Saturday, June 11, 2016

Sanggeetham 10 | சங்கீதம் 10 | Psalms 10

கர்த்தாவே,  ஏன்  தூரத்தில்  நிற்கிறீர்?  ஆபத்து  நேரிடுகிற  சமயங்களில்  நீர்  ஏன்  மறைந்திருக்கிறீர்?  (சங்கீதம்  10:1)

karththaavea,  ean  thooraththil  ni’rki’reer?  aabaththu  nearidugi’ra  samayangga'lil  neer  ean  ma’rainthirukki’reer?  (sanggeetham  10:1)

துன்மார்க்கன்  தன்  பெருமையினால்  சிறுமைப்பட்டவனைக்  கடூரமாய்த்  துன்பப்படுத்துகிறான்;  அவர்கள்  நினைத்த  சதிமோசங்களில்  அவர்களே  அகப்படுவார்கள்.  (சங்கீதம்  10:2)

thunmaarkkan  than  perumaiyinaal  si’rumaippattavanaik  kadooramaayth  thunbappaduththugi’raan;  avarga'l  ninaiththa  sathimoasangga'lil  avarga'lea  agappaduvaarga'l.  (sanggeetham  10:2)

துன்மார்க்கன்  தன்  உள்ளம்  இச்சித்ததைப்  பெற்றதினால்  பெருமைபாராட்டி,  பொருளை  அபகரித்துத்  தன்னைத்தான்  போற்றி,  கர்த்தரை  அசட்டைபண்ணுகிறான்.  (சங்கீதம்  10:3)

thunmaarkkan  than  u'l'lam  ichchiththathaip  pet’rathinaal  perumaipaaraatti,  poru'lai  abagariththuth  thannaiththaan  poat’ri,  karththarai  asattaipa'n'nugi’raan.  (sanggeetham  10:3)

துன்மார்க்கன்  தன்  கர்வத்தினால்  தேவனைத்  தேடான்;  அவன்  நினைவுகளெல்லாம்  தேவன்  இல்லையென்பதே.  (சங்கீதம்  10:4)

thunmaarkkan  than  karvaththinaal  theavanaith  theadaan;  avan  ninaivuga'lellaam  theavan  illaiyenbathea.  (sanggeetham  10:4)

அவன்  வழிகள்  எப்போதும்  கேடுள்ளவைகள்;  உம்முடைய  நியாயத்தீர்ப்புகள்  அவன்  பார்வைக்கு  எட்டாமல்  மிகவும்  உயரமாயிருக்கிறது;  தன்  எதிராளிகளெல்லார்மேலும்  சீறுகிறான்.  (சங்கீதம்  10:5)

avan  vazhiga'l  eppoathum  keadu'l'lavaiga'l;  ummudaiya  niyaayaththeerppuga'l  avan  paarvaikku  ettaamal  migavum  uyaramaayirukki’rathu;  than  ethiraa'liga'lellaarmealum  see’rugi’raan.  (sanggeetham  10:5)

நான்  அசைக்கப்படுவதில்லை,  தலைமுறை  தலைமுறைதோறும்  தீங்கு  என்னை  அணுகுவதில்லையென்று  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்ளுகிறான்.  (சங்கீதம்  10:6)

naan  asaikkappaduvathillai,  thalaimu’rai  thalaimu’raithoa’rum  theenggu  ennai  a'nuguvathillaiyen’ru  than  iruthayaththil  sollikko'l'lugi’raan.  (sanggeetham  10:6)

அவன்  வாய்  சபிப்பினாலும்  கபடத்தினாலும்  கொடுமையினாலும்  நிறைந்திருக்கிறது;  அவன்  நாவின்கீழ்  தீவினையும்  அக்கிரமமும்  உண்டு.  (சங்கீதம்  10:7)

avan  vaay  sabippinaalum  kabadaththinaalum  kodumaiyinaalum  ni’rainthirukki’rathu;  avan  naavinkeezh  theevinaiyum  akkiramamum  u'ndu.  (sanggeetham  10:7)

கிராமங்களின்  ஒளிப்பிடங்களிலே  பதிவிருந்து,  மறைவிடங்களிலே  குற்றமற்றவனைக்  கொல்லுகிறான்;  திக்கற்றவர்களைப்  பிடிக்க  அவன்  கண்கள்  நோக்கிக்கொண்டிருக்கிறது.  (சங்கீதம்  10:8)

kiraamangga'lin  o'lippidangga'lilea  pathivirunthu,  ma’raividangga'lilea  kut’ramat’ravanaik  kollugi’raan;  thikkat’ravarga'laip  pidikka  avan  ka'nga'l  noakkikko'ndirukki’rathu.  (sanggeetham  10:8)

தன்  கெபியிலிருக்கிற  சிங்கத்தைப்போல  மறைவில்  பதிவிருக்கிறான்;  ஏழையைப்  பிடிக்கப்  பதிவிருந்து,  ஏழையைத்  தன்  வலைக்குள்  இழுத்துப்  பிடித்துக்கொள்ளுகிறான்.  (சங்கீதம்  10:9)

than  kebiyilirukki’ra  singgaththaippoala  ma’raivil  pathivirukki’raan;  eazhaiyaip  pidikkap  pathivirunthu,  eazhaiyaith  than  valaikku'l  izhuththup  pidiththukko'l'lugi’raan.  (sanggeetham  10:9)

திக்கற்றவர்கள்  தன்  பலவான்கள்  கையில்  விழும்படி  அவன்  பதுங்கிக்கிடக்கிறான்.  (சங்கீதம்  10:10)

thikkat’ravarga'l  than  balavaanga'l  kaiyil  vizhumpadi  avan  pathunggikkidakki’raan.  (sanggeetham  10:10)

தேவன்  அதை  மறந்தார்  என்றும்,  அவர்  தம்முடைய  முகத்தை  மறைத்து,  ஒருக்காலும்  அதைக்  காணமாட்டார்  என்றும்,  தன்  இருதயத்திலே  சொல்லிக்கொள்ளுகிறான்.  (சங்கீதம்  10:11)

theavan  athai  ma’ranthaar  en’rum,  avar  thammudaiya  mugaththai  ma’raiththu,  orukkaalum  athaik  kaa'namaattaar  en’rum,  than  iruthayaththilea  sollikko'l'lugi’raan.  (sanggeetham  10:11)

கர்த்தாவே,  எழுந்தருளும்;  தேவனே,  உம்முடைய  கையை  உயர்த்தும்;  ஏழைகளை  மறவாதேயும்.  (சங்கீதம்  10:12)

karththaavea,  ezhuntharu'lum;  theavanea,  ummudaiya  kaiyai  uyarththum;  eazhaiga'lai  ma’ravaatheayum.  (sanggeetham  10:12)

துன்மார்க்கன்  தேவனை  அசட்டைபண்ணி:  நீர்  கேட்டு  விசாரிப்பதில்லை  என்று  தன்  இருதயத்தில்  சொல்லிக்கொள்வானேன்?  (சங்கீதம்  10:13)

thunmaarkkan  theavanai  asattaipa'n'ni:  neer  keattu  visaarippathillai  en’ru  than  iruthayaththil  sollikko'lvaanean?  (sanggeetham  10:13)

அதைப்  பார்த்திருக்கிறீரே!  உபத்திரவத்தையும்  குரோதத்தையும்  கவனித்திருக்கிறீரே;  நீர்  பதிலளிப்பீர்;  ஏழையானவன்  தன்னை  உமக்கு  ஒப்புவிக்கிறான்;  திக்கற்ற  பிள்ளைகளுக்குச்  சகாயர்  நீரே.  (சங்கீதம்  10:14)

athaip  paarththirukki’reerea!  ubaththiravaththaiyum  kuroathaththaiyum  kavaniththirukki’reerea;  neer  bathila'lippeer;  eazhaiyaanavan  thannai  umakku  oppuvikki’raan;  thikkat’ra  pi'l'laiga'lukkuch  sagaayar  neerea.  (sanggeetham  10:14)

துன்மார்க்கனும்  பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய  புயத்தை  முறித்துவிடும்;  அவனுடைய  ஆகாமியம்  காணாமற்போகுமட்டும்  அதைத்  தேடி  விசாரியும்.  (சங்கீதம்  10:15)

thunmaarkkanum  pollaathavanumaayirukki’ravanudaiya  puyaththai  mu’riththuvidum;  avanudaiya  aagaamiyam  kaa'naama’rpoagumattum  athaith  theadi  visaariyum.  (sanggeetham  10:15)

கர்த்தர்  சதாகாலங்களுக்கும்  ராஜாவாயிருக்கிறார்;  புறஜாதியார்  அவருடைய  தேசத்திலிருந்து  அழிந்துபோவார்கள்.  (சங்கீதம்  10:16)

karththar  sathaakaalangga'lukkum  raajaavaayirukki’raar;  pu’rajaathiyaar  avarudaiya  theasaththilirunthu  azhinthupoavaarga'l.  (sanggeetham  10:16)

கர்த்தாவே,  சிறுமைப்பட்டவர்களுடைய  வேண்டுதலைக்  கேட்டிருக்கிறீர்;  அவர்கள்  இருதயத்தை  ஸ்திரப்படுத்துவீர்.  (சங்கீதம்  10:17)

karththaavea,  si’rumaippattavarga'ludaiya  vea'nduthalaik  keattirukki’reer;  avarga'l  iruthayaththai  sthirappaduththuveer.  (sanggeetham  10:17)

மண்ணான  மனுஷன்  இனிப்  பலவந்தஞ்செய்யத்  தொடராதபடிக்கு,  தேவரீர்  திக்கற்ற  பிள்ளைகளுக்கும்  ஒடுக்கப்பட்டவர்களுக்கும்  நீதிசெய்ய  உம்முடைய  செவிகளைச்  சாய்த்துக்  கேட்டருளுவீர்.  (சங்கீதம்  10:18)

ma'n'naana  manushan  inip  balavanthagnseyyath  thodaraathapadikku,  theavareer  thikkat’ra  pi'l'laiga'lukkum  odukkappattavarga'lukkum  neethiseyya  ummudaiya  seviga'laich  saayththuk  keattaru'luveer.  (sanggeetham  10:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!