Tuesday, June 28, 2016

Aathiyaagamam 45 | ஆதியாகமம் 45 | Genesis 45

அப்பொழுது  யோசேப்பு  தன்  அருகே  நின்ற  எல்லாருக்கும்  முன்பாகத்  தன்னை  அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்:  யாவரையும்  என்னைவிட்டு  வெளியே  போகப்பண்ணுங்கள்  என்று  கட்டளையிட்டான்.  யோசேப்பு  தன்  சகோதரருக்குத்  தன்னை  வெளிப்படுத்துகையில்,  ஒருவரும்  அவன்  அருகில்  நிற்கவில்லை.  (ஆதியாகமம்  45:1)

appozhuthu  yoaseappu  than  arugea  nin’ra  ellaarukkum  munbaagath  thannai  adakkikko'ndirukkakkoodaamal:  yaavaraiyum  ennaivittu  ve'liyea  poagappa'n'nungga'l  en’ru  katta'laiyittaan.  yoaseappu  than  sagoathararukkuth  thannai  ve'lippaduththugaiyil,  oruvarum  avan  arugil  ni’rkavillai.  (aathiyaagamam  45:1)

அவன்  சத்தமிட்டு  அழுதான்;  அதை  எகிப்தியர்  கேட்டார்கள்,  பார்வோனின்  வீட்டாரும்  கேட்டார்கள்.  (ஆதியாகமம்  45:2)

avan  saththamittu  azhuthaan;  athai  egipthiyar  keattaarga'l,  paarvoanin  veettaarum  keattaarga'l.  (aathiyaagamam  45:2)

யோசேப்பு  தன்  சகோதரரைப்  பார்த்து:  நான்  யோசேப்பு;  என்  தகப்பனார்  இன்னும்  உயிரோடே  இருக்கிறாரா  என்றான்.  அவனுடைய  சகோதரர்  அவனுக்கு  முன்பாகக்  கலக்கமுற்றிருந்ததினாலே,  அவனுக்கு  உத்தரம்  சொல்லக்கூடாமல்  இருந்தார்கள்.  (ஆதியாகமம்  45:3)

yoaseappu  than  sagoathararaip  paarththu:  naan  yoaseappu;  en  thagappanaar  innum  uyiroadea  irukki’raaraa  en’raan.  avanudaiya  sagoatharar  avanukku  munbaagak  kalakkamut’rirunthathinaalea,  avanukku  uththaram  sollakkoodaamal  irunthaarga'l.  (aathiyaagamam  45:3)

அப்பொழுது  யோசேப்பு  தன்  சகோதரரை  நோக்கி:  என்  கிட்ட  வாருங்கள்  என்றான்.  அவர்கள்  கிட்டப்போனார்கள்;  அப்பொழுது  அவன்:  நீங்கள்  எகிப்துக்குப்  போகிறவர்களிடத்தில்  விற்றுப்போட்ட  உங்கள்  சகோதரனாகிய  யோசேப்பு  நான்தான்.  (ஆதியாகமம்  45:4)

appozhuthu  yoaseappu  than  sagoathararai  noakki:  en  kitta  vaarungga'l  en’raan.  avarga'l  kittappoanaarga'l;  appozhuthu  avan:  neengga'l  egipthukkup  poagi’ravarga'lidaththil  vit’ruppoatta  ungga'l  sagoatharanaagiya  yoaseappu  naanthaan.  (aathiyaagamam  45:4)

என்னை  இவ்விடத்தில்  வரும்படி  விற்றுப்போட்டதினால்,  நீங்கள்  சஞ்சலப்படவேண்டாம்;  அது  உங்களுக்கு  விசனமாயிருக்கவும்  வேண்டாம்;  ஜீவரட்சணை  செய்யும்படிக்குத்  தேவன்  என்னை  உங்களுக்கு  முன்னே  அனுப்பினார்.  (ஆதியாகமம்  45:5)

ennai  ivvidaththil  varumpadi  vit’ruppoattathinaal,  neengga'l  sagnchalappadavea'ndaam;  athu  ungga'lukku  visanamaayirukkavum  vea'ndaam;  jeevaradcha'nai  seyyumpadikkuth  theavan  ennai  ungga'lukku  munnea  anuppinaar.  (aathiyaagamam  45:5)

தேசத்தில்  இப்பொழுது  இரண்டு  வருஷமாகப்  பஞ்சம்  உண்டாயிருக்கிறது;  இன்னும்  ஐந்து  வருஷம்  உழவும்  அறுப்பும்  இல்லாமல்  பஞ்சம்  இருக்கும்.  (ஆதியாகமம்  45:6)

theasaththil  ippozhuthu  ira'ndu  varushamaagap  pagncham  u'ndaayirukki’rathu;  innum  ainthu  varusham  uzhavum  a’ruppum  illaamal  pagncham  irukkum.  (aathiyaagamam  45:6)

பூமியிலே  உங்கள்  வம்சம்  ஒழியாமலிருக்க  உங்களை  ஆதரிக்கிறதற்காகவும்,  பெரிய  ரட்சிப்பினால்  உங்களை  உயிரோடே  காப்பதற்காகவும்  தேவன்  என்னை  உங்களுக்கு  முன்னமே  அனுப்பினார்.  (ஆதியாகமம்  45:7)

boomiyilea  ungga'l  vamsam  ozhiyaamalirukka  ungga'lai  aatharikki’ratha’rkaagavum,  periya  radchippinaal  ungga'lai  uyiroadea  kaappatha’rkaagavum  theavan  ennai  ungga'lukku  munnamea  anuppinaar.  (aathiyaagamam  45:7)

ஆதலால்  நீங்கள்  அல்ல,  தேவனே  என்னை  இவ்விடத்துக்கு  அனுப்பி,  என்னைப்  பார்வோனுக்குத்  தகப்பனாகவும்,  அவர்  குடும்பம்  அனைத்திற்கும்  கர்த்தனாகவும்,  எகிப்துதேசம்  முழுதுக்கும்  அதிபதியாகவும்  வைத்தார்.  (ஆதியாகமம்  45:8)

aathalaal  neengga'l  alla,  theavanea  ennai  ivvidaththukku  anuppi,  ennaip  paarvoanukkuth  thagappanaagavum,  avar  kudumbam  anaiththi’rkum  karththanaagavum,  egipthutheasam  muzhuthukkum  athibathiyaagavum  vaiththaar.  (aathiyaagamam  45:8)

நீங்கள்  சீக்கிரமாய்  என்  தகப்பனிடத்தில்  போய்:  தேவன்  என்னை  எகிப்து  தேசம்  முழுதுக்கும்  அதிபதியாக  வைத்தார்;  என்னிடத்தில்  வாரும்,  தாமதிக்கவேண்டாம்.  (ஆதியாகமம்  45:9)

neengga'l  seekkiramaay  en  thagappanidaththil  poay:  theavan  ennai  egipthu  theasam  muzhuthukkum  athibathiyaaga  vaiththaar;  ennidaththil  vaarum,  thaamathikkavea'ndaam.  (aathiyaagamam  45:9)

நீரும்,  உம்முடைய  பிள்ளைகளும்,  அவர்களுடைய  பிள்ளைகளும்,  உம்முடைய  ஆடுமாடுகளோடும்  உமக்கு  உண்டாயிருக்கிற  யாவற்றோடும்  கோசேன்  நாட்டில்  வாசம்பண்ணி  என்  சமீபத்தில்  இருக்கலாம்.  (ஆதியாகமம்  45:10)

neerum,  ummudaiya  pi'l'laiga'lum,  avarga'ludaiya  pi'l'laiga'lum,  ummudaiya  aadumaaduga'loadum  umakku  u'ndaayirukki’ra  yaavat’roadum  koasean  naattil  vaasampa'n'ni  en  sameebaththil  irukkalaam.  (aathiyaagamam  45:10)

உமக்கும்  உம்முடைய  குடும்பத்தாருக்கும்  உமக்கு  இருக்கிற  யாவற்றிற்கும்  வறுமை  வராதபடிக்கு,  அங்கே  உம்மைப்  பராமரிப்பேன்;  இன்னும்  ஐந்து  வருஷம்  பஞ்சம்  இருக்கும்  என்று,  உம்முடைய  குமாரனாகிய  யோசேப்பு  சொல்லச்சொன்னான்  என்று  சொல்லுங்கள்.  (ஆதியாகமம்  45:11)

umakkum  ummudaiya  kudumbaththaarukkum  umakku  irukki’ra  yaavat’ri’rkum  va’rumai  varaathapadikku,  anggea  ummaip  paraamarippean;  innum  ainthu  varusham  pagncham  irukkum  en’ru,  ummudaiya  kumaaranaagiya  yoaseappu  sollachsonnaan  en’ru  sollungga'l.  (aathiyaagamam  45:11)

இதோ,  உங்களோடே  பேசுகிற  வாய்  என்  வாய்தான்  என்பதை  உங்கள்  கண்களும்  என்  தம்பியாகிய  பென்யமீனின்  கண்களும்  காண்கிறதே.  (ஆதியாகமம்  45:12)

ithoa,  ungga'loadea  peasugi’ra  vaay  en  vaaythaan  enbathai  ungga'l  ka'nga'lum  en  thambiyaagiya  benyameenin  ka'nga'lum  kaa'ngi’rathea.  (aathiyaagamam  45:12)

எகிப்திலே  எனக்கு  உண்டாயிருக்கிற  சகல  மகிமையையும்,  நீங்கள்  கண்ட  யாவையும்  என்  தகப்பனுக்கு  அறிவித்து,  அவர்  சீக்கிரமாய்  இவ்விடத்துக்கு  வரும்படி  செய்யுங்கள்  என்று  சொல்லி;  (ஆதியாகமம்  45:13)

egipthilea  enakku  u'ndaayirukki’ra  sagala  magimaiyaiyum,  neengga'l  ka'nda  yaavaiyum  en  thagappanukku  a’riviththu,  avar  seekkiramaay  ivvidaththukku  varumpadi  seyyungga'l  en’ru  solli;  (aathiyaagamam  45:13)

தன்  தம்பியாகிய  பென்யமீனின்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு  அழுதான்;  பென்யமீனும்  அவன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு  அழுதான்.  (ஆதியாகமம்  45:14)

than  thambiyaagiya  benyameenin  kazhuththaik  kattikko'ndu  azhuthaan;  benyameenum  avan  kazhuththaik  kattikko'ndu  azhuthaan.  (aathiyaagamam  45:14)

பின்பு  தன்  சகோதரர்  யாவரையும்  முத்தஞ்செய்து,  அவர்களையும்  கட்டிக்கொண்டு  அழுதான்.  அதற்குப்பின்  அவன்  சகோதரர்  அவனோடே  சம்பாஷித்தார்கள்.  (ஆதியாகமம்  45:15)

pinbu  than  sagoatharar  yaavaraiyum  muththagnseythu,  avarga'laiyum  kattikko'ndu  azhuthaan.  atha’rkuppin  avan  sagoatharar  avanoadea  sambaashiththaarga'l.  (aathiyaagamam  45:15)

யோசேப்பின்  சகோதரர்  வந்தார்கள்  என்கிற  சமாசாரம்  பார்வோன்  அரமனையில்  பிரசித்தமானபோது,  பார்வோனும்  அவனுடைய  ஊழியக்காரரும்  சந்தோஷம்  அடைந்தார்கள்.  (ஆதியாகமம்  45:16)

yoaseappin  sagoatharar  vanthaarga'l  engi’ra  samaasaaram  paarvoan  aramanaiyil  pirasiththamaanapoathu,  paarvoanum  avanudaiya  oozhiyakkaararum  santhoasham  adainthaarga'l.  (aathiyaagamam  45:16)

பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  நீ  உன்  சகோதரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உங்கள்  கழுதைகளின்மேல்  பொதியேற்றிக்கொண்டு  புறப்பட்டு,  கானான்தேசத்துக்குப்  போய்,  (ஆதியாகமம்  45:17)

paarvoan  yoaseappai  noakki:  nee  un  sagoathararoadea  sollavea'ndiyathu  ennaven’raal:  ungga'l  kazhuthaiga'linmeal  pothiyeat’rikko'ndu  pu’rappattu,  kaanaantheasaththukkup  poay,  (aathiyaagamam  45:17)

உங்கள்  தகப்பனையும்  உங்கள்  குடும்பத்தாரையும்  கூட்டிக்கொண்டு,  என்னிடத்தில்  வாருங்கள்,  நான்  உங்களுக்கு  எகிப்துதேசத்தின்  நன்மையைத்  தருவேன்;  தேசத்தின்  கொழுமையைச்  சாப்பிடுவீர்கள்.  (ஆதியாகமம்  45:18)

ungga'l  thagappanaiyum  ungga'l  kudumbaththaaraiyum  koottikko'ndu,  ennidaththil  vaarungga'l,  naan  ungga'lukku  egipthutheasaththin  nanmaiyaith  tharuvean;  theasaththin  kozhumaiyaich  saappiduveerga'l.  (aathiyaagamam  45:18)

நீங்கள்  உங்கள்  குழந்தைகளுக்காகவும்  உங்கள்  மனைவிகளுக்காகவும்  வண்டிகளை  எகிப்துதேசத்திலிருந்து  கொண்டுபோய்,  அவர்களையும்  உங்கள்  தகப்பனுடனே  ஏற்றிக்கொண்டுவாருங்கள்.  (ஆதியாகமம்  45:19)

neengga'l  ungga'l  kuzhanthaiga'lukkaagavum  ungga'l  manaiviga'lukkaagavum  va'ndiga'lai  egipthutheasaththilirunthu  ko'ndupoay,  avarga'laiyum  ungga'l  thagappanudanea  eat’rikko'nduvaarungga'l.  (aathiyaagamam  45:19)

உங்கள்  தட்டுமுட்டுகளைக்குறித்துக்  கவலைப்படவேண்டாம்;  எகிப்துதேசமெங்குமுள்ள  நன்மை  உங்களுடையதாயிருக்கும்  என்று  சொல்லச்சொல்லி,  உனக்கு  நான்  இட்ட  கட்டளைப்படியே  செய்  என்றான்.  (ஆதியாகமம்  45:20)

ungga'l  thattumuttuga'laikku’riththuk  kavalaippadavea'ndaam;  egipthutheasamenggumu'l'la  nanmai  ungga'ludaiyathaayirukkum  en’ru  sollachsolli,  unakku  naan  itta  katta'laippadiyea  sey  en’raan.  (aathiyaagamam  45:20)

இஸ்ரவேலின்  குமாரர்  அப்படியே  செய்தார்கள்.  யோசேப்பு  பார்வோனுடைய  கட்டளையின்படியே  அவர்களுக்கு  வண்டிகளைக்  கொடுத்ததுமன்றி,  வழிக்கு  ஆகாரத்தையும்,  (ஆதியாகமம்  45:21)

isravealin  kumaarar  appadiyea  seythaarga'l.  yoaseappu  paarvoanudaiya  katta'laiyinpadiyea  avarga'lukku  va'ndiga'laik  koduththathuman’ri,  vazhikku  aagaaraththaiyum,  (aathiyaagamam  45:21)

அவர்களில்  ஒவ்வொருவனுக்கும்  மாற்று  வஸ்திரங்களையும்  கொடுத்தான்;  பென்யமீனுக்கோ  முந்நூறு  வெள்ளிக்காசையும்  ஐந்து  மாற்று  வஸ்திரங்களையும்  கொடுத்தான்.  (ஆதியாகமம்  45:22)

avarga'lil  ovvoruvanukkum  maat’ru  vasthirangga'laiyum  koduththaan;  benyameenukkoa  munnoo’ru  ve'l'likkaasaiyum  ainthu  maat’ru  vasthirangga'laiyum  koduththaan.  (aathiyaagamam  45:22)

அப்படியே  தன்  தகப்பனுக்குப்  பத்துக்  கழுதைகளின்மேல்  எகிப்தின்  உச்சிதமான  பதார்த்தங்களும்,  பத்துக்  கோளிகைக்  கழுதைகளின்மேல்  தன்  தகப்பனுக்காக  வழிக்குத்  தானியமும்  அப்பமும்  மற்றத்  தின்பண்டங்களும்  ஏற்றி  அனுப்பினான்.  (ஆதியாகமம்  45:23)

appadiyea  than  thagappanukkup  paththuk  kazhuthaiga'linmeal  egipthin  uchchithamaana  pathaarththangga'lum,  paththuk  koa'ligaik  kazhuthaiga'linmeal  than  thagappanukkaaga  vazhikkuth  thaaniyamum  appamum  mat’rath  thinpa'ndangga'lum  eat’ri  anuppinaan.  (aathiyaagamam  45:23)

மேலும்,  நீங்கள்  போகும்  வழியிலே  சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள்  என்று  அவன்  தன்  சகோதரருக்குச்  சொல்லி  அனுப்பினான்;  அவர்கள்  புறப்பட்டுப்போனார்கள்.  (ஆதியாகமம்  45:24)

mealum,  neengga'l  poagum  vazhiyilea  sa'ndaipa'n'nikko'l'laathirungga'l  en’ru  avan  than  sagoathararukkuch  solli  anuppinaan;  avarga'l  pu’rappattuppoanaarga'l.  (aathiyaagamam  45:24)

அவர்கள்  எகிப்திலிருந்து  போய்,  கானான்தேசத்திலே  தங்கள்  தகப்பனாகிய  யாக்கோபினிடத்தில்  வந்து:  (ஆதியாகமம்  45:25)

avarga'l  egipthilirunthu  poay,  kaanaantheasaththilea  thangga'l  thagappanaagiya  yaakkoabinidaththil  vanthu:  (aathiyaagamam  45:25)

யோசேப்பு  உயிரோடிருக்கிறான்,  அவன்  எகிப்துதேசத்துக்கெல்லாம்  அதிபதியாயிருக்கிறான்  என்று  அவனுக்கு  அறிவித்தார்கள்.  அவன்  இருதயம்  மூர்ச்சை  அடைந்தது;  அவன்  அவர்களை  நம்பவில்லை.  (ஆதியாகமம்  45:26)

yoaseappu  uyiroadirukki’raan,  avan  egipthutheasaththukkellaam  athibathiyaayirukki’raan  en’ru  avanukku  a’riviththaarga'l.  avan  iruthayam  moorchchai  adainthathu;  avan  avarga'lai  nambavillai.  (aathiyaagamam  45:26)

அவர்கள்  யோசேப்பு  தங்களுடனே  சொன்ன  வார்த்தைகள்  யாவையும்  அவனுக்குச்  சொன்னபோதும்,  தன்னை  ஏற்றிக்கொண்டு  போகும்படி  யோசேப்பு  அனுப்பின  வண்டிகளை  அவன்  கண்டபோதும்,  அவர்களுடைய  தகப்பனாகிய  யாக்கோபின்  ஆவி  உயிர்த்தது.  (ஆதியாகமம்  45:27)

avarga'l  yoaseappu  thangga'ludanea  sonna  vaarththaiga'l  yaavaiyum  avanukkuch  sonnapoathum,  thannai  eat’rikko'ndu  poagumpadi  yoaseappu  anuppina  va'ndiga'lai  avan  ka'ndapoathum,  avarga'ludaiya  thagappanaagiya  yaakkoabin  aavi  uyirththathu.  (aathiyaagamam  45:27)

அப்பொழுது  இஸ்ரவேல்:  என்  குமாரனாகிய  யோசேப்பு  இன்னும்  உயிரோடிருக்கிறானே,  இது  போதும்;  நான்  மரணமடையுமுன்னே  போய்  அவனைப்  பார்ப்பேன்  என்றான்.  (ஆதியாகமம்  45:28)

appozhuthu  israveal:  en  kumaaranaagiya  yoaseappu  innum  uyiroadirukki’raanea,  ithu  poathum;  naan  mara'namadaiyumunnea  poay  avanaip  paarppean  en’raan.  (aathiyaagamam  45:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!