Friday, June 10, 2016

Ebireyar 2 | எபிரெயர் 2 | Hebrews 2

ஆகையால்,  நாம்  கேட்டவைகளை  விட்டு  விலகாதபடிக்கு,  அவைகளை  மிகுந்த  ஜாக்கிரதையாய்க்  கவனிக்கவேண்டும்.  (எபிரெயர்  2:1)

aagaiyaal,  naam  keattavaiga'lai  vittu  vilagaathapadikku,  avaiga'lai  miguntha  jaakkirathaiyaayk  kavanikkavea'ndum.  (ebireyar  2:1)

ஏனெனில்,  தேவதூதர்  மூலமாய்ச்  சொல்லப்பட்ட  வசனத்திற்கு  விரோதமான  எந்தச்  செய்கைக்கும்  கீழ்ப்படியாமைக்கும்  நீதியான  தண்டனை  வரத்தக்கதாக  அவர்களுடைய  வசனம்  உறுதிப்படுத்தப்பட்டிருக்க,  (எபிரெயர்  2:2)

eanenil,  theavathoothar  moolamaaych  sollappatta  vasanaththi’rku  viroathamaana  enthach  seygaikkum  keezhppadiyaamaikkum  neethiyaana  tha'ndanai  varaththakkathaaga  avarga'ludaiya  vasanam  u’ruthippaduththappattirukka,  (ebireyar  2:2)

முதலாவது  கர்த்தர்  மூலமாய்  அறிவிக்கப்பட்டு,  பின்பு  அவரிடத்தில்  கேட்டவர்களாலே  நமக்கு  உறுதியாக்கப்பட்டதும்,  (எபிரெயர்  2:3)

muthalaavathu  karththar  moolamaay  a’rivikkappattu,  pinbu  avaridaththil  keattavarga'laalea  namakku  u’ruthiyaakkappattathum,  (ebireyar  2:3)

அடையாளங்களினாலும்  அற்புதங்களினாலும்  பலவிதமான  பலத்த  செய்கைகளினாலும்,  தம்முடைய  சித்தத்தின்படி  பகிர்ந்துகொடுத்த  பரிசுத்த  ஆவியின்  வரங்களினாலும்,  தேவன்  தாமே  சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற  இவ்வளவு  பெரிதான  இரட்சிப்பைக்குறித்து  நாம்  கவலையற்றிருப்போமானால்  தண்டனைக்கு  எப்படித்  தப்பித்துக்கொள்ளுவோம்.  (எபிரெயர்  2:4)

adaiyaa'langga'linaalum  a’rputhangga'linaalum  palavithamaana  balaththa  seygaiga'linaalum,  thammudaiya  siththaththinpadi  pagirnthukoduththa  parisuththa  aaviyin  varangga'linaalum,  theavan  thaamea  saadchikoduththathumaayirukki’ra  ivva'lavu  perithaana  iradchippaikku’riththu  naam  kavalaiyat’riruppoamaanaal  tha'ndanaikku  eppadith  thappiththukko'l'luvoam.  (ebireyar  2:4)

இனிவரும்  உலகத்தைக்குறித்துப்  பேசுகிறோமே,  அதை  அவர்  தூதர்களுக்குக்  கீழ்ப்படுத்தவில்லை.  (எபிரெயர்  2:5)

inivarum  ulagaththaikku’riththup  peasugi’roamea,  athai  avar  thootharga'lukkuk  keezhppaduththavillai.  (ebireyar  2:5)

ஒரு  இடத்திலே  ஒருவன்  சாட்சியாக:  மனுஷனை  நீர்  நினைக்கிறதற்கும்,  மனுஷனுடைய  குமாரனை  நீர்  விசாரிக்கிறதற்கும்  அவன்  எம்மாத்திரம்?  (எபிரெயர்  2:6)

oru  idaththilea  oruvan  saadchiyaaga:  manushanai  neer  ninaikki’ratha’rkum,  manushanudaiya  kumaaranai  neer  visaarikki’ratha’rkum  avan  emmaaththiram?  (ebireyar  2:6)

அவனை  தேவதூதரிலும்  சற்றுச்  சிறியவனாக்கினீர்;  மகிமையினாலும்  கனத்தினாலும்  அவனுக்கு  முடிசூட்டி,  உம்முடைய  கரத்தின்  கிரியைகளின்மேல்  அவனை  அதிகாரியாக  வைத்து,  சகலத்தையும்  அவனுடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்தினீர்  என்று  சொன்னான்.  (எபிரெயர்  2:7)

avanai  theavathootharilum  sat’ruch  si’riyavanaakkineer;  magimaiyinaalum  kanaththinaalum  avanukku  mudisootti,  ummudaiya  karaththin  kiriyaiga'linmeal  avanai  athigaariyaaga  vaiththu,  sagalaththaiyum  avanudaiya  paathangga'lukkuk  keezhppaduththineer  en’ru  sonnaan.  (ebireyar  2:7)

சகலத்தையும்  அவனுக்குக்  கீழ்ப்படுத்தினார்  என்கிற  விஷயத்தில்,  அவர்  அவனுக்குக்  கீழ்ப்படுத்தாத  பொருள்  ஒன்றுமில்லை;  அப்படியிருந்தும்,  இன்னும்  அவனுக்குச்  சகலமும்  கீழ்ப்பட்டிருக்கக்  காணோம்.  (எபிரெயர்  2:8)

sagalaththaiyum  avanukkuk  keezhppaduththinaar  engi’ra  vishayaththil,  avar  avanukkuk  keezhppaduththaatha  poru'l  on’rumillai;  appadiyirunthum,  innum  avanukkuch  sagalamum  keezhppattirukkak  kaa'noam.  (ebireyar  2:8)

என்றாலும்,  தேவனுடைய  கிருபையினால்  ஒவ்வொருவருக்காகவும்,  மரணத்தை  ருசிபார்க்கும்படிக்கு  தேவதூதரிலும்  சற்றுச்  சிறியவராக்கப்பட்டிருந்த  இயேசு  மரணத்தை  உத்தரித்ததினிமித்தம்  மகிமையினாலும்  கனத்தினாலும்  முடிசூட்டப்பட்டதைக்  காண்கிறோம்.  (எபிரெயர்  2:9)

en’raalum,  theavanudaiya  kirubaiyinaal  ovvoruvarukkaagavum,  mara'naththai  rusipaarkkumpadikku  theavathootharilum  sat’ruch  si’riyavaraakkappattiruntha  iyeasu  mara'naththai  uththariththathinimiththam  magimaiyinaalum  kanaththinaalum  mudisoottappattathaik  kaa'ngi’roam.  (ebireyar  2:9)

ஏனென்றால்  தமக்காகவும்  தம்மாலேயும்  சகலத்தையும்  உண்டாக்கினவர்,  அநேகம்  பிள்ளைகளை  மகிமையில்  கொண்டுவந்து  சேர்க்கையில்  அவர்களுடைய  இரட்சிப்பின்  அதிபதியை  உபத்திரவங்களினாலே  பூரணப்படுத்துகிறது  அவருக்கேற்றதாயிருந்தது.  (எபிரெயர்  2:10)

eanen’raal  thamakkaagavum  thammaaleayum  sagalaththaiyum  u'ndaakkinavar,  aneagam  pi'l'laiga'lai  magimaiyil  ko'nduvanthu  searkkaiyil  avarga'ludaiya  iradchippin  athibathiyai  ubaththiravangga'linaalea  poora'nappaduththugi’rathu  avarukkeat’rathaayirunthathu.  (ebireyar  2:10)

எப்படியெனில்,  பரிசுத்தஞ்செய்கிறவரும்  பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய  யாவரும்  ஒருவராலே  உண்டாயிருக்கிறார்கள்;  இதினிமித்தம்  அவர்களைச்  சகோதரரென்று  சொல்ல  அவர்  வெட்கப்படாமல்:  (எபிரெயர்  2:11)

eppadiyenil,  parisuththagnseygi’ravarum  parisuththagnseyyappadugi’ravarga'lumaagiya  yaavarum  oruvaraalea  u'ndaayirukki’raarga'l;  ithinimiththam  avarga'laich  sagoathararen’ru  solla  avar  vedkappadaamal:  (ebireyar  2:11)

உம்முடைய  நாமத்தை  என்  சகோதரருக்கு  அறிவித்து,  சபை  நடுவில்  உம்மைத்  துதித்துப்  பாடுவேன்  என்றும்;  (எபிரெயர்  2:12)

ummudaiya  naamaththai  en  sagoathararukku  a’riviththu,  sabai  naduvil  ummaith  thuthiththup  paaduvean  en’rum;  (ebireyar  2:12)

நான்  அவரிடத்தில்  நம்பிக்கையாயிருப்பேன்  என்றும்;  இதோ,  நானும்,  தேவன்  எனக்குக்  கொடுத்த  பிள்ளைகளும்  என்றும்  சொல்லியிருக்கிறார்.  (எபிரெயர்  2:13)

naan  avaridaththil  nambikkaiyaayiruppean  en’rum;  ithoa,  naanum,  theavan  enakkuk  koduththa  pi'l'laiga'lum  en’rum  solliyirukki’raar.  (ebireyar  2:13)

ஆதலால்,  பிள்ளைகள்  மாம்சத்தையும்  இரத்தத்தையும்  உடையவர்களாயிருக்க,  அவரும்  அவர்களைப்போல  மாம்சத்தையும்  இரத்தத்தையும்  உடையவரானார்;  மரணத்துக்கு  அதிகாரியாகிய  பிசாசானவனைத்  தமது  மரணத்தினாலே  அழிக்கும்படிக்கும்,  (எபிரெயர்  2:14)

aathalaal,  pi'l'laiga'l  maamsaththaiyum  iraththaththaiyum  udaiyavarga'laayirukka,  avarum  avarga'laippoala  maamsaththaiyum  iraththaththaiyum  udaiyavaraanaar;  mara'naththukku  athigaariyaagiya  pisaasaanavanaith  thamathu  mara'naththinaalea  azhikkumpadikkum,  (ebireyar  2:14)

ஜீவகாலமெல்லாம்  மரணபயத்தினாலே  அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்  யாவரையும்  விடுதலைபண்ணும்படிக்கும்  அப்படியானார்.  (எபிரெயர்  2:15)

jeevakaalamellaam  mara'nabayaththinaalea  adimaiththanaththi’rku'l'laanavarga'l  yaavaraiyum  viduthalaipa'n'numpadikkum  appadiyaanaar.  (ebireyar  2:15)

ஆதலால்,  அவர்  தேவதூதருக்கு  உதவியாகக்  கைகொடாமல்,  ஆபிரகாமின்  சந்ததிக்கு  உதவியாகக்  கைகொடுத்தார்.  (எபிரெயர்  2:16)

aathalaal,  avar  theavathootharukku  uthaviyaagak  kaikodaamal,  aabirahaamin  santhathikku  uthaviyaagak  kaikoduththaar.  (ebireyar  2:16)

அன்றியும்,  அவர்  ஜனத்தின்  பாவங்களை  நிவிர்த்தி  செய்வதற்கேதுவாக,  தேவகாரியங்களைக்குறித்து  இரக்கமும்  உண்மையுமுள்ள  பிரதான  ஆசாரியராயிருக்கும்படிக்கு  எவ்விதத்திலும்  தம்முடைய  சகோதரருக்கு  ஒப்பாகவேண்டியதாயிருந்தது.  (எபிரெயர்  2:17)

an’riyum,  avar  janaththin  paavangga'lai  nivirththi  seyvatha’rkeathuvaaga,  theavakaariyangga'laikku’riththu  irakkamum  u'nmaiyumu'l'la  pirathaana  aasaariyaraayirukkumpadikku  evvithaththilum  thammudaiya  sagoathararukku  oppaagavea'ndiyathaayirunthathu.  (ebireyar  2:17)

ஆதலால்,  அவர்தாமே  சோதிக்கப்பட்டுப்  பாடுபட்டதினாலே,  அவர்  சோதிக்கப்படுகிறவர்களுக்கு  உதவிசெய்ய  வல்லவராயிருக்கிறார்.  (எபிரெயர்  2:18)

aathalaal,  avarthaamea  soathikkappattup  paadupattathinaalea,  avar  soathikkappadugi’ravarga'lukku  uthaviseyya  vallavaraayirukki’raar.  (ebireyar  2:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!