Friday, June 10, 2016

Ebireyar 4 | எபிரெயர் 4 | Hebrews 4

ஆனபடியினாலே,  அவருடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதற்கேதுவான  வாக்குத்தத்தம்  நமக்குண்டாயிருக்க,  உங்களில்  ஒருவனும்  அதை  அடையாமல்  பின்வாங்கிப்போனவனாகக்  காணப்படாதபடிக்குப்  பயந்திருக்கக்கடவோம்.  (எபிரெயர்  4:1)

aanapadiyinaalea,  avarudaiya  i'laippaa’ruthalil  piraveasippatha’rkeathuvaana  vaakkuththaththam  namakku'ndaayirukka,  ungga'lil  oruvanum  athai  adaiyaamal  pinvaanggippoanavanaagak  kaa'nappadaathapadikkup  bayanthirukkakkadavoam.  (ebireyar  4:1)

ஏனெனில்,  சுவிசேஷம்  அவர்களுக்கு  அறிவிக்கப்பட்டதுபோல  நமக்கும்  அறிவிக்கப்பட்டது;  கேட்டவர்கள்  விசுவாசமில்லாமல்  கேட்டபடியினால்,  அவர்கள்  கேட்ட  வசனம்  அவர்களுக்குப்  பிரயோஜனப்படவில்லை.  (எபிரெயர்  4:2)

eanenil,  suviseasham  avarga'lukku  a’rivikkappattathupoala  namakkum  a’rivikkappattathu;  keattavarga'l  visuvaasamillaamal  keattapadiyinaal,  avarga'l  keatta  vasanam  avarga'lukkup  pirayoajanappadavillai.  (ebireyar  4:2)

விசுவாசித்தவர்களாகிய  நாமோ  அந்த  இளைப்பாறுதலில்  பிரவேசிக்கிறோம்;  அவருடைய  கிரியைகள்  உலகத்தோற்றமுதல்  முடிந்திருந்தும்:  இவர்கள்  என்னுடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதில்லையென்று  என்னுடைய  கோபத்திலே  ஆணையிட்டேன்  என்றார்.  (எபிரெயர்  4:3)

visuvaasiththavarga'laagiya  naamoa  antha  i'laippaa’ruthalil  piraveasikki’roam;  avarudaiya  kiriyaiga'l  ulagaththoat’ramuthal  mudinthirunthum:  ivarga'l  ennudaiya  i'laippaa’ruthalil  piraveasippathillaiyen’ru  ennudaiya  koabaththilea  aa'naiyittean  en’raar.  (ebireyar  4:3)

மேலும்,  தேவன்  தம்முடைய  கிரியைகளையெல்லாம்  முடித்து  ஏழாம்  நாளிலே  ஓய்ந்திருந்தார்  என்று  ஏழாம்  நாளைக்குறித்து  ஓரிடத்தில்  சொல்லியிருக்கிறார்.  (எபிரெயர்  4:4)

mealum,  theavan  thammudaiya  kiriyaiga'laiyellaam  mudiththu  eazhaam  naa'lilea  oaynthirunthaar  en’ru  eazhaam  naa'laikku’riththu  oaridaththil  solliyirukki’raar.  (ebireyar  4:4)

அன்றியும்,  அவர்கள்  என்னுடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதில்லை  என்றும்  அந்த  இடத்திலேதானே  சொல்லியிருக்கிறார்.  (எபிரெயர்  4:5)

an’riyum,  avarga'l  ennudaiya  i'laippaa’ruthalil  piraveasippathillai  en’rum  antha  idaththileathaanea  solliyirukki’raar.  (ebireyar  4:5)

ஆகையால்,  சிலர்  அதில்  பிரவேசிப்பது  இன்னும்  வரப்போகிற  காரியமாயிருக்கிறபடியினாலும்,  சுவிசேஷத்தை  முதலாவது  கேட்டவர்கள்  கீழ்ப்படியாமையினாலே  அதில்  பிரவேசியாமற்போனபடியினாலும்,  (எபிரெயர்  4:6)

aagaiyaal,  silar  athil  piraveasippathu  innum  varappoagi’ra  kaariyamaayirukki’rapadiyinaalum,  suviseashaththai  muthalaavathu  keattavarga'l  keezhppadiyaamaiyinaalea  athil  piraveasiyaama’rpoanapadiyinaalum,  (ebireyar  4:6)

இன்று  அவருடைய  சத்தத்தைக்  கேட்பீர்களாகில்  உங்கள்  இருதயங்களைக்  கடினப்படுத்தாதிருங்கள்  என்று  வெகுகாலத்திற்குப்பின்பு  தாவீதின்  சங்கீதத்திலே  சொல்லியிருக்கிறபடி,  இன்று  என்று  சொல்வதினாலே  பின்னும்  ஒருநாளைக்  குறித்திருக்கிறார்.  (எபிரெயர்  4:7)

in’ru  avarudaiya  saththaththaik  keadpeerga'laagil  ungga'l  iruthayangga'laik  kadinappaduththaathirungga'l  en’ru  vegukaalaththi’rkuppinbu  thaaveethin  sanggeethaththilea  solliyirukki’rapadi,  in’ru  en’ru  solvathinaalea  pinnum  orunaa'laik  ku’riththirukki’raar.  (ebireyar  4:7)

யோசுவா  அவர்களை  இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால்,  பின்பு  அவர்  வேறொரு  நாளைக்குறித்துச்  சொல்லியிருக்கமாட்டாரே.  (எபிரெயர்  4:8)

yoasuvaa  avarga'lai  i'laippaa’ruthalukkudpaduththiyirunthaal,  pinbu  avar  vea’roru  naa'laikku’riththuch  solliyirukkamaattaarea.  (ebireyar  4:8)

ஆகையால்,  தேவனுடைய  ஜனங்களுக்கு  இளைப்பாறுகிற  காலம்  இனி  வருகிறதாயிருக்கிறது.  (எபிரெயர்  4:9)

aagaiyaal,  theavanudaiya  janangga'lukku  i'laippaa’rugi’ra  kaalam  ini  varugi’rathaayirukki’rathu.  (ebireyar  4:9)

ஏனெனில்,  அவருடைய  இளைப்பாறுதலில்  பிரவேசித்தவன்,  தேவன்  தம்முடைய  கிரியைகளை  முடித்து  ஓய்ந்ததுபோல,  தானும்  தன்  கிரியைகளை  முடித்து  ஓய்ந்திருப்பான்.  (எபிரெயர்  4:10)

eanenil,  avarudaiya  i'laippaa’ruthalil  piraveasiththavan,  theavan  thammudaiya  kiriyaiga'lai  mudiththu  oaynthathupoala,  thaanum  than  kiriyaiga'lai  mudiththu  oaynthiruppaan.  (ebireyar  4:10)

ஆகையால்,  அந்தத்  திருஷ்டாந்தத்தின்படி,  ஒருவனாகிலும்  கீழ்ப்படியாமையினாலே  விழுந்துபோகாதபடிக்கு,  நாம்  இந்த  இளைப்பாறுதலில்  பிரவேசிக்க  ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.  (எபிரெயர்  4:11)

aagaiyaal,  anthath  thirushdaanthaththinpadi,  oruvanaagilum  keezhppadiyaamaiyinaalea  vizhunthupoagaathapadikku,  naam  intha  i'laippaa’ruthalil  piraveasikka  jaakkirathaiyaayirukkakkadavoam.  (ebireyar  4:11)

தேவனுடைய  வார்த்தையானது  ஜீவனும்  வல்லமையும்  உள்ளதாயும்,  இருபுறமும்  கருக்குள்ள  எந்தப்  பட்டயத்திலும்  கருக்கானதாயும்,  ஆத்துமாவையும்  ஆவியையும்,  கணுக்களையும்  ஊனையும்  பிரிக்கத்தக்கதாக  உருவக்  குத்துகிறதாயும்,  இருதயத்தின்  நினைவுகளையும்  யோசனைகளையும்  வகையறுக்கிறதாயும்  இருக்கிறது.  (எபிரெயர்  4:12)

theavanudaiya  vaarththaiyaanathu  jeevanum  vallamaiyum  u'l'lathaayum,  irupu’ramum  karukku'l'la  enthap  pattayaththilum  karukkaanathaayum,  aaththumaavaiyum  aaviyaiyum,  ka'nukka'laiyum  oonaiyum  pirikkaththakkathaaga  uruvak  kuththugi’rathaayum,  iruthayaththin  ninaivuga'laiyum  yoasanaiga'laiyum  vagaiya’rukki’rathaayum  irukki’rathu.  (ebireyar  4:12)

அவருடைய  பார்வைக்கு  மறைவான  சிருஷ்டி  ஒன்றுமில்லை;  சகலமும்  அவருடைய  கண்களுக்குமுன்பாக  நிர்வாணமாயும்  வெளியரங்கமாயுமிருக்கிறது,  அவருக்கே  நாம்  கணக்கு  ஒப்புவிக்கவேண்டும்.  (எபிரெயர்  4:13)

avarudaiya  paarvaikku  ma’raivaana  sirushdi  on’rumillai;  sagalamum  avarudaiya  ka'nga'lukkumunbaaga  nirvaa'namaayum  ve'liyaranggamaayumirukki’rathu,  avarukkea  naam  ka'nakku  oppuvikkavea'ndum.  (ebireyar  4:13)

வானங்களின்  வழியாய்ப்  பரலோகத்திற்குப்போன  தேவகுமாரனாகிய  இயேசு  என்னும்  மகா  பிரதான  ஆசாரியர்  நமக்கு  இருக்கிறபடியினால்,  நாம்  பண்ணின  அறிக்கையை  உறுதியாய்ப்  பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.  (எபிரெயர்  4:14)

vaanangga'lin  vazhiyaayp  paraloagaththi’rkuppoana  theavakumaaranaagiya  iyeasu  ennum  mahaa  pirathaana  aasaariyar  namakku  irukki’rapadiyinaal,  naam  pa'n'nina  a’rikkaiyai  u’ruthiyaayp  pat’rikko'ndirukkakkadavoam.  (ebireyar  4:14)

நம்முடைய  பலவீனங்களைக்குறித்துப்  பரிதபிக்கக்கூடாத  பிரதான  ஆசாரியர்  நமக்கிராமல்,  எல்லாவிதத்திலும்  நம்மைப்போல்  சோதிக்கப்பட்டும்,  பாவமில்லாதவராயிருக்கிற  பிரதான  ஆசாரியரே  நமக்கிருக்கிறார்.  (எபிரெயர்  4:15)

nammudaiya  balaveenangga'laikku’riththup  parithabikkakkoodaatha  pirathaana  aasaariyar  namakkiraamal,  ellaavithaththilum  nammaippoal  soathikkappattum,  paavamillaathavaraayirukki’ra  pirathaana  aasaariyarea  namakkirukki’raar.  (ebireyar  4:15)

ஆதலால்,  நாம்  இரக்கத்தைப்  பெறவும்,  ஏற்ற  சமயத்தில்  சகாயஞ்செய்யுங்  கிருபையை  அடையவும்,  தைரியமாய்க்  கிருபாசனத்தண்டையிலே  சேரக்கடவோம்.  (எபிரெயர்  4:16)

aathalaal,  naam  irakkaththaip  pe’ravum,  eat’ra  samayaththil  sagaayagnseyyung  kirubaiyai  adaiyavum,  thairiyamaayk  kirubaasanaththa'ndaiyilea  searakkadavoam.  (ebireyar  4:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!