Tuesday, June 28, 2016

Aathiyaagamam 43 | ஆதியாகமம் 43 | Genesis 43

தேசத்திலே  பஞ்சம்  கொடிதாயிருந்தது.  (ஆதியாகமம்  43:1)

theasaththilea  pagncham  kodithaayirunthathu.  (aathiyaagamam  43:1)

எகிப்திலிருந்து  அவர்கள்  கொண்டுவந்த  தானியம்  செலவழிந்தபோது,  அவர்கள்  தகப்பன்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  திரும்பப்  போய்,  நமக்குக்  கொஞ்சம்  தானியம்  வாங்கிக்கொண்டு  வாருங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  43:2)

egipthilirunthu  avarga'l  ko'nduvantha  thaaniyam  selavazhinthapoathu,  avarga'l  thagappan  avarga'lai  noakki:  neengga'l  thirumbap  poay,  namakkuk  kogncham  thaaniyam  vaanggikko'ndu  vaarungga'l  en’raan.  (aathiyaagamam  43:2)

அதற்கு  யூதா:  உங்கள்  சகோதரன்  உங்களோடேகூட  வராவிட்டால்,  நீங்கள்  என்  முகத்தைக்  காண்பதில்லை  என்று  அந்த  மனிதன்  எங்களுக்குச்  சத்தியமாய்ச்  சொன்னான்.  (ஆதியாகமம்  43:3)

atha’rku  yoothaa:  ungga'l  sagoatharan  ungga'loadeakooda  varaavittaal,  neengga'l  en  mugaththaik  kaa'nbathillai  en’ru  antha  manithan  engga'lukkuch  saththiyamaaych  sonnaan.  (aathiyaagamam  43:3)

எங்கள்  சகோதரனை  நீர்  எங்களோடேகூட  அனுப்பினால்,  நாங்கள்  போய்,  உமக்குத்  தானியம்  வாங்கிக்கொண்டு  வருவோம்.  (ஆதியாகமம்  43:4)

engga'l  sagoatharanai  neer  engga'loadeakooda  anuppinaal,  naangga'l  poay,  umakkuth  thaaniyam  vaanggikko'ndu  varuvoam.  (aathiyaagamam  43:4)

அனுப்பாவிட்டால்,  நாங்கள்  போகமாட்டோம்;  உங்கள்  சகோதரன்  உங்களோடேகூட  வராவிட்டால்,  நீங்கள்  என்  முகத்தைக்  காண்பதில்லை  என்று  அந்த  மனிதன்  எங்களோடே  சொல்லியிருக்கிறான்  என்றான்.  (ஆதியாகமம்  43:5)

anuppaavittaal,  naangga'l  poagamaattoam;  ungga'l  sagoatharan  ungga'loadeakooda  varaavittaal,  neengga'l  en  mugaththaik  kaa'nbathillai  en’ru  antha  manithan  engga'loadea  solliyirukki’raan  en’raan.  (aathiyaagamam  43:5)

அதற்கு  இஸ்ரவேல்:  உங்களுக்கு  இன்னும்  ஒரு  சகோதரன்  உண்டென்று  நீங்கள்  அந்த  மனிதனுக்குச்  சொல்லி,  ஏன்  எனக்கு  இந்தத்  துன்பத்தை  வருவித்தீர்கள்  என்றான்.  (ஆதியாகமம்  43:6)

atha’rku  israveal:  ungga'lukku  innum  oru  sagoatharan  u'nden’ru  neengga'l  antha  manithanukkuch  solli,  ean  enakku  inthath  thunbaththai  varuviththeerga'l  en’raan.  (aathiyaagamam  43:6)

அதற்கு  அவர்கள்:  அந்த  மனிதன்,  உங்கள்  தகப்பன்  இன்னும்  உயிரோடிருக்கிறாரா?  உங்களுக்கு  இன்னும்  ஒரு  சகோதரன்  உண்டா?  என்று  எங்களையும்  எங்கள்  வம்சத்தையும்  குறித்து  விபரமாய்  விசாரித்தான்;  அந்தக்  கேள்விகளுக்குத்  தக்கதாக  உள்ளபடி  அவனுக்குச்  சொன்னோம்;  உங்கள்  சகோதரனை  உங்களோடேகூட  இங்கே  கொண்டுவாருங்கள்  என்று  அவன்  சொல்லுவான்  என்பதை  நாங்கள்  அறிந்திருந்தோமா  என்றார்கள்.  (ஆதியாகமம்  43:7)

atha’rku  avarga'l:  antha  manithan,  ungga'l  thagappan  innum  uyiroadirukki’raaraa?  ungga'lukku  innum  oru  sagoatharan  u'ndaa?  en’ru  engga'laiyum  engga'l  vamsaththaiyum  ku’riththu  vibaramaay  visaariththaan;  anthak  kea'lviga'lukkuth  thakkathaaga  u'l'lapadi  avanukkuch  sonnoam;  ungga'l  sagoatharanai  ungga'loadeakooda  inggea  ko'nduvaarungga'l  en’ru  avan  solluvaan  enbathai  naangga'l  a’rinthirunthoamaa  en’raarga'l.  (aathiyaagamam  43:7)

பின்னும்,  யூதா  தன்  தகப்பனாகிய  இஸ்ரவேலை  நோக்கி:  நீரும்  நாங்களும்  எங்கள்  குழந்தைகளும்  சாகாமல்  உயிரோடிருக்கும்படி,  நாங்கள்  புறப்பட்டுப்போகிறோம்,  பிள்ளையாண்டானை  என்னோடே  அனுப்பும்.  (ஆதியாகமம்  43:8)

pinnum,  yoothaa  than  thagappanaagiya  isravealai  noakki:  neerum  naangga'lum  engga'l  kuzhanthaiga'lum  saagaamal  uyiroadirukkumpadi,  naangga'l  pu’rappattuppoagi’roam,  pi'l'laiyaa'ndaanai  ennoadea  anuppum.  (aathiyaagamam  43:8)

அவனுக்காக  நான்  உத்தரவாதம்பண்ணுவேன்;  அவனை  என்னிடத்திலே  கேளும்,  நான்  அவனை  உம்மிடத்தில்  கொண்டுவந்து,  உமக்கு  முன்பாக  நிறுத்தாமற்போனால்,  எந்நாளும்  அந்தக்  குற்றம்  என்மேல்  இருப்பதாக.  (ஆதியாகமம்  43:9)

avanukkaaga  naan  uththaravaathampa'n'nuvean;  avanai  ennidaththilea  kea'lum,  naan  avanai  ummidaththil  ko'nduvanthu,  umakku  munbaaga  ni’ruththaama’rpoanaal,  ennaa'lum  anthak  kut’ram  enmeal  iruppathaaga.  (aathiyaagamam  43:9)

நாங்கள்  தாமதியாதிருந்தோமானால்,  இதற்குள்ளே  இரண்டாந்தரம்  போய்த்  திரும்பிவந்திருப்போமே  என்றான்.  (ஆதியாகமம்  43:10)

naangga'l  thaamathiyaathirunthoamaanaal,  itha’rku'l'lea  ira'ndaantharam  poayth  thirumbivanthiruppoamea  en’raan.  (aathiyaagamam  43:10)

அதற்கு  அவர்கள்  தகப்பனாகிய  இஸ்ரவேல்:  அப்படியானால்,  ஒன்று  செய்யுங்கள்;  இந்தத்  தேசத்தின்  உச்சிதமான  வஸ்துக்களில்  கொஞ்சம்  பிசின்  தைலமும்,  கொஞ்சம்  தேனும்,  கந்தவர்க்கங்களும்,  வெள்ளைப்போளமும்,  தெரபிந்து  கொட்டைகளும்,  வாதுமைக்கொட்டைகளும்  உங்கள்  சாக்குகளில்  போட்டு,  அந்த  மனிதனுக்குக்  காணிக்கையாகக்  கொண்டுபோய்க்  கொடுங்கள்.  (ஆதியாகமம்  43:11)

atha’rku  avarga'l  thagappanaagiya  israveal:  appadiyaanaal,  on’ru  seyyungga'l;  inthath  theasaththin  uchchithamaana  vasthukka'lil  kogncham  pisin  thailamum,  kogncham  theanum,  kanthavarkkangga'lum,  ve'l'laippoa'lamum,  therapinthu  kottaiga'lum,  vaathumaikkottaiga'lum  ungga'l  saakkuga'lil  poattu,  antha  manithanukkuk  kaa'nikkaiyaagak  ko'ndupoayk  kodungga'l.  (aathiyaagamam  43:11)

பணத்தை  இரட்டிப்பாய்  உங்கள்  கைகளில்  கொண்டுபோங்கள்,  சாக்குகளின்  வாயிலே  திரும்பக்  கொண்டுவந்த  பணத்தையும்  கொண்டுபோங்கள்;  அது  கைப்பிசகாய்  வந்திருக்கும்.  (ஆதியாகமம்  43:12)

pa'naththai  irattippaay  ungga'l  kaiga'lil  ko'ndupoangga'l,  saakkuga'lin  vaayilea  thirumbak  ko'nduvantha  pa'naththaiyum  ko'ndupoangga'l;  athu  kaippisagaay  vanthirukkum.  (aathiyaagamam  43:12)

உங்கள்  சகோதரனையும்  கூட்டிக்கொண்டு,  அந்த  மனிதனிடத்துக்கு  மறுபடியும்  போங்கள்.  (ஆதியாகமம்  43:13)

ungga'l  sagoatharanaiyum  koottikko'ndu,  antha  manithanidaththukku  ma’rupadiyum  poangga'l.  (aathiyaagamam  43:13)

அந்த  மனிதன்  அங்கிருக்கிற  உங்கள்  மற்றச்  சகோதரனையும்  பென்யமீனையும்  உங்களுடனே  அனுப்பிவிடும்படிக்கு,  சர்வவல்லமையுள்ள  தேவன்  அவன்  சமுகத்தில்  உங்களுக்கு  இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக;  நானோ  பிள்ளையற்றுப்  போனவனைப்போல்  இருப்பேன்  என்றான்.  (ஆதியாகமம்  43:14)

antha  manithan  anggirukki’ra  ungga'l  mat’rach  sagoatharanaiyum  benyameenaiyum  ungga'ludanea  anuppividumpadikku,  sarvavallamaiyu'l'la  theavan  avan  samugaththil  ungga'lukku  irakkangkidaikkappa'n'nuvaaraaga;  naanoa  pi'l'laiyat’rup  poanavanaippoal  iruppean  en’raan.  (aathiyaagamam  43:14)

அப்பொழுது  அவர்கள்  காணிக்கையையும்  தங்கள்  கைகளில்  இரட்டிப்பான  பணத்தையும்  எடுத்துக்கொண்டு,  பென்யமீனையும்  கூட்டிக்கொண்டு,  பிரயாணப்பட்டு,  எகிப்துக்குப்போய்,  யோசேப்பின்  சமுகத்தில்  வந்து  நின்றார்கள்.  (ஆதியாகமம்  43:15)

appozhuthu  avarga'l  kaa'nikkaiyaiyum  thangga'l  kaiga'lil  irattippaana  pa'naththaiyum  eduththukko'ndu,  benyameenaiyum  koottikko'ndu,  pirayaa'nappattu,  egipthukkuppoay,  yoaseappin  samugaththil  vanthu  nin’raarga'l.  (aathiyaagamam  43:15)

பென்யமீன்  அவர்களோடேகூட  வந்திருக்கிறதை  யோசேப்பு  கண்டு,  தன்  வீட்டு  விசாரணைக்காரனை  நோக்கி:  நீ  இந்த  மனிதரை  வீட்டுக்கு  அழைத்துப்போய்,  சாப்பாட்டுக்கு  வேண்டியவைகளை  அடித்து,  ஆயத்தம்பண்ணு,  மத்தியானத்திலே  இந்த  மனிதர்  என்னோடே  சாப்பிடுவார்கள்  என்றான்.  (ஆதியாகமம்  43:16)

benyameen  avarga'loadeakooda  vanthirukki’rathai  yoaseappu  ka'ndu,  than  veettu  visaara'naikkaaranai  noakki:  nee  intha  manitharai  veettukku  azhaiththuppoay,  saappaattukku  vea'ndiyavaiga'lai  adiththu,  aayaththampa'n'nu,  maththiyaanaththilea  intha  manithar  ennoadea  saappiduvaarga'l  en’raan.  (aathiyaagamam  43:16)

அவன்  தனக்கு  யோசேப்பு  சொன்னபடியே  செய்து,  அந்த  மனிதரை  யோசேப்பின்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டுபோனான்.  (ஆதியாகமம்  43:17)

avan  thanakku  yoaseappu  sonnapadiyea  seythu,  antha  manitharai  yoaseappin  veettukku  azhaiththukko'ndupoanaan.  (aathiyaagamam  43:17)

தாங்கள்  யோசேப்பின்  வீட்டுக்குக்  கொண்டுபோகப்படுகிறதை  அவர்கள்  கண்டு  பயந்து,  முன்னே  நம்முடைய  சாக்குகளில்  இருந்த  பணத்தினிமித்தம்  நம்மேல்  குற்றம்  சுமத்தி,  நம்மைப்  பிடித்துச்  சிறைகளாக்கி,  நம்முடைய  கழுதைகளை  எடுத்துக்கொள்ளும்படி  நம்மைக்  கொண்டுபோகிறார்கள்  என்று  சொல்லி,  (ஆதியாகமம்  43:18)

thaangga'l  yoaseappin  veettukkuk  ko'ndupoagappadugi’rathai  avarga'l  ka'ndu  bayanthu,  munnea  nammudaiya  saakkuga'lil  iruntha  pa'naththinimiththam  nammeal  kut’ram  sumaththi,  nammaip  pidiththuch  si’raiga'laakki,  nammudaiya  kazhuthaiga'lai  eduththukko'l'lumpadi  nammaik  ko'ndupoagi’raarga'l  en’ru  solli,  (aathiyaagamam  43:18)

யோசேப்பின்  வீட்டு  விசாரணைக்காரனண்டையில்  சேர்ந்து,  வீட்டு  வாசற்படியிலே  அவனோடே  பேசி:  (ஆதியாகமம்  43:19)

yoaseappin  veettu  visaara'naikkaarana'ndaiyil  searnthu,  veettu  vaasa’rpadiyilea  avanoadea  peasi:  (aathiyaagamam  43:19)

ஆண்டவனே,  நாங்கள்  தானியம்  கொள்ளும்படி  முன்னே  வந்துபோனோமே;  (ஆதியாகமம்  43:20)

aa'ndavanea,  naangga'l  thaaniyam  ko'l'lumpadi  munnea  vanthupoanoamea;  (aathiyaagamam  43:20)

நாங்கள்  தங்கும்  இடத்தில்  போய்  எங்கள்  சாக்குகளைத்  திறந்தபோது,  நாங்கள்  நிறுத்துக்கொடுத்த  நிறையின்படியே  அவனவன்  பணம்  அவனவன்  சாக்கின்  வாயிலே  இருக்கக்  கண்டோம்;  அதை  நாங்கள்  திரும்பவும்  எங்கள்  கையிலே  கொண்டுவந்திருக்கிறோம்.  (ஆதியாகமம்  43:21)

naangga'l  thanggum  idaththil  poay  engga'l  saakkuga'laith  thi’ranthapoathu,  naangga'l  ni’ruththukkoduththa  ni’raiyinpadiyea  avanavan  pa'nam  avanavan  saakkin  vaayilea  irukkak  ka'ndoam;  athai  naangga'l  thirumbavum  engga'l  kaiyilea  ko'nduvanthirukki’roam.  (aathiyaagamam  43:21)

மேலும்,  தானியம்  கொள்ளும்படி  வேறே  பணமும்  எங்கள்  கையில்  கொண்டுவந்திருக்கிறோம்;  நாங்கள்  முன்  கொடுத்த  பணத்தை  எங்கள்  சாக்குகளில்  போட்டது  இன்னார்  என்று  அறியோம்  என்றார்கள்.  (ஆதியாகமம்  43:22)

mealum,  thaaniyam  ko'l'lumpadi  vea’rea  pa'namum  engga'l  kaiyil  ko'nduvanthirukki’roam;  naangga'l  mun  koduththa  pa'naththai  engga'l  saakkuga'lil  poattathu  innaar  en’ru  a’riyoam  en’raarga'l.  (aathiyaagamam  43:22)

அதற்கு  அவன்:  உங்களுக்குச்  சமாதானம்;  பயப்படவேண்டாம்;  உங்கள்  தேவனும்  உங்கள்  தகப்பனுடைய  தேவனுமாயிருக்கிறவர்  உங்கள்  சாக்குகளில்  அதை  உங்களுக்குப்  புதையலாகக்  கட்டளையிட்டார்;  நீங்கள்  கொடுத்த  பணம்  என்னிடத்தில்  வந்து  சேர்ந்தது  என்று  சொல்லி,  சிமியோனை  வெளியே  அழைத்துவந்து,  அவர்களிடத்தில்  விட்டான்.  (ஆதியாகமம்  43:23)

atha’rku  avan:  ungga'lukkuch  samaathaanam;  bayappadavea'ndaam;  ungga'l  theavanum  ungga'l  thagappanudaiya  theavanumaayirukki’ravar  ungga'l  saakkuga'lil  athai  ungga'lukkup  puthaiyalaagak  katta'laiyittaar;  neengga'l  koduththa  pa'nam  ennidaththil  vanthu  searnthathu  en’ru  solli,  simiyoanai  ve'liyea  azhaiththuvanthu,  avarga'lidaththil  vittaan.  (aathiyaagamam  43:23)

மேலும்,  அந்த  மனிதன்  அவர்களை  யோசேப்பின்  வீட்டுக்குள்ளே  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்கள்  தங்கள்  கால்களைக்  கழுவும்படி  தண்ணீர்  கொடுத்து,  அவர்களுடைய  கழுதைகளுக்குத்  தீவனம்  போட்டான்.  (ஆதியாகமம்  43:24)

mealum,  antha  manithan  avarga'lai  yoaseappin  veettukku'l'lea  koottikko'ndupoay,  avarga'l  thangga'l  kaalga'laik  kazhuvumpadi  tha'n'neer  koduththu,  avarga'ludaiya  kazhuthaiga'lukkuth  theevanam  poattaan.  (aathiyaagamam  43:24)

தாங்கள்  அங்கே  போஜனம்  செய்யப்போகிறதை  அவர்கள்  கேள்விப்பட்டபடியால்,  மத்தியானத்தில்  யோசேப்பு  வருமளவும்  காணிக்கையை  ஆயத்தமாய்  வைத்துக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  (ஆதியாகமம்  43:25)

thaangga'l  anggea  poajanam  seyyappoagi’rathai  avarga'l  kea'lvippattapadiyaal,  maththiyaanaththil  yoaseappu  varuma'lavum  kaa'nikkaiyai  aayaththamaay  vaiththuk  kaaththukko'ndirunthaarga'l.  (aathiyaagamam  43:25)

யோசேப்பு  வீட்டுக்கு  வந்தபோது,  அவர்கள்  தங்கள்  கையில்  இருந்த  காணிக்கையை  வீட்டுக்குள்  அவனிடத்தில்  கொண்டுபோய்  வைத்து,  தரைமட்டும்  குனிந்து,  அவனை  வணங்கினார்கள்.  (ஆதியாகமம்  43:26)

yoaseappu  veettukku  vanthapoathu,  avarga'l  thangga'l  kaiyil  iruntha  kaa'nikkaiyai  veettukku'l  avanidaththil  ko'ndupoay  vaiththu,  tharaimattum  kuninthu,  avanai  va'nangginaarga'l.  (aathiyaagamam  43:26)

அப்பொழுது  அவன்:  அவர்கள்  சுகசெய்தியை  விசாரித்து,  நீங்கள்  சொன்ன  முதிர்வயதான  உங்கள்  தகப்பன்  சுகமாயிருக்கிறாரா?  அவர்  இன்னும்  உயிரோடிருக்கிறாரா?  என்று  அவர்களிடத்தில்  விசாரித்தான்.  (ஆதியாகமம்  43:27)

appozhuthu  avan:  avarga'l  sugaseythiyai  visaariththu,  neengga'l  sonna  muthirvayathaana  ungga'l  thagappan  sugamaayirukki’raaraa?  avar  innum  uyiroadirukki’raaraa?  en’ru  avarga'lidaththil  visaariththaan.  (aathiyaagamam  43:27)

அதற்கு  அவர்கள்:  எங்கள்  தகப்பனாராகிய  உமது  அடியான்  சுகமாயிருக்கிறார்,  இன்னும்  உயிரோடிருக்கிறார்  என்று  சொல்லி,  குனிந்து  வணங்கினார்கள்.  (ஆதியாகமம்  43:28)

atha’rku  avarga'l:  engga'l  thagappanaaraagiya  umathu  adiyaan  sugamaayirukki’raar,  innum  uyiroadirukki’raar  en’ru  solli,  kuninthu  va'nangginaarga'l.  (aathiyaagamam  43:28)

அவன்  தன்  கண்களை  ஏறெடுத்து,  தன்  தாய்  பெற்ற  குமாரனாகிய  தன்  சகோதரன்  பென்யமீனைக்  கண்டு,  நீங்கள்  எனக்குச்  சொன்ன  உங்கள்  இளைய  சகோதரன்  இவன்தானா  என்று  கேட்டு,  மகனே,  தேவன்  உனக்குக்  கிருபைசெய்யக்கடவர்  என்றான்.  (ஆதியாகமம்  43:29)

avan  than  ka'nga'lai  ea’reduththu,  than  thaay  pet’ra  kumaaranaagiya  than  sagoatharan  benyameenaik  ka'ndu,  neengga'l  enakkuch  sonna  ungga'l  i'laiya  sagoatharan  ivanthaanaa  en’ru  keattu,  maganea,  theavan  unakkuk  kirubaiseyyakkadavar  en’raan.  (aathiyaagamam  43:29)

யோசேப்பின்  உள்ளம்  தன்  சகோதரனுக்காகப்  பொங்கினபடியால்,  அவன்  அழுகிறதற்கு  இடம்  தேடி,  துரிதமாய்  அறைக்குள்ளே  போய்,  அங்கே  அழுதான்.  (ஆதியாகமம்  43:30)

yoaseappin  u'l'lam  than  sagoatharanukkaagap  pongginapadiyaal,  avan  azhugi’ratha’rku  idam  theadi,  thurithamaay  a’raikku'l'lea  poay,  anggea  azhuthaan.  (aathiyaagamam  43:30)

பின்பு,  அவன்  தன்  முகத்தைக்  கழுவி  வெளியே  வந்து,  தன்னை  அடக்கிக்கொண்டு,  போஜனம்  வையுங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  43:31)

pinbu,  avan  than  mugaththaik  kazhuvi  ve'liyea  vanthu,  thannai  adakkikko'ndu,  poajanam  vaiyungga'l  en’raan.  (aathiyaagamam  43:31)

எகிப்தியர்  எபிரெயரோடே  சாப்பிடமாட்டார்கள்;  அப்படிச்  செய்வது  எகிப்தியருக்கு  அருவருப்பாயிருக்கும்;  ஆகையால்,  அவனுக்குத்  தனிப்படவும்,  அவர்களுக்குத்  தனிப்படவும்,  அவனோடே  சாப்பிடுகிற  எகிப்தியருக்குத்  தனிப்படவும்  வைத்தார்கள்.  (ஆதியாகமம்  43:32)

egipthiyar  ebireyaroadea  saappidamaattaarga'l;  appadich  seyvathu  egipthiyarukku  aruvaruppaayirukkum;  aagaiyaal,  avanukkuth  thanippadavum,  avarga'lukkuth  thanippadavum,  avanoadea  saappidugi’ra  egipthiyarukkuth  thanippadavum  vaiththaarga'l.  (aathiyaagamam  43:32)

அவனுக்கு  முன்பாக,  மூத்தவன்  முதல்  இளையவன்வரைக்கும்  அவனவன்  வயதின்படியே  அவர்களை  உட்காரவைத்தார்கள்;  அதற்காக  அவர்கள்,  ஒருவரை  ஒருவர்  பார்த்து  ஆச்சரியப்பட்டார்கள்.  (ஆதியாகமம்  43:33)

avanukku  munbaaga,  mooththavan  muthal  i'laiyavanvaraikkum  avanavan  vayathinpadiyea  avarga'lai  udkaaravaiththaarga'l;  atha’rkaaga  avarga'l,  oruvarai  oruvar  paarththu  aachchariyappattaarga'l.  (aathiyaagamam  43:33)

அவன்  தனக்குமுன்  வைக்கப்பட்டிருந்த  போஜனத்தில்  அவர்களுக்குப்  பங்கிட்டு  அனுப்பினான்;  அவர்கள்  எல்லாருடைய  பங்குகளைப்பார்க்கிலும்  பென்யமீனுடைய  பங்கு  ஐந்துமடங்கு  அதிகமாயிருந்தது;  அவர்கள்  பானம்பண்ணி,  அவனுடனே  சந்தோஷமாயிருந்தார்கள்.  (ஆதியாகமம்  43:34)

avan  thanakkumun  vaikkappattiruntha  poajanaththil  avarga'lukkup  panggittu  anuppinaan;  avarga'l  ellaarudaiya  pangguga'laippaarkkilum  benyameenudaiya  panggu  ainthumadanggu  athigamaayirunthathu;  avarga'l  baanampa'n'ni,  avanudanea  santhoashamaayirunthaarga'l.  (aathiyaagamam  43:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!