Thursday, June 23, 2016

Neethimozhiga'l 8 | நீதிமொழிகள் 8 | Proverbs 8

ஞானம்  கூப்பிடுகிறதில்லையோ?  புத்தி  சத்தமிடுகிறதில்லையோ?  (நீதிமொழிகள்  8:1)

gnaanam  kooppidugi’rathillaiyoa?  buththi  saththamidugi’rathillaiyoa?  (neethimozhiga’l  8:1)

அது  வழியருகேயுள்ள  மேடைகளிலும்,  நாற்சந்திகளிலும்  நிற்கிறது.  (நீதிமொழிகள்  8:2)

athu  vazhiyarugeayu'l'la  meadaiga'lilum,  naa’rsanthiga'lilum  ni’rki’rathu.  (neethimozhiga’l  8:2)

அது  ஊர்வாசல்களின்  ஓரத்திலும்,  பட்டணத்தின்  முகப்பிலும்,  நடை  கூடங்களிலும்  நின்று  சத்தமிட்டு:  (நீதிமொழிகள்  8:3)

athu  oorvaasalga'lin  oaraththilum,  patta'naththin  mugappilum,  nadai  koodangga'lilum  nin’ru  saththamittu:  (neethimozhiga’l  8:3)

மனுஷரே,  உங்களை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  என்  சத்தம்  மனுபுத்திரருக்குத்  தொனிக்கும்.  (நீதிமொழிகள்  8:4)

manusharea,  ungga'lai  noakkik  kooppidugi’rean;  en  saththam  manupuththirarukkuth  thonikkum.  (neethimozhiga’l  8:4)

பேதைகளே,  விவேகம்  அடையுங்கள்;  மூடர்களே,  புத்தியுள்ள  சிந்தையாயிருங்கள்.  (நீதிமொழிகள்  8:5)

peathaiga'lea,  viveagam  adaiyungga'l;  moodarga'lea,  buththiyu'l'la  sinthaiyaayirungga'l.  (neethimozhiga’l  8:5)

கேளுங்கள்,  மேம்பாடான  காரியங்களைப்  பேசுவேன்;  என்  உதடுகள்  உத்தம  காரியங்களை  வசனிக்கும்.  (நீதிமொழிகள்  8:6)

kea'lungga'l,  meampaadaana  kaariyangga'laip  peasuvean;  en  uthaduga'l  uththama  kaariyangga'lai  vasanikkum.  (neethimozhiga’l  8:6)

என்  வாய்  சத்தியத்தை  விளம்பும்,  ஆகாமியம்  என்  உதடுகளுக்கு  அருவருப்பானது.  (நீதிமொழிகள்  8:7)

en  vaay  saththiyaththai  vi'lambum,  aagaamiyam  en  uthaduga'lukku  aruvaruppaanathu.  (neethimozhiga’l  8:7)

என்  வாயின்  வாக்குகளெல்லாம்  நீதியானவைகள்;  அவைகளில்  புரட்டும்  விபரீதமும்  இல்லை.  (நீதிமொழிகள்  8:8)

en  vaayin  vaakkuga'lellaam  neethiyaanavaiga'l;  avaiga'lil  purattum  vibareethamum  illai.  (neethimozhiga’l  8:8)

அவைகளெல்லாம்  புத்தியுள்ளவனுக்குத்  தெளிவும்,  ஞானத்தைப்  பெற்றவர்களுக்கு  யதார்த்தமுமாயிருக்கும்.  (நீதிமொழிகள்  8:9)

avaiga'lellaam  buththiyu'l'lavanukkuth  the'livum,  gnaanaththaip  pet’ravarga'lukku  yathaarththamumaayirukkum.  (neethimozhiga’l  8:9)

வெள்ளியைப்பார்க்கிலும்  என்  புத்திமதியையும்,  பசும்பொன்னைப்பார்க்கிலும்  ஞானத்தையும்  அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.  (நீதிமொழிகள்  8:10)

ve'l'liyaippaarkkilum  en  buththimathiyaiyum,  pasumponnaippaarkkilum  gnaanaththaiyum  anggeegariththukko'l'lungga'l.  (neethimozhiga’l  8:10)

முத்துக்களைப்பார்க்கிலும்  ஞானமே  நல்லது;  இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம்  அதற்கு  நிகரல்ல.  (நீதிமொழிகள்  8:11)

muththukka'laippaarkkilum  gnaanamea  nallathu;  ichchikkappadaththakkavaiga'lellaam  atha’rku  nigaralla.  (neethimozhiga’l  8:11)

ஞானமாகிய  நான்  விவேகத்தோடே  வாசம்பண்ணி,  நல்யுக்தியான  அறிவுகளைக்  கண்டடைகிறேன்.  (நீதிமொழிகள்  8:12)

gnaanamaagiya  naan  viveagaththoadea  vaasampa'n'ni,  nalyukthiyaana  a’rivuga'laik  ka'ndadaigi’rean.  (neethimozhiga’l  8:12)

தீமையை  வெறுப்பதே  கர்த்தருக்குப்  பயப்படும்  பயம்;  பெருமையையும்,  அகந்தையையும்,  தீய  வழியையும்,  புரட்டுவாயையும்  நான்  வெறுக்கிறேன்.  (நீதிமொழிகள்  8:13)

theemaiyai  ve’ruppathea  karththarukkup  bayappadum  bayam;  perumaiyaiyum,  aganthaiyaiyum,  theeya  vazhiyaiyum,  purattuvaayaiyum  naan  ve’rukki’rean.  (neethimozhiga’l  8:13)

ஆலோசனையும்  மெய்ஞ்ஞானமும்  என்னுடையவைகள்;  நானே  புத்தி,  வல்லமை  என்னுடையது.  (நீதிமொழிகள்  8:14)

aaloasanaiyum  meygngnaanamum  ennudaiyavaiga'l;  naanea  buththi,  vallamai  ennudaiyathu.  (neethimozhiga’l  8:14)

என்னாலே  ராஜாக்கள்  அரசாளுகிறார்கள்,  பிரபுக்கள்  நீதிசெலுத்துகிறார்கள்.  (நீதிமொழிகள்  8:15)

ennaalea  raajaakka'l  arasaa'lugi’raarga'l,  pirabukka'l  neethiseluththugi’raarga'l.  (neethimozhiga’l  8:15)

என்னாலே  அதிகாரிகளும்,  பிரபுக்களும்,  பூமியிலுள்ள  சகல  நியாயாதிபதிகளும்  ஆளுகைசெய்துவருகிறார்கள்.  (நீதிமொழிகள்  8:16)

ennaalea  athigaariga'lum,  pirabukka'lum,  boomiyilu'l'la  sagala  niyaayaathibathiga'lum  aa'lugaiseythuvarugi’raarga'l.  (neethimozhiga’l  8:16)

என்னைச்  சிநேகிக்கிறவர்களை  நான்  சிநேகிக்கிறேன்;  அதிகாலையில்  என்னைத்  தேடுகிறவர்கள்  என்னைக்  கண்டடைவார்கள்.  (நீதிமொழிகள்  8:17)

ennaich  sineagikki’ravarga'lai  naan  sineagikki’rean;  athikaalaiyil  ennaith  theadugi’ravarga'l  ennaik  ka'ndadaivaarga'l.  (neethimozhiga’l  8:17)

ஐசுவரியமும்,  கனமும்,  நிலையான  பொருளும்,  நீதியும்  என்னிடத்தில்  உண்டு.  (நீதிமொழிகள்  8:18)

aisuvariyamum,  kanamum,  nilaiyaana  poru'lum,  neethiyum  ennidaththil  u'ndu.  (neethimozhiga’l  8:18)

பொன்னையும்  தங்கத்தையும்  பார்க்கிலும்  என்  பலன்  நல்லது;  சுத்த  வெள்ளியைப்பார்க்கிலும்  என்  வருமானம்  நல்லது.  (நீதிமொழிகள்  8:19)

ponnaiyum  thanggaththaiyum  paarkkilum  en  palan  nallathu;  suththa  ve'l'liyaippaarkkilum  en  varumaanam  nallathu.  (neethimozhiga’l  8:19)

என்னைச்  சிநேகிக்கிறவர்கள்  மெய்ப்பொருளைச்  சுதந்தரிக்கும்படிக்கும்,  அவர்களுடைய  களஞ்சியங்களை  நான்  நிரப்பும்படிக்கும்,  (நீதிமொழிகள்  8:20)

ennaich  sineagikki’ravarga'l  meypporu'laich  suthantharikkumpadikkum,  avarga'ludaiya  ka'lagnchiyangga'lai  naan  nirappumpadikkum,  (neethimozhiga’l  8:20)

அவர்களை  நீதியின்  வழியிலும்,  நியாயபாதைகளுக்குள்ளும்  நடத்துகிறேன்.  (நீதிமொழிகள்  8:21)

avarga'lai  neethiyin  vazhiyilum,  niyaayapaathaiga'lukku'l'lum  nadaththugi’rean.  (neethimozhiga’l  8:21)

கர்த்தர்  தமது  கிரியைகளுக்குமுன்  பூர்வமுதல்  என்னைத்  தமது  வழியின்  ஆதியாகக்  கொண்டிருந்தார்.  (நீதிமொழிகள்  8:22)

karththar  thamathu  kiriyaiga'lukkumun  poorvamuthal  ennaith  thamathu  vazhiyin  aathiyaagak  ko'ndirunthaar.  (neethimozhiga’l  8:22)

பூமி  உண்டாகுமுன்னும்,  ஆதிமுதற்கொண்டும்  அநாதியாய்  நான்  அபிஷேகம்பண்ணப்பட்டேன்.  (நீதிமொழிகள்  8:23)

boomi  u'ndaagumunnum,  aathimutha’rko'ndum  anaathiyaay  naan  abisheagampa'n'nappattean.  (neethimozhiga’l  8:23)

ஆழங்களும்,  ஜலம்  புரண்டுவரும்  ஊற்றுகளும்  உண்டாகுமுன்னே  நான்  ஜநிப்பிக்கப்பட்டேன்.  (நீதிமொழிகள்  8:24)

aazhangga'lum,  jalam  pura'nduvarum  oot’ruga'lum  u'ndaagumunnea  naan  janippikkappattean.  (neethimozhiga’l  8:24)

மலைகள்  நிலைபெறுவதற்கு  முன்னும்,  குன்றுகள்  உண்டாவதற்கு  முன்னும்,  (நீதிமொழிகள்  8:25)

malaiga'l  nilaipe’ruvatha’rku  munnum,  kun’ruga'l  u'ndaavatha’rku  munnum,  (neethimozhiga’l  8:25)

அவர்  பூமியையும்  அதின்  வெளிகளையும்,  பூமியிலுள்ள  மண்ணின்  திரள்களையும்  உண்டாக்குமுன்னும்  நான்  ஜநிப்பிக்கப்பட்டேன்.  (நீதிமொழிகள்  8:26)

avar  boomiyaiyum  athin  ve'liga'laiyum,  boomiyilu'l'la  ma'n'nin  thira'lga'laiyum  u'ndaakkumunnum  naan  janippikkappattean.  (neethimozhiga’l  8:26)

அவர்  வானங்களைப்  படைக்கையில்  நான்  அங்கே  இருந்தேன்;  அவர்  சமுத்திர  விலாசத்தை  வட்டணிக்கையிலும்,  (நீதிமொழிகள்  8:27)

avar  vaanangga'laip  padaikkaiyil  naan  anggea  irunthean;  avar  samuththira  vilaasaththai  vatta'nikkaiyilum,  (neethimozhiga’l  8:27)

உயரத்தில்  மேகங்களை  ஸ்தாபித்து,  சமுத்திரத்தின்  ஊற்றுகளை  அடைத்து  வைக்கையிலும்,  (நீதிமொழிகள்  8:28)

uyaraththil  meagangga'lai  sthaabiththu,  samuththiraththin  oot’ruga'lai  adaiththu  vaikkaiyilum,  (neethimozhiga’l  8:28)

சமுத்திர  ஜலம்  தன்  கரையை  விட்டு  மீறாதபடிக்கு  அதற்கு  எல்லையைக்  கட்டளையிட்டு,  பூமியின்  அஸ்திபாரங்களை  நிலைப்படுத்துகையிலும்,  (நீதிமொழிகள்  8:29)

samuththira  jalam  than  karaiyai  vittu  mee’raathapadikku  atha’rku  ellaiyaik  katta'laiyittu,  boomiyin  asthibaarangga'lai  nilaippaduththugaiyilum,  (neethimozhiga’l  8:29)

நான்  அவர்  அருகே  செல்லப்பிள்ளையாயிருந்தேன்;  நித்தம்  அவருடைய  மனமகிழ்ச்சியாயிருந்து,  எப்பொழுதும்  அவர்  சமுகத்தில்  களிகூர்ந்தேன்.  (நீதிமொழிகள்  8:30)

naan  avar  arugea  sellappi'l'laiyaayirunthean;  niththam  avarudaiya  manamagizhchchiyaayirunthu,  eppozhuthum  avar  samugaththil  ka'likoornthean.  (neethimozhiga’l  8:30)

அவருடைய  பூவுலகத்தில்  சந்தோஷப்பட்டு,  மனுமக்களுடனே  மகிழ்ந்துகொண்டிருந்தேன்.  (நீதிமொழிகள்  8:31)

avarudaiya  poovulagaththil  santhoashappattu,  manumakka'ludanea  magizhnthuko'ndirunthean.  (neethimozhiga’l  8:31)

ஆதலால்  பிள்ளைகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  என்  வழிகளைக்  காத்து  நடக்கிறவர்கள்  பாக்கியவான்கள்.  (நீதிமொழிகள்  8:32)

aathalaal  pi'l'laiga'lea,  enakkuch  sevikodungga'l;  en  vazhiga'laik  kaaththu  nadakki’ravarga'l  baakkiyavaanga'l.  (neethimozhiga’l  8:32)

நீங்கள்  புத்தியைக்  கேட்டு,  ஞானமடையுங்கள்;  அதை  விட்டு  விலகாதிருங்கள்.  (நீதிமொழிகள்  8:33)

neengga'l  buththiyaik  keattu,  gnaanamadaiyungga'l;  athai  vittu  vilagaathirungga'l.  (neethimozhiga’l  8:33)

என்  வாசற்படியில்  நித்தம்  விழித்திருந்து,  என்  கதவு  நிலையருகே  காத்திருந்து,  எனக்குச்  செவிகொடுக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (நீதிமொழிகள்  8:34)

en  vaasa’rpadiyil  niththam  vizhiththirunthu,  en  kathavu  nilaiyarugea  kaaththirunthu,  enakkuch  sevikodukki’ra  manushan  baakkiyavaan.  (neethimozhiga’l  8:34)

என்னைக்  கண்டடைகிறவன்  ஜீவனைக்  கண்டடைகிறான்;  கர்த்தரிடத்தில்  தயவையும்  பெறுவான்.  (நீதிமொழிகள்  8:35)

ennaik  ka'ndadaigi’ravan  jeevanaik  ka'ndadaigi’raan;  karththaridaththil  thayavaiyum  pe’ruvaan.  (neethimozhiga’l  8:35)

எனக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்கிறவனோ,  தன்  ஆத்துமாவைச்  சேதப்படுத்துகிறான்;  என்னை  வெறுக்கிறவர்கள்  யாவரும்  மரணத்தை  விரும்புகிறவர்கள்  என்று  சொல்லுகிறது.  (நீதிமொழிகள்  8:36)

enakku  viroathamaagap  paavagnseygi’ravanoa,  than  aaththumaavaich  seathappaduththugi’raan;  ennai  ve’rukki’ravarga'l  yaavarum  mara'naththai  virumbugi’ravarga'l  en’ru  sollugi’rathu.  (neethimozhiga’l  8:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!