Tuesday, June 28, 2016

Aathiyaagamam 44 | ஆதியாகமம் 44 | Genesis 44


பின்பு,  அவன்  தன்  வீட்டு  விசாரணைக்காரனை  நோக்கி:  நீ  இந்த  மனிதருடைய  சாக்குகளை  அவர்கள்  ஏற்றிக்கொண்டுபோகத்தக்க  பாரமாய்த்  தானியத்தினாலே  நிரப்பி,  அவனவன்  பணத்தை  அவனவன்  சாக்கின்  வாயிலே  போட்டு,  (ஆதியாகமம்  44:1)

pinbu,  avan  than  veettu  visaara'naikkaaranai  noakki:  nee  intha  manitharudaiya  saakkuga'lai  avarga'l  eat’rikko'ndupoagaththakka  baaramaayth  thaaniyaththinaalea  nirappi,  avanavan  pa'naththai  avanavan  saakkin  vaayilea  poattu,  (aathiyaagamam  44:1)

இளையவனுடைய  சாக்கின்  வாயிலே  வெள்ளிப்பாத்திரமாகிய  என்  பானபாத்திரத்தையும்  தானியத்துக்கு  அவன்  கொடுத்த  பணத்தையும்  போடு  என்று  கட்டளையிட்டான்;  யோசேப்பு  சொன்னபடியே  அவன்  செய்தான்.  (ஆதியாகமம்  44:2)

i'laiyavanudaiya  saakkin  vaayilea  ve'l'lippaaththiramaagiya  en  baanapaaththiraththaiyum  thaaniyaththukku  avan  koduththa  pa'naththaiyum  poadu  en’ru  katta'laiyittaan;  yoaseappu  sonnapadiyea  avan  seythaan.  (aathiyaagamam  44:2)

அதிகாலையிலே  அந்த  மனிதர்கள்  தங்கள்  கழுதைகளை  ஓட்டிக்கொண்டு  போகும்படி  அனுப்பிவிடப்பட்டார்கள்.  (ஆதியாகமம்  44:3)

athikaalaiyilea  antha  manitharga'l  thangga'l  kazhuthaiga'lai  oattikko'ndu  poagumpadi  anuppividappattaarga'l.  (aathiyaagamam  44:3)

அவர்கள்  பட்டணத்தை  விட்டுப்  புறப்பட்டு,  வெகுதூரம்  போவதற்குமுன்னே,  யோசேப்பு  தன்  வீட்டு  விசாரணைக்காரனை  நோக்கி:  நீ  புறப்பட்டுப்போய்,  அந்த  மனிதரைப்  பின்தொடர்ந்து,  அவர்களைப்  பிடித்து:  நீங்கள்  நன்மைக்குத்  தீமை  செய்தது  என்ன?  (ஆதியாகமம்  44:4)

avarga'l  patta'naththai  vittup  pu’rappattu,  veguthooram  poavatha’rkumunnea,  yoaseappu  than  veettu  visaara'naikkaaranai  noakki:  nee  pu’rappattuppoay,  antha  manitharaip  pinthodarnthu,  avarga'laip  pidiththu:  neengga'l  nanmaikkuth  theemai  seythathu  enna?  (aathiyaagamam  44:4)

அது  என்  எஜமான்  பானம்பண்ணுகிற  பாத்திரம்  அல்லவா?  அது  போனவகை  ஞானதிருஷ்டியால்  அவருக்குத்  தெரியாதா?  நீங்கள்  செய்தது  தகாதகாரியம்  என்று  அவர்களோடே  சொல்  என்றான்.  (ஆதியாகமம்  44:5)

athu  en  ejamaan  baanampa'n'nugi’ra  paaththiram  allavaa?  athu  poanavagai  gnaanathirushdiyaal  avarukkuth  theriyaathaa?  neengga'l  seythathu  thagaathakaariyam  en’ru  avarga'loadea  sol  en’raan.  (aathiyaagamam  44:5)

அவன்  அவர்களைத்  தொடர்ந்து  பிடித்து,  தன்னிடத்தில்  சொல்லியிருந்த  வார்த்தைகளை  அவர்களுக்குச்  சொன்னான்.  (ஆதியாகமம்  44:6)

avan  avarga'laith  thodarnthu  pidiththu,  thannidaththil  solliyiruntha  vaarththaiga'lai  avarga'lukkuch  sonnaan.  (aathiyaagamam  44:6)

அதற்கு  அவர்கள்:  எங்கள்  ஆண்டவன்  இப்படிப்பட்ட  வார்த்தைகளைச்  சொல்லுகிறது  என்ன?  இப்படிப்பட்ட  காரியத்துக்கும்  உம்முடைய  அடியாராகிய  எங்களுக்கும்  வெகுதூரம்.  (ஆதியாகமம்  44:7)

atha’rku  avarga'l:  engga'l  aa'ndavan  ippadippatta  vaarththaiga'laich  sollugi’rathu  enna?  ippadippatta  kaariyaththukkum  ummudaiya  adiyaaraagiya  engga'lukkum  veguthooram.  (aathiyaagamam  44:7)

எங்கள்  சாக்குகளின்  வாயிலே  நாங்கள்  கண்ட  பணத்தைக்  கானான்தேசத்திலிருந்து  திரும்ப  உம்மிடத்துக்குக்  கொண்டுவந்தோமே;  நாங்கள்  உம்முடைய  எஜமானின்  வீட்டிலிருந்து  வெள்ளியையாகிலும்  பொன்னையாகிலும்  திருடிக்கொண்டு  போவோமா?  (ஆதியாகமம்  44:8)

engga'l  saakkuga'lin  vaayilea  naangga'l  ka'nda  pa'naththaik  kaanaantheasaththilirunthu  thirumba  ummidaththukkuk  ko'nduvanthoamea;  naangga'l  ummudaiya  ejamaanin  veettilirunthu  ve'l'liyaiyaagilum  ponnaiyaagilum  thirudikko'ndu  poavoamaa?  (aathiyaagamam  44:8)

உம்முடைய  அடியாருக்குள்ளே  அது  எவனிடத்தில்  காணப்படுமோ  அவன்  கொலையுண்கக்கடவன்;  நாங்களும்  எங்கள்  ஆண்டவனுக்கு  அடிமைகளாவோம்  என்றார்கள்.  (ஆதியாகமம்  44:9)

ummudaiya  adiyaarukku'l'lea  athu  evanidaththil  kaa'nappadumoa  avan  kolaiyu'ngakkadavan;  naangga'lum  engga'l  aa'ndavanukku  adimaiga'laavoam  en’raarga'l.  (aathiyaagamam  44:9)

அதற்கு  அவன்:  நீங்கள்  சொன்னபடியே  ஆகட்டும்;  எவனிடத்தில்  அது  காணப்படுமோ,  அவன்  எனக்கு  அடிமையாவான்;  நீங்கள்  குற்றமற்றிருப்பீர்கள்  என்றான்.  (ஆதியாகமம்  44:10)

atha’rku  avan:  neengga'l  sonnapadiyea  aagattum;  evanidaththil  athu  kaa'nappadumoa,  avan  enakku  adimaiyaavaan;  neengga'l  kut’ramat’riruppeerga'l  en’raan.  (aathiyaagamam  44:10)

அப்பொழுது  அவர்கள்  துரிதமாய்  அவனவன்  தன்தன்  சாக்கைத்  தரையிலே  இறக்கி,  தங்கள்  சாக்குகளைத்  திறந்து  வைத்தார்கள்.  (ஆதியாகமம்  44:11)

appozhuthu  avarga'l  thurithamaay  avanavan  thanthan  saakkaith  tharaiyilea  i’rakki,  thangga'l  saakkuga'laith  thi’ranthu  vaiththaarga'l.  (aathiyaagamam  44:11)

மூத்தவன்  சாக்குமுதல்  இளையவன்  சாக்குமட்டும்  அவன்  சோதிக்கும்போது,  அந்தப்  பாத்திரம்  பென்யமீனுடைய  சாக்கிலே  கண்டுபிடிக்கப்பட்டது.  (ஆதியாகமம்  44:12)

mooththavan  saakkumuthal  i'laiyavan  saakkumattum  avan  soathikkumpoathu,  anthap  paaththiram  benyameenudaiya  saakkilea  ka'ndupidikkappattathu.  (aathiyaagamam  44:12)

அப்பொழுது  அவர்கள்  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  அவனவன்  கழுதையின்மேல்  பொதியை  ஏற்றிக்கொண்டு,  பட்டணத்திற்குத்  திரும்பினார்கள்.  (ஆதியாகமம்  44:13)

appozhuthu  avarga'l  thangga'l  vasthirangga'laik  kizhiththukko'ndu,  avanavan  kazhuthaiyinmeal  pothiyai  eat’rikko'ndu,  patta'naththi’rkuth  thirumbinaarga'l.  (aathiyaagamam  44:13)

யூதாவும்  அவன்  சகோதரரும்  யோசேப்பின்  வீட்டுக்குப்  போனார்கள்.  யோசேப்பு  அதுவரையும்  அங்கே  இருந்தான்;  அவனுக்கு  முன்பாகத்  தரையிலே  விழுந்தார்கள்.  (ஆதியாகமம்  44:14)

yoothaavum  avan  sagoathararum  yoaseappin  veettukkup  poanaarga'l.  yoaseappu  athuvaraiyum  anggea  irunthaan;  avanukku  munbaagath  tharaiyilea  vizhunthaarga'l.  (aathiyaagamam  44:14)

யோசேப்பு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  என்ன  காரியம்  செய்தீர்கள்?  என்னைப்போலொத்த  மனிதனுக்கு  ஞானதிருஷ்டியினால்  காரியம்  தெரியவரும்  என்று  அறியாமற்போனீர்களா  என்றான்.  (ஆதியாகமம்  44:15)

yoaseappu  avarga'lai  noakki:  neengga'l  enna  kaariyam  seytheerga'l?  ennaippoaloththa  manithanukku  gnaanathirushdiyinaal  kaariyam  theriyavarum  en’ru  a’riyaama’rpoaneerga'laa  en’raan.  (aathiyaagamam  44:15)

அதற்கு  யூதா:  என்  ஆண்டவனாகிய  உம்மிடத்தில்  நாங்கள்  என்ன  சொல்லுவோம்?  என்னத்தைப்  பேசுவோம்?  எதினாலே  எங்கள்  நீதியை  விளங்கப்பண்ணுவோம்?  உம்முடைய  அடியாரின்  அக்கிரமத்தை  தேவன்  விளங்கப்பண்ணினார்;  பாத்திரத்தை  வைத்திருக்கிறவனும்  நாங்களும்  என்  ஆண்டவனுக்கு  அடிமைகள்  என்றான்.  (ஆதியாகமம்  44:16)

atha’rku  yoothaa:  en  aa'ndavanaagiya  ummidaththil  naangga'l  enna  solluvoam?  ennaththaip  peasuvoam?  ethinaalea  engga'l  neethiyai  vi'langgappa'n'nuvoam?  ummudaiya  adiyaarin  akkiramaththai  theavan  vi'langgappa'n'ninaar;  paaththiraththai  vaiththirukki’ravanum  naangga'lum  en  aa'ndavanukku  adimaiga'l  en’raan.  (aathiyaagamam  44:16)

அதற்கு  அவன்:  அப்படிப்பட்ட  செய்கை  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  எவன்  வசத்தில்  பாத்திரம்  கண்டுபிடிக்கப்பட்டதோ,  அவனே  எனக்கு  அடிமையாயிருப்பான்;  நீங்களோ  சமாதானத்தோடே  உங்கள்  தகப்பனிடத்துக்குப்  போங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  44:17)

atha’rku  avan:  appadippatta  seygai  enakkuth  thooramaayiruppathaaga;  evan  vasaththil  paaththiram  ka'ndupidikkappattathoa,  avanea  enakku  adimaiyaayiruppaan;  neengga'loa  samaathaanaththoadea  ungga'l  thagappanidaththukkup  poangga'l  en’raan.  (aathiyaagamam  44:17)

அப்பொழுது  யூதா  அவனண்டையிலே  சேர்ந்து:  ஆ,  என்  ஆண்டவனே,  உமது  அடியேன்  உம்முடைய  செவிகள்  கேட்க  ஒரு  வார்த்தை  சொல்லுகிறேன்  கேட்பீராக;  அடியேன்மேல்  உமது  கோபம்  மூளாதிருப்பதாக;  நீர்  பார்வோனுக்கு  ஒப்பாயிருக்கிறீர்.  (ஆதியாகமம்  44:18)

appozhuthu  yoothaa  avana'ndaiyilea  searnthu:  aa,  en  aa'ndavanea,  umathu  adiyean  ummudaiya  seviga'l  keadka  oru  vaarththai  sollugi’rean  keadpeeraaga;  adiyeanmeal  umathu  koabam  moo'laathiruppathaaga;  neer  paarvoanukku  oppaayirukki’reer.  (aathiyaagamam  44:18)

உங்களுக்குத்  தகப்பனாவது  சகோதரனாவது  உண்டா  என்று  என்  ஆண்டவன்  உம்முடைய  அடியாரிடத்தில்  கேட்டீர்.  (ஆதியாகமம்  44:19)

ungga'lukkuth  thagappanaavathu  sagoatharanaavathu  u'ndaa  en’ru  en  aa'ndavan  ummudaiya  adiyaaridaththil  keatteer.  (aathiyaagamam  44:19)

அதற்கு  நாங்கள்:  எங்களுக்கு  முதிர்வயதுள்ள  தகப்பனாரும்,  அவருக்கு  முதிர்வயதிலே  பிறந்த  ஒரு  இளைஞனும்  உண்டு  என்றும்,  அவனுடைய  தமையன்  இறந்துபோனான்  என்றும்,  அவன்  ஒருவன்மாத்திரமே  அவனைப்  பெற்ற  தாயாருக்கு  இருப்பதினால்  தகப்பனார்  அவன்மேல்  பட்சமாயிருக்கிறார்  என்றும்  என்  ஆண்டவனுக்குச்  சொன்னோம்.  (ஆதியாகமம்  44:20)

atha’rku  naangga'l:  engga'lukku  muthirvayathu'l'la  thagappanaarum,  avarukku  muthirvayathilea  pi’rantha  oru  i'laignanum  u'ndu  en’rum,  avanudaiya  thamaiyan  i’ranthupoanaan  en’rum,  avan  oruvanmaaththiramea  avanaip  pet’ra  thaayaarukku  iruppathinaal  thagappanaar  avanmeal  padchamaayirukki’raar  en’rum  en  aa'ndavanukkuch  sonnoam.  (aathiyaagamam  44:20)

அப்பொழுது  நீர்:  அவனை  என்னிடத்துக்குக்  கொண்டுவாருங்கள்;  என்  கண்களினால்  அவனைப்  பார்க்கவேண்டும்  என்று  உமது  அடியாருக்குச்  சொன்னீர்.  (ஆதியாகமம்  44:21)

appozhuthu  neer:  avanai  ennidaththukkuk  ko'nduvaarungga'l;  en  ka'nga'linaal  avanaip  paarkkavea'ndum  en’ru  umathu  adiyaarukkuch  sonneer.  (aathiyaagamam  44:21)

நாங்கள்  ஆண்டவனை  நோக்கி:  அந்த  இளைஞன்  தன்  தகப்பனைவிட்டுப்  பிரியக்கூடாது,  பிரிந்தால்  அவர்  இறந்துபோவார்  என்று  சொன்னோம்.  (ஆதியாகமம்  44:22)

naangga'l  aa'ndavanai  noakki:  antha  i'laignan  than  thagappanaivittup  piriyakkoodaathu,  pirinthaal  avar  i’ranthupoavaar  en’ru  sonnoam.  (aathiyaagamam  44:22)

அதற்கு  நீர்:  உங்கள்  இளைய  சகோதரனைக்  கொண்டுவராவிட்டால்,  நீங்கள்  இனி  என்  முகத்தைக்  காண்பதில்லை  என்று  உமது  அடியாருக்குச்  சொன்னீர்.  (ஆதியாகமம்  44:23)

atha’rku  neer:  ungga'l  i'laiya  sagoatharanaik  ko'nduvaraavittaal,  neengga'l  ini  en  mugaththaik  kaa'nbathillai  en’ru  umathu  adiyaarukkuch  sonneer.  (aathiyaagamam  44:23)

நாங்கள்  உமது  அடியானாகிய  என்  தகப்பனாரிடத்துக்குப்  போனபோது,  என்  ஆண்டவனுடைய  வார்த்தைகளை  அவருக்கு  அறிவித்தோம்.  (ஆதியாகமம்  44:24)

naangga'l  umathu  adiyaanaagiya  en  thagappanaaridaththukkup  poanapoathu,  en  aa'ndavanudaiya  vaarththaiga'lai  avarukku  a’riviththoam.  (aathiyaagamam  44:24)

எங்கள்  தகப்பனார்  எங்களை  நோக்கி:  நீங்கள்  திரும்பப்போய்,  நமக்குக்  கொஞ்சம்  தானியம்  கொள்ளுங்கள்  என்று  சொன்னார்.  (ஆதியாகமம்  44:25)

engga'l  thagappanaar  engga'lai  noakki:  neengga'l  thirumbappoay,  namakkuk  kogncham  thaaniyam  ko'l'lungga'l  en’ru  sonnaar.  (aathiyaagamam  44:25)

அதற்கு:  நாங்கள்  போகக்கூடாது;  எங்கள்  இளைய  சகோதரன்  எங்களோடே  வந்தால்  போவோம்;  எங்கள்  இளைய  சகோதரன்  எங்களோடே  வராவிட்டால்,  நாங்கள்  அந்தப்  புருஷனுடைய  முகத்தைக்  காணக்கூடாது  என்றோம்.  (ஆதியாகமம்  44:26)

atha’rku:  naangga'l  poagakkoodaathu;  engga'l  i'laiya  sagoatharan  engga'loadea  vanthaal  poavoam;  engga'l  i'laiya  sagoatharan  engga'loadea  varaavittaal,  naangga'l  anthap  purushanudaiya  mugaththaik  kaa'nakkoodaathu  en’roam.  (aathiyaagamam  44:26)

அப்பொழுது  உம்முடைய  அடியானாகிய  என்  தகப்பனார்:  என்  மனைவி  எனக்கு  இரண்டு  பிள்ளைகளைப்  பெற்றாள்;  (ஆதியாகமம்  44:27)

appozhuthu  ummudaiya  adiyaanaagiya  en  thagappanaar:  en  manaivi  enakku  ira'ndu  pi'l'laiga'laip  pet’raa'l;  (aathiyaagamam  44:27)

அவர்களில்  ஒருவன்  என்னிடத்திலிருந்து  போய்விட்டான்,  அவன்  பீறுண்டுபோயிருப்பான்  என்றிருந்தேன்,  இதுவரைக்கும்  அவனைக்  காணாதிருக்கிறேன்,  இதெல்லாம்  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  (ஆதியாகமம்  44:28)

avarga'lil  oruvan  ennidaththilirunthu  poayvittaan,  avan  pee’ru'ndupoayiruppaan  en’rirunthean,  ithuvaraikkum  avanaik  kaa'naathirukki’rean,  ithellaam  neengga'l  a’rinthirukki’reerga'l.  (aathiyaagamam  44:28)

நீங்கள்  இவனையும்  என்னை  விட்டுப்  பிரித்து  அழைத்துப்போகுமிடத்தில்  இவனுக்கு  மோசம்  நேரிட்டால்,  என்  நரைமயிரை  வியாகுலத்தோடே  பாதாளத்தில்  இறங்கப்பண்ணுவீர்கள்  என்றார்.  (ஆதியாகமம்  44:29)

neengga'l  ivanaiyum  ennai  vittup  piriththu  azhaiththuppoagumidaththil  ivanukku  moasam  nearittaal,  en  naraimayirai  viyaagulaththoadea  paathaa'laththil  i’ranggappa'n'nuveerga'l  en’raar.  (aathiyaagamam  44:29)

ஆகையால்  இளையவனை  விட்டு,  நான்  என்  தகப்பனாகிய  உமது  அடியானிடத்துக்குப்  போனால்,  அவருடைய  ஜீவன்  இவனுடைய  ஜீவனோடே  ஒன்றாய்  இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,  (ஆதியாகமம்  44:30)

aagaiyaal  i'laiyavanai  vittu,  naan  en  thagappanaagiya  umathu  adiyaanidaththukkup  poanaal,  avarudaiya  jeevan  ivanudaiya  jeevanoadea  on’raay  i'naikkappattirukki’rapadiyinaal,  (aathiyaagamam  44:30)

அவர்  இளையவன்  வரவில்லை  என்று  அறிந்தமாத்திரத்தில்  இறந்துபோவார்;  இப்படி  உமது  அடியாராகிய  நாங்கள்  உமது  அடியானாகிய  எங்கள்  தகப்பனுடைய  நரைமயிரை  வியாகுலத்துடனே  பாதாளத்தில்  இறங்கப்பண்ணுவோம்.  (ஆதியாகமம்  44:31)

avar  i'laiyavan  varavillai  en’ru  a’rinthamaaththiraththil  i’ranthupoavaar;  ippadi  umathu  adiyaaraagiya  naangga'l  umathu  adiyaanaagiya  engga'l  thagappanudaiya  naraimayirai  viyaagulaththudanea  paathaa'laththil  i’ranggappa'n'nuvoam.  (aathiyaagamam  44:31)

இந்த  இளையவனுக்காக  உமது  அடியானாகிய  நான்  என்  தகப்பனுக்கு  உத்தரவாதி;  அன்றியும்,  நான்  இவனை  உம்மிடத்துக்குக்  கொண்டுவராவிட்டால்,  நான்  எந்நாளும்  உமக்கு  முன்பாகக்  குற்றவாளியாயிருப்பேன்  என்று  அவருக்குச்  சொல்லியிருக்கிறேன்.  (ஆதியாகமம்  44:32)

intha  i'laiyavanukkaaga  umathu  adiyaanaagiya  naan  en  thagappanukku  uththaravaathi;  an’riyum,  naan  ivanai  ummidaththukkuk  ko'nduvaraavittaal,  naan  ennaa'lum  umakku  munbaagak  kut’ravaa'liyaayiruppean  en’ru  avarukkuch  solliyirukki’rean.  (aathiyaagamam  44:32)

இப்படியிருக்க,  இளையவன்  தன்  சகோதரரோடேகூடப்  போகவிடும்படி  மன்றாடுகிறேன்;  உம்முடைய  அடியானாகிய  நான்  இளையவனுக்குப்  பதிலாக  இங்கே  என்  ஆண்டவனுக்கு  அடிமையாயிருக்கிறேன்.  (ஆதியாகமம்  44:33)

ippadiyirukka,  i'laiyavan  than  sagoathararoadeakoodap  poagavidumpadi  man’raadugi’rean;  ummudaiya  adiyaanaagiya  naan  i'laiyavanukkup  bathilaaga  inggea  en  aa'ndavanukku  adimaiyaayirukki’rean.  (aathiyaagamam  44:33)

இளையவனை  விட்டு,  எப்படி  என்  தகப்பனிடத்துக்குப்  போவேன்?  போனால்  என்  தகப்பனுக்கு  நேரிடும்  தீங்கை  நான்  எப்படிக்  காண்பேன்  என்றான்.  (ஆதியாகமம்  44:34)

i'laiyavanai  vittu,  eppadi  en  thagappanidaththukkup  poavean?  poanaal  en  thagappanukku  nearidum  theenggai  naan  eppadik  kaa'nbean  en’raan.  (aathiyaagamam  44:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!