Wednesday, June 01, 2016

Pilippiyar 1 | பிலிப்பியர் 1 | Philippians 1

இயேசுகிறிஸ்துவின்  ஊழியக்காரராகிய  பவுலும்  தீமோத்தேயும்,  பிலிப்பி  பட்டணத்தில்  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான  பரிசுத்தவான்கள்  அனைவருக்கும்,  கண்காணிகளுக்கும்,  உதவிக்காரருக்கும்  எழுதுகிறதாவது:  (பிலிப்பியர்  1:1)

iyeasuki’risthuvin  oozhiyakkaararaagiya  pavulum  theemoaththeayum,  pilippi  patta'naththil  ki’risthu  iyeasuvukku'l'laana  parisuththavaanga'l  anaivarukkum,  ka'nkaa'niga'lukkum,  uthavikkaararukkum  ezhuthugi’rathaavathu:  (pilippiyar  1:1)

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (பிலிப்பியர்  1:2)

nammudaiya  pithaavaagiya  theavanaalum  karththaraagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (pilippiyar  1:2)

சுவிசேஷம்  உங்களுக்கு  அறிவிக்கப்பட்ட  நாள்முதல்  இதுவரைக்கும்  நீங்கள்  அதற்கு  உடன்பட்டவர்களானபடியால்,  (பிலிப்பியர்  1:3)

suviseasham  ungga'lukku  a’rivikkappatta  naa'lmuthal  ithuvaraikkum  neengga'l  atha’rku  udanpattavarga'laanapadiyaal,  (pilippiyar  1:3)

நான்  பண்ணுகிற  ஒவ்வொரு  விண்ணப்பத்திலும்  உங்கள்  அனைவருக்காகவும்  எப்போதும்  சந்தோஷத்தோடே  விண்ணப்பம்பண்ணி,  (பிலிப்பியர்  1:4)

naan  pa'n'nugi’ra  ovvoru  vi'n'nappaththilum  ungga'l  anaivarukkaagavum  eppoathum  santhoashaththoadea  vi'n'nappampa'n'ni,  (pilippiyar  1:4)

உங்களில்  நற்கிரியையைத்  தொடங்கினவர்  அதை  இயேசுகிறிஸ்துவின்  நாள்பரியந்தம்  முடிய  நடத்திவருவாரென்று  நம்பி,  (பிலிப்பியர்  1:5)

ungga'lil  na’rkiriyaiyaith  thodangginavar  athai  iyeasuki’risthuvin  naa'lpariyantham  mudiya  nadaththivaruvaaren’ru  nambi,  (pilippiyar  1:5)

நான்  உங்களை  நினைக்கிறபொழுதெல்லாம்  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  (பிலிப்பியர்  1:6)

naan  ungga'lai  ninaikki’rapozhuthellaam  en  theavanai  sthoaththirikki’rean.  (pilippiyar  1:6)

என்  கட்டுகளிலும்,  நான்  சுவிசேஷத்திற்காக  உத்தரவுசொல்லி  அதைத்  திடப்படுத்திவருகிறதிலும்,  நீங்கள்  அனைவரும்  எனக்கு  அளிக்கப்பட்ட  கிருபையில்  பங்குள்ளவர்களானதால்,  உங்களை  என்  இருதயத்தில்  தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே,  உங்களெல்லாரையுங்  குறித்து  நான்  இப்படி  நினைக்கிறது  எனக்குத்  தகுதியாயிருக்கிறது.  (பிலிப்பியர்  1:7)

en  kattuga'lilum,  naan  suviseashaththi’rkaaga  uththaravusolli  athaith  thidappaduththivarugi’rathilum,  neengga'l  anaivarum  enakku  a'likkappatta  kirubaiyil  panggu'l'lavarga'laanathaal,  ungga'lai  en  iruthayaththil  thariththukko'ndirukki’rapadiyinaalea,  ungga'lellaaraiyung  ku’riththu  naan  ippadi  ninaikki’rathu  enakkuth  thaguthiyaayirukki’rathu.  (pilippiyar  1:7)

இயேசுகிறிஸ்துவின்  உருக்கமான  அன்பிலே  உங்களெல்லார்மேலும்  எவ்வளவோ  வாஞ்சையாயிருக்கிறேன்  என்பதற்குத்  தேவனே  எனக்குச்  சாட்சி.  (பிலிப்பியர்  1:8)

iyeasuki’risthuvin  urukkamaana  anbilea  ungga'lellaarmealum  evva'lavoa  vaagnchaiyaayirukki’rean  enbatha’rkuth  theavanea  enakkuch  saadchi.  (pilippiyar  1:8)

மேலும்,  உத்தமமானவைகளை  நீங்கள்  ஒப்புக்கொள்ளத்தக்கதாக  உங்கள்  அன்பானது  அறிவிலும்  எல்லா  உணர்விலும்  இன்னும்  அதிகமதிகமாய்ப்  பெருகவும்,  (பிலிப்பியர்  1:9)

mealum,  uththamamaanavaiga'lai  neengga'l  oppukko'l'laththakkathaaga  ungga'l  anbaanathu  a’rivilum  ellaa  u'narvilum  innum  athigamathigamaayp  perugavum,  (pilippiyar  1:9)

தேவனுக்கு  மகிமையும்  துதியும்  உண்டாகும்படி  இயேசுகிறிஸ்துவினால்  வருகிற  நீதியின்  கனிகளால்  நிறைந்தவர்களாகி,  (பிலிப்பியர்  1:10)

theavanukku  magimaiyum  thuthiyum  u'ndaagumpadi  iyeasuki’risthuvinaal  varugi’ra  neethiyin  kaniga'laal  ni’rainthavarga'laagi,  (pilippiyar  1:10)

நீங்கள்  கிறிஸ்துவின்  நாளுக்கென்று  துப்புரவானவர்களும்  இடறலற்றவர்களுமாயிருக்கவும்  வேண்டுதல்  செய்கிறேன்.  (பிலிப்பியர்  1:11)

neengga'l  ki’risthuvin  naa'lukken’ru  thuppuravaanavarga'lum  ida’ralat’ravarga'lumaayirukkavum  vea'nduthal  seygi’rean.  (pilippiyar  1:11)

சகோதரரே,  எனக்குச்  சம்பவித்தவைகள்  சுவிசேஷம்  பிரபலமாகும்படிக்கு  ஏதுவாயிற்றென்று  நீங்கள்  அறிய  மனதாயிருக்கிறேன்.  (பிலிப்பியர்  1:12)

sagoathararea,  enakkuch  sambaviththavaiga'l  suviseasham  pirabalamaagumpadikku  eathuvaayit’ren’ru  neengga'l  a’riya  manathaayirukki’rean.  (pilippiyar  1:12)

அரமனை  யெங்குமுள்ளவர்களுக்கும்  மற்ற  யாவருக்கும்  என்  கட்டுகள்  கிறிஸ்துவுக்குள்ளான  கட்டுகளென்று  வெளியரங்கமாகி,  (பிலிப்பியர்  1:13)

aramanai  yenggumu'l'lavarga'lukkum  mat’ra  yaavarukkum  en  kattuga'l  ki’risthuvukku'l'laana  kattuga'len’ru  ve'liyaranggamaagi,  (pilippiyar  1:13)

சகோதரரில்  அநேகர்  என்  கட்டுகளாலே  கர்த்தருக்குள்  திடன்கொண்டு  பயமில்லாமல்  திருவசனத்தைச்  சொல்லும்படி  அதிகமாய்த்  துணிந்திருக்கிறார்கள்.  (பிலிப்பியர்  1:14)

sagoathararil  aneagar  en  kattuga'laalea  karththarukku'l  thidanko'ndu  bayamillaamal  thiruvasanaththaich  sollumpadi  athigamaayth  thu'ninthirukki’raarga'l.  (pilippiyar  1:14)

சிலர்  பொறாமையினாலும்  விரோதத்தினாலும்,  சிலர்  நல்மனதினாலும்  கிறிஸ்துவைப்  பிரசங்கிக்கிறார்கள்.  (பிலிப்பியர்  1:15)

silar  po’raamaiyinaalum  viroathaththinaalum,  silar  nalmanathinaalum  ki’risthuvaip  pirasanggikki’raarga'l.  (pilippiyar  1:15)

சிலர்  என்  கட்டுகளோடே  உபத்திரவத்தையுங்கூட்ட  நினைத்து,  சுத்தமனதோடே  கிறிஸ்துவை  அறிவியாமல்,  விரோதத்தினாலே  அறிவிக்கிறார்கள்.  (பிலிப்பியர்  1:16)

silar  en  kattuga'loadea  ubaththiravaththaiyungkootta  ninaiththu,  suththamanathoadea  ki’risthuvai  a’riviyaamal,  viroathaththinaalea  a’rivikki’raarga'l.  (pilippiyar  1:16)

சுவிசேஷத்திற்காக  நான்  உத்தரவு  சொல்ல  ஏற்படுத்தப்பட்டவனென்று  அறிந்து,  சிலர்  அன்பினாலே  அறிவிக்கிறார்கள்.  (பிலிப்பியர்  1:17)

suviseashaththi’rkaaga  naan  uththaravu  solla  ea’rpaduththappattavanen’ru  a’rinthu,  silar  anbinaalea  a’rivikki’raarga'l.  (pilippiyar  1:17)

இதனாலென்ன?  வஞ்சகத்தினாலாவது,  உண்மையினாலாவது,  எப்படியாவது,  கிறிஸ்து  அறிவிக்கப்படுகிறார்;  அதனால்  சந்தோஷப்படுகிறேன்,  இன்னமும்  சந்தோஷப்படுவேன்.  (பிலிப்பியர்  1:18)

ithanaalenna?  vagnchagaththinaalaavathu,  u'nmaiyinaalaavathu,  eppadiyaavathu,  ki’risthu  a’rivikkappadugi’raar;  athanaal  santhoashappadugi’rean,  innamum  santhoashappaduvean.  (pilippiyar  1:18)

அது  உங்கள்  வேண்டுதலினாலும்  இயேசுகிறிஸ்துவினுடைய  ஆவியின்  உதவியினாலும்  எனக்கு  இரட்சிப்பாக  முடியுமென்று  அறிவேன்.  (பிலிப்பியர்  1:19)

athu  ungga'l  vea'nduthalinaalum  iyeasuki’risthuvinudaiya  aaviyin  uthaviyinaalum  enakku  iradchippaaga  mudiyumen’ru  a’rivean.  (pilippiyar  1:19)

நான்  ஒன்றிலும்  வெட்கப்பட்டுப்போகாமல்,  எப்பொழுதும்போல  இப்பொழுதும்,  மிகுந்த  தைரியத்தோடே  ஜீவனாலாகிலும்,  சாவினாலாகிலும்,  கிறிஸ்து  என்  சரீரத்தினாலே  மகிமைப்படுவாரென்று  எனக்கு  உண்டாயிருக்கிற  வாஞ்சைக்கும்  நம்பிக்கைக்கும்  தக்கதாய்,  அப்படி  முடியும்.  (பிலிப்பியர்  1:20)

naan  on’rilum  vedkappattuppoagaamal,  eppozhuthumpoala  ippozhuthum,  miguntha  thairiyaththoadea  jeevanaalaagilum,  saavinaalaagilum,  ki’risthu  en  sareeraththinaalea  magimaippaduvaaren’ru  enakku  u'ndaayirukki’ra  vaagnchaikkum  nambikkaikkum  thakkathaay,  appadi  mudiyum.  (pilippiyar  1:20)

கிறிஸ்து  எனக்கு  ஜீவன்,  சாவு  எனக்கு  ஆதாயம்.  (பிலிப்பியர்  1:21)

ki’risthu  enakku  jeevan,  saavu  enakku  aathaayam.  (pilippiyar  1:21)

ஆகிலும்  சரீரத்தில்  பிழைத்திருக்கிறதினாலே  என்  கிரியைக்குப்  பலனுண்டாயிருப்பதால்,  நான்  தெரிந்துகொள்ளவேண்டியது  இன்னதென்று  அறியேன்.  (பிலிப்பியர்  1:22)

aagilum  sareeraththil  pizhaiththirukki’rathinaalea  en  kiriyaikkup  palanu'ndaayiruppathaal,  naan  therinthuko'l'lavea'ndiyathu  innathen’ru  a’riyean.  (pilippiyar  1:22)

ஏனெனில்  இவ்விரண்டினாலும்  நான்  நெருக்கப்படுகிறேன்;  தேகத்தைவிட்டுப்  பிரிந்து,  கிறிஸ்துவுடனேகூட  இருக்க  எனக்கு  ஆசையுண்டு,  அது  அதிக  நன்மையாயிருக்கும்;  (பிலிப்பியர்  1:23)

eanenil  ivvira'ndinaalum  naan  nerukkappadugi’rean;  theagaththaivittup  pirinthu,  ki’risthuvudaneakooda  irukka  enakku  aasaiyu'ndu,  athu  athiga  nanmaiyaayirukkum;  (pilippiyar  1:23)

அப்படியிருந்தும்,  நான்  சரீரத்தில்  தரித்திருப்பது  உங்களுக்கு  அதிக  அவசியம்.  (பிலிப்பியர்  1:24)

appadiyirunthum,  naan  sareeraththil  thariththiruppathu  ungga'lukku  athiga  avasiyam.  (pilippiyar  1:24)

இந்த  நிச்சயத்தைக்கொண்டிருந்து,  நான்  மறுபடியும்  உங்களிடத்தில்  வருகிறதினால்  என்னைக்குறித்து  உங்களுடைய  மகிழ்ச்சி  கிறிஸ்து  இயேசுவுக்குள்  பெருகும்படிக்கு,  (பிலிப்பியர்  1:25)

intha  nichchayaththaikko'ndirunthu,  naan  ma’rupadiyum  ungga'lidaththil  varugi’rathinaal  ennaikku’riththu  ungga'ludaiya  magizhchchi  ki’risthu  iyeasuvukku'l  perugumpadikku,  (pilippiyar  1:25)

உங்கள்  விசுவாசத்தின்  வர்த்தனைக்காகவும்  சந்தோஷத்துக்காகவும்  நான்  பிழைத்து,  உங்கள்  அனைவரோடுங்கூட  இருப்பேனென்று  அறிந்திருக்கிறேன்.  (பிலிப்பியர்  1:26)

ungga'l  visuvaasaththin  varththanaikkaagavum  santhoashaththukkaagavum  naan  pizhaiththu,  ungga'l  anaivaroadungkooda  iruppeanen’ru  a’rinthirukki’rean.  (pilippiyar  1:26)

நான்  வந்து  உங்களைக்  கண்டாலும்,  நான்  வராமலிருந்தாலும்,  நீங்கள்  ஒரே  ஆவியிலே  உறுதியாய்  நின்று,  ஒரே  ஆத்துமாவினாலே  சுவிசேஷத்தின்  விசுவாசத்திற்காகக்  கூடப்போராடி,  எதிர்க்கிறவர்களால்  ஒன்றிலும்  மருளாதிருக்கிறீர்களென்று  உங்களைக்குறித்து  நான்  கேள்விப்படும்படி,  எவ்விதத்திலும்  நீங்கள்  கிறிஸ்துவின்  சுவிசேஷத்திற்குப்  பாத்திரராக  மாத்திரம்  நடந்துகொள்ளுங்கள்.  (பிலிப்பியர்  1:27)

naan  vanthu  ungga'laik  ka'ndaalum,  naan  varaamalirunthaalum,  neengga'l  orea  aaviyilea  u’ruthiyaay  nin’ru,  orea  aaththumaavinaalea  suviseashaththin  visuvaasaththi’rkaagak  koodappoaraadi,  ethirkki’ravarga'laal  on’rilum  maru'laathirukki’reerga'len’ru  ungga'laikku’riththu  naan  kea'lvippadumpadi,  evvithaththilum  neengga'l  ki’risthuvin  suviseashaththi’rkup  paaththiraraaga  maaththiram  nadanthuko'l'lungga'l.  (pilippiyar  1:27)

நீங்கள்  மருளாதிருக்கிறது  அவர்கள்  கெட்டுப்போகிறதற்கும்,  நீங்கள்  இரட்சிக்கப்படுகிறதற்கும்  அத்தாட்சியாயிருக்கிறது;  இதுவும்  தேவனுடைய  செயலே.  (பிலிப்பியர்  1:28)

neengga'l  maru'laathirukki’rathu  avarga'l  kettuppoagi’ratha’rkum,  neengga'l  iradchikkappadugi’ratha’rkum  aththaadchiyaayirukki’rathu;  ithuvum  theavanudaiya  seyalea.  (pilippiyar  1:28)

ஏனெனில்  கிறிஸ்துவினிடத்தில்  விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல,  அவர்  நிமித்தமாகப்  பாடுபடுகிறதற்கும்  உங்களுக்கு  அருளப்பட்டிருக்கிறது.  (பிலிப்பியர்  1:29)

eanenil  ki’risthuvinidaththil  visuvaasikki’ratha’rkumaaththiramalla,  avar  nimiththamaagap  paadupadugi’ratha’rkum  ungga'lukku  aru'lappattirukki’rathu.  (pilippiyar  1:29)

நீங்கள்  என்னிடத்திலே  கண்டதும்  எனக்கு  உண்டென்று  இப்பொழுது  கேள்விப்படுகிறதுமான  போராட்டமே  உங்களுக்கும்  உண்டு.  (பிலிப்பியர்  1:30)

neengga'l  ennidaththilea  ka'ndathum  enakku  u'nden’ru  ippozhuthu  kea'lvippadugi’rathumaana  poaraattamea  ungga'lukkum  u'ndu.  (pilippiyar  1:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!