Tuesday, June 28, 2016

Aathiyaagamam 50 | ஆதியாகமம் 50 | Genesis 50


அப்பொழுது  யோசேப்பு  தன்  தகப்பனுடைய  முகத்தின்மேல்  விழுந்து,  அழுது,  அவனை  முத்தஞ்செய்தான்.  (ஆதியாகமம்  50:1)

appozhuthu  yoaseappu  than  thagappanudaiya  mugaththinmeal  vizhunthu,  azhuthu,  avanai  muththagnseythaan.  (aathiyaagamam  50:1)

பின்பு,  தன்  தகப்பனுக்குச்  சுகந்தவர்க்கமிடும்படி  யோசேப்பு  தன்  ஊழியக்காரராகிய  வைத்தியருக்குக்  கட்டளையிட்டான்;  அப்படியே  வைத்தியர்  இஸ்ரவேலுக்குச்  சுகந்தவர்க்கமிட்டார்கள்.  (ஆதியாகமம்  50:2)

pinbu,  than  thagappanukkuch  suganthavarkkamidumpadi  yoaseappu  than  oozhiyakkaararaagiya  vaiththiyarukkuk  katta'laiyittaan;  appadiyea  vaiththiyar  isravealukkuch  suganthavarkkamittaarga'l.  (aathiyaagamam  50:2)

சுகந்தவர்க்கமிட  நாற்பதுநாள்  செல்லும்;  அப்படியே  அந்த  நாட்கள்  நிறைவேறின.  எகிப்தியர்  அவனுக்காக  எழுபதுநாள்  துக்கங்கொண்டாடினார்கள்.  (ஆதியாகமம்  50:3)

suganthavarkkamida  naa’rpathunaa'l  sellum;  appadiyea  antha  naadka'l  ni’raivea’rina.  egipthiyar  avanukkaaga  ezhubathunaa'l  thukkangko'ndaadinaarga'l.  (aathiyaagamam  50:3)

துக்கங்கொண்டாடும்  நாட்கள்  முடிந்தபின்,  யோசேப்பு  பார்வோனின்  குடும்பத்தாரை  நோக்கி:  உங்கள்  கண்களில்  எனக்குத்  தயவுகிடைத்ததானால்,  நீங்கள்  பார்வோனுடைய  காது  கேட்க  அவருக்கு  அறிவிக்கவேண்டியது  என்னவென்றால்,  (ஆதியாகமம்  50:4)

thukkangko'ndaadum  naadka'l  mudinthapin,  yoaseappu  paarvoanin  kudumbaththaarai  noakki:  ungga'l  ka'nga'lil  enakkuth  thayavukidaiththathaanaal,  neengga'l  paarvoanudaiya  kaathu  keadka  avarukku  a’rivikkavea'ndiyathu  ennaven’raal,  (aathiyaagamam  50:4)

என்  தகப்பனார்  என்னை  நோக்கி:  இதோ,  நான்  மரணமடையப்போகிறேன்;  கானான்  தேசத்திலே  நான்  எனக்காக  வெட்டிவைத்திருக்கிற  கல்லறையிலே  என்னை  அடக்கம்பண்ணுவாயாக  என்று  என்னிடத்தில்  சொல்லி,  ஆணையிடுவித்துக்கொண்டார்;  நான்  அங்கே  போய்,  என்  தகப்பனை  அடக்கம்பண்ணி  வருவதற்கு  உத்தரவுகொடுக்க  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  50:5)

en  thagappanaar  ennai  noakki:  ithoa,  naan  mara'namadaiyappoagi’rean;  kaanaan  theasaththilea  naan  enakkaaga  vettivaiththirukki’ra  kalla’raiyilea  ennai  adakkampa'n'nuvaayaaga  en’ru  ennidaththil  solli,  aa'naiyiduviththukko'ndaar;  naan  anggea  poay,  en  thagappanai  adakkampa'n'ni  varuvatha’rku  uththaravukodukka  vea'ndikko'l'lugi’rean  en’ru  sollungga'l  en’raan.  (aathiyaagamam  50:5)

அதற்குப்  பார்வோன்:  உன்  தகப்பன்  உன்னிடத்தில்  ஆணையிடுவித்தபடியே,  நீ  போய்,  அவரை  அடக்கம்பண்ணிவா  என்றான்.  (ஆதியாகமம்  50:6)

atha’rkup  paarvoan:  un  thagappan  unnidaththil  aa'naiyiduviththapadiyea,  nee  poay,  avarai  adakkampa'n'nivaa  en’raan.  (aathiyaagamam  50:6)

அப்படியே  யோசேப்பு  தன்  தகப்பனை  அடக்கம்பண்ணப்  போனான்.  பார்வோனுடைய  அரமனையிலிருந்த  பெரியவர்களாகிய  அவனுடைய  சகல  உத்தியோகஸ்தரும்  எகிப்து  தேசத்திலுள்ள  சகல  பெரியோரும்,  (ஆதியாகமம்  50:7)

appadiyea  yoaseappu  than  thagappanai  adakkampa'n'nap  poanaan.  paarvoanudaiya  aramanaiyiliruntha  periyavarga'laagiya  avanudaiya  sagala  uththiyoagastharum  egipthu  theasaththilu'l'la  sagala  periyoarum,  (aathiyaagamam  50:7)

யோசேப்பின்  வீட்டார்  யாவரும்,  அவன்  சகோதரரும்,  அவன்  தகப்பன்  வீட்டாரும்  அவனோடேகூடப்  போனார்கள்.  தங்கள்  குழந்தைகளையும்,  தங்கள்  ஆடுமாடுகளையும்மாத்திரம்  கோசேன்  நாட்டிலே  விட்டுப்  போனார்கள்.  (ஆதியாகமம்  50:8)

yoaseappin  veettaar  yaavarum,  avan  sagoathararum,  avan  thagappan  veettaarum  avanoadeakoodap  poanaarga'l.  thangga'l  kuzhanthaiga'laiyum,  thangga'l  aadumaaduga'laiyummaaththiram  koasean  naattilea  vittup  poanaarga'l.  (aathiyaagamam  50:8)

இரதங்களும்  குதிரைவீரரும்  அவனோடே  போனதினால்,  பரிவாரக்கூட்டம்  மிகவும்  அதிகமாயிருந்தது.  (ஆதியாகமம்  50:9)

irathangga'lum  kuthiraiveerarum  avanoadea  poanathinaal,  parivaarakkoottam  migavum  athigamaayirunthathu.  (aathiyaagamam  50:9)

அவர்கள்  யோர்தானுக்கு  அக்கரையில்  இருக்கிற  ஆத்தாத்தின்  போர்க்களத்தில்  வந்தபோது,  அவ்விடத்திலே  பெரும்  புலம்பலாகப்  புலம்பினார்கள்.  அங்கே  தன்  தகப்பனுக்காக  ஏழுநாள்  துக்கங்கொண்டாடினான்.  (ஆதியாகமம்  50:10)

avarga'l  yoarthaanukku  akkaraiyil  irukki’ra  aaththaaththin  poarkka'laththil  vanthapoathu,  avvidaththilea  perum  pulambalaagap  pulambinaarga'l.  anggea  than  thagappanukkaaga  eazhunaa'l  thukkangko'ndaadinaan.  (aathiyaagamam  50:10)

ஆத்தாத்தின்  களத்திலே  துக்கங்கொண்டாடுகிறதை  அத்தேசத்தின்  குடிகளாகிய  கானானியர்  கண்டு:  இது  எகிப்தியருக்குப்  பெரிய  துக்கங்கொண்டாடல்  என்றார்கள்.  அதினால்  யோர்தானுக்கு  அப்பால்  இருக்கிற  அந்த  ஸ்தலத்திற்கு  ஆபேல்மிஸ்ராயீம்  என்னும்  பேர்  உண்டாயிற்று.  (ஆதியாகமம்  50:11)

aaththaaththin  ka'laththilea  thukkangko'ndaadugi’rathai  aththeasaththin  kudiga'laagiya  kaanaaniyar  ka'ndu:  ithu  egipthiyarukkup  periya  thukkangko'ndaadal  en’raarga'l.  athinaal  yoarthaanukku  appaal  irukki’ra  antha  sthalaththi’rku  aabealmisraayeem  ennum  pear  u'ndaayit’ru.  (aathiyaagamam  50:11)

யாக்கோபின்  குமாரர்,  தங்களுக்குக்  கட்டளையிட்டிருந்தபடியே,  (ஆதியாகமம்  50:12)

yaakkoabin  kumaarar,  thangga'lukkuk  katta'laiyittirunthapadiyea,  (aathiyaagamam  50:12)

அவனைக்  கானான்  தேசத்துக்குக்  கொண்டுபோய்,  ஆபிரகாம்  மம்ரேக்கு  எதிரே  இருக்கிற  மக்பேலா  என்னும்  நிலத்திலே  தனக்குச்  சொந்தக்  கல்லறை  பூமியாக  ஏத்தியனாகிய  எப்பெரோனிடத்தில்  வாங்கின  நிலத்திலுள்ள  குகையிலே  அவனை  அடக்கம்பண்ணினார்கள்.  (ஆதியாகமம்  50:13)

avanaik  kaanaan  theasaththukkuk  ko'ndupoay,  aabirahaam  mamreakku  ethirea  irukki’ra  makpealaa  ennum  nilaththilea  thanakkuch  sonthak  kalla’rai  boomiyaaga  eaththiyanaagiya  epperoanidaththil  vaanggina  nilaththilu'l'la  kugaiyilea  avanai  adakkampa'n'ninaarga'l.  (aathiyaagamam  50:13)

யோசேப்பு  தன்  தகப்பனை  அடக்கம்பண்ணினபின்பு,  அவனும்  அவன்  சகோதரரும்,  அவனுடைய  தகப்பனை  அடக்கம்பண்ணுவதற்கு  அவனோடேகூடப்  போனவர்கள்  யாவரும்  எகிப்துக்குத்  திரும்பினார்கள்.  (ஆதியாகமம்  50:14)

yoaseappu  than  thagappanai  adakkampa'n'ninapinbu,  avanum  avan  sagoathararum,  avanudaiya  thagappanai  adakkampa'n'nuvatha’rku  avanoadeakoodap  poanavarga'l  yaavarum  egipthukkuth  thirumbinaarga'l.  (aathiyaagamam  50:14)

தங்கள்  தகப்பன்  மரணமடைந்ததை  யோசேப்பின்  சகோதரர்  கண்டு:  ஒருவேளை  யோசேப்பு  நம்மைப்  பகைத்து,  நாம்  அவனுக்குச்  செய்த  எல்லாப்  பொல்லாங்குக்காகவும்  நமக்குச்  சரிக்குச்  சரிகட்டுவான்  என்று  சொல்லி,  யோசேப்பினிடத்தில்  ஆள்  அனுப்பி,  (ஆதியாகமம்  50:15)

thangga'l  thagappan  mara'namadainthathai  yoaseappin  sagoatharar  ka'ndu:  oruvea'lai  yoaseappu  nammaip  pagaiththu,  naam  avanukkuch  seytha  ellaap  pollaanggukkaagavum  namakkuch  sarikkuch  sarikattuvaan  en’ru  solli,  yoaseappinidaththil  aa'l  anuppi,  (aathiyaagamam  50:15)

உம்முடைய  சகோதரர்  உமக்குப்  பொல்லாங்கு  செய்திருந்தாலும்,  அவர்கள்  செய்த  துரோகத்தையும்  பாதகத்தையும்  நீர்  தயவுசெய்து  மன்னிக்கவேண்டும்  என்று  உம்முடைய  தகப்பனார்  மரணமடையுமுன்னே,  உமக்குச்  சொல்லும்படி  கட்டளையிட்டார்.  (ஆதியாகமம்  50:16)

ummudaiya  sagoatharar  umakkup  pollaanggu  seythirunthaalum,  avarga'l  seytha  thuroagaththaiyum  paathagaththaiyum  neer  thayavuseythu  mannikkavea'ndum  en’ru  ummudaiya  thagappanaar  mara'namadaiyumunnea,  umakkuch  sollumpadi  katta'laiyittaar.  (aathiyaagamam  50:16)
ஆகையால்,  உம்முடைய  தகப்பனாருடைய  தேவனுக்கு  ஊழியக்காரராகிய  நாங்கள்  செய்த  துரோகத்தை  மன்னிக்கவேண்டும்  என்று  அவனுக்குச்  சொல்லச்சொன்னார்கள்.  அவர்கள்  அதை  யோசேப்புக்குச்  சொன்னபோது,  அவன்  அழுதான்.  (ஆதியாகமம்  50:17)

aagaiyaal,  ummudaiya  thagappanaarudaiya  theavanukku  oozhiyakkaararaagiya  naangga'l  seytha  thuroagaththai  mannikkavea'ndum  en’ru  avanukkuch  sollachsonnaarga'l.  avarga'l  athai  yoaseappukkuch  sonnapoathu,  avan  azhuthaan.  (aathiyaagamam  50:17)

பின்பு,  அவனுடைய  சகோதரரும்  போய்,  அவனுக்கு  முன்பாகத்  தாழ  விழுந்து:  இதோ,  நாங்கள்  உமக்கு  அடிமைகள்  என்றார்கள்.  (ஆதியாகமம்  50:18)

pinbu,  avanudaiya  sagoathararum  poay,  avanukku  munbaagath  thaazha  vizhunthu:  ithoa,  naangga'l  umakku  adimaiga'l  en’raarga'l.  (aathiyaagamam  50:18)

யோசேப்பு  அவர்களை  நோக்கி:  பயப்படாதிருங்கள்;  நான்  தேவனா;  (ஆதியாகமம்  50:19)

yoaseappu  avarga'lai  noakki:  bayappadaathirungga'l;  naan  theavanaa;  (aathiyaagamam  50:19)

நீங்கள்  எனக்குத்  தீமைசெய்ய  நினைத்தீர்கள்;  தேவனோ,  இப்பொழுது  நடந்துவருகிறபடியே,  வெகு  ஜனங்களை  உயிரோடே  காக்கும்படிக்கு,  அதை  நன்மையாக  முடியப்பண்ணினார்.  (ஆதியாகமம்  50:20)

neengga'l  enakkuth  theemaiseyya  ninaiththeerga'l;  theavanoa,  ippozhuthu  nadanthuvarugi’rapadiyea,  vegu  janangga'lai  uyiroadea  kaakkumpadikku,  athai  nanmaiyaaga  mudiyappa'n'ninaar.  (aathiyaagamam  50:20)

ஆதலால்,  பயப்படாதிருங்கள்;  நான்  உங்களையும்  உங்கள்  குழந்தைகளையும்  பராமரிப்பேன்  என்று,  அவர்களுக்கு  ஆறுதல்  சொல்லி,  அவர்களோடே  பட்சமாய்ப்  பேசினான்.  (ஆதியாகமம்  50:21)

aathalaal,  bayappadaathirungga'l;  naan  ungga'laiyum  ungga'l  kuzhanthaiga'laiyum  paraamarippean  en’ru,  avarga'lukku  aa’ruthal  solli,  avarga'loadea  padchamaayp  peasinaan.  (aathiyaagamam  50:21)

யோசேப்பும்  அவன்  தகப்பன்  குடும்பத்தாரும்  எகிப்திலே  குடியிருந்தார்கள்.  யோசேப்பு  நூற்றுப்பத்து  வருஷம்  உயிரோடிருந்தான்.  (ஆதியாகமம்  50:22)

yoaseappum  avan  thagappan  kudumbaththaarum  egipthilea  kudiyirunthaarga'l.  yoaseappu  noot’ruppaththu  varusham  uyiroadirunthaan.  (aathiyaagamam  50:22)

யோசேப்பு  எப்பிராயீமுக்குப்  பிறந்த  மூன்றாம்  தலைமுறைப்  பிள்ளைகளையும்  கண்டான்;  மனாசேயின்  குமாரனாகிய  மாகீரின்  பிள்ளைகளும்  யோசேப்பின்  மடியில்  வளர்க்கப்பட்டார்கள்.  (ஆதியாகமம்  50:23)

yoaseappu  eppiraayeemukkup  pi’rantha  moon’raam  thalaimu’raip  pi'l'laiga'laiyum  ka'ndaan;  manaaseayin  kumaaranaagiya  maakeerin  pi'l'laiga'lum  yoaseappin  madiyil  va'larkkappattaarga'l.  (aathiyaagamam  50:23)

யோசேப்பு  தன்  சகோதரரை  நோக்கி:  நான்  மரணமடையப்போகிறேன்;  ஆனாலும்  தேவன்  உங்களை  நிச்சயமாய்ச்  சந்தித்து,  நீங்கள்  இந்தத்  தேசத்தைவிட்டு,  தாம்  ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  யாக்கோபுக்கும்  ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற  தேசத்துக்குப்  போகப்பண்ணுவார்  என்று  சொன்னதுமன்றி;  (ஆதியாகமம்  50:24)

yoaseappu  than  sagoathararai  noakki:  naan  mara'namadaiyappoagi’rean;  aanaalum  theavan  ungga'lai  nichchayamaaych  santhiththu,  neengga'l  inthath  theasaththaivittu,  thaam  aabirahaamukkum  eesaakkukkum  yaakkoabukkum  aa'naiyittukkoduththirukki’ra  theasaththukkup  poagappa'n'nuvaar  en’ru  sonnathuman’ri;  (aathiyaagamam  50:24)

தேவன்  உங்களைச்  சந்திக்கும்போது,  என்  எலும்புகளை  இவ்விடத்திலிருந்து  கொண்டுபோவீர்களாக  என்றும்  சொல்லி;  யோசேப்பு  இஸ்ரவேல்  புத்திரரிடத்தில்  ஆணையிடுவித்துக்கொண்டான்.  (ஆதியாகமம்  50:25)

theavan  ungga'laich  santhikkumpoathu,  en  elumbuga'lai  ivvidaththilirunthu  ko'ndupoaveerga'laaga  en’rum  solli;  yoaseappu  israveal  puththiraridaththil  aa'naiyiduviththukko'ndaan.  (aathiyaagamam  50:25)

யோசேப்பு  நூற்றுப்பத்து  வயதுள்ளவனாய்  மரித்தான்.  அவனுக்குச்  சுகந்தவர்க்கமிட்டு,  எகிப்து  தேசத்தில்  அவனை  ஒரு  பெட்டியிலே  வைத்துவைத்தார்கள்.  (ஆதியாகமம்  50:26)

yoaseappu  noot’ruppaththu  vayathu'l'lavanaay  mariththaan.  avanukkuch  suganthavarkkamittu,  egipthu  theasaththil  avanai  oru  pettiyilea  vaiththuvaiththaarga'l.  (aathiyaagamam  50:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!