.  (sanggeetham  106:47)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  அநாதியாய்  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.  ஜனங்களெல்லாரும்:  ஆமென்,  அல்லேலூயா,  என்பார்களாக.  (சங்கீதம்  106:48)

isravealin  theavanaagiya  karththar  anaathiyaay  en’ren’raikkum  sthoaththirikkappadaththakkavar.  janangga'lellaarum:  aamen,  allealooyaa,  enbaarga'laaga.  (sanggeetham  106:48)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!