Sunday, June 26, 2016

Aathiyaagamam 9 | ஆதியாகமம் 9 | Genesis 9


பின்பு  தேவன்  நோவாவையும்,  அவன்  குமாரரையும்  ஆசீர்வதித்து:  நீங்கள்  பலுகிப்  பெருகி,  பூமியை  நிரப்புங்கள்.  (ஆதியாகமம்  9:1)

pinbu  theavan  noavaavaiyum,  avan  kumaararaiyum  aaseervathiththu:  neengga'l  palugip  perugi,  boomiyai  nirappungga'l.  (aathiyaagamam  9:1)

உங்களைப்பற்றிய  பயமும்  அச்சமும்  பூமியிலுள்ள  சகல  மிருகங்களுக்கும்,  ஆகாயத்திலுள்ள  சகல  பறவைகளுக்கும்  உண்டாயிருக்கும்;  பூமியிலே  நடமாடுகிற  யாவும்,  சமுத்திரத்தின்  மச்சங்கள்  யாவும்,  உங்களுக்குக்  கையளிக்கப்பட்டன.  (ஆதியாகமம்  9:2)

ungga'laippat’riya  bayamum  achchamum  boomiyilu'l'la  sagala  mirugangga'lukkum,  aagaayaththilu'l'la  sagala  pa'ravaiga'lukkum  u'ndaayirukkum;  boomiyilea  nadamaadugi'ra  yaavum,  samuththiraththin  machchangga'l  yaavum,  ungga'lukkuk  kaiya'likkappattana.  (aathiyaagamam  9:2)

நடமாடுகிற  ஜீவஜந்துக்கள்  யாவும்,  உங்களுக்கு  ஆகாரமாய்  இருப்பதாக;  பசும்  பூண்டுகளை  உங்களுக்குத்  தந்ததுபோல,  அவைகள்  எல்லாவற்றையும்  உங்களுக்குத்  தந்தேன்.  (ஆதியாகமம்  9:3)

nadamaadugi'ra  jeevajanthukka'l  yaavum,  ungga'lukku  aagaaramaay  iruppathaaga;  pasum  poo'nduga'lai  ungga'lukkuth  thanthathupoala,  avaiga'l  ellaavat’raiyum  ungga'lukkuth  thanthean.  (aathiyaagamam  9:3)

மாம்சத்தை  அதின்  உயிராகிய  இரத்தத்தோடே  புசிக்கவேண்டாம்.  (ஆதியாகமம்  9:4)

maamsaththai  athin  uyiraagiya  iraththaththoadea  pusikkavea'ndaam.  (aathiyaagamam  9:4)

உங்களுக்கு  உயிராயிருக்கிற  உங்கள்  இரத்தத்திற்காகப்  பழிவாங்குவேன்;  சகல  ஜீவஜந்துக்களிடத்திலும்  மனுஷனிடத்திலும்  பழிவாங்குவேன்;  மனுஷனுடைய  உயிருக்காக  அவனவன்  சகோதரனிடத்தில்  பழிவாங்குவேன்.  (ஆதியாகமம்  9:5)

ungga'lukku  uyiraayirukki'ra  ungga'l  iraththaththi’rkaagap  pazhivaangguvean;  sagala  jeevajanthukka'lidaththilum  manushanidaththilum  pazhivaangguvean;  manushanudaiya  uyirukkaaga  avanavan  sagoatharanidaththil  pazhivaangguvean.  (aathiyaagamam  9:5)

மனுஷன்  தேவசாயலில்  உண்டாக்கப்பட்டபடியால்,  மனுஷனுடைய  இரத்தத்தை  எவன்  சிந்துகிறானோ,  அவனுடைய  இரத்தம்  மனுஷனாலே  சிந்தப்படக்கடவது.  (ஆதியாகமம்  9:6)

manushan  theavasaayalil  u'ndaakkappattapadiyaal,  manushanudaiya  iraththaththai  evan  sinthugi'raanoa,  avanudaiya  iraththam  manushanaalea  sinthappadakkadavathu.  (aathiyaagamam  9:6)

நீங்கள்  பலுகிப்  பெருகி,  பூமியிலே  திரளாய்  வர்த்தித்து  விர்த்தியாகுங்கள்  என்றார்.  (ஆதியாகமம்  9:7)

neengga'l  palugip  perugi,  boomiyilea  thira'laay  varththiththu  virththiyaagungga'l  en'raar.  (aathiyaagamam  9:7)

பின்னும்  தேவன்  நோவாவையும்,  அவன்  குமாரரையும்  நோக்கி:  (ஆதியாகமம்  9:8)

pinnum  theavan  noavaavaiyum,  avan  kumaararaiyum  noakki:  (aathiyaagamam  9:8)

நான்  உங்களோடும்,  உங்களுக்குப்  பின்வரும்  உங்கள்  சந்ததியோடும்,  (ஆதியாகமம்  9:9)

naan  ungga'loadum,  ungga'lukkup  pinvarum  ungga'l  santhathiyoadum,  (aathiyaagamam  9:9)

உங்களோடே  பேழையிலிருந்து  புறப்பட்ட  சகல  ஜீவஜந்துக்கள்முதல்  இனிப்  பூமியில்  உண்டாகப்போகிற  சகல  ஜீவஜந்துக்கள்பரியந்தம்,  பறவைகளோடும்,  நாட்டு  மிருகங்களோடும்,  உங்களிடத்தில்  இருக்கிற  பூமியிலுள்ள  சகல  காட்டு  மிருகங்களோடும்  என்  உடன்படிக்கையை  ஏற்படுத்துகிறேன்.  (ஆதியாகமம்  9:10)

ungga'loadea  peazhaiyilirunthu  pu'rappatta  sagala  jeevajanthukka'lmuthal  inip  boomiyil  u'ndaagappoagi'ra  sagala  jeevajanthukka'lpariyantham,  pa'ravaiga'loadum,  naattu  mirugangga'loadum,  ungga'lidaththil  irukki'ra  boomiyilu'l'la  sagala  kaattu  mirugangga'loadum  en  udanpadikkaiyai  ea’rpaduththugi'rean.  (aathiyaagamam  9:10)

இனி  மாம்சமானவைகளெல்லாம்  ஜலப்பிரளயத்தினால்  சங்கரிக்கப்படுவதில்லையென்றும்,  பூமியை  அழிக்க  இனி  ஜலப்பிரளயம்  உண்டாவதில்லையென்றும்,  உங்களோடே  என்  உடன்படிக்கையை  ஏற்படுத்துகிறேன்  என்றார்.  (ஆதியாகமம்  9:11)

ini  maamsamaanavaiga'lellaam  jalappira'layaththinaal  sanggarikkappaduvathillaiyen'rum,  boomiyai  azhikka  ini  jalappira'layam  u'ndaavathillaiyen'rum,  ungga'loadea  en  udanpadikkaiyai  ea’rpaduththugi'rean  en'raar.  (aathiyaagamam  9:11)

அன்றியும்  தேவன்:  எனக்கும்  உங்களுக்கும்,  உங்களிடத்தில்  இருக்கும்  சகல  ஜீவஜந்துக்களுக்கும்,  நித்திய  தலைமுறைகளுக்கென்று  நான்  செய்கிற  உடன்படிக்கையின்  அடையாளமாக:  (ஆதியாகமம்  9:12)

an'riyum  theavan:  enakkum  ungga'lukkum,  ungga'lidaththil  irukkum  sagala  jeevajanthukka'lukkum,  niththiya  thalaimu'raiga'lukken'ru  naan  seygi'ra  udanpadikkaiyin  adaiyaa'lamaaga:  (aathiyaagamam  9:12)

நான்  என்  வில்லை  மேகத்தில்  வைத்தேன்;  அது  எனக்கும்  பூமிக்கும்  உண்டான  உடன்படிக்கைக்கு  அடையாளமாயிருக்கும்.  (ஆதியாகமம்  9:13)

naan  en  villai  meagaththil  vaiththean;  athu  enakkum  boomikkum  u'ndaana  udanpadikkaikku  adaiyaa'lamaayirukkum.  (aathiyaagamam  9:13)

நான்  பூமிக்கு  மேலாய்  மேகத்தை  வருவிக்கும்போது,  அந்த  வில்  மேகத்தில்  தோன்றும்.  (ஆதியாகமம்  9:14)

naan  boomikku  mealaay  meagaththai  varuvikkumpoathu,  antha  vil  meagaththil  thoan'rum.  (aathiyaagamam  9:14)

அப்பொழுது  எல்லா  மாம்சஜீவன்களையும்  அழிக்க  இனி  ஜலமானது  பிரளயமாய்ப்  பெருகாதபடிக்கு  எனக்கும்  உங்களுக்கும்  மாம்சமான  சகல  ஜீவஜந்துக்களுக்கும்  உண்டான  என்  உடன்படிக்கையை  நினைவுகூருவேன்.  (ஆதியாகமம்  9:15)

appozhuthu  ellaa  maamsajeevanga'laiyum  azhikka  ini  jalamaanathu  pira'layamaayp  perugaathapadikku  enakkum  ungga'lukkum  maamsamaana  sagala  jeevajanthukka'lukkum  u'ndaana  en  udanpadikkaiyai  ninaivukooruvean.  (aathiyaagamam  9:15)

அந்த  வில்  மேகத்தில்  தோன்றும்போது,  தேவனுக்கும்  பூமியின்மேலுள்ள  சகலவித  மாம்சஜீவன்களுக்கும்  உண்டான  நித்திய  உடன்படிக்கையை  நான்  நினைவுகூரும்படிக்கு  அதை  நோக்கிப்பார்ப்பேன்.  (ஆதியாகமம்  9:16)

antha  vil  meagaththil  thoan'rumpoathu,  theavanukkum  boomiyinmealu'l'la  sagalavitha  maamsajeevanga'lukkum  u'ndaana  niththiya  udanpadikkaiyai  naan  ninaivukoorumpadikku  athai  noakkippaarppean.  (aathiyaagamam  9:16)

இது  எனக்கும்,  பூமியின்மேலுள்ள  மாம்சமான  யாவுக்கும்,  நான்  ஏற்படுத்தின  உடன்படிக்கையின்  அடையாளம்  என்று  நோவாவோடே  சொன்னார்.  (ஆதியாகமம்  9:17)

ithu  enakkum,  boomiyinmealu'l'la  maamsamaana  yaavukkum,  naan  ea’rpaduththina  udanpadikkaiyin  adaiyaa'lam  en'ru  noavaavoadea  sonnaar.  (aathiyaagamam  9:17)

பேழையிலிருந்து  புறப்பட்ட  நோவாவின்  குமாரர்,  சேம்  காம்  யாப்பேத்  என்பவர்களே.  காம்  கானானுக்குத்  தகப்பன்.  (ஆதியாகமம்  9:18)

peazhaiyilirunthu  pu'rappatta  noavaavin  kumaarar,  seam  kaam  yaappeath  enbavarga'lea.  kaam  kaanaanukkuth  thagappan.  (aathiyaagamam  9:18)

இம்மூவரும்  நோவாவின்  குமாரர்;  இவர்களாலே  பூமியெங்கும்  ஜனங்கள்  பரம்பினார்கள்.  (ஆதியாகமம்  9:19)

immoovarum  noavaavin  kumaarar;  ivarga'laalea  boomiyenggum  janangga'l  parambinaarga'l.  (aathiyaagamam  9:19)

நோவா  பயிரிடுகிறவனாகி,  திராட்சத்தோட்டத்தை  நாட்டினான்.  (ஆதியாகமம்  9:20)

noavaa  payiridugi'ravanaagi,  thiraadchaththoattaththai  naattinaan.  (aathiyaagamam  9:20)

அவன்  திராட்சரசத்தைக்  குடித்து,  வெறிகொண்டு,  தன்  கூடாரத்தில்  வஸ்திரம்  விலகிப்  படுத்திருந்தான்.  (ஆதியாகமம்  9:21)

avan  thiraadcharasaththaik  kudiththu,  ve'riko'ndu,  than  koodaaraththil  vasthiram  vilagip  paduththirunthaan.  (aathiyaagamam  9:21)

அப்பொழுது  கானானுக்குத்  தகப்பனாகிய  காம்  தன்  தகப்பனுடைய  நிர்வாணத்தைக்  கண்டு,  வெளியில்  இருந்த  தன்  சகோதரர்  இருவருக்கும்  அறிவித்தான்.  (ஆதியாகமம்  9:22)

appozhuthu  kaanaanukkuth  thagappanaagiya  kaam  than  thagappanudaiya  nirvaa'naththaik  ka'ndu,  ve'liyil  iruntha  than  sagoatharar  iruvarukkum  a'riviththaan.  (aathiyaagamam  9:22)

அப்பொழுது  சேமும்  யாப்பேத்தும்  ஒரு  வஸ்திரத்தை  எடுத்துத்  தங்கள்  இருவருடைய  தோள்மேலும்  போட்டுக்கொண்டு,  பின்னிட்டு  வந்து,  தங்கள்  தகப்பனுடைய  நிர்வாணத்தை  மூடினார்கள்;  அவர்கள்  எதிர்முகமாய்ப்  போகாதபடியினால்,  தங்கள்  தகப்பனுடைய  நிர்வாணத்தைக்  காணவில்லை.  (ஆதியாகமம்  9:23)

appozhuthu  seamum  yaappeaththum  oru  vasthiraththai  eduththuth  thangga'l  iruvarudaiya  thoa'lmealum  poattukko'ndu,  pinnittu  vanthu,  thangga'l  thagappanudaiya  nirvaa'naththai  moodinaarga'l;  avarga'l  ethirmugamaayp  poagaathapadiyinaal,  thangga'l  thagappanudaiya  nirvaa'naththaik  kaa'navillai.  (aathiyaagamam  9:23)

நோவா  திராட்சரசத்தின்  வெறிதெளிந்து  விழித்தபோது,  தன்  இளைய  குமாரன்  தனக்குச்  செய்ததை  அறிந்து:  (ஆதியாகமம்  9:24)

noavaa  thiraadcharasaththin  ve'rithe'linthu  vizhiththapoathu,  than  i'laiya  kumaaran  thanakkuch  seythathai  a'rinthu:  (aathiyaagamam  9:24)

கானான்  சபிக்கப்பட்டவன்,  தன்  சகோதரரிடத்தில்  அடிமைகளுக்கு  அடிமையாயிருப்பான்  என்றான்.  (ஆதியாகமம்  9:25)

kaanaan  sabikkappattavan,  than  sagoathararidaththil  adimaiga'lukku  adimaiyaayiruppaan  en'raan.  (aathiyaagamam  9:25)

சேமுடைய  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக;  கானான்  அவனுக்கு  அடிமையாயிருப்பான்.  (ஆதியாகமம்  9:26)

seamudaiya  theavanaagiya  karththarukku  sthoaththiram  u'ndaavathaaga;  kaanaan  avanukku  adimaiyaayiruppaan.  (aathiyaagamam  9:26)

யாப்பேத்தை  தேவன்  விர்த்தியாக்குவார்;  அவன்  சேமுடைய  கூடாரங்களில்  குடியிருப்பான்;  கானான்  அவனுக்கு  அடிமையாயிருப்பான்  என்றான்.  (ஆதியாகமம்  9:27)

yaappeaththai  theavan  virththiyaakkuvaar;  avan  seamudaiya  koodaarangga'lil  kudiyiruppaan;  kaanaan  avanukku  adimaiyaayiruppaan  en'raan.  (aathiyaagamam  9:27)

ஜலப்பிரளயத்துக்குப்பின்பு  நோவா  முந்நூற்று  ஐம்பது  வருஷம்  உயிரோடிருந்தான்.  (ஆதியாகமம்  9:28)

jalappira'layaththukkuppinbu  noavaa  munnoot’ru  aimbathu  varusham  uyiroadirunthaan.  (aathiyaagamam  9:28)

நோவாவின்  நாட்களெல்லாம்  தொளாயிரத்து  ஐம்பது  வருஷம்;  அவன்  மரித்தான்.  (ஆதியாகமம்  9:29)

noavaavin  naadka'lellaam  tho'laayiraththu  aimbathu  varusham;  avan  mariththaan.  (aathiyaagamam  9:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!