Thursday, June 30, 2016

Sanggeetham 104 | சங்கீதம் 104 | Psalms 104

என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி;  என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  மிகவும்  பெரியவராயிருக்கிறீர்;  மகிமையையும்  மகத்துவத்தையும்  அணிந்துகொண்டிருக்கிறீர்.  (சங்கீதம்  104:1)

en  aaththumaavea,  karththarai  sthoaththiri;  en  theavanaagiya  karththaavea,  neer  migavum  periyavaraayirukki’reer;  magimaiyaiyum  magaththuvaththaiyum  a'ninthuko'ndirukki’reer.  (sanggeetham  104:1)

ஒளியை  வஸ்திரமாகத்  தரித்து,  வானங்களைத்  திரையைப்போல்  விரித்திருக்கிறீர்.  (சங்கீதம்  104:2)

o'liyai  vasthiramaagath  thariththu,  vaanangga'laith  thiraiyaippoal  viriththirukki’reer.  (sanggeetham  104:2)

தமது  மேல்வீடுகளைத்  தண்ணீர்களால்  மச்சுப்பாவி,  மேகங்களைத்  தமது  இரதமாக்கி,  காற்றினுடைய  செட்டைகளின்மேல்  செல்லுகிறார்.  (சங்கீதம்  104:3)

thamathu  mealveeduga'laith  tha'n'neerga'laal  machchuppaavi,  meagangga'laith  thamathu  irathamaakki,  kaat’rinudaiya  settaiga'linmeal  sellugi’raar.  (sanggeetham  104:3)

தம்முடைய  தூதர்களைக்  காற்றுகளாகவும்,  தம்முடைய  ஊழியக்காரரை  அக்கினிஜுவாலைகளாகவும்  செய்கிறார்.  (சங்கீதம்  104:4)

thammudaiya  thootharga'laik  kaat’ruga'laagavum,  thammudaiya  oozhiyakkaararai  akkinijuvaalaiga'laagavum  seygi’raar.  (sanggeetham  104:4)

பூமி  ஒருபோதும்  நிலைபேராதபடி  அதின்  ஆதாரங்கள்மேல்  அதை  ஸ்தாபித்தார்.  (சங்கீதம்  104:5)

boomi  orupoathum  nilaipearaathapadi  athin  aathaarangga'lmeal  athai  sthaabiththaar.  (sanggeetham  104:5)

அதை  வஸ்திரத்தினால்  மூடுவதுபோல  ஆழத்தினால்  மூடினீர்;  பர்வதங்களின்மேல்  தண்ணீர்கள்  நின்றது.  (சங்கீதம்  104:6)

athai  vasthiraththinaal  mooduvathupoala  aazhaththinaal  moodineer;  parvathangga'linmeal  tha'n'neerga'l  nin’rathu.  (sanggeetham  104:6)

அவைகள்  உமது  கண்டிதத்தால்  விலகியோடி,  உமது  குமுறலின்  சத்தத்தால்  விரைந்துபோயிற்று.  (சங்கீதம்  104:7)

avaiga'l  umathu  ka'ndithaththaal  vilagiyoadi,  umathu  kumu’ralin  saththaththaal  virainthupoayit’ru.  (sanggeetham  104:7)

அவைகள்  மலைகளில்  ஏறி,  பள்ளத்தாக்குகளில்  இறங்கி,  நீர்  அவைகளுக்கு  ஏற்படுத்தின  இடத்தில்  சென்றது.  (சங்கீதம்  104:8)

avaiga'l  malaiga'lil  ea’ri,  pa'l'laththaakkuga'lil  i’ranggi,  neer  avaiga'lukku  ea’rpaduththina  idaththil  sen’rathu.  (sanggeetham  104:8)

அவைகள்  திரும்பவும்  வந்து  பூமியை  மூடிக்கொள்ளாதபடி  கடவாதிருக்கும்  எல்லையை  அவைகளுக்கு  ஏற்படுத்தினீர்.  (சங்கீதம்  104:9)

avaiga'l  thirumbavum  vanthu  boomiyai  moodikko'l'laathapadi  kadavaathirukkum  ellaiyai  avaiga'lukku  ea’rpaduththineer.  (sanggeetham  104:9)

அவர்  பள்ளத்தாக்குகளில்  நீரூற்றுகளை  வரவிடுகிறார்;  அவைகள்  மலைகள்  நடுவே  ஓடுகிறது.  (சங்கீதம்  104:10)

avar  pa'l'laththaakkuga'lil  neeroot’ruga'lai  varavidugi’raar;  avaiga'l  malaiga'l  naduvea  oadugi’rathu.  (sanggeetham  104:10)

அவைகள்  வெளியின்  ஜீவன்களுக்கெல்லாம்  தண்ணீர்  கொடுக்கும்;  அங்கே  காட்டுக்கழுதைகள்  தங்கள்  தாகத்தைத்  தீர்த்துக்கொள்ளும்.  (சங்கீதம்  104:11)

avaiga'l  ve'liyin  jeevanga'lukkellaam  tha'n'neer  kodukkum;  anggea  kaattukkazhuthaiga'l  thangga'l  thaagaththaith  theerththukko'l'lum.  (sanggeetham  104:11)

அவைகளின்  ஓரமாய்  ஆகாயத்துப்  பறவைகள்  சஞ்சரித்து,  கிளைகள்மேலிருந்து  பாடும்.  (சங்கீதம்  104:12)

avaiga'lin  oaramaay  aagaayaththup  pa’ravaiga'l  sagnchariththu,  ki'laiga'lmealirunthu  paadum.  (sanggeetham  104:12)

தம்முடைய  மேல்வீடுகளிலிருந்து  பர்வதங்களுக்குத்  தண்ணீர்  இறைக்கிறார்;  உமது  கிரியைகளின்  பலனாலே  பூமி  திருப்தியாயிருக்கிறது.  (சங்கீதம்  104:13)

thammudaiya  mealveeduga'lilirunthu  parvathangga'lukkuth  tha'n'neer  i’raikki’raar;  umathu  kiriyaiga'lin  palanaalea  boomi  thirupthiyaayirukki’rathu.  (sanggeetham  104:13)

பூமியிலிருந்து  ஆகாரம்  உண்டாகும்படி,  அவர்  மிருகங்களுக்குப்  புல்லையும்,  மனுஷருக்கு  உபயோகமான  பயிர்வகைகளையும்  முளைப்பிக்கிறார்.  (சங்கீதம்  104:14)

boomiyilirunthu  aagaaram  u'ndaagumpadi,  avar  mirugangga'lukkup  pullaiyum,  manusharukku  ubayoagamaana  payirvagaiga'laiyum  mu'laippikki’raar.  (sanggeetham  104:14)

மனுஷனுடைய  இருதயத்தை  மகிழ்ச்சியாக்கும்  திராட்சரசத்தையும்,  அவனுக்கு  முகக்களையை  உண்டுபண்ணும்  எண்ணெயையும்,  மனுஷனுடைய  இருதயத்தை  ஆதரிக்கும்  ஆகாரத்தையும்  விளைவிக்கிறார்.  (சங்கீதம்  104:15)

manushanudaiya  iruthayaththai  magizhchchiyaakkum  thiraadcharasaththaiyum,  avanukku  mugakka'laiyai  u'ndupa'n'num  e'n'neyaiyum,  manushanudaiya  iruthayaththai  aatharikkum  aagaaraththaiyum  vi'laivikki’raar.  (sanggeetham  104:15)

கர்த்தருடைய  விருட்சங்களும்,  அவர்  நாட்டின  லீபனோனின்  கேதுருக்களும்  சாரத்தினால்  நிறைந்திருக்கும்.  (சங்கீதம்  104:16)

karththarudaiya  virudchangga'lum,  avar  naattina  leebanoanin  keathurukka'lum  saaraththinaal  ni’rainthirukkum.  (sanggeetham  104:16)

அங்கே  குருவிகள்  கூடுகட்டும்;  தேவதாருவிருட்சங்கள்  கொக்குகளின்  குடியிருப்பு.  (சங்கீதம்  104:17)

anggea  kuruviga'l  koodukattum;  theavathaaruvirudchangga'l  kokkuga'lin  kudiyiruppu.  (sanggeetham  104:17)

உயர்ந்த  பர்வதங்கள்  வரையாடுகளுக்கும்,  கன்மலைகள்  குழிமுசல்களுக்கும்  அடைக்கலம்.  (சங்கீதம்  104:18)

uyarntha  parvathangga'l  varaiyaaduga'lukkum,  kanmalaiga'l  kuzhimusalga'lukkum  adaikkalam.  (sanggeetham  104:18)

சந்திரனைக்  காலக்குறிப்புகளுக்காகப்  படைத்தார்;  சூரியன்  தன்  அஸ்தமனத்தை  அறியும்.  (சங்கீதம்  104:19)

santhiranaik  kaalakku’rippuga'lukkaagap  padaiththaar;  sooriyan  than  asthamanaththai  a’riyum.  (sanggeetham  104:19)

நீர்  இருளைக்  கட்டளையிடுகிறீர்,  இராக்காலமாகும்;  அதிலே  சகல  காட்டு  ஜீவன்களும்  நடமாடும்.  (சங்கீதம்  104:20)

neer  iru'laik  katta'laiyidugi’reer,  iraakkaalamaagum;  athilea  sagala  kaattu  jeevanga'lum  nadamaadum.  (sanggeetham  104:20)

பாலசிங்கங்கள்  இரைக்காக  கெர்ச்சித்து,  தேவனால்  தங்களுக்கு  ஆகாரம்  கிடைக்கும்படித்  தேடும்.  (சங்கீதம்  104:21)

baalasinggangga'l  iraikkaaga  kerchchiththu,  theavanaal  thangga'lukku  aagaaram  kidaikkumpadith  theadum.  (sanggeetham  104:21)

சூரியன்  உதிக்கையில்  அவைகள்  ஒதுங்கி,  தங்கள்  தாபரங்களில்  படுத்துக்கொள்ளும்.  (சங்கீதம்  104:22)

sooriyan  uthikkaiyil  avaiga'l  othunggi,  thangga'l  thaabarangga'lil  paduththukko'l'lum.  (sanggeetham  104:22)

அப்பொழுது  மனுஷன்  சாயங்காலமட்டும்  தன்  வேலைக்கும்,  தன்  பண்ணைக்கும்  புறப்படுகிறான்.  (சங்கீதம்  104:23)

appozhuthu  manushan  saayanggaalamattum  than  vealaikkum,  than  pa'n'naikkum  pu’rappadugi’raan.  (sanggeetham  104:23)

கர்த்தாவே,  உமது  கிரியைகள்  எவ்வளவு  திரளாயிருக்கிறது!  அவைகளையெல்லாம்  ஞானமாய்ப்  படைத்தீர்;  பூமி  உம்முடைய  பொருள்களினால்  நிறைந்திருக்கிறது.  (சங்கீதம்  104:24)

karththaavea,  umathu  kiriyaiga'l  evva'lavu  thira'laayirukki’rathu!  avaiga'laiyellaam  gnaanamaayp  padaiththeer;  boomi  ummudaiya  poru'lga'linaal  ni’rainthirukki’rathu.  (sanggeetham  104:24)

பெரிதும்  விஸ்தாரமுமான  இந்தச்  சமுத்திரமும்  அப்படியே  நிறைந்திருக்கிறது;  அதிலே  சஞ்சரிக்கும்  சிறியவைகளும்  பெரியவைகளுமான  எண்ணிறந்த  ஜீவன்கள்  உண்டு.  (சங்கீதம்  104:25)

perithum  visthaaramumaana  inthach  samuththiramum  appadiyea  ni’rainthirukki’rathu;  athilea  sagncharikkum  si’riyavaiga'lum  periyavaiga'lumaana  e'n'ni’rantha  jeevanga'l  u'ndu.  (sanggeetham  104:25)

அதிலே  கப்பல்கள்  ஓடும்;  அதிலே  விளையாடும்படி  நீர்  உண்டாக்கின  திமிங்கிலங்களும்  உண்டு.  (சங்கீதம்  104:26)

athilea  kappalga'l  oadum;  athilea  vi'laiyaadumpadi  neer  u'ndaakkina  thiminggilangga'lum  u'ndu.  (sanggeetham  104:26)

ஏற்றவேளையில்  ஆகாரத்தைத்  தருவீர்  என்று  அவைகளெல்லாம்  உம்மை  நோக்கிக்  காத்திருக்கும்.  (சங்கீதம்  104:27)

eat’ravea'laiyil  aagaaraththaith  tharuveer  en’ru  avaiga'lellaam  ummai  noakkik  kaaththirukkum.  (sanggeetham  104:27)

நீர்  கொடுக்க,  அவைகள்  வாங்கிக்கொள்ளும்;  நீர்  உம்முடைய  கையைத்திறக்க,  அவைகள்  நன்மையால்  திருப்தியாகும்.  (சங்கீதம்  104:28)

neer  kodukka,  avaiga'l  vaanggikko'l'lum;  neer  ummudaiya  kaiyaiththi’rakka,  avaiga'l  nanmaiyaal  thirupthiyaagum.  (sanggeetham  104:28)

நீர்  உமது  முகத்தை  மறைக்க,  திகைக்கும்;  நீர்  அவைகளின்  சுவாசத்தை  வாங்கிக்கொள்ள,  அவைகள்  மாண்டு,  தங்கள்  மண்ணுக்குத்  திரும்பும்.  (சங்கீதம்  104:29)

neer  umathu  mugaththai  ma’raikka,  thigaikkum;  neer  avaiga'lin  suvaasaththai  vaanggikko'l'la,  avaiga'l  maa'ndu,  thangga'l  ma'n'nukkuth  thirumbum.  (sanggeetham  104:29)

நீர்  உம்முடைய  ஆவியை  அனுப்பும்போது,  அவைகள்  சிருஷ்டிக்கப்படும்;  நீர்  பூமியின்  ரூபத்தையும்  புதிதாக்குகிறீர்.  (சங்கீதம்  104:30)

neer  ummudaiya  aaviyai  anuppumpoathu,  avaiga'l  sirushdikkappadum;  neer  boomiyin  roobaththaiyum  puthithaakkugi’reer.  (sanggeetham  104:30)

கர்த்தருடைய  மகிமை  என்றென்றைக்கும்  விளங்கும்;  கர்த்தர்  தம்முடைய  கிரியைகளிலே  மகிழுவார்.  (சங்கீதம்  104:31)

karththarudaiya  magimai  en’ren’raikkum  vi'langgum;  karththar  thammudaiya  kiriyaiga'lilea  magizhuvaar.  (sanggeetham  104:31)

அவர்  பூமியை  நோக்கிப்பார்க்க,  அது  அதிரும்;  அவர்  பர்வதங்களைத்  தொட,  அவைகள்  புகையும்.  (சங்கீதம்  104:32)

avar  boomiyai  noakkippaarkka,  athu  athirum;  avar  parvathangga'laith  thoda,  avaiga'l  pugaiyum.  (sanggeetham  104:32)

நான்  உயிரோடிருக்குமட்டும்  என்  கர்த்தரைப்  பாடுவேன்;  நான்  உள்ளளவும்  என்  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  104:33)

naan  uyiroadirukkumattum  en  karththaraip  paaduvean;  naan  u'l'la'lavum  en  theavanaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  104:33)

நான்  அவரைத்  தியானிக்கும்  தியானம்  இனிதாயிருக்கும்;  நான்  கர்த்தருக்குள்  மகிழுவேன்.  (சங்கீதம்  104:34)

naan  avaraith  thiyaanikkum  thiyaanam  inithaayirukkum;  naan  karththarukku'l  magizhuvean.  (sanggeetham  104:34)

பாவிகள்  பூமியிலிருந்து  நிர்மூலமாகி,  துன்மார்க்கர்  இனி  இராமற்போவார்கள்.  என்  ஆத்துமாவே,  கர்த்தரை  ஸ்தோத்திரி,  அல்லேலூயா.  (சங்கீதம்  104:35)

paaviga'l  boomiyilirunthu  nirmoolamaagi,  thunmaarkkar  ini  iraama’rpoavaarga'l.  en  aaththumaavea,  karththarai  sthoaththiri,  allealooyaa.  (sanggeetham  104:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!