Wednesday, June 22, 2016

Neethimozhiga'l 2 | நீதிமொழிகள் 2 | Proverbs 2

என்  மகனே,  நீ  உன்  செவியை  ஞானத்திற்குச்  சாய்த்து,  உன்  இருதயத்தைப்  புத்திக்கு  அமையப்பண்ணும்பொருட்டு,  (நீதிமொழிகள்  2:1)

en  maganea,  nee  un  seviyai  gnaanaththi’rkuch  saayththu,  un  iruthayaththaip  buththikku  amaiyappa'n'numporuttu,  (neethimozhiga’l  2:1)

நீ  என்  வார்த்தைகளை  ஏற்றுக்கொண்டு,  என்  கட்டளைகளை  உன்னிடத்தில்  பத்திரப்படுத்தி,  (நீதிமொழிகள்  2:2)

nee  en  vaarththaiga'lai  eat’rukko'ndu,  en  katta'laiga'lai  unnidaththil  paththirappaduththi,  (neethimozhiga’l  2:2)

ஞானத்தை  வா  என்று  கூப்பிட்டு,  புத்தியைச்  சத்தமிட்டு  அழைத்து,  (நீதிமொழிகள்  2:3)

gnaanaththai  vaa  en’ru  kooppittu,  buththiyaich  saththamittu  azhaiththu,  (neethimozhiga’l  2:3)

அதை  வெள்ளியைப்போல்  நாடி,  புதையல்களைத்  தேடுகிறதுபோல்  தேடுவாயாகில்,  (நீதிமொழிகள்  2:4)

athai  ve'l'liyaippoal  naadi,  puthaiyalga'laith  theadugi’rathupoal  theaduvaayaagil,  (neethimozhiga’l  2:4)

அப்பொழுது  கர்த்தருக்குப்  பயப்படுதல்  இன்னதென்று  நீ  உணர்ந்து,  தேவனை  அறியும்  அறிவைக்  கண்டடைவாய்.  (நீதிமொழிகள்  2:5)

appozhuthu  karththarukkup  bayappaduthal  innathen’ru  nee  u'narnthu,  theavanai  a’riyum  a’rivaik  ka'ndadaivaay.  (neethimozhiga’l  2:5)

கர்த்தர்  ஞானத்தைத்  தருகிறார்;  அவர்  வாயினின்று  அறிவும்  புத்தியும்  வரும்.  (நீதிமொழிகள்  2:6)

karththar  gnaanaththaith  tharugi’raar;  avar  vaayinin’ru  a’rivum  buththiyum  varum.  (neethimozhiga’l  2:6)

அவர்  நீதிமான்களுக்கென்று  மெய்ஞ்ஞானத்தை  வைத்துவைத்திருக்கிறார்;  உத்தமமாய்  நடக்கிறவர்களுக்கு  அவர்  கேடகமாயிருக்கிறார்.  (நீதிமொழிகள்  2:7)

avar  neethimaanga'lukken’ru  meygngnaanaththai  vaiththuvaiththirukki’raar;  uththamamaay  nadakki’ravarga'lukku  avar  keadagamaayirukki’raar.  (neethimozhiga’l  2:7)

அவர்  நியாயத்தின்  நெறிகளைத்  தற்காத்து,  தம்முடைய  பரிசுத்தவான்களின்  பாதையைக்  காப்பாற்றுகிறார்.  (நீதிமொழிகள்  2:8)

avar  niyaayaththin  ne’riga'laith  tha’rkaaththu,  thammudaiya  parisuththavaanga'lin  paathaiyaik  kaappaat’rugi’raar.  (neethimozhiga’l  2:8)

அப்பொழுது  நீதியையும்,  நியாயத்தையும்,  நிதானத்தையும்,  சகல  நல்வழிகளையும்  அறிந்துகொள்ளுவாய்.  (நீதிமொழிகள்  2:9)

appozhuthu  neethiyaiyum,  niyaayaththaiyum,  nithaanaththaiyum,  sagala  nalvazhiga'laiyum  a’rinthuko'l'luvaay.  (neethimozhiga’l  2:9)

ஞானம்  உன்  இருதயத்தில்  பிரவேசித்து,  அறிவு  உன்  ஆத்துமாவுக்கு  இன்பமாயிருக்கும்போது,  (நீதிமொழிகள்  2:10)

gnaanam  un  iruthayaththil  piraveasiththu,  a’rivu  un  aaththumaavukku  inbamaayirukkumpoathu,  (neethimozhiga’l  2:10)

நல்யோசனை  உன்னைக்  காப்பாற்றும்,  புத்தி  உன்னைப்  பாதுகாக்கும்.  (நீதிமொழிகள்  2:11)

nalyoasanai  unnaik  kaappaat’rum,  buththi  unnaip  paathukaakkum.  (neethimozhiga’l  2:11)

அதினால்  நீ  துன்மார்க்கனுடைய  வழிக்கும்,  மாறுபாடு  பேசுகிற  மனுஷனுக்கும்,  (நீதிமொழிகள்  2:12)

athinaal  nee  thunmaarkkanudaiya  vazhikkum,  maa’rupaadu  peasugi’ra  manushanukkum,  (neethimozhiga’l  2:12)

அந்தகார  வழிகளில்  நடக்க  நீதிநெறிகளை  விட்டு,  (நீதிமொழிகள்  2:13)

anthagaara  vazhiga'lil  nadakka  neethine’riga'lai  vittu,  (neethimozhiga’l  2:13)

தீமைசெய்ய  மகிழ்ந்து,  துன்மார்க்கருடைய  மாறுபாடுகளில்  களிகூருகிறவர்களுக்கும்,  (நீதிமொழிகள்  2:14)

theemaiseyya  magizhnthu,  thunmaarkkarudaiya  maa’rupaaduga'lil  ka'likoorugi’ravarga'lukkum,  (neethimozhiga’l  2:14)

மாறுபாடான  பாதைகளிலும்  கோணலான  வழிகளிலும்  நடக்கிறவர்களுக்கும்  நீ  தப்புவிக்கப்படுவாய்.  (நீதிமொழிகள்  2:15)

maa’rupaadaana  paathaiga'lilum  koa'nalaana  vazhiga'lilum  nadakki’ravarga'lukkum  nee  thappuvikkappaduvaay.  (neethimozhiga’l  2:15)

தன்  இளவயதின்  நாயகனை  விட்டு,  தன்  தேவனுடைய  உடன்படிக்கையை  மறந்து,  (நீதிமொழிகள்  2:16)

than  i'lavayathin  naayaganai  vittu,  than  theavanudaiya  udanpadikkaiyai  ma’ranthu,  (neethimozhiga’l  2:16)

இச்சகமான  வார்த்தைகளைப்பேசும்  அந்நிய  பெண்ணாகிய  பரஸ்திரீக்கும்  தப்புவிக்கப்படுவாய்.  (நீதிமொழிகள்  2:17)

ichchagamaana  vaarththaiga'laippeasum  anniya  pe'n'naagiya  parasthireekkum  thappuvikkappaduvaay.  (neethimozhiga’l  2:17)

அவளுடைய  வீடு  மரணத்துக்கும்,  அவளுடைய  பாதைகள்  மரித்தோரிடத்திற்கும்  சாய்கிறது.  (நீதிமொழிகள்  2:18)

ava'ludaiya  veedu  mara'naththukkum,  ava'ludaiya  paathaiga'l  mariththoaridaththi’rkum  saaygi’rathu.  (neethimozhiga’l  2:18)

அவளிடத்தில்  போகிறவர்களில்  ஒருவரும்  திரும்புகிறதில்லை,  ஜீவபாதைகளில்  வந்து  சேருகிறதுமில்லை.  (நீதிமொழிகள்  2:19)

ava'lidaththil  poagi’ravarga'lil  oruvarum  thirumbugi’rathillai,  jeevapaathaiga'lil  vanthu  searugi’rathumillai.  (neethimozhiga’l  2:19)

ஆதலால்  நீ  நல்லவர்களின்  வழியிலே  நடந்து,  நீதிமான்களின்  பாதைகளைக்  காத்துக்கொள்வாயாக.  (நீதிமொழிகள்  2:20)

aathalaal  nee  nallavarga'lin  vazhiyilea  nadanthu,  neethimaanga'lin  paathaiga'laik  kaaththukko'lvaayaaga.  (neethimozhiga’l  2:20)

செவ்வையானவர்கள்  பூமியிலே  வாசம்பண்ணுவார்கள்;  உத்தமர்கள்  அதிலே  தங்கியிருப்பார்கள்.  (நீதிமொழிகள்  2:21)

sevvaiyaanavarga'l  boomiyilea  vaasampa'n'nuvaarga'l;  uththamarga'l  athilea  thanggiyiruppaarga'l.  (neethimozhiga’l  2:21)

துன்மார்க்கரோ  பூமியிலிருந்து  அறுப்புண்டுபோவார்கள்;  துரோகிகள்  அதில்  இராதபடிக்கு  நிர்மூலமாவார்கள்.  (நீதிமொழிகள்  2:22)

thunmaarkkaroa  boomiyilirunthu  a’ruppu'ndupoavaarga'l;  thuroagiga'l  athil  iraathapadikku  nirmoolamaavaarga'l.  (neethimozhiga’l  2:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!