Friday, June 10, 2016

Ebireyar 6 | எபிரெயர் 6 | Hebrews 6

ஆகையால்,  கிறிஸ்துவைப்பற்றிச்  சொல்லிய  மூல  உபதேச  வசனங்களை  நாம்  விட்டு,  செத்த  கிரியைகளுக்கு  நீங்கலாகும்  மனந்திரும்புதல்,  தேவன்பேரில்  வைக்கும்  விசுவாசம்,  (எபிரெயர்  6:1)

aagaiyaal,  ki’risthuvaippat’rich  solliya  moola  ubatheasa  vasanangga'lai  naam  vittu,  seththa  kiriyaiga'lukku  neenggalaagum  mananthirumbuthal,  theavanpearil  vaikkum  visuvaasam,  (ebireyar  6:1)

ஸ்நானங்களுக்கடுத்த  உபதேசம்,  கைகளை  வைக்குதல்,  மரித்தோரின்  உயிர்த்தெழுதல்,  நித்திய  நியாயத்தீர்ப்பு  என்பவைகளாகிய  அஸ்திபாரத்தை  மறுபடியும்  போடாமல்,  பூரணராகும்படி  கடந்துபோவோமாக.  (எபிரெயர்  6:2)

snaanangga'lukkaduththa  ubatheasam,  kaiga'lai  vaikkuthal,  mariththoarin  uyirththezhuthal,  niththiya  niyaayaththeerppu  enbavaiga'laagiya  asthibaaraththai  ma’rupadiyum  poadaamal,  poora'naraagumpadi  kadanthupoavoamaaga.  (ebireyar  6:2)

தேவனுக்குச்  சித்தமானால்  இப்படியே  செய்வோம்.  (எபிரெயர்  6:3)

theavanukkuch  siththamaanaal  ippadiyea  seyvoam.  (ebireyar  6:3)

ஏனெனில்,  ஒருதரம்  பிரகாசிப்பிக்கப்பட்டும்,  பரமஈவை  ருசிபார்த்தும்,  பரிசுத்த  ஆவியைப்  பெற்றும்,  (எபிரெயர்  6:4)

eanenil,  orutharam  piragaasippikkappattum,  paramaeevai  rusipaarththum,  parisuththa  aaviyaip  pet’rum,  (ebireyar  6:4)

தேவனுடைய  நல்வார்த்தையையும்  இனிவரும்  உலகத்தின்  பெலன்களையும்  ருசிபார்த்தும்,  (எபிரெயர்  6:5)

theavanudaiya  nalvaarththaiyaiyum  inivarum  ulagaththin  belanga'laiyum  rusipaarththum,  (ebireyar  6:5)

மறுதலித்துப்போனவர்கள்,  தேவனுடைய  குமாரனைத்  தாங்களே  மறுபடியும்  சிலுவையில்  அறைந்து  அவமானப்படுத்துகிறபடியால்,  மனந்திரும்புதற்கேதுவாய்  அவர்களை  மறுபடியும்  புதுப்பிக்கிறது  கூடாதகாரியம்.  (எபிரெயர்  6:6)

ma’ruthaliththuppoanavarga'l,  theavanudaiya  kumaaranaith  thaangga'lea  ma’rupadiyum  siluvaiyil  a’rainthu  avamaanappaduththugi’rapadiyaal,  mananthirumbutha’rkeathuvaay  avarga'lai  ma’rupadiyum  puthuppikki’rathu  koodaathakaariyam.  (ebireyar  6:6)

எப்படியெனில்,  தன்மேல்  அடிக்கடி  பெய்கிற  மழையைக்  குடித்து,  தன்னிடத்தில்  பயிரிடுகிறவர்களுக்கேற்ற  பயிரை  முளைப்பிக்கும்  நிலமானது  தேவனால்  ஆசீர்வாதம்  பெறும்.  (எபிரெயர்  6:7)

eppadiyenil,  thanmeal  adikkadi  peygi’ra  mazhaiyaik  kudiththu,  thannidaththil  payiridugi’ravarga'lukkeat’ra  payirai  mu'laippikkum  nilamaanathu  theavanaal  aaseervaatham  pe’rum.  (ebireyar  6:7)

முள்செடிகளையும்  முள்பூண்டுகளையும்  முளைப்பிக்கிற  நிலமோ  தகாததாயும்  சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது;  சுட்டெரிக்கப்படுவதே  அதின்  முடிவு.  (எபிரெயர்  6:8)

mu'lsediga'laiyum  mu'lpoo'nduga'laiyum  mu'laippikki’ra  nilamoa  thagaathathaayum  sabikkappadugi’ratha’rkeat’rathaayumirukki’rathu;  sutterikkappaduvathea  athin  mudivu.  (ebireyar  6:8)

பிரியமானவர்களே,  நாங்கள்  இப்படிச்  சொன்னாலும்,  நன்மையானவைகளும்  இரட்சிப்புக்குரியவைகளுமான  காரியங்கள்  உங்களிடத்தில்  உண்டாயிருக்கிறதென்று  நம்பியிருக்கிறோம்.  (எபிரெயர்  6:9)

piriyamaanavarga'lea,  naangga'l  ippadich  sonnaalum,  nanmaiyaanavaiga'lum  iradchippukkuriyavaiga'lumaana  kaariyangga'l  ungga'lidaththil  u'ndaayirukki’rathen’ru  nambiyirukki’roam.  (ebireyar  6:9)

ஏனென்றால்,  உங்கள்  கிரியையையும்,  நீங்கள்  பரிசுத்தவான்களுக்கு  ஊழியஞ்செய்ததினாலும்  செய்து  வருகிறதினாலும்  தமது  நாமத்திற்காகக்  காண்பித்த  அன்புள்ள  பிரயாசத்தையும்  மறந்துவிடுகிறதற்குத்  தேவன்  அநீதியுள்ளவரல்லவே.  (எபிரெயர்  6:10)

eanen’raal,  ungga'l  kiriyaiyaiyum,  neengga'l  parisuththavaanga'lukku  oozhiyagnseythathinaalum  seythu  varugi’rathinaalum  thamathu  naamaththi’rkaagak  kaa'nbiththa  anbu'l'la  pirayaasaththaiyum  ma’ranthuvidugi’ratha’rkuth  theavan  aneethiyu'l'lavarallavea.  (ebireyar  6:10)

நீங்கள்  அசதியாயிராமல்,  வாக்குத்தத்தமான  ஆசீர்வாதங்களை  விசுவாசத்தினாலும்  நீடிய  பொறுமையினாலும்  சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப்  பின்பற்றுகிறவர்களாயிருந்து,  (எபிரெயர்  6:11)

neengga'l  asathiyaayiraamal,  vaakkuththaththamaana  aaseervaathangga'lai  visuvaasaththinaalum  neediya  po’rumaiyinaalum  suthanthariththukko'l'lugi’ravarga'laip  pinpat’rugi’ravarga'laayirunthu,  (ebireyar  6:11)

உங்களுக்கு  நம்பிக்கையின்  பூரண  நிச்சயமுண்டாகும்படி  நீங்கள்  யாவரும்  முடிவுபரியந்தம்  அப்படியே  ஜாக்கிரதையைக்  காண்பிக்கவேண்டுமென்று  ஆசையாயிருக்கிறோம்.  (எபிரெயர்  6:12)

ungga'lukku  nambikkaiyin  poora'na  nichchayamu'ndaagumpadi  neengga'l  yaavarum  mudivupariyantham  appadiyea  jaakkirathaiyaik  kaa'nbikkavea'ndumen’ru  aasaiyaayirukki’roam.  (ebireyar  6:12)

ஆபிரகாமுக்குத்  தேவன்  வாக்குத்தத்தம்பண்ணினபோது,  ஆணையிடும்படி  தம்மிலும்  பெரியவர்  ஒருவருமில்லாதபடியினாலே  தமதுபேரிலே  தானே  ஆணையிட்டு:  (எபிரெயர்  6:13)

aabirahaamukkuth  theavan  vaakkuththaththampa'n'ninapoathu,  aa'naiyidumpadi  thammilum  periyavar  oruvarumillaathapadiyinaalea  thamathupearilea  thaanea  aa'naiyittu:  (ebireyar  6:13)

நிச்சயமாக  நான்  உன்னை  ஆசீர்வதிக்கவே  ஆசீர்வதித்து,  உன்னைப்  பெருகவே  பெருகப்பண்ணுவேன்  என்றார்.  (எபிரெயர்  6:14)

nichchayamaaga  naan  unnai  aaseervathikkavea  aaseervathiththu,  unnaip  perugavea  perugappa'n'nuvean  en’raar.  (ebireyar  6:14)

அந்தப்படியே,  அவன்  பொறுமையாய்க்  காத்திருந்து,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப்  பெற்றான்.  (எபிரெயர்  6:15)

anthappadiyea,  avan  po’rumaiyaayk  kaaththirunthu,  vaakkuththaththampa'n'nappattathaip  pet’raan.  (ebireyar  6:15)

மனுஷர்  தங்களிலும்  பெரியவர்பேரில்  ஆணையிடுவார்கள்;  உறுதிபண்ணும்படிக்கு  ஆணையிடுதலே  சகல  விவாதத்திற்கும்  முடிவு.  (எபிரெயர்  6:16)

manushar  thangga'lilum  periyavarpearil  aa'naiyiduvaarga'l;  u’ruthipa'n'numpadikku  aa'naiyiduthalea  sagala  vivaathaththi’rkum  mudivu.  (ebireyar  6:16)

அந்தப்படி,  தேவனும்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச்  சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத்  தமது  ஆலோசனையின்  மாறாத  நிச்சயத்தைப்  பரிபூரணமாய்க்  காண்பிக்கும்படி  சித்தமுள்ளவராய்,  ஓர்  ஆணையினாலே  அதை  ஸ்திரப்படுத்தினார்.  (எபிரெயர்  6:17)

anthappadi,  theavanum  vaakkuththaththampa'n'nappattavaiga'laich  suthanthariththukko'l'lugi’ravarga'lukkuth  thamathu  aaloasanaiyin  maa’raatha  nichchayaththaip  paripoora'namaayk  kaa'nbikkumpadi  siththamu'l'lavaraay,  oar  aa'naiyinaalea  athai  sthirappaduththinaar.  (ebireyar  6:17)

நமக்கு  முன்  வைக்கப்பட்ட  நம்பிக்கையைப்  பற்றிக்கொள்ளும்படி  அடைக்கலமாய்  ஓடிவந்த  நமக்கு  இரண்டு  மாறாத  விசேஷங்களினால்  நிறைந்த  ஆறுதலுண்டாகும்படிக்கு  எவ்வளவேனும்  பொய்யுரையாத  தேவன்  அப்படிச்  செய்தார்.  (எபிரெயர்  6:18)

namakku  mun  vaikkappatta  nambikkaiyaip  pat’rikko'l'lumpadi  adaikkalamaay  oadivantha  namakku  ira'ndu  maa’raatha  viseashangga'linaal  ni’raintha  aa’ruthalu'ndaagumpadikku  evva'laveanum  poyyuraiyaatha  theavan  appadich  seythaar.  (ebireyar  6:18)

அந்த  நம்பிக்கை  நமக்கு  நிலையும்  உறுதியும்  திரைக்குள்ளாகப்  போகிறதுமான  ஆத்தும  நங்கூரமாயிருக்கிறது.  (எபிரெயர்  6:19)

antha  nambikkai  namakku  nilaiyum  u’ruthiyum  thiraikku'l'laagap  poagi’rathumaana  aaththuma  nanggooramaayirukki’rathu.  (ebireyar  6:19)

நமக்கு  முன்னோடினவராகிய  இயேசு  மெல்கிசேதேக்கின்  முறைமையின்படி  நித்திய  பிரதான  ஆசாரியராய்  நமக்காக  அந்தத்  திரைக்குள்  பிரவேசித்திருக்கிறார்.  (எபிரெயர்  6:20)

namakku  munnoadinavaraagiya  iyeasu  melkiseatheakkin  mu’raimaiyinpadi  niththiya  pirathaana  aasaariyaraay  namakkaaga  anthath  thiraikku'l  piraveasiththirukki’raar.  (ebireyar  6:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!