Thursday, June 09, 2016

Pileamoan 1 | பிலேமோன் 1 | Philemon 1

கிறிஸ்து  இயேசுவினிமித்தம்  கட்டப்பட்டவனாயிருக்கிற  பவுலும்,  சகோதரனாகிய  தீமோத்தேயும்,  எங்களுக்குப்  பிரியமுள்ளவனும்  உடன்வேலையாளுமாயிருக்கிற  பிலேமோனுக்கும்,  (பிலேமோன்  1:1)

ki’risthu  iyeasuvinimiththam  kattappattavanaayirukki’ra  pavulum,  sagoatharanaagiya  theemoaththeayum,  engga'lukkup  piriyamu'l'lavanum  udanvealaiyaa'lumaayirukki’ra  pileamoanukkum,  (pileamoan  1:1)

பிரியமுள்ள  அப்பியாளுக்கும்,  எங்கள்  உடன்  போர்ச்சேவகனாகிய  அர்க்கிப்புவுக்கும்,  உம்முடைய  வீட்டிலே  கூடிவருகிற  சபைக்கும்  எழுதுகிறதாவது:  (பிலேமோன்  1:2)

piriyamu'l'la  appiyaa'lukkum,  engga'l  udan  poarchseavaganaagiya  arkkippuvukkum,  ummudaiya  veettilea  koodivarugi’ra  sabaikkum  ezhuthugi’rathaavathu:  (pileamoan  1:2)

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்,  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (பிலேமோன்  1:3)

nammudaiya  pithaavaagiya  theavanaalum,  karththaraagiya  iyeasuki’risthuvinaalum,  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (pileamoan  1:3)

கர்த்தராகிய  இயேசுவினிடத்திலும்,  எல்லாப்  பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள  உம்முடைய  அன்பையும்  உம்முடைய  விசுவாசத்தையும்  நான்  கேள்விப்பட்டு,  (பிலேமோன்  1:4)

karththaraagiya  iyeasuvinidaththilum,  ellaap  parisuththavaanga'lidaththilumu'l'la  ummudaiya  anbaiyum  ummudaiya  visuvaasaththaiyum  naan  kea'lvippattu,  (pileamoan  1:4)

என்  ஜெபங்களில்  உம்மை  நினைத்து,  எப்பொழுதும்  என்  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்செய்து,  (பிலேமோன்  1:5)

en  jebangga'lil  ummai  ninaiththu,  eppozhuthum  en  theavanukku  sthoaththiragnseythu,  (pileamoan  1:5)

உங்களிலுள்ள  சகல  நன்மைகளும்  தெரியப்படுகிறதினாலே  உம்முடைய  விசுவாசத்தின்  அந்நியோந்நியம்  கிறிஸ்துஇயேசுவுக்காகப்  பயன்படவேண்டுமென்று  வேண்டுதல்செய்கிறேன்.  (பிலேமோன்  1:6)

ungga'lilu'l'la  sagala  nanmaiga'lum  theriyappadugi’rathinaalea  ummudaiya  visuvaasaththin  anniyoanniyam  ki’risthuiyeasuvukkaagap  payanpadavea'ndumen’ru  vea'nduthalseygi’rean.  (pileamoan  1:6)

சகோதரனே,  பரிசுத்தவான்களுடைய  உள்ளங்கள்  உம்மாலே  இளைப்பாறினபடியால்,  உம்முடைய  அன்பினாலே  மிகுந்த  சந்தோஷமும்  ஆறுதலும்  அடைந்திருக்கிறோம்.  (பிலேமோன்  1:7)

sagoatharanea,  parisuththavaanga'ludaiya  u'l'langga'l  ummaalea  i'laippaa’rinapadiyaal,  ummudaiya  anbinaalea  miguntha  santhoashamum  aa’ruthalum  adainthirukki’roam.  (pileamoan  1:7)

ஆகையால்,  பவுலாகிய  நான்  முதிர்வயதுள்ளவனாகவும்,  இயேசுகிறிஸ்துவினிமித்தம்  இப்பொழுது  கட்டப்பட்டவனாகவும்  இருக்கிறபடியால்,  (பிலேமோன்  1:8)

aagaiyaal,  pavulaagiya  naan  muthirvayathu'l'lavanaagavum,  iyeasuki’risthuvinimiththam  ippozhuthu  kattappattavanaagavum  irukki’rapadiyaal,  (pileamoan  1:8)

நீர்  செய்யத்தக்கதை  உமக்குக்  கட்டளையிடும்படிக்குக்  கிறிஸ்துவுக்குள்  நான்  துணியத்தக்கவனாயிருந்தாலும்,  அப்படிச்  செய்யாமல்,  அன்பினிமித்தம்  மன்றாடுகிறேன்.  (பிலேமோன்  1:9)

neer  seyyaththakkathai  umakkuk  katta'laiyidumpadikkuk  ki’risthuvukku'l  naan  thu'niyaththakkavanaayirunthaalum,  appadich  seyyaamal,  anbinimiththam  man’raadugi’rean.  (pileamoan  1:9)

என்னவென்றால்,  கட்டப்பட்டிருக்கையில்  நான்  பெற்ற  என்  மகனாகிய  ஒநேசிமுக்காக  உம்மை  மன்றாடுகிறேன்.  (பிலேமோன்  1:10)

ennaven’raal,  kattappattirukkaiyil  naan  pet’ra  en  maganaagiya  oneasimukkaaga  ummai  man’raadugi’rean.  (pileamoan  1:10)

முன்னே  அவன்  உமக்குப்  பிரயோஜனமில்லாதவன்,  இப்பொழுதோ  உமக்கும்  எனக்கும்  பிரயோஜனமுள்ளவன்.  (பிலேமோன்  1:11)

munnea  avan  umakkup  pirayoajanamillaathavan,  ippozhuthoa  umakkum  enakkum  pirayoajanamu'l'lavan.  (pileamoan  1:11)

அவனை  நான்  உம்மிடத்திற்கு  அனுப்புகிறேன்;  என்  உள்ளம்போலிருக்கிற  அவனை  நீர்  ஏற்றுக்கொள்ளும்.  (பிலேமோன்  1:12)

avanai  naan  ummidaththi’rku  anuppugi’rean;  en  u'l'lampoalirukki’ra  avanai  neer  eat’rukko'l'lum.  (pileamoan  1:12)

சுவிசேஷத்தினிமித்தம்  கட்டப்பட்டிருக்கிற  எனக்கு  ஊழியஞ்செய்யும்படி  உமக்குப்  பதிலாக  அவனை  என்னிடத்தில்  வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.  (பிலேமோன்  1:13)

suviseashaththinimiththam  kattappattirukki’ra  enakku  oozhiyagnseyyumpadi  umakkup  bathilaaga  avanai  ennidaththil  vaiththukko'l'lavea'ndumen’rirunthean.  (pileamoan  1:13)

ஆனாலும்  நீர்  செய்யும்  நன்மையைக்  கட்டாயத்தினாலல்ல,  மனப்பூர்வமாய்ச்  செய்யத்தக்கதாக,  நான்  உம்முடைய  சம்மதியில்லாமல்  ஒன்றும்  செய்ய  எனக்கு  மனதில்லை.  (பிலேமோன்  1:14)

aanaalum  neer  seyyum  nanmaiyaik  kattaayaththinaalalla,  manappoorvamaaych  seyyaththakkathaaga,  naan  ummudaiya  sammathiyillaamal  on’rum  seyya  enakku  manathillai.  (pileamoan  1:14)

அவன்  என்றென்றைக்கும்  உம்முடையவனாயிருக்கும்படிக்கும்,  இனிமேல்  அவன்  அடிமையானவனாகவல்ல,  அடிமையானவனுக்கு  மேலானவனாகவும்  பிரியமுள்ள  சகோதரனாகவுமிருக்கும்படிக்கும்  கொஞ்சக்காலம்  உம்மைவிட்டுப்  பிரிந்துபோனானாக்கும்.  (பிலேமோன்  1:15)

avan  en’ren’raikkum  ummudaiyavanaayirukkumpadikkum,  inimeal  avan  adimaiyaanavanaagavalla,  adimaiyaanavanukku  mealaanavanaagavum  piriyamu'l'la  sagoatharanaagavumirukkumpadikkum  kognchakkaalam  ummaivittup  pirinthupoanaanaakkum.  (pileamoan  1:15)

எனக்கு  அவன்  பிரியமான  சகோதரனானால்,  உமக்குச்  சரீரத்தின்படியேயும்  கர்த்தருக்குள்ளும்  எவ்வளவு  பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்!  (பிலேமோன்  1:16)

enakku  avan  piriyamaana  sagoatharanaanaal,  umakkuch  sareeraththinpadiyeayum  karththarukku'l'lum  evva'lavu  piriyamu'l'lavanaayirukkavea'ndum!  (pileamoan  1:16)

ஆதலால்,  நீர்  என்னை  உம்மோடே  ஐக்கியமானவனென்று  எண்ணினால்,  என்னை  ஏற்றுக்கொள்வதுபோல  அவனையும்  ஏற்றுக்கொள்ளும்.  (பிலேமோன்  1:17)

aathalaal,  neer  ennai  ummoadea  aikkiyamaanavanen’ru  e'n'ninaal,  ennai  eat’rukko'lvathupoala  avanaiyum  eat’rukko'l'lum.  (pileamoan  1:17)

அவன்  உமக்கு  யாதொரு  அநியாயஞ்செய்ததும்,  உம்மிடத்தில்  கடன்பட்டதும்  உண்டானால்,  அதை  என்  கணக்கிலே  வைத்துக்கொள்ளும்.  (பிலேமோன்  1:18)

avan  umakku  yaathoru  aniyaayagnseythathum,  ummidaththil  kadanpattathum  u'ndaanaal,  athai  en  ka'nakkilea  vaiththukko'l'lum.  (pileamoan  1:18)

பவுலாகிய  நான்  இதை  என்  சொந்தக்கையாலே  எழுதினேன்,  நான்  அதைச்  செலுத்தித்  தீர்ப்பேன்.  நீர்  உம்மைத்தாமே  எனக்குக்  கடனாகச்  செலுத்தவேண்டுமென்று  நான்  உமக்குச்  சொல்லவேண்டியதில்லையே.  (பிலேமோன்  1:19)

pavulaagiya  naan  ithai  en  sonthakkaiyaalea  ezhuthinean,  naan  athaich  seluththith  theerppean.  neer  ummaiththaamea  enakkuk  kadanaagach  seluththavea'ndumen’ru  naan  umakkuch  sollavea'ndiyathillaiyea.  (pileamoan  1:19)

ஆம்,  சகோதரனே,  கர்த்தருக்குள்  உம்மாலே  எனக்குப்  பிரயோஜனமுண்டாகட்டும்;  கர்த்தருக்குள்  என்  உள்ளத்தை  இளைப்பாறப்பண்ணும்.  (பிலேமோன்  1:20)

aam,  sagoatharanea,  karththarukku'l  ummaalea  enakkup  pirayoajanamu'ndaagattum;  karththarukku'l  en  u'l'laththai  i'laippaa’rappa'n'num.  (pileamoan  1:20)

நான்  சொல்லுகிறதிலும்  அதிகமாய்ச்  செய்வீரென்று  அறிந்து,  இதற்கு  நீர்  இணங்குவீரென்று  நிச்சயித்து,  உமக்கு  எழுதியிருக்கிறேன்.  (பிலேமோன்  1:21)

naan  sollugi’rathilum  athigamaaych  seyveeren’ru  a’rinthu,  itha’rku  neer  i'nangguveeren’ru  nichchayiththu,  umakku  ezhuthiyirukki’rean.  (pileamoan  1:21)

மேலும்,  உங்கள்  விண்ணப்பங்களினாலே  நான்  உங்களுக்கு  அநுக்கிரகிக்கப்படுவேனென்று  நம்பியிருக்கிறபடியால்,  நான்  இருக்கும்படிக்கு  ஓரிடத்தை  எனக்காக  ஆயத்தம்பண்ணும்.  (பிலேமோன்  1:22)

mealum,  ungga'l  vi'n'nappangga'linaalea  naan  ungga'lukku  anukkiragikkappaduveanen’ru  nambiyirukki’rapadiyaal,  naan  irukkumpadikku  oaridaththai  enakkaaga  aayaththampa'n'num.  (pileamoan  1:22)

கிறிஸ்து  இயேசுவினிமித்தம்  என்னோடேகூடக்  காவலில்  வைக்கப்பட்டிருக்கிற  எப்பாப்பிராவும்,  (பிலேமோன்  1:23)

ki’risthu  iyeasuvinimiththam  ennoadeakoodak  kaavalil  vaikkappattirukki’ra  eppaappiraavum,  (pileamoan  1:23)

என்  உடன்வேலையாட்களாகிய  மாற்குவும்,  அரிஸ்தர்க்கும்,  தேமாவும்,  லூக்காவும்  உமக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  (பிலேமோன்  1:24)

en  udanvealaiyaadka'laagiya  maa’rkuvum,  aristharkkum,  theamaavum,  lookkaavum  umakku  vaazhththuthal  sollugi’raarga'l.  (pileamoan  1:24)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  கிருபை  உங்கள்  ஆவியுடனேகூட  இருப்பதாக.  ஆமென்.  (பிலேமோன்  1:25)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  kirubai  ungga'l  aaviyudaneakooda  iruppathaaga.  aamen.  (pileamoan  1:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!