Wednesday, June 22, 2016

Neethimozhiga'l 1 | நீதிமொழிகள் 1 | Proverbs 1

தாவீதின்  குமாரனும்  இஸ்ரவேலின்  ராஜாவுமாகிய  சாலொமோனின்  நீதிமொழிகள்:  (நீதிமொழிகள்  1:1)

thaaveethin  kumaaranum  isravealin  raajaavumaagiya  saalomoanin  neethimozhiga'l:  (neethimozhiga’l  1:1)

இவைகளால்  ஞானத்தையும்  போதகத்தையும்  அறிந்து,  புத்திமதிகளை  உணர்ந்து,  (நீதிமொழிகள்  1:2)

ivaiga'laal  gnaanaththaiyum  poathagaththaiyum  a’rinthu,  buththimathiga'lai  u'narnthu,  (neethimozhiga’l  1:2)

விவேகம்,  நீதி,  நியாயம்,  நிதானம்  என்பவைகளைப்பற்றிய  உபதேசத்தை  அடையலாம்.  (நீதிமொழிகள்  1:3)

viveagam,  neethi,  niyaayam,  nithaanam  enbavaiga'laippat’riya  ubatheasaththai  adaiyalaam.  (neethimozhiga’l  1:3)

இவைகள்  பேதைகளுக்கு  வினாவையும்,  வாலிபருக்கு  அறிவையும்  விவேகத்தையும்  கொடுக்கும்.  (நீதிமொழிகள்  1:4)

ivaiga'l  peathaiga'lukku  vinaavaiyum,  vaalibarukku  a’rivaiyum  viveagaththaiyum  kodukkum.  (neethimozhiga’l  1:4)

புத்திமான்  இவைகளைக்  கேட்டு,  அறிவில்  தேறுவான்;  விவேகி  நல்லாலோசனைகளை  அடைந்து;  (நீதிமொழிகள்  1:5)

buththimaan  ivaiga'laik  keattu,  a’rivil  thea’ruvaan;  viveagi  nallaaloasanaiga'lai  adainthu;  (neethimozhiga’l  1:5)

நீதிமொழியையும்,  அதின்  அர்த்தத்தையும்,  ஞானிகளின்  வாக்கியங்களையும்,  அவர்கள்  உரைத்த  புதைபொருள்களையும்  அறிந்துகொள்வான்.  (நீதிமொழிகள்  1:6)

neethimozhiyaiyum,  athin  arththaththaiyum,  gnaaniga'lin  vaakkiyangga'laiyum,  avarga'l  uraiththa  puthaiporu'lga'laiyum  a’rinthuko'lvaan.  (neethimozhiga’l  1:6)

கர்த்தருக்குப்  பயப்படுதலே  ஞானத்தின்  ஆரம்பம்;  மூடர்  ஞானத்தையும்  போதகத்தையும்  அசட்டைபண்ணுகிறார்கள்.  (நீதிமொழிகள்  1:7)

karththarukkup  bayappaduthalea  gnaanaththin  aarambam;  moodar  gnaanaththaiyum  poathagaththaiyum  asattaipa'n'nugi’raarga'l.  (neethimozhiga’l  1:7)

என்  மகனே,  உன்  தகப்பன்  புத்தியைக்  கேள்,  உன்  தாயின்  போதகத்தைத்  தள்ளாதே.  (நீதிமொழிகள்  1:8)

en  maganea,  un  thagappan  buththiyaik  kea'l,  un  thaayin  poathagaththaith  tha'l'laathea.  (neethimozhiga’l  1:8)

அவைகள்  உன்  சிரசுக்கு  அலங்காரமான  முடியும்,  உன்  கழுத்துக்குச்  சரப்பணியுமாயிருக்கும்.  (நீதிமொழிகள்  1:9)

avaiga'l  un  sirasukku  alanggaaramaana  mudiyum,  un  kazhuththukkuch  sarappa'niyumaayirukkum.  (neethimozhiga’l  1:9)

என்  மகனே,  பாவிகள்  உனக்கு  நயங்காட்டினாலும்  நீ  சம்மதியாதே.  (நீதிமொழிகள்  1:10)

en  maganea,  paaviga'l  unakku  nayangkaattinaalum  nee  sammathiyaathea.  (neethimozhiga’l  1:10)

எங்களோடே  வா,  இரத்தஞ்சிந்தும்படி  நாம்  பதிவிருந்து,  குற்றமற்றிருக்கிறவர்களை  முகாந்தரமின்றிப்  பிடிக்கும்படி  ஒளித்திருப்போம்;  (நீதிமொழிகள்  1:11)

engga'loadea  vaa,  iraththagnsinthumpadi  naam  pathivirunthu,  kut’ramat’rirukki’ravarga'lai  mugaantharamin’rip  pidikkumpadi  o'liththiruppoam;  (neethimozhiga’l  1:11)

பாதாளம்  விழுங்குவதுபோல்  நாம்  அவர்களை  உயிரோடே  விழுங்குவோம்;  குழியில்  இறங்குகிறவர்கள்  விழுங்கப்படுவதுபோல்  அவர்களை  முழுமையும்  விழுங்குவோம்;  (நீதிமொழிகள்  1:12)

paathaa'lam  vizhungguvathupoal  naam  avarga'lai  uyiroadea  vizhungguvoam;  kuzhiyil  i’ranggugi’ravarga'l  vizhunggappaduvathupoal  avarga'lai  muzhumaiyum  vizhungguvoam;  (neethimozhiga’l  1:12)

விலையுயர்ந்த  சகலவிதப்  பொருள்களையும்  கண்டடைவோம்;  கொள்ளைப்  பொருளினால்  நம்முடைய  வீடுகளை  நிரப்புவோம்.  (நீதிமொழிகள்  1:13)

vilaiyuyarntha  sagalavithap  poru'lga'laiyum  ka'ndadaivoam;  ko'l'laip  poru'linaal  nammudaiya  veeduga'lai  nirappuvoam.  (neethimozhiga’l  1:13)

எங்களோடே  பங்காளியாயிரு;  நம்மெல்லாருக்கும்  ஒரே  பை  இருக்கும்  என்று  அவர்கள்  சொல்வார்களாகில்;  (நீதிமொழிகள்  1:14)

engga'loadea  panggaa'liyaayiru;  nammellaarukkum  orea  pai  irukkum  en’ru  avarga'l  solvaarga'laagil;  (neethimozhiga’l  1:14)

என்  மகனே,  நீ  அவர்களோடே  வழிநடவாமல்,  உன்  காலை  அவர்கள்  பாதைக்கு  விலக்குவாயாக.  (நீதிமொழிகள்  1:15)

en  maganea,  nee  avarga'loadea  vazhinadavaamal,  un  kaalai  avarga'l  paathaikku  vilakkuvaayaaga.  (neethimozhiga’l  1:15)

அவர்கள்  கால்கள்  தீங்குசெய்ய  ஓடி,  இரத்தஞ்சிந்தத்  தீவிரிக்கிறது.  (நீதிமொழிகள்  1:16)

avarga'l  kaalga'l  theengguseyya  oadi,  iraththagnsinthath  theevirikki’rathu.  (neethimozhiga’l  1:16)

எவ்வகையான  பட்சியானாலும்  சரி,  அதின்  கண்களுக்கு  முன்பாக  வலையை  விரிப்பது  விருதா.  (நீதிமொழிகள்  1:17)

evvagaiyaana  padchiyaanaalum  sari,  athin  ka'nga'lukku  munbaaga  valaiyai  virippathu  viruthaa.  (neethimozhiga’l  1:17)

இவர்களோ  தங்கள்  இரத்தத்திற்கே  பதிவிருக்கிறார்கள்,  தங்கள்  பிராணனுக்கே  ஒளிவைத்திருக்கிறார்கள்.  (நீதிமொழிகள்  1:18)

ivarga'loa  thangga'l  iraththaththi’rkea  pathivirukki’raarga'l,  thangga'l  piraa'nanukkea  o'livaiththirukki’raarga'l.  (neethimozhiga’l  1:18)

பொருளாசையுள்ள  எல்லாருடைய  வழியும்  இதுவே;  இது  தன்னையுடையவர்களின்  உயிரை  வாங்கும்.  (நீதிமொழிகள்  1:19)

poru'laasaiyu'l'la  ellaarudaiya  vazhiyum  ithuvea;  ithu  thannaiyudaiyavarga'lin  uyirai  vaanggum.  (neethimozhiga’l  1:19)

ஞானமானது  வெளியே  நின்று  கூப்பிடுகிறது,  வீதிகளில்  சத்தமிடுகிறது.  (நீதிமொழிகள்  1:20)

gnaanamaanathu  ve'liyea  nin’ru  kooppidugi’rathu,  veethiga'lil  saththamidugi’rathu.  (neethimozhiga’l  1:20)

அது  சந்தடியுள்ள  தெருக்களின்  சந்திலும்,  ஒலிமுகவாசலிலும்  நின்று  கூப்பிட்டு,  பட்டணத்தில்  தன்  வார்த்தைகளை  வசனித்துச்  சொல்லுகிறது:  (நீதிமொழிகள்  1:21)

athu  santhadiyu'l'la  therukka'lin  santhilum,  olimugavaasalilum  nin’ru  kooppittu,  patta'naththil  than  vaarththaiga'lai  vasaniththuch  sollugi’rathu:  (neethimozhiga’l  1:21)

பேதைகளே,  நீங்கள்  பேதைமையை  விரும்புவதும்,  நிந்தனைக்காரரே,  நீங்கள்  நிந்தனையில்  பிரியப்படுவதும்,  மதியீனரே,  நீங்கள்  ஞானத்தை  வெறுப்பதும்,  எதுவரைக்கும்  இருக்கும்.  (நீதிமொழிகள்  1:22)

peathaiga'lea,  neengga'l  peathaimaiyai  virumbuvathum,  ninthanaikkaararea,  neengga'l  ninthanaiyil  piriyappaduvathum,  mathiyeenarea,  neengga'l  gnaanaththai  ve’ruppathum,  ethuvaraikkum  irukkum.  (neethimozhiga’l  1:22)

என்  கடிந்துகொள்ளுதலுக்குத்  திரும்புங்கள்;  இதோ,  என்  ஆவியை  உங்களுக்கு  அருளுவேன்,  என்  வார்த்தைகளை  உங்களுக்குத்  தெரிவிப்பேன்.  (நீதிமொழிகள்  1:23)

en  kadinthuko'l'luthalukkuth  thirumbungga'l;  ithoa,  en  aaviyai  ungga'lukku  aru'luvean,  en  vaarththaiga'lai  ungga'lukkuth  therivippean.  (neethimozhiga’l  1:23)

நான்  கூப்பிட்டும்,  நீங்கள்  கேட்கமாட்டோம்  என்கிறீர்கள்;  நான்  என்  கையை  நீட்டியும்  கவனிக்கிறவன்  ஒருவனும்  இல்லை.  (நீதிமொழிகள்  1:24)

naan  kooppittum,  neengga'l  keadkamaattoam  engi’reerga'l;  naan  en  kaiyai  neettiyum  kavanikki’ravan  oruvanum  illai.  (neethimozhiga’l  1:24)

என்  ஆலோசனையையெல்லாம்  நீங்கள்  தள்ளி,  என்  கடிந்துகொள்ளுதலை  வெறுத்தீர்கள்.  (நீதிமொழிகள்  1:25)

en  aaloasanaiyaiyellaam  neengga'l  tha'l'li,  en  kadinthuko'l'luthalai  ve’ruththeerga'l.  (neethimozhiga’l  1:25)

ஆகையால்,  நானும்  உங்கள்  ஆபத்துக்காலத்தில்  நகைத்து,  நீங்கள்  பயப்படுங்காரியம்  வரும்போது  ஆகடியம்பண்ணுவேன்.  (நீதிமொழிகள்  1:26)

aagaiyaal,  naanum  ungga'l  aabaththukkaalaththil  nagaiththu,  neengga'l  bayappadungkaariyam  varumpoathu  aagadiyampa'n'nuvean.  (neethimozhiga’l  1:26)

நீங்கள்  பயப்படுங்காரியம்  புசல்போல்  வரும்போதும்,  ஆபத்து  சூறாவளிபோல்  உங்களுக்கு  நேரிடும்போதும்,  நெருக்கமும்  இடுக்கணும்  உங்கள்மேல்  வரும்போதும்,  ஆகடியம்பண்ணுவேன்.  (நீதிமொழிகள்  1:27)

neengga'l  bayappadungkaariyam  pusalpoal  varumpoathum,  aabaththu  soo’raava'lipoal  ungga'lukku  nearidumpoathum,  nerukkamum  idukka'num  ungga'lmeal  varumpoathum,  aagadiyampa'n'nuvean.  (neethimozhiga’l  1:27)

அப்பொழுது  அவர்கள்  என்னை  நோக்கிக்  கூப்பிடுவார்கள்;  நான்  மறுஉத்தரவு  கொடுக்கமாட்டேன்;  அவர்கள்  அதிகாலையிலே  என்னைத்  தேடுவார்கள்,  என்னைக்  காணமாட்டார்கள்.  (நீதிமொழிகள்  1:28)

appozhuthu  avarga'l  ennai  noakkik  kooppiduvaarga'l;  naan  ma’ruuththaravu  kodukkamaattean;  avarga'l  athikaalaiyilea  ennaith  theaduvaarga'l,  ennaik  kaa'namaattaarga'l.  (neethimozhiga’l  1:28)

அவர்கள்  அறிவை  வெறுத்தார்கள்,  கர்த்தருக்குப்  பயப்படுதலைத்  தெரிந்து  கொள்ளாமற்போனார்கள்.  (நீதிமொழிகள்  1:29)

avarga'l  a’rivai  ve’ruththaarga'l,  karththarukkup  bayappaduthalaith  therinthu  ko'l'laama’rpoanaarga'l.  (neethimozhiga’l  1:29)

என்  ஆலோசனையை  அவர்கள்  விரும்பவில்லை;  என்  கடிந்துகொள்ளுதலையெல்லாம்  அசட்டைபண்ணினார்கள்.  (நீதிமொழிகள்  1:30)

en  aaloasanaiyai  avarga'l  virumbavillai;  en  kadinthuko'l'luthalaiyellaam  asattaipa'n'ninaarga'l.  (neethimozhiga’l  1:30)

ஆகையால்  அவர்கள்  தங்கள்  வழியின்  பலனைப்  புசிப்பார்கள்;  தங்கள்  யோசனைகளினால்  திருப்தியடைவார்கள்.  (நீதிமொழிகள்  1:31)

aagaiyaal  avarga'l  thangga'l  vazhiyin  palanaip  pusippaarga'l;  thangga'l  yoasanaiga'linaal  thirupthiyadaivaarga'l.  (neethimozhiga’l  1:31)

பேதைகளின்  மாறுபாடு  அவர்களைக்  கொல்லும்,  மூடரின்  நிர்விசாரம்  அவர்களை  அழிக்கும்.  (நீதிமொழிகள்  1:32)

peathaiga'lin  maa’rupaadu  avarga'laik  kollum,  moodarin  nirvisaaram  avarga'lai  azhikkum.  (neethimozhiga’l  1:32)

எனக்குச்  செவிகொடுக்கிறவன்  எவனோ,  அவன்  விக்கினமின்றி  வாசம்பண்ணி,  ஆபத்திற்குப்  பயப்படாமல்  அமைதியாயிருப்பான்.  (நீதிமொழிகள்  1:33)

enakkuch  sevikodukki’ravan  evanoa,  avan  vikkinamin’ri  vaasampa'n'ni,  aabaththi’rkup  bayappadaamal  amaithiyaayiruppaan.  (neethimozhiga’l  1:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!