Thursday, June 30, 2016

Sanggeetham 102 | சங்கீதம் 102 | Psalms 102

கர்த்தாவே,  என்  விண்ணப்பத்தைக்  கேளும்;  என்  கூப்பிடுதல்  உம்மிடத்தில்  சேர்வதாக.  (சங்கீதம்  102:1)

karththaavea,  en  vi'n'nappaththaik  kea'lum;  en  kooppiduthal  ummidaththil  searvathaaga.  (sanggeetham  102:1)

என்  ஆபத்துநாளிலே  உமது  முகத்தை  எனக்கு  மறையாதேயும்;  உமது  செவியை  என்னிடத்தில்  சாயும்;  நான்  கூப்பிடுகிற  நாளிலே  எனக்குத்  தீவிரமாய்  உத்தரவு  அருளிச்செய்யும்.  (சங்கீதம்  102:2)

en  aabaththunaa'lilea  umathu  mugaththai  enakku  ma’raiyaatheayum;  umathu  seviyai  ennidaththil  saayum;  naan  kooppidugi’ra  naa'lilea  enakkuth  theeviramaay  uththaravu  aru'lichseyyum.  (sanggeetham  102:2)

என்  நாட்கள்  புகையைப்போல்  ஒழிந்தது;  என்  எலும்புகள்  ஒரு  கொள்ளியைப்போல்  எரியுண்டது.  (சங்கீதம்  102:3)

en  naadka'l  pugaiyaippoal  ozhinthathu;  en  elumbuga'l  oru  ko'l'liyaippoal  eriyu'ndathu.  (sanggeetham  102:3)

என்  இருதயம்  புல்லைப்போல்  வெட்டுண்டு  உலர்ந்தது;  என்  போஜனத்தைப்  புசிக்க  மறந்தேன்.  (சங்கீதம்  102:4)

en  iruthayam  pullaippoal  vettu'ndu  ularnthathu;  en  poajanaththaip  pusikka  ma’ranthean.  (sanggeetham  102:4)

என்  பெருமூச்சின்  சத்தத்தினால்,  என்  எலும்புகள்  என்  மாம்சத்தோடு  ஒட்டிக்கொள்ளுகிறது.  (சங்கீதம்  102:5)

en  perumoochchin  saththaththinaal,  en  elumbuga'l  en  maamsaththoadu  ottikko'l'lugi’rathu.  (sanggeetham  102:5)

வனாந்தர  நாரைக்கு  ஒப்பானேன்;  பாழான  இடங்களில்  தங்கும்  ஆந்தையைப்போலானேன்.  (சங்கீதம்  102:6)

vanaanthara  naaraikku  oppaanean;  paazhaana  idangga'lil  thanggum  aanthaiyaippoalaanean.  (sanggeetham  102:6)

நான்  நித்திரையில்லாமல்  வீட்டின்மேல்  தனித்திருக்கும்  குருவியைப்போல்  இருக்கிறேன்.  (சங்கீதம்  102:7)

naan  niththiraiyillaamal  veettinmeal  thaniththirukkum  kuruviyaippoal  irukki’rean.  (sanggeetham  102:7)

நாடோறும்  என்  சத்துருக்கள்  என்னை  நிந்திக்கிறார்கள்;  என்மேல்  மூர்க்கவெறிகொண்டவர்கள்  எனக்கு  விரோதமாய்ச்  சாபம்  இடுகிறார்கள்.  (சங்கீதம்  102:8)

naadoa’rum  en  saththurukka'l  ennai  ninthikki’raarga'l;  enmeal  moorkkave’riko'ndavarga'l  enakku  viroathamaaych  saabam  idugi’raarga'l.  (sanggeetham  102:8)

நீர்  என்னை  உயரத்  தூக்கி,  தாழத்தள்ளினீர்,  உமது  சினத்திற்கும்  கடுங்கோபத்திற்கும்  உள்ளானேன்.  (சங்கீதம்  102:9)

neer  ennai  uyarath  thookki,  thaazhaththa'l'lineer,  umathu  sinaththi’rkum  kadungkoabaththi’rkum  u'l'laanean.  (sanggeetham  102:9)

ஆதலால்  நான்  சாம்பலை  அப்பமாகப்  புசித்து,  என்  பானங்களைக்  கண்ணீரோடே  கலக்கிறேன்.  (சங்கீதம்  102:10)

aathalaal  naan  saambalai  appamaagap  pusiththu,  en  baanangga'laik  ka'n'neeroadea  kalakki’rean.  (sanggeetham  102:10)

என்  நாட்கள்  சாய்ந்துபோகிற  நிழலைப்போலிருக்கிறது;  புல்லைப்போல்  உலர்ந்துபோகிறேன்.  (சங்கீதம்  102:11)

en  naadka'l  saaynthupoagi’ra  nizhalaippoalirukki’rathu;  pullaippoal  ularnthupoagi’rean.  (sanggeetham  102:11)

கர்த்தராகிய  நீரோ  என்றென்றைக்கும்  இருக்கிறீர்;  உம்முடைய  பேர்  பிரஸ்தாபம்  தலைமுறை  தலைமுறையாக  நிற்கும்.  (சங்கீதம்  102:12)

karththaraagiya  neeroa  en’ren’raikkum  irukki’reer;  ummudaiya  pear  pirasthaabam  thalaimu’rai  thalaimu’raiyaaga  ni’rkum.  (sanggeetham  102:12)

தேவரீர்  எழுந்தருளி  சீயோனுக்கு  இரங்குவீர்;  அதற்குத்  தயைசெய்யுங்காலமும்,  அதற்காகக்  குறித்தநேரமும்  வந்தது.  (சங்கீதம்  102:13)

theavareer  ezhuntharu'li  seeyoanukku  irangguveer;  atha’rkuth  thayaiseyyungkaalamum,  atha’rkaagak  ku’riththanearamum  vanthathu.  (sanggeetham  102:13)

உம்முடைய  ஊழியக்காரர்  அதின்  கல்லுகள்மேல்  வாஞ்சைவைத்து,  அதின்  மண்ணுக்குப்  பரிதபிக்கிறார்கள்.  (சங்கீதம்  102:14)

ummudaiya  oozhiyakkaarar  athin  kalluga'lmeal  vaagnchaivaiththu,  athin  ma'n'nukkup  parithabikki’raarga'l.  (sanggeetham  102:14)

கர்த்தர்  சீயோனைக்  கட்டி,  தமது  மகிமையில்  வெளிப்படுவார்.  (சங்கீதம்  102:15)

karththar  seeyoanaik  katti,  thamathu  magimaiyil  ve'lippaduvaar.  (sanggeetham  102:15)

திக்கற்றவர்களுடைய  ஜெபத்தை  அலட்சியம்பண்ணாமல்,  அவர்கள்  விண்ணப்பத்தை  அங்கீகரிப்பார்.  (சங்கீதம்  102:16)

thikkat’ravarga'ludaiya  jebaththai  aladchiyampa'n'naamal,  avarga'l  vi'n'nappaththai  anggeegarippaar.  (sanggeetham  102:16)

அப்பொழுது  ஜாதிகள்  கர்த்தருடைய  நாமத்துக்கும்,  பூமியிலுள்ள  ராஜாக்களெல்லாரும்  உம்முடைய  மகிமைக்கும்  பயப்படுவார்கள்.  (சங்கீதம்  102:17)

appozhuthu  jaathiga'l  karththarudaiya  naamaththukkum,  boomiyilu'l'la  raajaakka'lellaarum  ummudaiya  magimaikkum  bayappaduvaarga'l.  (sanggeetham  102:17)

பின்சந்ததிக்காக  இது  எழுதப்படும்;  சிருஷ்டிக்கப்படும்  ஜனம்  கர்த்தரைத்  துதிக்கும்.  (சங்கீதம்  102:18)

pinsanthathikkaaga  ithu  ezhuthappadum;  sirushdikkappadum  janam  karththaraith  thuthikkum.  (sanggeetham  102:18)

கர்த்தர்  கட்டுண்டவர்களின்  பெருமூச்சைக்  கேட்கவும்,  கொலைக்கு  நியமிக்கப்பட்டவர்களை  விடுதலையாக்கவும்,  (சங்கீதம்  102:19)

karththar  kattu'ndavarga'lin  perumoochchaik  keadkavum,  kolaikku  niyamikkappattavarga'lai  viduthalaiyaakkavum,  (sanggeetham  102:19)

தம்முடைய  உயர்ந்த  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  பார்த்து,  வானங்களிலிருந்து  பூமியின்மேல்  கண்ணோக்கமானார்.  (சங்கீதம்  102:20)

thammudaiya  uyarntha  parisuththa  sthalaththilirunthu  paarththu,  vaanangga'lilirunthu  boomiyinmeal  ka'n'noakkamaanaar.  (sanggeetham  102:20)

கர்த்தருக்கு  ஆராதனைசெய்ய,  ஜனங்களும்  ராஜ்யங்களும்  ஏகமாய்க்  கூடிக்கொள்ளுகையில்,  (சங்கீதம்  102:21)

karththarukku  aaraathanaiseyya,  janangga'lum  raajyangga'lum  eagamaayk  koodikko'l'lugaiyil,  (sanggeetham  102:21)

சீயோனில்  கர்த்தருடைய  நாமத்தையும்,  எருசலேமில்  அவருடைய  துதியையும்  பிரஸ்தாபப்படுத்துவார்கள்.  (சங்கீதம்  102:22)

seeyoanil  karththarudaiya  naamaththaiyum,  erusaleamil  avarudaiya  thuthiyaiyum  pirasthaabappaduththuvaarga'l.  (sanggeetham  102:22)

வழியிலே  என்  பெலனை  அவர்  ஒடுக்கி,  என்  நாட்களைக்  குறுகப்பண்ணினார்.  (சங்கீதம்  102:23)

vazhiyilea  en  belanai  avar  odukki,  en  naadka'laik  ku’rugappa'n'ninaar.  (sanggeetham  102:23)

அப்பொழுது  நான்:  என்  தேவனே,  பாதி  வயதில்  என்னை  எடுத்துக்கொள்ளாதேயும்;  உம்முடைய  வருஷங்கள்  தலைமுறை  தலைமுறையாக  இருக்கும்.  (சங்கீதம்  102:24)

appozhuthu  naan:  en  theavanea,  paathi  vayathil  ennai  eduththukko'l'laatheayum;  ummudaiya  varushangga'l  thalaimu’rai  thalaimu’raiyaaga  irukkum.  (sanggeetham  102:24)

நீர்  ஆதியிலே  பூமியை  அஸ்திபாரப்படுத்தினீர்;  வானங்கள்  உம்முடைய  கரத்தின்  கிரியையாயிருக்கிறது.  (சங்கீதம்  102:25)

neer  aathiyilea  boomiyai  asthibaarappaduththineer;  vaanangga'l  ummudaiya  karaththin  kiriyaiyaayirukki’rathu.  (sanggeetham  102:25)

அவைகள்  அழிந்துபோம்,  நீரோ  நிலைத்திருப்பீர்;  அவைகளெல்லாம்  வஸ்திரம்போல்  பழமையாய்ப்போம்;  அவைகளை  ஒரு  சால்வையைப்போல்  மாற்றுவீர்,  அப்பொழுது  மாறிப்போம்.  (சங்கீதம்  102:26)

avaiga'l  azhinthupoam,  neeroa  nilaiththiruppeer;  avaiga'lellaam  vasthirampoal  pazhamaiyaayppoam;  avaiga'lai  oru  saalvaiyaippoal  maat’ruveer,  appozhuthu  maa’rippoam.  (sanggeetham  102:26)

நீரோ  மாறாதவராயிருக்கிறீர்;  உமது  ஆண்டுகள்  முடிந்துபோவதில்லை.  (சங்கீதம்  102:27)

neeroa  maa’raathavaraayirukki’reer;  umathu  aa'nduga'l  mudinthupoavathillai.  (sanggeetham  102:27)

உமது  அடியாரின்  பிள்ளைகள்  தாபரித்திருப்பார்கள்;  அவர்கள்  சந்ததி  உமக்கு  முன்பாக  நிலைபெற்றிருக்கும்  என்று  சொன்னேன்.  (சங்கீதம்  102:28)

umathu  adiyaarin  pi'l'laiga'l  thaabariththiruppaarga'l;  avarga'l  santhathi  umakku  munbaaga  nilaipet’rirukkum  en’ru  sonnean.  (sanggeetham  102:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!