Friday, June 10, 2016

Ebireyar 9 | எபிரெயர் 9 | Hebrews 9

அன்றியும்,  முதலாம்  உடன்படிக்கையானது  ஆராதனைக்கேற்ற  முறைமைகளும்  பூமிக்குரிய  பரிசுத்த  ஸ்தலமும்  உடையதாயிருந்தது.  (எபிரெயர்  9:1)

an’riyum,  muthalaam  udanpadikkaiyaanathu  aaraathanaikkeat’ra  mu’raimaiga'lum  boomikkuriya  parisuththa  sthalamum  udaiyathaayirunthathu.  (ebireyar  9:1)

எப்படியெனில்,  ஒரு  கூடாரம்  உண்டாக்கப்பட்டிருந்தது;  அதின்  முந்தின  பாகத்தில்  குத்துவிளக்கும்,  மேஜையும்,  தேவசமுகத்தப்பங்களும்  இருந்தன;  அது  பரிசுத்த  ஸ்தலமென்னப்படும்.  (எபிரெயர்  9:2)

eppadiyenil,  oru  koodaaram  u'ndaakkappattirunthathu;  athin  munthina  paagaththil  kuththuvi'lakkum,  meajaiyum,  theavasamugaththappangga'lum  irunthana;  athu  parisuththa  sthalamennappadum.  (ebireyar  9:2)

இரண்டாந்  திரைக்குள்ளே  மகா  பரிசுத்த  ஸ்தலமென்னப்பட்ட  கூடாரம்  இருந்தது.  (எபிரெயர்  9:3)

ira'ndaan  thiraikku'l'lea  mahaa  parisuththa  sthalamennappatta  koodaaram  irunthathu.  (ebireyar  9:3)

அதிலே  பொன்னாற்செய்த  தூபகலசமும்,  முழுவதும்  பொற்றகடு  பொதிந்திருக்கப்பட்ட  உடன்படிக்கைப்  பெட்டியும்  இருந்தன;  அந்தப்  பெட்டியிலே  மன்னா  வைக்கப்பட்ட  பொற்பாத்திரமும்,  ஆரோனுடைய  தளிர்த்த  கோலும்,  உடன்படிக்கையின்  கற்பலகைகளும்  இருந்தன.  (எபிரெயர்  9:4)

athilea  ponnaa’rseytha  thoobakalasamum,  muzhuvathum  pot’ragadu  pothinthirukkappatta  udanpadikkaip  pettiyum  irunthana;  anthap  pettiyilea  mannaa  vaikkappatta  po’rpaaththiramum,  aaroanudaiya  tha'lirththa  koalum,  udanpadikkaiyin  ka’rpalagaiga'lum  irunthana.  (ebireyar  9:4)

அதற்கு  மேலே  மகிமையுள்ள  கேருபீன்கள்  வைக்கப்பட்டுக்  கிருபாசனத்தை  நிழலிட்டிருந்தன;  இவைகளைக்குறித்து  விவரமாய்ப்பேச  இப்பொழுது  சமயமில்லை.  (எபிரெயர்  9:5)

atha’rku  mealea  magimaiyu'l'la  kearubeenga'l  vaikkappattuk  kirubaasanaththai  nizhalittirunthana;  ivaiga'laikku’riththu  vivaramaayppeasa  ippozhuthu  samayamillai.  (ebireyar  9:5)

இவைகள்  இவ்விதமாய்  ஆயத்தமாக்கப்பட்டிருக்க,  ஆசாரியர்கள்  ஆராதனை  முறைமைகளை  நிறைவேற்றும்படிக்கு  முதலாங்கூடாரத்திலே  நித்தமும்  பிரவேசிப்பார்கள்.  (எபிரெயர்  9:6)

ivaiga'l  ivvithamaay  aayaththamaakkappattirukka,  aasaariyarga'l  aaraathanai  mu’raimaiga'lai  ni’raiveat’rumpadikku  muthalaangkoodaaraththilea  niththamum  piraveasippaarga'l.  (ebireyar  9:6)

இரண்டாங்கூடாரத்திலே  பிரதான  ஆசாரியன்மாத்திரம்  வருஷத்திற்கு  ஒருதரம்  இரத்தத்தோடே  பிரவேசித்து,  அந்த  இரத்தத்தைத்  தனக்காகவும்  ஜனங்களுடைய  தப்பிதங்களுக்காகவும்  செலுத்துவான்.  (எபிரெயர்  9:7)

ira'ndaangkoodaaraththilea  pirathaana  aasaariyanmaaththiram  varushaththi’rku  orutharam  iraththaththoadea  piraveasiththu,  antha  iraththaththaith  thanakkaagavum  janangga'ludaiya  thappithangga'lukkaagavum  seluththuvaan.  (ebireyar  9:7)

அதினாலே,  முதலாங்கூடாரம்  நிற்குமளவும்  பரிசுத்த  ஸ்தலத்திற்குப்போகிற  மார்க்கம்  இன்னும்  வெளிப்படவில்லையென்று  பரிசுத்த  ஆவியானவர்  தெரியப்படுத்தியிருக்கிறார்.  (எபிரெயர்  9:8)

athinaalea,  muthalaangkoodaaram  ni’rkuma'lavum  parisuththa  sthalaththi’rkuppoagi’ra  maarkkam  innum  ve'lippadavillaiyen’ru  parisuththa  aaviyaanavar  theriyappaduththiyirukki’raar.  (ebireyar  9:8)

அந்தக்  கூடாரம்  இக்காலத்திற்கு  உதவுகிற  ஒப்பனையாயிருக்கிறது;  அதற்கேற்றபடியே  செலுத்தப்பட்டுவருகிற  காணிக்கைகளும்  பலிகளும்  ஆராதனை  செய்கிறவனுடைய  மனச்சாட்சியைப்  பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.  (எபிரெயர்  9:9)

anthak  koodaaram  ikkaalaththi’rku  uthavugi’ra  oppanaiyaayirukki’rathu;  atha’rkeat’rapadiyea  seluththappattuvarugi’ra  kaa'nikkaiga'lum  baliga'lum  aaraathanai  seygi’ravanudaiya  manachsaadchiyaip  poora'nappaduththakkoodaathavaiga'laam.  (ebireyar  9:9)

இவைகள்  சீர்திருத்தல்  உண்டாகும்  காலம்வரைக்கும்  நடந்தேறும்படி  கட்டளையிடப்பட்ட  போஜனபானங்களும்,  பலவித  ஸ்நானங்களும்,  சரீரத்திற்கேற்ற  சடங்குகளுமேயல்லாமல்  வேறல்ல.  (எபிரெயர்  9:10)

ivaiga'l  seerthiruththal  u'ndaagum  kaalamvaraikkum  nadanthea’rumpadi  katta'laiyidappatta  poajanabaanangga'lum,  palavitha  snaanangga'lum,  sareeraththi’rkeat’ra  sadangguga'lumeayallaamal  vea’ralla.  (ebireyar  9:10)

கிறிஸ்துவானவர்  வரப்போகிற  நன்மைகளுக்குரிய  பிரதான  ஆசாரியராய்  வெளிப்பட்டு,  கையினால்  செய்யப்பட்டதாகிய  இந்தச்  சிருஷ்டிசம்பந்தமான  கூடாரத்தின்  வழியாக  அல்ல,  பெரிதும்  உத்தமமுமான  கூடாரத்தின்  வழியாகவும்,  (எபிரெயர்  9:11)

ki’risthuvaanavar  varappoagi’ra  nanmaiga'lukkuriya  pirathaana  aasaariyaraay  ve'lippattu,  kaiyinaal  seyyappattathaagiya  inthach  sirushdisambanthamaana  koodaaraththin  vazhiyaaga  alla,  perithum  uththamamumaana  koodaaraththin  vazhiyaagavum,  (ebireyar  9:11)

வெள்ளாட்டுக்கடா,  இளங்காளை  இவைகளுடைய  இரத்தத்தினாலே  அல்ல,  தம்முடைய  சொந்த  இரத்தத்தினாலும்  ஒரேதரம்  மகா  பரிசுத்த  ஸ்தலத்திலே  பிரவேசித்து,  நித்திய  மீட்பை  உண்டுபண்ணினார்.  (எபிரெயர்  9:12)

ve'l'laattukkadaa,  i'langkaa'lai  ivaiga'ludaiya  iraththaththinaalea  alla,  thammudaiya  sontha  iraththaththinaalum  oreatharam  mahaa  parisuththa  sthalaththilea  piraveasiththu,  niththiya  meedpai  u'ndupa'n'ninaar.  (ebireyar  9:12)

அதெப்படியெனில்,  காளை  வெள்ளாட்டுக்கடா  இவைகளின்  இரத்தமும்,  தீட்டுப்பட்டவர்கள்மேல்  தெளிக்கப்பட்ட  கடாரியின்  சாம்பலும்,  சரீரசுத்தியுண்டாகும்படி  பரிசுத்தப்படுத்துமானால்,  (எபிரெயர்  9:13)

atheppadiyenil,  kaa'lai  ve'l'laattukkadaa  ivaiga'lin  iraththamum,  theettuppattavarga'lmeal  the'likkappatta  kadaariyin  saambalum,  sareerasuththiyu'ndaagumpadi  parisuththappaduththumaanaal,  (ebireyar  9:13)

நித்திய  ஆவியினாலே  தம்மைத்தாமே  பழுதற்ற  பலியாகத்  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்த  கிறிஸ்துவினுடைய  இரத்தம்  ஜீவனுள்ள  தேவனுக்கு  ஊழியஞ்செய்வதற்கு  உங்கள்  மனச்சாட்சியைச்  செத்தக்கிரியைகளறச்  சுத்திகரிப்பது  எவ்வளவு  நிச்சயம்!  (எபிரெயர்  9:14)

niththiya  aaviyinaalea  thammaiththaamea  pazhuthat’ra  baliyaagath  theavanukku  oppukkoduththa  ki’risthuvinudaiya  iraththam  jeevanu'l'la  theavanukku  oozhiyagnseyvatha’rku  ungga'l  manachsaadchiyaich  seththakkiriyaiga'la’rach  suththigarippathu  evva'lavu  nichchayam!  (ebireyar  9:14)

ஆகையால்  முதலாம்  உடன்படிக்கையின்  காலத்திலே  நடந்த  அக்கிரமங்களை  நிவிர்த்திசெய்யும்பொருட்டு  அவர்  மரணமடைந்து,  அழைக்கப்பட்டவர்கள்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  நித்திய  சுதந்தரத்தை  அடைந்துகொள்வதற்காக,  புது  உடன்படிக்கையின்  மத்தியஸ்தராயிருக்கிறார்.  (எபிரெயர்  9:15)

aagaiyaal  muthalaam  udanpadikkaiyin  kaalaththilea  nadantha  akkiramangga'lai  nivirththiseyyumporuttu  avar  mara'namadainthu,  azhaikkappattavarga'l  vaakkuththaththampa'n'nappatta  niththiya  suthantharaththai  adainthuko'lvatha’rkaaga,  puthu  udanpadikkaiyin  maththiyastharaayirukki’raar.  (ebireyar  9:15)

ஏனென்றால்,  எங்கே  மரணசாசனமுண்டோ,  அங்கே  அந்தச்  சாசனத்தை  எழுதினவனுடைய  மரணமும்  உண்டாகவேண்டும்.  (எபிரெயர்  9:16)

eanen’raal,  enggea  mara'nasaasanamu'ndoa,  anggea  anthach  saasanaththai  ezhuthinavanudaiya  mara'namum  u'ndaagavea'ndum.  (ebireyar  9:16)

எப்படியெனில்,  மரணமுண்டான  பின்பே  மரணசாசனம்  உறுதிப்படும்;  அதை  எழுதினவன்  உயிரோடிருக்கையில்  அதற்குப்  பெலனில்லையே.  (எபிரெயர்  9:17)

eppadiyenil,  mara'namu'ndaana  pinbea  mara'nasaasanam  u’ruthippadum;  athai  ezhuthinavan  uyiroadirukkaiyil  atha’rkup  belanillaiyea.  (ebireyar  9:17)

அந்தப்படி,  முதலாம்  உடன்படிக்கையும்  இரத்தமில்லாமல்  பிரதிஷ்டை  பண்ணப்படவில்லை.  (எபிரெயர்  9:18)

anthappadi,  muthalaam  udanpadikkaiyum  iraththamillaamal  pirathishdai  pa'n'nappadavillai.  (ebireyar  9:18)

எப்படியெனில்,  மோசே,  நியாயப்பிரமாணத்தின்படி,  சகல  ஜனங்களுக்கும்  எல்லாக்  கட்டளைகளையும்  சொன்னபின்பு,  இளங்காளை  வெள்ளாட்டுக்கடா  இவைகளின்  இரத்தத்தைத்  தண்ணீரோடும்,  சிவப்பான  ஆட்டுமயிரோடும்,  ஈசோப்போடுங்கூட  எடுத்து,  புஸ்தகத்தின்மேலும்  ஜனங்களெல்லார்மேலும்  தெளித்து:  (எபிரெயர்  9:19)

eppadiyenil,  moasea,  niyaayappiramaa'naththinpadi,  sagala  janangga'lukkum  ellaak  katta'laiga'laiyum  sonnapinbu,  i'langkaa'lai  ve'l'laattukkadaa  ivaiga'lin  iraththaththaith  tha'n'neeroadum,  sivappaana  aattumayiroadum,  eesoappoadungkooda  eduththu,  pusthagaththinmealum  janangga'lellaarmealum  the'liththu:  (ebireyar  9:19)

தேவன்  உங்களுக்குக்  கட்டளையிட்ட  உடன்படிக்கையின்  இரத்தம்  இதுவே  என்று  சொன்னான்.  (எபிரெயர்  9:20)

theavan  ungga'lukkuk  katta'laiyitta  udanpadikkaiyin  iraththam  ithuvea  en’ru  sonnaan.  (ebireyar  9:20)

இவ்விதமாக,  கூடாரத்தின்மேலும்  ஆராதனைக்குரிய  சகல  பணிமுட்டுகளின்மேலும்  இரத்தத்தைத்  தெளித்தான்.  (எபிரெயர்  9:21)

ivvithamaaga,  koodaaraththinmealum  aaraathanaikkuriya  sagala  pa'nimuttuga'linmealum  iraththaththaith  the'liththaan.  (ebireyar  9:21)

நியாயப்பிரமாணத்தின்படி  கொஞ்சங்குறைய  எல்லாம்  இரத்தத்தினாலே  சுத்திகரிக்கப்படும்;  இரத்தஞ்சிந்துதலில்லாமல்  மன்னிப்பு  உண்டாகாது.  (எபிரெயர்  9:22)

niyaayappiramaa'naththinpadi  kognchangku’raiya  ellaam  iraththaththinaalea  suththigarikkappadum;  iraththagnsinthuthalillaamal  mannippu  u'ndaagaathu.  (ebireyar  9:22)

ஆதலால்,  பரலோகத்திலுள்ளவைகளுக்குச்  சாயலானவைகள்  இப்படிப்பட்ட  பலிகளினாலே  சுத்திகரிக்கப்பட  வேண்டியதாயிருந்தது;  பரலோகத்திலுள்ளவைகளோ  இவைகளிலும்  விசேஷித்த  பலிகளாலே  சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.  (எபிரெயர்  9:23)

aathalaal,  paraloagaththilu'l'lavaiga'lukkuch  saayalaanavaiga'l  ippadippatta  baliga'linaalea  suththigarikkappada  vea'ndiyathaayirunthathu;  paraloagaththilu'l'lavaiga'loa  ivaiga'lilum  viseashiththa  baliga'laalea  suththigarikkappadavea'ndiyathaamea.  (ebireyar  9:23)

அந்தப்படி,  மெய்யான  பரிசுத்த  ஸ்தலத்துக்கு  அடையாளமான  கையினால்  செய்யப்பட்டதாயிருக்கிற  பரிசுத்த  ஸ்தலத்திலே  கிறிஸ்துவானவர்  பிரவேசியாமல்,  பரலோகத்திலேதானே  இப்பொழுது  நமக்காகத்  தேவனுடைய  சமுகத்தில்  பிரத்தியட்சமாகும்படி  பிரவேசித்திருக்கிறார்.  (எபிரெயர்  9:24)

anthappadi,  meyyaana  parisuththa  sthalaththukku  adaiyaa'lamaana  kaiyinaal  seyyappattathaayirukki’ra  parisuththa  sthalaththilea  ki’risthuvaanavar  piraveasiyaamal,  paraloagaththileathaanea  ippozhuthu  namakkaagath  theavanudaiya  samugaththil  piraththiyadchamaagumpadi  piraveasiththirukki’raar.  (ebireyar  9:24)

பிரதான  ஆசாரியன்  அந்நிய  இரத்தத்தோடே  வருஷந்தோறும்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிக்கிறதுபோல,  அவர்  அநேகந்தரம்  தம்மைப்  பலியிடும்படிக்குப்  பிரவேசிக்கவில்லை.  (எபிரெயர்  9:25)

pirathaana  aasaariyan  anniya  iraththaththoadea  varushanthoa’rum  parisuththa  sthalaththukku'l  piraveasikki’rathupoala,  avar  aneagantharam  thammaip  baliyidumpadikkup  piraveasikkavillai.  (ebireyar  9:25)

அப்படியிருந்ததானால்,  உலகமுண்டானது  முதற்கொண்டு  அவர்  அநேகந்தரம்  பாடுபடவேண்டியதாயிருக்குமே;  அப்படியல்ல,  அவர்  தம்மைத்தாமே  பலியிடுகிறதினாலே  பாவங்களை  நீக்கும்பொருட்டாக  இந்தக்  கடைசிக்காலத்தில்  ஒரேதரம்  வெளிப்பட்டார்.  (எபிரெயர்  9:26)

appadiyirunthathaanaal,  ulagamu'ndaanathu  mutha’rko'ndu  avar  aneagantharam  paadupadavea'ndiyathaayirukkumea;  appadiyalla,  avar  thammaiththaamea  baliyidugi’rathinaalea  paavangga'lai  neekkumporuttaaga  inthak  kadaisikkaalaththil  oreatharam  ve'lippattaar.  (ebireyar  9:26)

அன்றியும்,  ஒரேதரம்  மரிப்பதும்,  பின்பு  நியாயத்தீர்ப்படைவதும்,  மனுஷருக்கு  நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,  (எபிரெயர்  9:27)

an’riyum,  oreatharam  marippathum,  pinbu  niyaayaththeerppadaivathum,  manusharukku  niyamikkappattirukki’rapadiyea,  (ebireyar  9:27)

கிறிஸ்துவும்  அநேகருடைய  பாவங்களைச்  சுமந்து  தீர்க்கும்படிக்கு  ஒரேதரம்  பலியிடப்பட்டு,  தமக்காகக்  காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு  இரட்சிப்பை  அருளும்படி  இரண்டாந்தரம்  பாவமில்லாமல்  தரிசனமாவார்.  (எபிரெயர்  9:28)

ki’risthuvum  aneagarudaiya  paavangga'laich  sumanthu  theerkkumpadikku  oreatharam  baliyidappattu,  thamakkaagak  kaaththukko'ndirukki’ravarga'lukku  iradchippai  aru'lumpadi  ira'ndaantharam  paavamillaamal  tharisanamaavaar.  (ebireyar  9:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!