Friday, June 10, 2016

Ebireyar 7 | எபிரெயர் 7 | Hebrews 7

இந்த  மெல்கிசேதேக்கு  சாலேமின்  ராஜாவும்,  உன்னதமான  தேவனுடைய  ஆசாரியனுமாயிருந்தான்;  ராஜாக்களை  முறியடித்துவந்த  ஆபிரகாமுக்கு  இவன்  எதிர்கொண்டுபோய்,  அவனை  ஆசீர்வதித்தான்.  (எபிரெயர்  7:1)

intha  melkiseatheakku  saaleamin  raajaavum,  unnathamaana  theavanudaiya  aasaariyanumaayirunthaan;  raajaakka'lai  mu’riyadiththuvantha  aabirahaamukku  ivan  ethirko'ndupoay,  avanai  aaseervathiththaan.  (ebireyar  7:1)

இவனுக்கு  ஆபிரகாம்  எல்லாவற்றிலும்  தசமபாகம்  கொடுத்தான்;  இவனுடைய  முதற்பேராகிய  மெல்கிசேதேக்கு  என்பதற்கு  நீதியின்  ராஜா  என்றும்,  பின்பு  சாலேமின்  ராஜா  என்பதற்குச்  சமாதானத்தின்  ராஜா  என்றும்  அருத்தமாம்.  (எபிரெயர்  7:2)

ivanukku  aabirahaam  ellaavat’rilum  thasamapaagam  koduththaan;  ivanudaiya  mutha’rpearaagiya  melkiseatheakku  enbatha’rku  neethiyin  raajaa  en’rum,  pinbu  saaleamin  raajaa  enbatha’rkuch  samaathaanaththin  raajaa  en’rum  aruththamaam.  (ebireyar  7:2)

இவன்  தகப்பனும்  தாயும்  வம்சவரலாறும்  இல்லாதவன்;  இவன்  நாட்களின்  துவக்கமும்  ஜீவனின்  முடிவுமுடையவனாயிராமல்,  தேவனுடைய  குமாரனுக்கு  ஒப்பானவனாய்  என்றென்றைக்கும்  ஆசாரியனாக  நிலைத்திருக்கிறான்.  (எபிரெயர்  7:3)

ivan  thagappanum  thaayum  vamsavaralaa’rum  illaathavan;  ivan  naadka'lin  thuvakkamum  jeevanin  mudivumudaiyavanaayiraamal,  theavanudaiya  kumaaranukku  oppaanavanaay  en’ren’raikkum  aasaariyanaaga  nilaiththirukki’raan.  (ebireyar  7:3)

இவன்  எவ்வளவு  பெரியவனாயிருக்கிறான்  பாருங்கள்;  கோத்திரத்தலைவனாகிய  ஆபிரகாம்  முதலாய்  கொள்ளையிடப்பட்ட  பொருள்களில்  இவனுக்குத்  தசமபாகம்  கொடுத்தான்.  (எபிரெயர்  7:4)

ivan  evva'lavu  periyavanaayirukki’raan  paarungga'l;  koaththiraththalaivanaagiya  aabirahaam  muthalaay  ko'l'laiyidappatta  poru'lga'lil  ivanukkuth  thasamapaagam  koduththaan.  (ebireyar  7:4)

லேவியின்  புத்திரரில்  ஆசாரியத்துவத்தை  அடைகிறவர்களும்,  ஆபிரகாமின்  அரையிலிருந்துவந்த  தங்கள்  சகோதரரான  ஜனங்களின்  கையிலே  நியாயப்பிரமாணத்தின்படி  தசமபாகம்  வாங்குகிறதற்குக்  கட்டளைபெற்றிருக்கிறார்கள்.  (எபிரெயர்  7:5)

leaviyin  puththiraril  aasaariyaththuvaththai  adaigi’ravarga'lum,  aabirahaamin  araiyilirunthuvantha  thangga'l  sagoathararaana  janangga'lin  kaiyilea  niyaayappiramaa'naththinpadi  thasamapaagam  vaanggugi’ratha’rkuk  katta'laipet’rirukki’raarga'l.  (ebireyar  7:5)

ஆகிலும்,  அவர்களுடைய  வம்சவரிசையில்  வராதவனாகிய  இவன்  ஆபிரகாமின்  கையில்  தசமபாகம்  வாங்கி,  வாக்குத்தத்தங்களைப்  பெற்றவனை  ஆசீர்வதித்தான்.  (எபிரெயர்  7:6)

aagilum,  avarga'ludaiya  vamsavarisaiyil  varaathavanaagiya  ivan  aabirahaamin  kaiyil  thasamapaagam  vaanggi,  vaakkuththaththangga'laip  pet’ravanai  aaseervathiththaan.  (ebireyar  7:6)

சிறியவன்  பெரியவனாலே  ஆசீர்வதிக்கப்படுவான்,  அதற்குச்  சந்தேகமில்லை.  (எபிரெயர்  7:7)

si’riyavan  periyavanaalea  aaseervathikkappaduvaan,  atha’rkuch  santheagamillai.  (ebireyar  7:7)

அன்றியும்,  இங்கே,  மரிக்கிற  மனுஷர்கள்  தசமபாகம்  வாங்குகிறார்கள்;  அங்கேயோ,  பிழைத்திருக்கிறான்  என்று  சாட்சிபெற்றவன்  வாங்கினான்.  (எபிரெயர்  7:8)

an’riyum,  inggea,  marikki’ra  manusharga'l  thasamapaagam  vaanggugi’raarga'l;  anggeayoa,  pizhaiththirukki’raan  en’ru  saadchipet’ravan  vaangginaan.  (ebireyar  7:8)

அன்றியும்,  மெல்கிசேதேக்கு  ஆபிரகாமுக்கு  எதிர்கொண்டுபோனபோது,  லேவியானவன்  தன்  தகப்பனுடைய  அரையிலிருந்தபடியால்,  (எபிரெயர்  7:9)

an’riyum,  melkiseatheakku  aabirahaamukku  ethirko'ndupoanapoathu,  leaviyaanavan  than  thagappanudaiya  araiyilirunthapadiyaal,  (ebireyar  7:9)

தசமபாகம்  வாங்குகிற  அவனும்  ஆபிரகாமின்  மூலமாய்த்  தசமபாகம்  கொடுத்தான்  என்று  சொல்லலாம்.  (எபிரெயர்  7:10)

thasamapaagam  vaanggugi’ra  avanum  aabirahaamin  moolamaayth  thasamapaagam  koduththaan  en’ru  sollalaam.  (ebireyar  7:10)

அல்லாமலும்,  இஸ்ரவேல்  ஜனங்கள்  லேவிகோத்திர  ஆசாரிய  முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ  நியாயப்பிரமாணத்தைப்  பெற்றார்கள்;  அந்த  ஆசாரிய  முறைமையினாலே  பூரணப்படுதல்  உண்டாயிருக்குமானால்,  ஆரோனுடைய  முறைமையின்படி  அழைக்கப்படாமல்,  மெல்கிசேதேக்கினுடைய  முறைமையின்படி  அழைக்கப்பட்ட  வேறொரு  ஆசாரியர்  எழும்பவேண்டுவதென்ன?  (எபிரெயர்  7:11)

allaamalum,  israveal  janangga'l  leavikoaththira  aasaariya  mu’raimaikkudpattirunthallavoa  niyaayappiramaa'naththaip  pet’raarga'l;  antha  aasaariya  mu’raimaiyinaalea  poora'nappaduthal  u'ndaayirukkumaanaal,  aaroanudaiya  mu’raimaiyinpadi  azhaikkappadaamal,  melkiseatheakkinudaiya  mu’raimaiyinpadi  azhaikkappatta  vea’roru  aasaariyar  ezhumbavea'nduvathenna?  (ebireyar  7:11)

ஆசாரியத்துவம்  மாற்றப்பட்டிருக்குமேயானால்,  நியாயப்பிரமாணமும்  மாற்றப்படவேண்டியதாகும்.  (எபிரெயர்  7:12)

aasaariyaththuvam  maat’rappattirukkumeayaanaal,  niyaayappiramaa'namum  maat’rappadavea'ndiyathaagum.  (ebireyar  7:12)

இவைகள்  எவரைக்குறித்துச்  சொல்லப்பட்டிருக்கிறதோ,  அவர்  வேறொரு  கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே;  அந்தக்  கோத்திரத்தில்  ஒருவனாகிலும்  பலிபீடத்து  ஊழியம்  செய்ததில்லையே.  (எபிரெயர்  7:13)

ivaiga'l  evaraikku’riththuch  sollappattirukki’rathoa,  avar  vea’roru  koaththiraththukku'l'laanavaraayirukki’raarea;  anthak  koaththiraththil  oruvanaagilum  balipeedaththu  oozhiyam  seythathillaiyea.  (ebireyar  7:13)

நம்முடைய  கர்த்தர்  யூதாகோத்திரத்தில்  தோன்றினாரென்பது  பிரசித்தமாயிருக்கிறது;  அந்தக்  கோத்திரத்தாரைக்குறித்து  மோசே  ஆசாரியத்துவத்தைப்பற்றி  ஒன்றும்  சொல்லவில்லையே.  (எபிரெயர்  7:14)

nammudaiya  karththar  yoothaakoaththiraththil  thoan’rinaarenbathu  pirasiththamaayirukki’rathu;  anthak  koaththiraththaaraikku’riththu  moasea  aasaariyaththuvaththaippat’ri  on’rum  sollavillaiyea.  (ebireyar  7:14)

அல்லாமலும்,  மெல்கிசேதேக்குக்கு  ஒப்பாய்  வேறொரு  ஆசாரியர்  எழும்புகிறார்  என்று  சொல்லியிருப்பதினால்,  மேற்சொல்லியது  மிகவும்  பிரசித்தமாய்  விளங்குகிறது.  (எபிரெயர்  7:15)

allaamalum,  melkiseatheakkukku  oppaay  vea’roru  aasaariyar  ezhumbugi’raar  en’ru  solliyiruppathinaal,  mea’rsolliyathu  migavum  pirasiththamaay  vi'langgugi’rathu.  (ebireyar  7:15)

அவர்  மாம்ச  சம்பந்தமான  கட்டளையாகிய  நியாயப்பிரமாணத்தின்படி  ஆசாரியராகாமல்,  (எபிரெயர்  7:16)

avar  maamsa  sambanthamaana  katta'laiyaagiya  niyaayappiramaa'naththinpadi  aasaariyaraagaamal,  (ebireyar  7:16)

நீர்  மெல்கிசேதேக்கின்  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  சொல்லிய  சாட்சிக்குத்தக்கதாக  அழியாத  ஜீவனுக்குரிய  வல்லமையின்படியே  ஆசாரியரானார்.  (எபிரெயர்  7:17)

neer  melkiseatheakkin  mu’raimaiyinpadi  en’ren’raikkum  aasaariyaraayirukki’reer  en’ru  solliya  saadchikkuththakkathaaga  azhiyaatha  jeevanukkuriya  vallamaiyinpadiyea  aasaariyaraanaar.  (ebireyar  7:17)

முந்தின  கட்டளை  பெலவீனமுள்ளதும்  பயனற்றதுமாயிருந்ததினிமித்தம்  மாற்றப்பட்டது.  (எபிரெயர்  7:18)

munthina  katta'lai  belaveenamu'l'lathum  payanat’rathumaayirunthathinimiththam  maat’rappattathu.  (ebireyar  7:18)

நியாயப்பிரமாணமானது  ஒன்றையும்  பூரணப்படுத்தவில்லை,  அதிக  நன்மையான  நம்பிக்கையை  வருவிப்பதோ  பூரணப்படுத்துகிறது;  அந்த  நம்பிக்கையினாலே  தேவனிடத்தில்  சேருகிறோம்.  (எபிரெயர்  7:19)

niyaayappiramaa'namaanathu  on’raiyum  poora'nappaduththavillai,  athiga  nanmaiyaana  nambikkaiyai  varuvippathoa  poora'nappaduththugi’rathu;  antha  nambikkaiyinaalea  theavanidaththil  searugi’roam.  (ebireyar  7:19)

அன்றியும்,  அவர்கள்  ஆணையில்லாமல்  ஆசாரியராக்கப்படுகிறார்கள்;  இவரோ:  நீர்  மெல்கிசேதேக்கின்  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  கர்த்தர்  ஆணையிட்டார்,  மனம்  மாறாமலுமிருப்பார்  என்று  தம்முடனே  சொன்னவராலே  ஆணையோடே  ஆசாரியரானார்.  (எபிரெயர்  7:20)

an’riyum,  avarga'l  aa'naiyillaamal  aasaariyaraakkappadugi’raarga'l;  ivaroa:  neer  melkiseatheakkin  mu’raimaiyinpadi  en’ren’raikkum  aasaariyaraayirukki’reer  en’ru  karththar  aa'naiyittaar,  manam  maa’raamalumiruppaar  en’ru  thammudanea  sonnavaraalea  aa'naiyoadea  aasaariyaraanaar.  (ebireyar  7:20)

ஆனதால்,  இயேசுவானவர்  ஆணையின்படியே  ஆசாரியராக்கப்பட்டது  எவ்வளவு  விசேஷித்த  காரியமோ,  (எபிரெயர்  7:21)

aanathaal,  iyeasuvaanavar  aa'naiyinpadiyea  aasaariyaraakkappattathu  evva'lavu  viseashiththa  kaariyamoa,  (ebireyar  7:21)

அவ்வளவு  விசேஷித்த  உடன்படிக்கைக்குப்  பிணையாளியானார்.  (எபிரெயர்  7:22)

avva'lavu  viseashiththa  udanpadikkaikkup  pi'naiyaa'liyaanaar.  (ebireyar  7:22)

அன்றியும்,  அவர்கள்  மரணத்தினிமித்தம்  நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால்,  ஆசாரியராக்கப்படுகிறவர்கள்  அநேகராயிருக்கிறார்கள்.  (எபிரெயர்  7:23)

an’riyum,  avarga'l  mara'naththinimiththam  nilaiththirukkakkoodaathavarga'laanapadiyaal,  aasaariyaraakkappadugi’ravarga'l  aneagaraayirukki’raarga'l.  (ebireyar  7:23)

இவரோ  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கிறபடியினாலே,  மாறிப்போகாத  ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.  (எபிரெயர்  7:24)

ivaroa  en’ren’raikkum  nilaiththirukki’rapadiyinaalea,  maa’rippoagaatha  aasaariyaththuvamu'l'lavaraayirukki’raar.  (ebireyar  7:24)

மேலும்,  தமது  மூலமாய்த்  தேவனிடத்தில்  சேருகிறவர்களுக்காக  வேண்டுதல்செய்யும்படிக்கு  அவர்  எப்பொழுதும்  உயிரோடிருக்கிறவராகையால்  அவர்களை  முற்றுமுடிய  இரட்சிக்க  வல்லவராயுமிருக்கிறார்.  (எபிரெயர்  7:25)

mealum,  thamathu  moolamaayth  theavanidaththil  searugi’ravarga'lukkaaga  vea'nduthalseyyumpadikku  avar  eppozhuthum  uyiroadirukki’ravaraagaiyaal  avarga'lai  mut’rumudiya  iradchikka  vallavaraayumirukki’raar.  (ebireyar  7:25)

பரிசுத்தரும்,  குற்றமற்றவரும்,  மாசில்லாதவரும்,  பாவிகளுக்கு  விலகினவரும்,  வானங்களிலும்  உயர்ந்தவருமாயிருக்கிற  இவ்விதமான  பிரதான  ஆசாரியரே  நமக்கு  ஏற்றவராயிருக்கிறார்.  (எபிரெயர்  7:26)

parisuththarum,  kut’ramat’ravarum,  maasillaathavarum,  paaviga'lukku  vilaginavarum,  vaanangga'lilum  uyarnthavarumaayirukki’ra  ivvithamaana  pirathaana  aasaariyarea  namakku  eat’ravaraayirukki’raar.  (ebireyar  7:26)

அவர்  பிரதான  ஆசாரியர்களைப்போல  முன்பு  சொந்தப்  பாவங்களுக்காகவும்,  பின்பு  ஜனங்களுடைய  பாவங்களுக்காகவும்  நாடோறும்  பலியிடவேண்டுவதில்லை;  ஏனெனில்  தம்மைத்தாமே  பலியிட்டதினாலே  இதை  ஒரேதரம்  செய்துமுடித்தார்.  (எபிரெயர்  7:27)

avar  pirathaana  aasaariyarga'laippoala  munbu  sonthap  paavangga'lukkaagavum,  pinbu  janangga'ludaiya  paavangga'lukkaagavum  naadoa’rum  baliyidavea'nduvathillai;  eanenil  thammaiththaamea  baliyittathinaalea  ithai  oreatharam  seythumudiththaar.  (ebireyar  7:27)

நியாயப்பிரமாணமானது  பெலவீனமுள்ள  மனுஷர்களைப்  பிரதான  ஆசாரியராக  ஏற்படுத்துகிறது;  நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு  உண்டான  ஆணையோடே  விளங்கிய  வசனமோ  என்றென்றைக்கும்  பூரணரான  குமாரனை  ஏற்படுத்துகிறது.  (எபிரெயர்  7:28)

niyaayappiramaa'namaanathu  belaveenamu'l'la  manusharga'laip  pirathaana  aasaariyaraaga  ea’rpaduththugi’rathu;  niyaayappiramaa'naththi’rkuppinbu  u'ndaana  aa'naiyoadea  vi'langgiya  vasanamoa  en’ren’raikkum  poora'naraana  kumaaranai  ea’rpaduththugi’rathu.  (ebireyar  7:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!