Thursday, June 23, 2016

Neethimozhiga'l 10 | நீதிமொழிகள் 10 | Proverbs 10

சாலொமோனின்  நீதிமொழிகள்:  ஞானமுள்ள  மகன்  தகப்பனைச்  சந்தோஷப்படுத்துகிறான்;  மூடத்தனமுள்ளவனோ  தாய்க்குச்  சஞ்சலமாயிருக்கிறான்.  (நீதிமொழிகள்  10:1)

saalomoanin  neethimozhiga'l:  gnaanamu'l'la  magan  thagappanaich  santhoashappaduththugi’raan;  moodaththanamu'l'lavanoa  thaaykkuch  sagnchalamaayirukki’raan.  (neethimozhiga’l  10:1)

அநியாயத்தின்  திரவியங்கள்  ஒன்றுக்கும்  உதவாது;  நீதியோ  மரணத்துக்குத்  தப்புவிக்கும்.  (நீதிமொழிகள்  10:2)

aniyaayaththin  thiraviyangga'l  on’rukkum  uthavaathu;  neethiyoa  mara'naththukkuth  thappuvikkum.  (neethimozhiga’l  10:2)

கர்த்தர்  நீதிமான்களைப்  பசியினால்  வருந்தவிடார்;  துன்மார்க்கருடைய  பொருளையோ  அகற்றிவிடுகிறார்.  (நீதிமொழிகள்  10:3)

karththar  neethimaanga'laip  pasiyinaal  varunthavidaar;  thunmaarkkarudaiya  poru'laiyoa  agat’rividugi’raar.  (neethimozhiga’l  10:3)

சோம்பற்கையால்  வேலைசெய்கிறவன்  ஏழையாவான்;  சுறுசுறுப்புள்ளவன்  கையோ  செல்வத்தை  உண்டாக்கும்.  (நீதிமொழிகள்  10:4)

soamba’rkaiyaal  vealaiseygi’ravan  eazhaiyaavaan;  su’rusu’ruppu'l'lavan  kaiyoa  selvaththai  u'ndaakkum.  (neethimozhiga’l  10:4)

கோடைகாலத்தில்  சேர்க்கிறவன்  புத்தியுள்ள  மகன்;  அறுப்புக்காலத்தில்  தூங்குகிறவனோ  இலச்சையை  உண்டாக்குகிற  மகன்.  (நீதிமொழிகள்  10:5)

koadaikaalaththil  searkki’ravan  buththiyu'l'la  magan;  a’ruppukkaalaththil  thoonggugi’ravanoa  ilachchaiyai  u'ndaakkugi’ra  magan.  (neethimozhiga’l  10:5)

நீதிமானுடைய  சிரசின்மேல்  ஆசீர்வாதங்கள்  தங்கும்;  கொடுமையோ  துன்மார்க்கனுடைய  வாயை  அடைக்கும்.  (நீதிமொழிகள்  10:6)

neethimaanudaiya  sirasinmeal  aaseervaathangga'l  thanggum;  kodumaiyoa  thunmaarkkanudaiya  vaayai  adaikkum.  (neethimozhiga’l  10:6)

நீதிமானுடைய  பேர்  புகழ்பெற்று  விளங்கும்;  துன்மார்க்கனுடைய  பேரோ  அழிந்துபோகும்.  (நீதிமொழிகள்  10:7)

neethimaanudaiya  pear  pugazhpet’ru  vi'langgum;  thunmaarkkanudaiya  pearoa  azhinthupoagum.  (neethimozhiga’l  10:7)

இருதயத்தில்  ஞானமுள்ளவன்  கட்டளைகளை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  அலப்புகிற  மூடனோ  விழுவான்.  (நீதிமொழிகள்  10:8)

iruthayaththil  gnaanamu'l'lavan  katta'laiga'lai  eat’rukko'l'lugi’raan;  alappugi’ra  moodanoa  vizhuvaan.  (neethimozhiga’l  10:8)

உத்தமமாய்  நடக்கிறவன்  பத்திரமாய்  நடக்கிறான்;  கோணலான  வழிகளில்  நடக்கிறவனோ  கண்டுபிடிக்கப்படுவான்.  (நீதிமொழிகள்  10:9)

uththamamaay  nadakki’ravan  paththiramaay  nadakki’raan;  koa'nalaana  vazhiga'lil  nadakki’ravanoa  ka'ndupidikkappaduvaan.  (neethimozhiga’l  10:9)

கண்சாடை  காட்டுகிறவன்  நோவு  உண்டாக்குகிறான்;  அலப்புகிற  மூடன்  விழுவான்.  (நீதிமொழிகள்  10:10)

ka'nsaadai  kaattugi’ravan  noavu  u'ndaakkugi’raan;  alappugi’ra  moodan  vizhuvaan.  (neethimozhiga’l  10:10)

நீதிமானுடைய  வாய்  ஜீவஊற்று;  கொடுமையோ  துன்மார்க்கனுடைய  வாயை  அடைக்கும்.  (நீதிமொழிகள்  10:11)

neethimaanudaiya  vaay  jeevaoot’ru;  kodumaiyoa  thunmaarkkanudaiya  vaayai  adaikkum.  (neethimozhiga’l  10:11)

பகை  விரோதங்களை  எழுப்பும்;  அன்போ  சகல  பாவங்களையும்  மூடும்.  (நீதிமொழிகள்  10:12)

pagai  viroathangga'lai  ezhuppum;  anboa  sagala  paavangga'laiyum  moodum.  (neethimozhiga’l  10:12)

புத்திமானுடைய  உதடுகளில்  விளங்குவது  ஞானம்;  மதிகேடனுடைய  முதுகுக்கு  ஏற்றது  பிரம்பு.  (நீதிமொழிகள்  10:13)

buththimaanudaiya  uthaduga'lil  vi'langguvathu  gnaanam;  mathikeadanudaiya  muthugukku  eat’rathu  pirambu.  (neethimozhiga’l  10:13)

ஞானவான்கள்  அறிவைச்  சேர்த்துவைக்கிறார்கள்;  மூடனுடைய  வாய்க்குக்  கேடு  சமீபித்திருக்கிறது.  (நீதிமொழிகள்  10:14)

gnaanavaanga'l  a’rivaich  searththuvaikki’raarga'l;  moodanudaiya  vaaykkuk  keadu  sameebiththirukki’rathu.  (neethimozhiga’l  10:14)

ஐசுவரியவானுடைய  பொருள்  அவனுக்கு  அரணான  பட்டணம்;  ஏழைகளின்  வறுமையோ  அவர்களைக்  கலங்கப்பண்ணும்.  (நீதிமொழிகள்  10:15)

aisuvariyavaanudaiya  poru'l  avanukku  ara'naana  patta'nam;  eazhaiga'lin  va’rumaiyoa  avarga'laik  kalanggappa'n'num.  (neethimozhiga’l  10:15)

நீதிமானுடைய  பிரயாசம்  ஜீவனையும்,  துன்மார்க்கனுடைய  விளைவோ  பாவத்தையும்  பிறப்பிக்கும்.  (நீதிமொழிகள்  10:16)

neethimaanudaiya  pirayaasam  jeevanaiyum,  thunmaarkkanudaiya  vi'laivoa  paavaththaiyum  pi’rappikkum.  (neethimozhiga’l  10:16)

புத்திமதிகளைக்  காத்துக்கொள்ளுகிறவன்  ஜீவவழியில்  இருக்கிறான்;  கண்டனையை  வெறுக்கிறவனோ  மோசம்போகிறான்.  (நீதிமொழிகள்  10:17)

buththimathiga'laik  kaaththukko'l'lugi’ravan  jeevavazhiyil  irukki’raan;  ka'ndanaiyai  ve’rukki’ravanoa  moasampoagi’raan.  (neethimozhiga’l  10:17)

பகையை  மறைக்கிறவன்  பொய்  உதடன்;  புறங்கூறுகிறவன்  மதிகேடன்.  (நீதிமொழிகள்  10:18)

pagaiyai  ma’raikki’ravan  poy  uthadan;  pu’rangkoo’rugi’ravan  mathikeadan.  (neethimozhiga’l  10:18)

சொற்களின்  மிகுதியில்  பாவமில்லாமற்போகாது;  தன்  உதடுகளை  அடக்குகிறவனோ  புத்திமான்.  (நீதிமொழிகள்  10:19)

so’rka'lin  miguthiyil  paavamillaama’rpoagaathu;  than  uthaduga'lai  adakkugi’ravanoa  buththimaan.  (neethimozhiga’l  10:19)

நீதிமானுடைய  நாவு  சுத்தவெள்ளி;  துன்மார்க்கனுடைய  மனம்  அற்பவிலையும்  பெறாது.  (நீதிமொழிகள்  10:20)

neethimaanudaiya  naavu  suththave'l'li;  thunmaarkkanudaiya  manam  a’rpavilaiyum  pe’raathu.  (neethimozhiga’l  10:20)

நீதிமானுடைய  உதடுகள்  அநேகரைப்  போஷிக்கும்;  மூடரோ  மதியீனத்தினால்  மாளுவார்கள்.  (நீதிமொழிகள்  10:21)

neethimaanudaiya  uthaduga'l  aneagaraip  poashikkum;  moodaroa  mathiyeenaththinaal  maa'luvaarga'l.  (neethimozhiga’l  10:21)

கர்த்தரின்  ஆசீர்வாதமே  ஐசுவரியத்தைத்  தரும்;  அதனோடே  அவர்  வேதனையைக்  கூட்டார்.  (நீதிமொழிகள்  10:22)

karththarin  aaseervaathamea  aisuvariyaththaith  tharum;  athanoadea  avar  veathanaiyaik  koottaar.  (neethimozhiga’l  10:22)

தீவினைசெய்வது  மூடனுக்கு  விளையாட்டு;  புத்திமானுக்கோ  ஞானம்  உண்டு.  (நீதிமொழிகள்  10:23)

theevinaiseyvathu  moodanukku  vi'laiyaattu;  buththimaanukkoa  gnaanam  u'ndu.  (neethimozhiga’l  10:23)

துன்மார்க்கன்  பயப்படும்  காரியம்  அவனுக்கு  வந்து  நேரிடும்;  நீதிமான்  விரும்புகிற  காரியம்  அவனுக்குக்  கொடுக்கப்படும்.  (நீதிமொழிகள்  10:24)

thunmaarkkan  bayappadum  kaariyam  avanukku  vanthu  nearidum;  neethimaan  virumbugi’ra  kaariyam  avanukkuk  kodukkappadum.  (neethimozhiga’l  10:24)

சுழல்காற்று  கடந்துபோவதுபோல்  துன்மார்க்கன்  கடந்துபோவான்;  நீதிமானோ  நித்திய  அஸ்திபாரமுள்ளவன்.  (நீதிமொழிகள்  10:25)

suzhalkaat’ru  kadanthupoavathupoal  thunmaarkkan  kadanthupoavaan;  neethimaanoa  niththiya  asthibaaramu'l'lavan.  (neethimozhiga’l  10:25)

பற்களுக்குக்  காடியும்,  கண்களுக்குப்  புகையும்  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  சோம்பேறியும்  தன்னை  அனுப்புகிறவர்களுக்கு  இருக்கிறான்.  (நீதிமொழிகள்  10:26)

pa’rka'lukkuk  kaadiyum,  ka'nga'lukkup  pugaiyum  eppadiyirukki’rathoa,  appadiyea  soambea’riyum  thannai  anuppugi’ravarga'lukku  irukki’raan.  (neethimozhiga’l  10:26)

கர்த்தருக்குப்  பயப்படுதல்  ஆயுசுநாட்களைப்  பெருகப்பண்ணும்;  துன்மார்க்கருடைய  வருஷங்களோ  குறுகிப்போம்.  (நீதிமொழிகள்  10:27)

karththarukkup  bayappaduthal  aayusunaadka'laip  perugappa'n'num;  thunmaarkkarudaiya  varushangga'loa  ku’rugippoam.  (neethimozhiga’l  10:27)

நீதிமான்களின்  நம்பிக்கை  மகிழ்ச்சியாகும்;  துன்மார்க்கருடைய  அபேட்சையோ  அழியும்.  (நீதிமொழிகள்  10:28)

neethimaanga'lin  nambikkai  magizhchchiyaagum;  thunmaarkkarudaiya  abeadchaiyoa  azhiyum.  (neethimozhiga’l  10:28)

கர்த்தரின்  வழி  உத்தமர்களுக்கு  அரண்,  அக்கிரமக்காரருக்கோ  கலக்கம்.  (நீதிமொழிகள்  10:29)

karththarin  vazhi  uththamarga'lukku  ara'n,  akkiramakkaararukkoa  kalakkam.  (neethimozhiga’l  10:29)

நீதிமான்  என்றும்  அசைக்கப்படுவதில்லை;  துன்மார்க்கர்  பூமியில்  வசிப்பதில்லை.  (நீதிமொழிகள்  10:30)

neethimaan  en’rum  asaikkappaduvathillai;  thunmaarkkar  boomiyil  vasippathillai.  (neethimozhiga’l  10:30)

நீதிமானுடைய  வாய்  ஞானத்தை  வெளிப்படுத்தும்;  மாறுபாடுள்ள  நாவோ  அறுப்புண்டுபோம்.  (நீதிமொழிகள்  10:31)

neethimaanudaiya  vaay  gnaanaththai  ve'lippaduththum;  maa’rupaadu'l'la  naavoa  a’ruppu'ndupoam.  (neethimozhiga’l  10:31)

நீதிமான்களுடைய  உதடுகள்  பிரியமானவைகளைப்  பேச  அறியும்;  துன்மார்க்கருடைய  வாயோ  மாறுபாடுள்ளது.  (நீதிமொழிகள்  10:32)

neethimaanga'ludaiya  uthaduga'l  piriyamaanavaiga'laip  peasa  a’riyum;  thunmaarkkarudaiya  vaayoa  maa’rupaadu'l'lathu.  (neethimozhiga’l  10:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!