Friday, June 10, 2016

Ebireyar 11 | எபிரெயர் 11 | Hebrews 11

விசுவாசமானது  நம்பப்படுகிறவைகளின்  உறுதியும்,  காணப்படாதவைகளின்  நிச்சயமுமாயிருக்கிறது.  (எபிரெயர்  11:1)

visuvaasamaanathu  nambappadugi’ravaiga'lin  u’ruthiyum,  kaa'nappadaathavaiga'lin  nichchayamumaayirukki’rathu.  (ebireyar  11:1)

அதினாலே  முன்னோர்கள்  நற்சாட்சிபெற்றார்கள்.  (எபிரெயர்  11:2)

athinaalea  munnoarga'l  na’rsaadchipet’raarga'l.  (ebireyar  11:2)

விசுவாசத்தினாலே  நாம்  உலகங்கள்  தேவனுடைய  வார்த்தையினால்  உண்டாக்கப்பட்டதென்றும்,  இவ்விதமாய்,  காணப்படுகிறவைகள்  தோன்றப்படுகிறவைகளால்  உண்டாகவில்லையென்றும்  அறிந்திருக்கிறோம்.  (எபிரெயர்  11:3)

visuvaasaththinaalea  naam  ulagangga'l  theavanudaiya  vaarththaiyinaal  u'ndaakkappattathen’rum,  ivvithamaay,  kaa'nappadugi’ravaiga'l  thoan’rappadugi’ravaiga'laal  u'ndaagavillaiyen’rum  a’rinthirukki’roam.  (ebireyar  11:3)

விசுவாசத்தினாலே  ஆபேல்  காயீனுடைய  பலியிலும்  மேன்மையான  பலியை  தேவனுக்குச்  செலுத்தினான்;  அதினாலே  அவன்  நீதிமானென்று  சாட்சி  பெற்றான்;  அவனுடைய  காணிக்கைகளைக்  குறித்துத்  தேவனே  சாட்சி  கொடுத்தார்;  அவன்  மரித்தும்  இன்னும்  பேசுகிறான்.  (எபிரெயர்  11:4)

visuvaasaththinaalea  aabeal  kaayeenudaiya  baliyilum  meanmaiyaana  baliyai  theavanukkuch  seluththinaan;  athinaalea  avan  neethimaanen’ru  saadchi  pet’raan;  avanudaiya  kaa'nikkaiga'laik  ku’riththuth  theavanea  saadchi  koduththaar;  avan  mariththum  innum  peasugi’raan.  (ebireyar  11:4)

விசுவாசத்தினாலே  ஏனோக்கு  மரணத்தைக்  காணாதபடிக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டான்;  தேவன்  அவனை  எடுத்துக்கொண்டபடியினாலே,  அவன்  காணப்படாமற்போனான்;  அவன்  தேவனுக்குப்  பிரியமானவனென்று  அவன்  எடுத்துக்கொள்ளப்படுவதற்கு  முன்னமே  சாட்சிபெற்றான்.  (எபிரெயர்  11:5)

visuvaasaththinaalea  eanoakku  mara'naththaik  kaa'naathapadikku  eduththukko'l'lappattaan;  theavan  avanai  eduththukko'ndapadiyinaalea,  avan  kaa'nappadaama’rpoanaan;  avan  theavanukkup  piriyamaanavanen’ru  avan  eduththukko'l'lappaduvatha’rku  munnamea  saadchipet’raan.  (ebireyar  11:5)

விசுவாசமில்லாமல்  தேவனுக்குப்  பிரியமாயிருப்பது  கூடாதகாரியம்;  ஏனென்றால்,  தேவனிடத்தில்  சேருகிறவன்  அவர்  உண்டென்றும்,  அவர்  தம்மைத்  தேடுகிறவர்களுக்குப்  பலன்  அளிக்கிறவரென்றும்  விசுவாசிக்கவேண்டும்.  (எபிரெயர்  11:6)

visuvaasamillaamal  theavanukkup  piriyamaayiruppathu  koodaathakaariyam;  eanen’raal,  theavanidaththil  searugi’ravan  avar  u'nden’rum,  avar  thammaith  theadugi’ravarga'lukkup  palan  a'likki’ravaren’rum  visuvaasikkavea'ndum.  (ebireyar  11:6)

விசுவாசத்தினாலே  நோவா  தற்காலத்திலே  காணாதவைகளைக்குறித்துத்  தேவஎச்சரிப்புப்  பெற்று,  பயபக்தியுள்ளவனாகி,  தன்  குடும்பத்தை  இரட்சிப்பதற்குப்  பேழையை  உண்டுபண்ணினான்;  அதினாலே  அவன்  உலகம்  ஆக்கினைக்குள்ளானதென்று  தீர்த்து,  விசுவாசத்தினாலுண்டாகும்  நீதிக்குச்  சுதந்தரவாளியானான்.  (எபிரெயர்  11:7)

visuvaasaththinaalea  noavaa  tha’rkaalaththilea  kaa'naathavaiga'laikku’riththuth  theavaechcharippup  pet’ru,  bayabakthiyu'l'lavanaagi,  than  kudumbaththai  iradchippatha’rkup  peazhaiyai  u'ndupa'n'ninaan;  athinaalea  avan  ulagam  aakkinaikku'l'laanathen’ru  theerththu,  visuvaasaththinaalu'ndaagum  neethikkuch  suthantharavaa'liyaanaan.  (ebireyar  11:7)

விசுவாசத்தினாலே  ஆபிரகாம்  தான்  சுதந்தரமாகப்  பெறப்போகிற  இடத்திற்குப்  போகும்படி  அழைக்கப்பட்டபோது,  கீழ்ப்படிந்து,  தான்  போகும்  இடம்  இன்னதென்று  அறியாமல்  புறப்பட்டுப்போனான்.  (எபிரெயர்  11:8)

visuvaasaththinaalea  aabirahaam  thaan  suthantharamaagap  pe’rappoagi’ra  idaththi’rkup  poagumpadi  azhaikkappattapoathu,  keezhppadinthu,  thaan  poagum  idam  innathen’ru  a’riyaamal  pu’rappattuppoanaan.  (ebireyar  11:8)

விசுவாசத்தினாலே  அவன்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  தேசத்திலே  பரதேசியைப்போலச்  சஞ்சரித்து,  அந்த  வாக்குத்தத்தத்திற்கு  உடன்  சுதந்தரராகிய  ஈசாக்கோடும்  யாக்கோபோடும்  கூடாரங்களிலே  குடியிருந்தான்;  (எபிரெயர்  11:9)

visuvaasaththinaalea  avan  vaakkuththaththampa'n'nappatta  theasaththilea  paratheasiyaippoalach  sagnchariththu,  antha  vaakkuththaththaththi’rku  udan  suthanthararaagiya  eesaakkoadum  yaakkoaboadum  koodaarangga'lilea  kudiyirunthaan;  (ebireyar  11:9)

ஏனெனில்,  தேவன்  தாமே  கட்டி  உண்டாக்கின  அஸ்திபாரங்களுள்ள  நகரத்துக்கு  அவன்  காத்திருந்தான்.  (எபிரெயர்  11:10)

eanenil,  theavan  thaamea  katti  u'ndaakkina  asthibaarangga'lu'l'la  nagaraththukku  avan  kaaththirunthaan.  (ebireyar  11:10)

விசுவாசத்தினாலே  சாராளும்  வாக்குத்தத்தம்பண்ணினவர்  உண்மையுள்ளவரென்றெண்ணி,  கர்ப்பந்தரிக்கப்  பெலனடைந்து,  வயதுசென்றவளாயிருந்தும்  பிள்ளைபெற்றாள்.  (எபிரெயர்  11:11)

visuvaasaththinaalea  saaraa'lum  vaakkuththaththampa'n'ninavar  u'nmaiyu'l'lavaren’re'n'ni,  karppantharikkap  belanadainthu,  vayathusen’rava'laayirunthum  pi'l'laipet’raa'l.  (ebireyar  11:11)

ஆனபடியால்,  சரீரஞ்செத்தவனென்று  எண்ணத்தகும்  ஒருவனாலே,  வானத்திலுள்ள  பெருக்கமான  நட்சத்திரங்களைப்போலவும்  கடற்கரையிலுள்ள  எண்ணிறந்த  மணலைப்போலவும்,  மிகுந்த  ஜனங்கள்  பிறந்தார்கள்.  (எபிரெயர்  11:12)

aanapadiyaal,  sareeragnseththavanen’ru  e'n'naththagum  oruvanaalea,  vaanaththilu'l'la  perukkamaana  nadchaththirangga'laippoalavum  kada’rkaraiyilu'l'la  e'n'ni’rantha  ma'nalaippoalavum,  miguntha  janangga'l  pi’ranthaarga'l.  (ebireyar  11:12)

இவர்களெல்லாரும்,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை  அடையாமல்,  தூரத்திலே  அவைகளைக்  கண்டு,  நம்பி  அணைத்துக்கொண்டு,  பூமியின்மேல்  தங்களை  அந்நியரும்  பரதேசிகளும்  என்று  அறிக்கையிட்டு,  விசுவாசத்தோடே  மரித்தார்கள்.  (எபிரெயர்  11:13)

ivarga'lellaarum,  vaakkuththaththampa'n'nappattavaiga'lai  adaiyaamal,  thooraththilea  avaiga'laik  ka'ndu,  nambi  a'naiththukko'ndu,  boomiyinmeal  thangga'lai  anniyarum  paratheasiga'lum  en’ru  a’rikkaiyittu,  visuvaasaththoadea  mariththaarga'l.  (ebireyar  11:13)

இப்படி  அறிக்கையிடுகிறவர்கள்  சுயதேசத்தை  நாடிப்போகிறோம்  என்று  தெரியப்படுத்துகிறார்கள்.  (எபிரெயர்  11:14)

ippadi  a’rikkaiyidugi’ravarga'l  suyatheasaththai  naadippoagi’roam  en’ru  theriyappaduththugi’raarga'l.  (ebireyar  11:14)

தாங்கள்  விட்டுவந்த  தேசத்தை  நினைத்தார்களானால்,  அதற்குத்  திரும்பிப்போவதற்கு  அவர்களுக்குச்  சமயங்கிடைத்திருக்குமே.  (எபிரெயர்  11:15)

thaangga'l  vittuvantha  theasaththai  ninaiththaarga'laanaal,  atha’rkuth  thirumbippoavatha’rku  avarga'lukkuch  samayangkidaiththirukkumea.  (ebireyar  11:15)

அதையல்ல,  அதிலும்  மேன்மையான  பரமதேசத்தையே  விரும்பினார்கள்;  ஆகையால்  தேவன்  அவர்களுடைய  தேவனென்னப்பட  வெட்கப்படுகிறதில்லை;  அவர்களுக்கு  ஒரு  நகரத்தை  ஆயத்தம்பண்ணினாரே.  (எபிரெயர்  11:16)

athaiyalla,  athilum  meanmaiyaana  paramatheasaththaiyea  virumbinaarga'l;  aagaiyaal  theavan  avarga'ludaiya  theavanennappada  vedkappadugi’rathillai;  avarga'lukku  oru  nagaraththai  aayaththampa'n'ninaarea.  (ebireyar  11:16)

மேலும்  விசுவாசத்தினாலே  ஆபிரகாம்  தான்  சோதிக்கப்பட்டபோது  ஈசாக்கைப்  பலியாக  ஒப்புக்கொடுத்தான்.  (எபிரெயர்  11:17)

mealum  visuvaasaththinaalea  aabirahaam  thaan  soathikkappattapoathu  eesaakkaip  baliyaaga  oppukkoduththaan.  (ebireyar  11:17)

ஈசாக்கினிடத்தில்  உன்  சந்ததி  விளங்கும்  என்று  அவனோடே  சொல்லப்பட்டிருந்ததே;  இப்படிப்பட்ட  வாக்குத்தத்தங்களைப்  பெற்றவன்,  மரித்தோரிலிருந்தும்  எழுப்பத்  தேவன்  வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,  (எபிரெயர்  11:18)

eesaakkinidaththil  un  santhathi  vi'langgum  en’ru  avanoadea  sollappattirunthathea;  ippadippatta  vaakkuththaththangga'laip  pet’ravan,  mariththoarilirunthum  ezhuppath  theavan  vallavaraayirukki’raaren’re'n'ni,  (ebireyar  11:18)

தனக்கு  ஒரேபேறானவனையே  பலியாக  ஒப்புக்கொடுத்தான்;  மரித்தோரிலிருந்து  அவனை  பாவனையாகத்  திரும்பவும்  பெற்றுக்கொண்டான்.  (எபிரெயர்  11:19)

thanakku  oreapea’raanavanaiyea  baliyaaga  oppukkoduththaan;  mariththoarilirunthu  avanai  baavanaiyaagath  thirumbavum  pet’rukko'ndaan.  (ebireyar  11:19)

விசுவாசத்தினாலே  ஈசாக்கு  வருங்காரியங்களைக்குறித்து  யாக்கோபையும்  ஏசாவையும்  ஆசீர்வதித்தான்.  (எபிரெயர்  11:20)

visuvaasaththinaalea  eesaakku  varungkaariyangga'laikku’riththu  yaakkoabaiyum  easaavaiyum  aaseervathiththaan.  (ebireyar  11:20)

விசுவாசத்தினாலே  யாக்கோபு  தன்  மரணகாலத்தில்  யோசேப்பினுடைய  குமாரர்  இருவரையும்  ஆசீர்வதித்து,  தன்  கோலின்  முனையிலே  சாய்ந்து  தொழுதுகொண்டான்.  (எபிரெயர்  11:21)

visuvaasaththinaalea  yaakkoabu  than  mara'nakaalaththil  yoaseappinudaiya  kumaarar  iruvaraiyum  aaseervathiththu,  than  koalin  munaiyilea  saaynthu  thozhuthuko'ndaan.  (ebireyar  11:21)

விசுவாசத்தினாலே  யோசேப்பு  இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்து  தேசத்தைவிட்டுப்  புறப்படுவார்களென்பதைப்பற்றித்  தன்  அந்தியகாலத்தில்  பேசி,  தன்  எலும்புகளைக்குறித்துக்  கட்டளைகொடுத்தான்.  (எபிரெயர்  11:22)

visuvaasaththinaalea  yoaseappu  israveal  puththirar  egipthu  theasaththaivittup  pu’rappaduvaarga'lenbathaippat’rith  than  anthiyakaalaththil  peasi,  than  elumbuga'laikku’riththuk  katta'laikoduththaan.  (ebireyar  11:22)

மோசே  பிறந்தபோது  அவனுடைய  தாய்தகப்பன்மார்  அவனை  அழகுள்ள  பிள்ளையென்று  கண்டு,  விசுவாசத்தினாலே,  ராஜாவினுடைய  கட்டளைக்குப்  பயப்படாமல்  அவனை  மூன்றுமாதம்  ஒளித்துவைத்தார்கள்.  (எபிரெயர்  11:23)

moasea  pi’ranthapoathu  avanudaiya  thaaythagappanmaar  avanai  azhagu'l'la  pi'l'laiyen’ru  ka'ndu,  visuvaasaththinaalea,  raajaavinudaiya  katta'laikkup  bayappadaamal  avanai  moon’rumaatham  o'liththuvaiththaarga'l.  (ebireyar  11:23)

விசுவாசத்தினாலே  மோசே  தான்  பெரியவனானபோது  பார்வோனுடைய  குமாரத்தியின்  மகன்  என்னப்படுவதை  வெறுத்து,  (எபிரெயர்  11:24)

visuvaasaththinaalea  moasea  thaan  periyavanaanapoathu  paarvoanudaiya  kumaaraththiyin  magan  ennappaduvathai  ve’ruththu,  (ebireyar  11:24)

அநித்தியமான  பாவசந்தோஷங்களை  அநுபவிப்பதைப்பார்க்கிலும்  தேவனுடைய  ஜனங்களோடே  துன்பத்தை  அநுபவிப்பதையே  தெரிந்துகொண்டு,  (எபிரெயர்  11:25)

aniththiyamaana  paavasanthoashangga'lai  anubavippathaippaarkkilum  theavanudaiya  janangga'loadea  thunbaththai  anubavippathaiyea  therinthuko'ndu,  (ebireyar  11:25)

இனிவரும்  பலன்மேல்  நோக்கமாயிருந்து,  எகிப்திலுள்ள  பொக்கிஷங்களிலும்  கிறிஸ்துவினிமித்தம்  வரும்  நிந்தையை  அதிக  பாக்கியமென்று  எண்ணினான்.  (எபிரெயர்  11:26)

inivarum  palanmeal  noakkamaayirunthu,  egipthilu'l'la  pokkishangga'lilum  ki’risthuvinimiththam  varum  ninthaiyai  athiga  baakkiyamen’ru  e'n'ninaan.  (ebireyar  11:26)

விசுவாசத்தினாலே  அவன்  அதரிசனமானவரைத்  தரிசிக்கிறதுபோல  உறுதியாயிருந்து,  ராஜாவின்  கோபத்துக்குப்  பயப்படாமல்  எகிப்தைவிட்டுப்  போனான்.  (எபிரெயர்  11:27)

visuvaasaththinaalea  avan  atharisanamaanavaraith  tharisikki’rathupoala  u’ruthiyaayirunthu,  raajaavin  koabaththukkup  bayappadaamal  egipthaivittup  poanaan.  (ebireyar  11:27)

விசுவாசத்தினாலே,  முதற்பேறானவைகளைச்  சங்கரிக்கிறவன்  இஸ்ரவேலரைத்  தொடாதபடிக்கு,  அவன்  பஸ்காவையும்  இரத்தம்  பூசுதலாகிய  நியமத்தையும்  ஆசரித்தான்.  (எபிரெயர்  11:28)

visuvaasaththinaalea,  mutha’rpea’raanavaiga'laich  sanggarikki’ravan  isravealaraith  thodaathapadikku,  avan  paskaavaiyum  iraththam  poosuthalaagiya  niyamaththaiyum  aasariththaan.  (ebireyar  11:28)

விசுவாசத்தினாலே  அவர்கள்  சிவந்த  சமுத்திரத்தை  உலர்ந்த  தரையைக்  கடந்துபோவதுபோலக்  கடந்துபோனார்கள்;  எகிப்தியர்  அப்படிச்  செய்யத்துணிந்து  அமிழ்ந்துபோனார்கள்.  (எபிரெயர்  11:29)

visuvaasaththinaalea  avarga'l  sivantha  samuththiraththai  ularntha  tharaiyaik  kadanthupoavathupoalak  kadanthupoanaarga'l;  egipthiyar  appadich  seyyaththu'ninthu  amizhnthupoanaarga'l.  (ebireyar  11:29)

விசுவாசத்தினாலே  எரிகோ  பட்டணத்தின்  மதில்கள்  ஏழுநாள்  சுற்றிவரப்பட்டு  விழுந்தது.  (எபிரெயர்  11:30)

visuvaasaththinaalea  erigoa  patta'naththin  mathilga'l  eazhunaa'l  sut’rivarappattu  vizhunthathu.  (ebireyar  11:30)

விசுவாசத்தினாலே  ராகாப்  என்னும்  வேசி  வேவுகாரரைச்  சமாதானத்தோடே  ஏற்றுக்கொண்டு,  கீழ்ப்படியாதவர்களோடேகூடச்  சேதமாகாதிருந்தாள்.  (எபிரெயர்  11:31)

visuvaasaththinaalea  raahaab  ennum  veasi  veavukaararaich  samaathaanaththoadea  eat’rukko'ndu,  keezhppadiyaathavarga'loadeakoodach  seathamaagaathirunthaa'l.  (ebireyar  11:31)

பின்னும்  நான்  என்ன  சொல்லுவேன்?  கிதியோன்,  பாராக்,  சிம்சோன்,  யெப்தா,  தாவீது,  சாமுவேல்  என்பவர்களையும்,  தீர்க்கதரிசிகளையுங்குறித்து  நான்  விவரஞ்சொல்லவேண்டுமானால்  காலம்  போதாது.  (எபிரெயர்  11:32)

pinnum  naan  enna  solluvean?  kithiyoan,  baaraak,  simsoan,  yepthaa,  thaaveethu,  saamuveal  enbavarga'laiyum,  theerkkatharisiga'laiyungku’riththu  naan  vivaragnsollavea'ndumaanaal  kaalam  poathaathu.  (ebireyar  11:32)

விசுவாசத்தினாலே  அவர்கள்  ராஜ்யங்களை  ஜெயித்தார்கள்,  நீதியை  நடப்பித்தார்கள்,  வாக்குத்தத்தங்களைப்  பெற்றார்கள்,  சிங்கங்களின்  வாய்களை  அடைத்தார்கள்,  (எபிரெயர்  11:33)

visuvaasaththinaalea  avarga'l  raajyangga'lai  jeyiththaarga'l,  neethiyai  nadappiththaarga'l,  vaakkuththaththangga'laip  pet’raarga'l,  singgangga'lin  vaayga'lai  adaiththaarga'l,  (ebireyar  11:33)

அக்கினியின்  உக்கிரத்தை  அவித்தார்கள்,  பட்டயக்கருக்குக்குத்  தப்பினார்கள்,  பலவீனத்தில்  பலன்கொண்டார்கள்;  யுத்தத்தில்  வல்லவர்களானார்கள்,  அந்நியருடைய  சேனைகளை  முறியடித்தார்கள்.  (எபிரெயர்  11:34)

akkiniyin  ukkiraththai  aviththaarga'l,  pattayakkarukkukkuth  thappinaarga'l,  balaveenaththil  balanko'ndaarga'l;  yuththaththil  vallavarga'laanaarga'l,  anniyarudaiya  seanaiga'lai  mu’riyadiththaarga'l.  (ebireyar  11:34)

ஸ்திரீகள்  சாகக்கொடுத்த  தங்களுடையவர்களை  உயிரோடெழுந்திருக்கப்  பெற்றார்கள்;  வேறுசிலர்  மேன்மையான  உயிர்த்தெழுதலை  அடையும்படிக்கு,  விடுதலைபெறச்  சம்மதியாமல்,  வாதிக்கப்பட்டார்கள்;  (எபிரெயர்  11:35)

sthireega'l  saagakkoduththa  thangga'ludaiyavarga'lai  uyiroadezhunthirukkap  pet’raarga'l;  vea’rusilar  meanmaiyaana  uyirththezhuthalai  adaiyumpadikku,  viduthalaipe’rach  sammathiyaamal,  vaathikkappattaarga'l;  (ebireyar  11:35)

வேறு  சிலர்  நிந்தைகளையும்  அடிகளையும்  கட்டுகளையும்  காவலையும்  அநுபவித்தார்கள்;  (எபிரெயர்  11:36)

vea’ru  silar  ninthaiga'laiyum  adiga'laiyum  kattuga'laiyum  kaavalaiyum  anubaviththaarga'l;  (ebireyar  11:36)

கல்லெறியுண்டார்கள்,  வாளால்  அறுப்புண்டார்கள்,  பரீட்சைபார்க்கப்பட்டார்கள்,  பட்டயத்தினாலே  வெட்டப்பட்டு  மரித்தார்கள்,  செம்மறியாட்டுத்  தோல்களையும்  வெள்ளாட்டுத்  தோல்களையும்  போர்த்துக்கொண்டு  திரிந்து,  குறைவையும்  உபத்திரவத்தையும்  துன்பத்தையும்  அநுபவித்தார்கள்;  (எபிரெயர்  11:37)

kalle’riyu'ndaarga'l,  vaa'laal  a’ruppu'ndaarga'l,  pareedchaipaarkkappattaarga'l,  pattayaththinaalea  vettappattu  mariththaarga'l,  semma’riyaattuth  thoalga'laiyum  ve'l'laattuth  thoalga'laiyum  poarththukko'ndu  thirinthu,  ku’raivaiyum  ubaththiravaththaiyum  thunbaththaiyum  anubaviththaarga'l;  (ebireyar  11:37)

உலகம்  அவர்களுக்குப்  பாத்திரமாயிருக்கவில்லை;  அவர்கள்  வனாந்தரங்களிலேயும்  மலைகளிலேயும்  குகைகளிலேயும்  பூமியின்  வெடிப்புகளிலேயும்  சிதறுண்டு  அலைந்தார்கள்.  (எபிரெயர்  11:38)

ulagam  avarga'lukkup  paaththiramaayirukkavillai;  avarga'l  vanaantharangga'lileayum  malaiga'lileayum  kugaiga'lileayum  boomiyin  vedippuga'lileayum  sitha’ru'ndu  alainthaarga'l.  (ebireyar  11:38)

இவர்களெல்லாரும்  விசுவாசத்தினாலே  நற்சாட்சிபெற்றும்,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை  அடையாமற்போனார்கள்.  (எபிரெயர்  11:39)

ivarga'lellaarum  visuvaasaththinaalea  na’rsaadchipet’rum,  vaakkuththaththampa'n'nappattathai  adaiyaama’rpoanaarga'l.  (ebireyar  11:39)

அவர்கள்  நம்மையல்லாமல்  பூரணராகாதபடிக்கு  விசேஷித்த  நன்மையானதொன்றைத்  தேவன்  நமக்கென்று  முன்னதாக  நியமித்திருந்தார்.  (எபிரெயர்  11:40)

avarga'l  nammaiyallaamal  poora'naraagaathapadikku  viseashiththa  nanmaiyaanathon’raith  theavan  namakken’ru  munnathaaga  niyamiththirunthaar.  (ebireyar  11:40)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!