Thursday, June 30, 2016

Sanggeetham 101 | சங்கீதம் 101 | Psalms 101

இரக்கத்தையும்  நியாயத்தையும்  குறித்துப்  பாடுவேன்;  கர்த்தாவே,  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  101:1)

irakkaththaiyum  niyaayaththaiyum  ku’riththup  paaduvean;  karththaavea,  ummaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  101:1)

உத்தமமான  வழியிலே  விவேகமாய்  நடப்பேன்;  எப்பொழுது  என்னிடத்தில்  வருவீர்!  என்  வீட்டிலே  உத்தம  இருதயத்தோடு  நடந்துகொள்ளுவேன்.  (சங்கீதம்  101:2)

uththamamaana  vazhiyilea  viveagamaay  nadappean;  eppozhuthu  ennidaththil  varuveer!  en  veettilea  uththama  iruthayaththoadu  nadanthuko'l'luvean.  (sanggeetham  101:2)

தீங்கான  காரியத்தை  என்  கண்முன்  வைக்கமாட்டேன்;  வழி  விலகுகிறவர்களின்  செய்கையை  வெறுக்கிறேன்;  அது  என்னைப்  பற்றாது.  (சங்கீதம்  101:3)

theenggaana  kaariyaththai  en  ka'nmun  vaikkamaattean;  vazhi  vilagugi’ravarga'lin  seygaiyai  ve’rukki’rean;  athu  ennaip  pat’raathu.  (sanggeetham  101:3)

மாறுபாடான  இருதயம்  என்னைவிட்டு  அகலவேண்டும்;  பொல்லாதவனை  அறியமாட்டேன்.  (சங்கீதம்  101:4)

maa’rupaadaana  iruthayam  ennaivittu  agalavea'ndum;  pollaathavanai  a’riyamaattean.  (sanggeetham  101:4)

பிறனை  இரகசியமாய்  அவதூறுபண்ணுகிறவனைச்  சங்கரிப்பேன்;  மேட்டிமைக்  கண்ணனையும்  பெருநெஞ்சுள்ளவனையும்  பொறுக்கமாட்டேன்.  (சங்கீதம்  101:5)

pi’ranai  iragasiyamaay  avathoo’rupa'n'nugi’ravanaich  sanggarippean;  meattimaik  ka'n'nanaiyum  perunegnchu'l'lavanaiyum  po’rukkamaattean.  (sanggeetham  101:5)

தேசத்தில்  உண்மையானவர்கள்  என்னோடே  வாசம்பண்ணும்படி  என்  கண்கள்  அவர்கள்மேல்  நோக்கமாயிருக்கும்;  உத்தமமான  வழியில்  நடக்கிறவன்  என்னைச்  சேவிப்பான்.  (சங்கீதம்  101:6)

theasaththil  u'nmaiyaanavarga'l  ennoadea  vaasampa'n'numpadi  en  ka'nga'l  avarga'lmeal  noakkamaayirukkum;  uththamamaana  vazhiyil  nadakki’ravan  ennaich  seavippaan.  (sanggeetham  101:6)

கபடுசெய்கிறவன்  என்  வீட்டுக்குள்  இருப்பதில்லை;  பொய்சொல்லுகிறவன்  என்  கண்முன்  நிலைப்பதில்லை.  (சங்கீதம்  101:7)

kabaduseygi’ravan  en  veettukku'l  iruppathillai;  poysollugi’ravan  en  ka'nmun  nilaippathillai.  (sanggeetham  101:7)

அக்கிரமக்காரர்  ஒருவரும்  கர்த்தருடைய  நகரத்தில்  இராதபடி  வேர்  அறுப்புண்டுபோக,  தேசத்திலுள்ள  அக்கிரமக்காரர்  யாவரையும்  அதிகாலமே  சங்கரிப்பேன்.  (சங்கீதம்  101:8)

akkiramakkaarar  oruvarum  karththarudaiya  nagaraththil  iraathapadi  vear  a’ruppu'ndupoaga,  theasaththilu'l'la  akkiramakkaarar  yaavaraiyum  athikaalamea  sanggarippean.  (sanggeetham  101:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!