Tuesday, June 28, 2016

Aathiyaagamam 49 | ஆதியாகமம் 49 | Genesis 49


யாக்கோபு  தன்  குமாரரை  அழைத்து:  நீங்கள்  கூடிவாருங்கள்,  கடைசி  நாட்களில்  உங்களுக்கு  நேரிடும்  காரியங்களை  அறிவிப்பேன்.  (ஆதியாகமம்  49:1)

yaakkoabu  than  kumaararai  azhaiththu:  neengga'l  koodivaarungga'l,  kadaisi  naadka'lil  ungga'lukku  nearidum  kaariyangga'lai  a’rivippean.  (aathiyaagamam  49:1)

யாக்கோபின்  குமாரரே,  கூடிவந்து  கேளுங்கள்;  உங்கள்  தகப்பனாகிய  இஸ்ரவேலுக்குச்  செவிகொடுங்கள்.  (ஆதியாகமம்  49:2)

yaakkoabin  kumaararea,  koodivanthu  kea'lungga'l;  ungga'l  thagappanaagiya  isravealukkuch  sevikodungga'l.  (aathiyaagamam  49:2)

ரூபனே,  நீ  என்  சேஷ்டபுத்திரன்;  நீ  என்  சத்துவமும்,  என்  முதற்பெலனுமானவன்;  நீ  மேன்மையில்  பிரதானமும்  வல்லமையில்  விசேஷமுமானவன்.  (ஆதியாகமம்  49:3)

roobanea,  nee  en  seashdapuththiran;  nee  en  saththuvamum,  en  mutha’rbelanumaanavan;  nee  meanmaiyil  pirathaanamum  vallamaiyil  viseashamumaanavan.  (aathiyaagamam  49:3)

தண்ணீரைப்போல  தளம்பினவனே,  நீ  மேன்மை  அடையமாட்டாய்;  உன்  தகப்பனுடைய  மஞ்சத்தின்மேல்  ஏறினாய்;  நீ  அதைத்  தீட்டுப்படுத்தினாய்;  என்  படுக்கையின்மேல்  ஏறினானே.  (ஆதியாகமம்  49:4)

tha'n'neeraippoala  tha'lambinavanea,  nee  meanmai  adaiyamaattaay;  un  thagappanudaiya  magnchaththinmeal  ea’rinaay;  nee  athaith  theettuppaduththinaay;  en  padukkaiyinmeal  ea’rinaanea.  (aathiyaagamam  49:4)

சிமியோனும்,  லேவியும்  ஏக  சகோதரர்;  அவர்களுடைய  பட்டயங்கள்  கொடுமையின்  கருவிகள்.  (ஆதியாகமம்  49:5)

simiyoanum,  leaviyum  eaga  sagoatharar;  avarga'ludaiya  pattayangga'l  kodumaiyin  karuviga'l.  (aathiyaagamam  49:5)

என்  ஆத்துமாவே,  அவர்களுடைய  இரகசிய  ஆலோசனைக்கு  உடன்படாதே;  என்  மேன்மையே,  அவர்கள்  கூட்டத்தில்  நீ  சேராதே;  அவர்கள்  தங்கள்  கோபத்தினாலே  ஒரு  புருஷனைக்  கொன்று,  தங்கள்  அகங்காரத்தினாலே  அரண்களை  நிர்மூலமாக்கினார்களே.  (ஆதியாகமம்  49:6)

en  aaththumaavea,  avarga'ludaiya  iragasiya  aaloasanaikku  udanpadaathea;  en  meanmaiyea,  avarga'l  koottaththil  nee  searaathea;  avarga'l  thangga'l  koabaththinaalea  oru  purushanaik  kon’ru,  thangga'l  aganggaaraththinaalea  ara'nga'lai  nirmoolamaakkinaarga'lea.  (aathiyaagamam  49:6)

உக்கிரமான  அவர்கள்  கோபமும்  கொடுமையான  அவர்கள்  மூர்க்கமும்  சபிக்கப்படக்கடவது;  யாக்கோபிலே  அவர்களைப்  பிரியவும்,  இஸ்ரவேலிலே  அவர்களைச்  சிதறவும்  பண்ணுவேன்.  (ஆதியாகமம்  49:7)

ukkiramaana  avarga'l  koabamum  kodumaiyaana  avarga'l  moorkkamum  sabikkappadakkadavathu;  yaakkoabilea  avarga'laip  piriyavum,  isravealilea  avarga'laich  sitha’ravum  pa'n'nuvean.  (aathiyaagamam  49:7)

யூதாவே,  சகோதரரால்  புகழப்படுபவன்  நீயே;  உன்  கரம்  உன்  சத்துருக்களுடைய  பிடரியின்மேல்  இருக்கும்;  உன்  தகப்பனுடைய  புத்திரர்  உன்முன்  பணிவார்கள்.  (ஆதியாகமம்  49:8)

yoothaavea,  sagoathararaal  pugazhappadubavan  neeyea;  un  karam  un  saththurukka'ludaiya  pidariyinmeal  irukkum;  un  thagappanudaiya  puththirar  unmun  pa'nivaarga'l.  (aathiyaagamam  49:8)

யூதா  பாலசிங்கம்,  நீ  இரை  கவர்ந்துகொண்டு  ஏறிப்போனாய்;  என்  மகனே,  சிங்கம்போலும்  கிழச்சிங்கம்போலும்  மடங்கிப்  படுத்தான்;  அவனை  எழுப்புகிறவன்  யார்?  (ஆதியாகமம்  49:9)

yoothaa  baalasinggam,  nee  irai  kavarnthuko'ndu  ea’rippoanaay;  en  maganea,  singgampoalum  kizhachsinggampoalum  madanggip  paduththaan;  avanai  ezhuppugi’ravan  yaar?  (aathiyaagamam  49:9)

சமாதான  கர்த்தர்  வருமளவும்  செங்கோல்  யூதாவைவிட்டு  நீங்குவதும்  இல்லை,  நியாயப்பிரமாணிக்கன்  அவன்  பாதங்களை  விட்டு  ஒழிவதும்  இல்லை;  ஜனங்கள்  அவரிடத்தில்  சேருவார்கள்.  (ஆதியாகமம்  49:10)

samaathaana  karththar  varuma'lavum  senggoal  yoothaavaivittu  neengguvathum  illai,  niyaayappiramaa'nikkan  avan  paathangga'lai  vittu  ozhivathum  illai;  janangga'l  avaridaththil  searuvaarga'l.  (aathiyaagamam  49:10)

அவன்  தன்  கழுதைக்குட்டியைத்  திராட்சச்செடியிலும்,  தன்  கோளிகைக்  கழுதையின்  குட்டியை  நற்குல  திராட்சச்செடியிலும்  கட்டுவான்;  திராட்சரசத்திலே  தன்  வஸ்திரத்தையும்,  திராட்சப்பழங்களின்  இரத்தத்திலே  தன்  அங்கியையும்  தோய்ப்பான்.  (ஆதியாகமம்  49:11)

avan  than  kazhuthaikkuttiyaith  thiraadchachsediyilum,  than  koa'ligaik  kazhuthaiyin  kuttiyai  na’rkula  thiraadchachsediyilum  kattuvaan;  thiraadcharasaththilea  than  vasthiraththaiyum,  thiraadchappazhangga'lin  iraththaththilea  than  anggiyaiyum  thoayppaan.  (aathiyaagamam  49:11)

அவன்  கண்கள்  திராட்சரசத்தினால்  சிவப்பாயும்,  அவன்  பற்கள்  பாலினால்  வெண்மையாயும்  இருக்கும்.  (ஆதியாகமம்  49:12)

avan  ka'nga'l  thiraadcharasaththinaal  sivappaayum,  avan  pa’rka'l  paalinaal  ve'nmaiyaayum  irukkum.  (aathiyaagamam  49:12)

செபுலோன்  கடல்துறை  அருகே  குடியிருப்பான்;  அவன்  கப்பல்  துறைமுகமாய்  இருப்பான்;  அவன்  எல்லை  சீதோன்வரைக்கும்  இருக்கும்.  (ஆதியாகமம்  49:13)

sebuloan  kadalthu’rai  arugea  kudiyiruppaan;  avan  kappal  thu’raimugamaay  iruppaan;  avan  ellai  seethoanvaraikkum  irukkum.  (aathiyaagamam  49:13)

இசக்கார்  இரண்டு  பொதியின்  நடுவே  படுத்துக்கொண்டிருக்கிற  பலத்த  கழுதை.  (ஆதியாகமம்  49:14)

isakkaar  ira'ndu  pothiyin  naduvea  paduththukko'ndirukki’ra  balaththa  kazhuthai.  (aathiyaagamam  49:14)

அவன்,  இளைப்பாறுதல்  நல்லது  என்றும்,  நாடு  வசதியானது  என்றும்  கண்டு,  சுமக்கிறதற்குத்  தன்  தோளைச்  சாய்த்து,  பகுதிகட்டுகிறவனானான்.  (ஆதியாகமம்  49:15)

avan,  i'laippaa’ruthal  nallathu  en’rum,  naadu  vasathiyaanathu  en’rum  ka'ndu,  sumakki’ratha’rkuth  than  thoa'laich  saayththu,  paguthikattugi’ravanaanaan.  (aathiyaagamam  49:15)

தாண்  இஸ்ரவேல்  கோத்திரங்களில்  ஒரு  கோத்திரமாகி,  தன்  ஜனத்தை  நியாயம்  விசாரிப்பான்.  (ஆதியாகமம்  49:16)

thaa'n  israveal  koaththirangga'lil  oru  koaththiramaagi,  than  janaththai  niyaayam  visaarippaan.  (aathiyaagamam  49:16)

தாண்,  குதிரையின்மேல்  ஏறியிருக்கிறவன்  மல்லாந்து  விழும்படியாய்  அதின்  குதிகாலைக்  கடிக்கிறதற்கு  வழியில்  கிடக்கிற  சர்ப்பத்தைப்போலவும்,  பாதையில்  இருக்கிற  விரியனைப்போலவும்  இருப்பான்.  (ஆதியாகமம்  49:17)

thaa'n,  kuthiraiyinmeal  ea’riyirukki’ravan  mallaanthu  vizhumpadiyaay  athin  kuthikaalaik  kadikki’ratha’rku  vazhiyil  kidakki’ra  sarppaththaippoalavum,  paathaiyil  irukki’ra  viriyanaippoalavum  iruppaan.  (aathiyaagamam  49:17)

கர்த்தாவே,  உம்முடைய  இரட்சிப்புக்குக்  காத்திருக்கிறேன்.  (ஆதியாகமம்  49:18)

karththaavea,  ummudaiya  iradchippukkuk  kaaththirukki’rean.  (aathiyaagamam  49:18)

காத்  என்பவன்மேல்  ராணுவக்கூட்டம்  பாய்ந்துவிழும்;  அவனோ  முடிவிலே  அதின்மேல்  பாய்ந்துவிழுவான்.  (ஆதியாகமம்  49:19)

kaath  enbavanmeal  raa'nuvakkoottam  paaynthuvizhum;  avanoa  mudivilea  athinmeal  paaynthuvizhuvaan.  (aathiyaagamam  49:19)

ஆசேருடைய  ஆகாரம்  கொழுமையாயிருக்கும்;  ராஜாக்களுக்கு  வேண்டிய  ருசிவர்க்கங்களை  அவன்  தருவான்.  (ஆதியாகமம்  49:20)

aasearudaiya  aagaaram  kozhumaiyaayirukkum;  raajaakka'lukku  vea'ndiya  rusivarkkangga'lai  avan  tharuvaan.  (aathiyaagamam  49:20)

நப்தலி  விடுதலைபெற்ற  பெண்மான்;  இன்பமான  வசனங்களை  வசனிப்பான்.  (ஆதியாகமம்  49:21)

napthali  viduthalaipet’ra  pe'nmaan;  inbamaana  vasanangga'lai  vasanippaan.  (aathiyaagamam  49:21)

யோசேப்பு  கனிதரும்  செடி;  அவன்  நீர்  ஊற்றண்டையிலுள்ள  கனிதரும்  செடி;  அதின்  கொடிகள்  சுவரின்மேல்  படரும்.  (ஆதியாகமம்  49:22)

yoaseappu  kanitharum  sedi;  avan  neer  oot’ra'ndaiyilu'l'la  kanitharum  sedi;  athin  kodiga'l  suvarinmeal  padarum.  (aathiyaagamam  49:22)

வில்வீரர்  அவனை  மனமடிவாக்கி,  அவன்மேல்  எய்து,  அவனைப்  பகைத்தார்கள்.  (ஆதியாகமம்  49:23)

vilveerar  avanai  manamadivaakki,  avanmeal  eythu,  avanaip  pagaiththaarga'l.  (aathiyaagamam  49:23)

ஆனாலும்,  அவனுடைய  வில்  உறுதியாய்  நின்றது;  அவன்  புயங்கள்  யாக்கோபுடைய  வல்லவரின்  கரங்களால்  பலத்தன;  இதினால்  அவன்  மேய்ப்பனும்  இஸ்ரவேலின்  கன்மலையும்  ஆனான்.  (ஆதியாகமம்  49:24)

aanaalum,  avanudaiya  vil  u’ruthiyaay  nin’rathu;  avan  puyangga'l  yaakkoabudaiya  vallavarin  karangga'laal  balaththana;  ithinaal  avan  meayppanum  isravealin  kanmalaiyum  aanaan.  (aathiyaagamam  49:24)

உன்  தகப்பனுடைய  தேவனாலே  அப்படியாயிற்று,  அவர்  உனக்குத்  துணையாயிருப்பார்;  சர்வவல்லவராலே  அப்படியாயிற்று,  அவர்  உயர  வானத்திலிருந்து  உண்டாகும்  ஆசீர்வாதங்களினாலும்,  கீழே  ஆழத்தில்  உண்டாகும்  ஆசீர்வாதங்களினாலும்,  ஸ்தனங்களுக்கும்  கர்ப்பங்களுக்கும்  உரிய  ஆசீர்வாதங்களினாலும்  உன்னை  ஆசீர்வதிப்பார்.  (ஆதியாகமம்  49:25)

un  thagappanudaiya  theavanaalea  appadiyaayit’ru,  avar  unakkuth  thu'naiyaayiruppaar;  sarvavallavaraalea  appadiyaayit’ru,  avar  uyara  vaanaththilirunthu  u'ndaagum  aaseervaathangga'linaalum,  keezhea  aazhaththil  u'ndaagum  aaseervaathangga'linaalum,  sthanangga'lukkum  karppangga'lukkum  uriya  aaseervaathangga'linaalum  unnai  aaseervathippaar.  (aathiyaagamam  49:25)

உன்  தகப்பனுடைய  ஆசீர்வாதங்கள்  என்  பிதாக்களுடைய  ஆசீர்வாதங்களுக்கு  மேற்பட்டதாயிருந்து,  நித்திய  பர்வதங்களின்  முடிவுமட்டும்  எட்டுகின்றன;  அவைகள்  யோசேப்புடைய  சிரசின்மேலும்,  தன்  சகோதரரில்  விசேஷித்தவனுடைய  உச்சந்தலையின்மேலும்  வருவதாக.  (ஆதியாகமம்  49:26)

un  thagappanudaiya  aaseervaathangga'l  en  pithaakka'ludaiya  aaseervaathangga'lukku  mea’rpattathaayirunthu,  niththiya  parvathangga'lin  mudivumattum  ettugin’rana;  avaiga'l  yoaseappudaiya  sirasinmealum,  than  sagoathararil  viseashiththavanudaiya  uchchanthalaiyinmealum  varuvathaaga.  (aathiyaagamam  49:26)

பென்யமீன்  பீறுகிற  ஓநாய்;  காலையில்  தன்  இரையைப்  பட்சிப்பான்,  மாலையில்  தான்  கொள்ளையிட்டதைப்  பங்கிடுவான்  என்றான்.  (ஆதியாகமம்  49:27)

benyameen  pee’rugi’ra  oanaay;  kaalaiyil  than  iraiyaip  padchippaan,  maalaiyil  thaan  ko'l'laiyittathaip  panggiduvaan  en’raan.  (aathiyaagamam  49:27)

இவர்கள்  எல்லாரும்  இஸ்ரவேலின்  பன்னிரண்டு  கோத்திரத்தார்;  அவர்களுடைய  தகப்பன்  அவர்களை  ஆசீர்வதிக்கையில்,  அவர்களுக்குச்  சொன்னது  இதுதான்;  அவனவனுக்குரிய  ஆசீர்வாதம்  சொல்லி  அவனவனை  ஆசீர்வதித்தான்.  (ஆதியாகமம்  49:28)

ivarga'l  ellaarum  isravealin  pannira'ndu  koaththiraththaar;  avarga'ludaiya  thagappan  avarga'lai  aaseervathikkaiyil,  avarga'lukkuch  sonnathu  ithuthaan;  avanavanukkuriya  aaseervaatham  solli  avanavanai  aaseervathiththaan.  (aathiyaagamam  49:28)

பின்னும்  அவன்  அவர்களை  நோக்கி:  நான்  என்  ஜனத்தாரோடே  சேர்க்கப்படப்போகிறேன்;  ஏத்தியனான  எப்பெரோனின்  நிலத்திலுள்ள  குகையிலே  என்னை  என்  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணுங்கள்  என்று  கட்டளையிட்டு;  (ஆதியாகமம்  49:29)

pinnum  avan  avarga'lai  noakki:  naan  en  janaththaaroadea  searkkappadappoagi’rean;  eaththiyanaana  epperoanin  nilaththilu'l'la  kugaiyilea  ennai  en  pithaakka'la'ndaiyilea  adakkampa'n'nungga'l  en’ru  katta'laiyittu;  (aathiyaagamam  49:29)

அந்தக்  குகை  கானான்  தேசத்திலே  மம்ரேக்கு  எதிராக  மக்பேலா  என்னப்பட்ட  நிலத்தில்  இருக்கிறது;  அதை  நமக்குச்  சொந்தக்  கல்லறைப்  பூமியாயிருக்கும்படி,  ஆபிரகாம்  ஏத்தியனாகிய  எப்பெரோன்  கையில்  அதற்குரிய  நிலத்துடனே  வாங்கினார்.  (ஆதியாகமம்  49:30)

anthak  kugai  kaanaan  theasaththilea  mamreakku  ethiraaga  makpealaa  ennappatta  nilaththil  irukki’rathu;  athai  namakkuch  sonthak  kalla’raip  boomiyaayirukkumpadi,  aabirahaam  eaththiyanaagiya  epperoan  kaiyil  atha’rkuriya  nilaththudanea  vaangginaar.  (aathiyaagamam  49:30)

அங்கே  ஆபிரகாமையும்  அவர்  மனைவியாகிய  சாராளையும்  அடக்கம்பண்ணினார்கள்;  அங்கே  ஈசாக்கையும்  அவர்  மனைவியாகிய  ரெபெக்காளையும்  அடக்கம்பண்ணினார்கள்;  அங்கே  லேயாளையும்  அடக்கம்பண்ணினேன்.  (ஆதியாகமம்  49:31)

anggea  aabirahaamaiyum  avar  manaiviyaagiya  saaraa'laiyum  adakkampa'n'ninaarga'l;  anggea  eesaakkaiyum  avar  manaiviyaagiya  rebekkaa'laiyum  adakkampa'n'ninaarga'l;  anggea  leayaa'laiyum  adakkampa'n'ninean.  (aathiyaagamam  49:31)

அந்த  நிலமும்  அதில்  இருக்கிற  குகையும்  ஏத்தின்  புத்திரர்  கையில்  கொள்ளப்பட்டது  என்றான்.  (ஆதியாகமம்  49:32)

antha  nilamum  athil  irukki’ra  kugaiyum  eaththin  puththirar  kaiyil  ko'l'lappattathu  en’raan.  (aathiyaagamam  49:32)

யாக்கோபு  தன்  குமாரருக்குக்  கட்டளையிட்டு  முடிந்தபின்பு,  அவன்  தன்  கால்களைக்  கட்டிலின்மேல்  மடக்கிக்கொண்டு  ஜீவித்துப்போய்,  தன்  ஜனத்தாரோடே  சேர்க்கப்பட்டான்.  (ஆதியாகமம்  49:33)

yaakkoabu  than  kumaararukkuk  katta'laiyittu  mudinthapinbu,  avan  than  kaalga'laik  kattilinmeal  madakkikko'ndu  jeeviththuppoay,  than  janaththaaroadea  searkkappattaan.  (aathiyaagamam  49:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!