Tuesday, June 28, 2016

Aathiyaagamam 42 | ஆதியாகமம் 42 | Genesis 42

எகிப்திலே  தானியம்  உண்டென்று  யாக்கோபு  அறிந்து,  தன்  குமாரரை  நோக்கி:  நீங்கள்  ஒருவர்  முகத்தை  ஒருவர்  பார்த்துக்கொண்டிருக்கிறது  என்ன?  (ஆதியாகமம்  42:1)

egipthilea  thaaniyam  u'nden’ru  yaakkoabu  a’rinthu,  than  kumaararai  noakki:  neengga'l  oruvar  mugaththai  oruvar  paarththukko'ndirukki’rathu  enna?  (aathiyaagamam  42:1)

எகிப்திலே  தானியம்  உண்டென்று  கேள்விப்படுகிறேன்;  நாம்  சாகாமல்  உயிரோடிருக்கும்படி  நீங்கள்  அவ்விடத்துக்குப்  போய்,  நமக்காகத்  தானியம்  கொள்ளுங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  42:2)

egipthilea  thaaniyam  u'nden’ru  kea'lvippadugi’rean;  naam  saagaamal  uyiroadirukkumpadi  neengga'l  avvidaththukkup  poay,  namakkaagath  thaaniyam  ko'l'lungga'l  en’raan.  (aathiyaagamam  42:2)

யோசேப்பின்  சகோதரர்  பத்துப்பேர்  தானியங்கொள்ள  எகிப்துக்குப்  போனார்கள்.  (ஆதியாகமம்  42:3)

yoaseappin  sagoatharar  paththuppear  thaaniyangko'l'la  egipthukkup  poanaarga'l.  (aathiyaagamam  42:3)

யோசேப்பின்  தம்பியாகிய  பென்யமீனுக்கு  ஏதோ  மோசம்  வரும்  என்று  சொல்லி,  யாக்கோபு  அவனை  அவன்  சகோதரரோடே  அனுப்பவில்லை.  (ஆதியாகமம்  42:4)

yoaseappin  thambiyaagiya  benyameenukku  eathoa  moasam  varum  en’ru  solli,  yaakkoabu  avanai  avan  sagoathararoadea  anuppavillai.  (aathiyaagamam  42:4)

கானான்தேசத்திலே  பஞ்சம்  உண்டாயிருந்தபடியால்,  தானியம்  கொள்ளப்போகிறவர்களுடனேகூட  இஸ்ரவேலின்  குமாரரும்  போனார்கள்.  (ஆதியாகமம்  42:5)

kaanaantheasaththilea  pagncham  u'ndaayirunthapadiyaal,  thaaniyam  ko'l'lappoagi’ravarga'ludaneakooda  isravealin  kumaararum  poanaarga'l.  (aathiyaagamam  42:5)

யோசேப்பு  அத்தேசத்துக்கு  அதிபதியாயிருந்து,  தேசத்தின்  ஜனங்கள்  யாவருக்கும்  விற்றான்.  யோசேப்பின்  சகோதரர்  வந்து,  முகங்குப்புறத்  தரையிலே  விழுந்து  அவனை  வணங்கினார்கள்.  (ஆதியாகமம்  42:6)

yoaseappu  aththeasaththukku  athibathiyaayirunthu,  theasaththin  janangga'l  yaavarukkum  vit’raan.  yoaseappin  sagoatharar  vanthu,  mugangkuppu’rath  tharaiyilea  vizhunthu  avanai  va'nangginaarga'l.  (aathiyaagamam  42:6)

யோசேப்பு  அவர்களைப்  பார்த்து,  தன்  சகோதரர்  என்று  அறிந்துகொண்டான்;  அறிந்தும்  அறியாதவன்போலக்  கடினமாய்  அவர்களோடே  பேசி:  நீங்கள்  எங்கேயிருந்து  வந்தீர்கள்  என்று  கேட்டான்;  அதற்கு  அவர்கள்:  கானான்  தேசத்திலிருந்து  தானியம்  கொள்ள  வந்தோம்  என்றார்கள்.  (ஆதியாகமம்  42:7)

yoaseappu  avarga'laip  paarththu,  than  sagoatharar  en’ru  a’rinthuko'ndaan;  a’rinthum  a’riyaathavanpoalak  kadinamaay  avarga'loadea  peasi:  neengga'l  enggeayirunthu  vantheerga'l  en’ru  keattaan;  atha’rku  avarga'l:  kaanaan  theasaththilirunthu  thaaniyam  ko'l'la  vanthoam  en’raarga'l.  (aathiyaagamam  42:7)

யோசேப்பு  அவர்களைத்  தன்  சகோதரர்  என்று  அறிந்தும்,  அவர்கள்  அவனை  அறியவில்லை.  (ஆதியாகமம்  42:8)

yoaseappu  avarga'laith  than  sagoatharar  en’ru  a’rinthum,  avarga'l  avanai  a’riyavillai.  (aathiyaagamam  42:8)

யோசேப்பு  அவர்களைக்குறித்துத்  தான்  கண்ட  சொப்பனங்களை  நினைத்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  வேவுகாரர்,  தேசம்  எங்கே  திறந்துகிடக்கிறது  என்று  பார்க்க  வந்தீர்கள்  என்றான்.  (ஆதியாகமம்  42:9)

yoaseappu  avarga'laikku’riththuth  thaan  ka'nda  soppanangga'lai  ninaiththu,  avarga'lai  noakki:  neengga'l  veavukaarar,  theasam  enggea  thi’ranthukidakki’rathu  en’ru  paarkka  vantheerga'l  en’raan.  (aathiyaagamam  42:9)

அதற்கு  அவர்கள்:  அப்படியல்ல,  ஆண்டவனே,  உமது  அடியாராகிய  நாங்கள்  தானியம்  கொள்ள  வந்தோம்.  (ஆதியாகமம்  42:10)

atha’rku  avarga'l:  appadiyalla,  aa'ndavanea,  umathu  adiyaaraagiya  naangga'l  thaaniyam  ko'l'la  vanthoam.  (aathiyaagamam  42:10)

நாங்கள்  எல்லாரும்  ஒரு  தகப்பனுடைய  பிள்ளைகள்;  நாங்கள்  நிஜஸ்தர்;  உமது  அடியார்  வேவுகாரர்  அல்ல  என்றார்கள்.  (ஆதியாகமம்  42:11)

naangga'l  ellaarum  oru  thagappanudaiya  pi'l'laiga'l;  naangga'l  nijasthar;  umathu  adiyaar  veavukaarar  alla  en’raarga'l.  (aathiyaagamam  42:11)

அதற்கு  அவன்:  அப்படியல்ல,  தேசம்  எங்கே  திறந்துகிடக்கிறது  என்று  பார்க்கவே  வந்தீர்கள்  என்றான்.  (ஆதியாகமம்  42:12)

atha’rku  avan:  appadiyalla,  theasam  enggea  thi’ranthukidakki’rathu  en’ru  paarkkavea  vantheerga'l  en’raan.  (aathiyaagamam  42:12)

அப்பொழுது  அவர்கள்:  உமது  அடியாராகிய  நாங்கள்  பன்னிரண்டு  சகோதரர்;  கானான்  தேசத்தில்  இருக்கிற  ஒரு  தகப்பன்  புத்திரர்;  இளையவன்  இப்பொழுது  எங்கள்  தகப்பனிடத்தில்  இருக்கிறான்;  ஒருவன்  காணாமற்போனான்  என்றார்கள்.  (ஆதியாகமம்  42:13)

appozhuthu  avarga'l:  umathu  adiyaaraagiya  naangga'l  pannira'ndu  sagoatharar;  kaanaan  theasaththil  irukki’ra  oru  thagappan  puththirar;  i'laiyavan  ippozhuthu  engga'l  thagappanidaththil  irukki’raan;  oruvan  kaa'naama’rpoanaan  en’raarga'l.  (aathiyaagamam  42:13)

யோசேப்பு  அவர்களை  நோக்கி:  உங்களை  வேவுகாரர்  என்று  நான்  சொன்னது  சரி.  (ஆதியாகமம்  42:14)

yoaseappu  avarga'lai  noakki:  ungga'lai  veavukaarar  en’ru  naan  sonnathu  sari.  (aathiyaagamam  42:14)

உங்கள்  இளைய  சகோதரன்  இங்கே  வந்தாலொழிய  நீங்கள்  இங்கேயிருந்து  புறப்படுவது  இல்லை  என்று  பார்வோனின்  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டுச்  சொல்லுகிறேன்.  (ஆதியாகமம்  42:15)

ungga'l  i'laiya  sagoatharan  inggea  vanthaalozhiya  neengga'l  inggeayirunthu  pu’rappaduvathu  illai  en’ru  paarvoanin  jeevanaikko'ndu  aa'naiyittuch  sollugi’rean.  (aathiyaagamam  42:15)

இதினாலே  நீங்கள்  சோதிக்கப்படுவீர்கள்;  உங்கள்  சகோதரனை  அழைத்துவரும்படி  உங்களில்  ஒருவனை  அனுப்புங்கள்;  உங்களிடத்தில்  உண்மை  உண்டோ  இல்லையோ  என்று  உங்கள்  வார்த்தைகள்  சோதிக்கப்படுமளவும்,  நீங்கள்  காவலில்  இருக்கவேண்டும்;  இல்லாவிட்டால்,  நீங்கள்  வேவுகாரர்தான்  என்று  பார்வோனின்  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டுச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  (ஆதியாகமம்  42:16)

ithinaalea  neengga'l  soathikkappaduveerga'l;  ungga'l  sagoatharanai  azhaiththuvarumpadi  ungga'lil  oruvanai  anuppungga'l;  ungga'lidaththil  u'nmai  u'ndoa  illaiyoa  en’ru  ungga'l  vaarththaiga'l  soathikkappaduma'lavum,  neengga'l  kaavalil  irukkavea'ndum;  illaavittaal,  neengga'l  veavukaararthaan  en’ru  paarvoanin  jeevanaikko'ndu  aa'naiyittuch  sollugi’rean  en’ru  solli,  (aathiyaagamam  42:16)

அவர்கள்  எல்லாரையும்  மூன்றுநாள்  காவலிலே  வைத்தான்.  (ஆதியாகமம்  42:17)

avarga'l  ellaaraiyum  moon’runaa'l  kaavalilea  vaiththaan.  (aathiyaagamam  42:17)

மூன்றாம்  நாளிலே  யோசேப்பு  அவர்களை  நோக்கி:  நான்  தேவனுக்குப்  பயப்படுகிறவன்;  நீங்கள்  உயிரோடே  இருக்கும்படிக்கு  ஒன்று  செய்யுங்கள்.  (ஆதியாகமம்  42:18)

moon’raam  naa'lilea  yoaseappu  avarga'lai  noakki:  naan  theavanukkup  bayappadugi’ravan;  neengga'l  uyiroadea  irukkumpadikku  on’ru  seyyungga'l.  (aathiyaagamam  42:18)

நீங்கள்  நிஜஸ்தரானால்,  சகோதரராகிய  உங்களில்  ஒருவன்  காவற்கூடத்தில்  கட்டுண்டிருக்கட்டும்;  மற்றவர்கள்  புறப்பட்டு,  பஞ்சத்தினால்  வருந்துகிற  உங்கள்  குடும்பத்துக்குத்  தானியம்  கொண்டுபோய்க்  கொடுத்து,  (ஆதியாகமம்  42:19)

neengga'l  nijastharaanaal,  sagoathararaagiya  ungga'lil  oruvan  kaava’rkoodaththil  kattu'ndirukkattum;  mat’ravarga'l  pu’rappattu,  pagnchaththinaal  varunthugi’ra  ungga'l  kudumbaththukkuth  thaaniyam  ko'ndupoayk  koduththu,  (aathiyaagamam  42:19)

உங்கள்  இளைய  சகோதரனை  என்னிடத்துக்கு  அழைத்துக்கொண்டுவாருங்கள்;  அப்பொழுது  உங்கள்  வார்த்தைகள்  மெய்யென்று  விளங்கும்;  நீங்கள்  சாவதில்லை  என்றான்.  அவர்கள்  அப்படிச்  செய்கிறதற்கு  இசைந்து:  (ஆதியாகமம்  42:20)

ungga'l  i'laiya  sagoatharanai  ennidaththukku  azhaiththukko'nduvaarungga'l;  appozhuthu  ungga'l  vaarththaiga'l  meyyen’ru  vi'langgum;  neengga'l  saavathillai  en’raan.  avarga'l  appadich  seygi’ratha’rku  isainthu:  (aathiyaagamam  42:20)

நம்முடைய  சகோதரனுக்கு  நாம்  செய்த  துரோகம்  நம்மேல்  சுமந்தது;  அவன்  நம்மைக்  கெஞ்சி  வேண்டிக்கொண்டபோது,  அவனுடைய  மன  வியாகுலத்தை  நாம்  கண்டும்,  அவனுக்குச்  செவிகொடாமற்போனோமே;  ஆகையால்,  இந்த  ஆபத்து  நமக்கு  நேரிட்டது  என்று  ஒருவரை  ஒருவர்  பார்த்துச்  சொல்லிக்கொண்டார்கள்.  (ஆதியாகமம்  42:21)

nammudaiya  sagoatharanukku  naam  seytha  thuroagam  nammeal  sumanthathu;  avan  nammaik  kegnchi  vea'ndikko'ndapoathu,  avanudaiya  mana  viyaagulaththai  naam  ka'ndum,  avanukkuch  sevikodaama’rpoanoamea;  aagaiyaal,  intha  aabaththu  namakku  nearittathu  en’ru  oruvarai  oruvar  paarththuch  sollikko'ndaarga'l.  (aathiyaagamam  42:21)

அப்பொழுது  ரூபன்  அவர்களைப்  பார்த்து:  இளைஞனுக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்யாதிருங்கள்  என்று  நான்  உங்களுக்குச்  சொல்லவில்லையா?  நீங்கள்  கேளாமற்போனீர்கள்;  இப்பொழுது,  இதோ,  அவன்  இரத்தப்பழி  நம்மிடத்தில்  வாங்கப்படுகிறது  என்றான்.  (ஆதியாகமம்  42:22)

appozhuthu  rooban  avarga'laip  paarththu:  i'laignanukku  viroathamaagap  paavagnseyyaathirungga'l  en’ru  naan  ungga'lukkuch  sollavillaiyaa?  neengga'l  kea'laama’rpoaneerga'l;  ippozhuthu,  ithoa,  avan  iraththappazhi  nammidaththil  vaanggappadugi’rathu  en’raan.  (aathiyaagamam  42:22)

யோசேப்பு  துபாசியைக்கொண்டு  அவர்களிடத்தில்  பேசினபடியால்,  தாங்கள்  சொன்னது  அவனுக்குத்  தெரியும்  என்று  அறியாதிருந்தார்கள்.  (ஆதியாகமம்  42:23)

yoaseappu  thubaasiyaikko'ndu  avarga'lidaththil  peasinapadiyaal,  thaangga'l  sonnathu  avanukkuth  theriyum  en’ru  a’riyaathirunthaarga'l.  (aathiyaagamam  42:23)

அவன்  அவர்களை  விட்டு  அப்புறம்  போய்  அழுது,  திரும்ப  அவர்களிடத்தில்  வந்து,  அவர்களோடே  பேசி,  அவர்களில்  சிமியோனைப்  பிடித்து,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகக்  கட்டுவித்தான்.  (ஆதியாகமம்  42:24)

avan  avarga'lai  vittu  appu’ram  poay  azhuthu,  thirumba  avarga'lidaththil  vanthu,  avarga'loadea  peasi,  avarga'lil  simiyoanaip  pidiththu,  avarga'l  ka'nga'lukku  munbaagak  kattuviththaan.  (aathiyaagamam  42:24)

பின்பு,  அவர்கள்  சாக்குகளைத்  தானியத்தால்  நிரப்பவும்,  அவர்கள்  பணத்தைத்  திரும்ப  அவனவன்  சாக்கிலே  போடவும்,  வழிக்கு  வேண்டிய  ஆகாரத்தைக்  கொடுக்கவும்  யோசேப்பு  கட்டளையிட்டான்;  அப்படியே  அவர்களுக்குச்  செய்யப்பட்டது.  (ஆதியாகமம்  42:25)

pinbu,  avarga'l  saakkuga'laith  thaaniyaththaal  nirappavum,  avarga'l  pa'naththaith  thirumba  avanavan  saakkilea  poadavum,  vazhikku  vea'ndiya  aagaaraththaik  kodukkavum  yoaseappu  katta'laiyittaan;  appadiyea  avarga'lukkuch  seyyappattathu.  (aathiyaagamam  42:25)

அவர்கள்  அந்தத்  தானியத்தைத்  தங்கள்  கழுதைகள்மேல்  ஏற்றிக்கொண்டு,  அவ்விடம்விட்டுப்  புறப்பட்டுப்போனார்கள்.  (ஆதியாகமம்  42:26)

avarga'l  anthath  thaaniyaththaith  thangga'l  kazhuthaiga'lmeal  eat’rikko'ndu,  avvidamvittup  pu’rappattuppoanaarga'l.  (aathiyaagamam  42:26)

தங்குகிற  இடத்திலே  அவர்களில்  ஒருவன்  தன்  கழுதைக்குத்  தீவனம்  போடத்  தன்  சாக்கைத்  திறந்தபோது,  சாக்கின்  வாயிலே  தன்  பணம்  இருக்கிறதைக்  கண்டு,  (ஆதியாகமம்  42:27)

thanggugi’ra  idaththilea  avarga'lil  oruvan  than  kazhuthaikkuth  theevanam  poadath  than  saakkaith  thi’ranthapoathu,  saakkin  vaayilea  than  pa'nam  irukki’rathaik  ka'ndu,  (aathiyaagamam  42:27)

தன்  சகோதரரைப்  பார்த்து,  என்  பணம்  திரும்ப  வந்திருக்கிறது;  இதோ,  அது  என்  சாக்கிலே  இருக்கிறது  என்றான்.  அப்பொழுது  அவர்களுடைய  இருதயம்  சோர்ந்துபோய்,  அவர்கள்  பயந்து,  ஒருவரை  ஒருவர்  பார்த்து,  தேவன்  நமக்கு  இப்படிச்  செய்தது  என்ன  என்றார்கள்.  (ஆதியாகமம்  42:28)

than  sagoathararaip  paarththu,  en  pa'nam  thirumba  vanthirukki’rathu;  ithoa,  athu  en  saakkilea  irukki’rathu  en’raan.  appozhuthu  avarga'ludaiya  iruthayam  soarnthupoay,  avarga'l  bayanthu,  oruvarai  oruvar  paarththu,  theavan  namakku  ippadich  seythathu  enna  en’raarga'l.  (aathiyaagamam  42:28)

அவர்கள்  கானான்  தேசத்திலுள்ள  தங்கள்  தகப்பனாகிய  யாக்கோபினிடத்தில்  வந்து,  தங்களுக்குச்  சம்பவித்தவைகளையெல்லாம்  அவனுக்கு  அறிவித்து:  (ஆதியாகமம்  42:29)

avarga'l  kaanaan  theasaththilu'l'la  thangga'l  thagappanaagiya  yaakkoabinidaththil  vanthu,  thangga'lukkuch  sambaviththavaiga'laiyellaam  avanukku  a’riviththu:  (aathiyaagamam  42:29)

தேசத்துக்கு  அதிபதியாயிருக்கிறவன்  எங்களை  தேசத்தை  வேவுபார்க்க  வந்தவர்கள்  என்று  எண்ணி  எங்களோடே  கடினமாய்ப்  பேசினான்.  (ஆதியாகமம்  42:30)

theasaththukku  athibathiyaayirukki’ravan  engga'lai  theasaththai  veavupaarkka  vanthavarga'l  en’ru  e'n'ni  engga'loadea  kadinamaayp  peasinaan.  (aathiyaagamam  42:30)

நாங்களோ  அவனை  நோக்கி:  நாங்கள்  நிஜஸ்தர்,  வேவுகாரர்  அல்ல.  (ஆதியாகமம்  42:31)

naangga'loa  avanai  noakki:  naangga'l  nijasthar,  veavukaarar  alla.  (aathiyaagamam  42:31)

நாங்கள்  பன்னிரண்டு  சகோதரர்,  ஒரு  தகப்பன்  புத்திரர்,  ஒருவன்  காணாமற்போனான்,  இளையவன்  இப்பொழுது  கானான்தேசத்தில்  எங்கள்  தகப்பனிடத்தில்  இருக்கிறான்  என்றோம்.  (ஆதியாகமம்  42:32)

naangga'l  pannira'ndu  sagoatharar,  oru  thagappan  puththirar,  oruvan  kaa'naama’rpoanaan,  i'laiyavan  ippozhuthu  kaanaantheasaththil  engga'l  thagappanidaththil  irukki’raan  en’roam.  (aathiyaagamam  42:32)

அப்பொழுது  தேசத்தின்  அதிபதியானவன்:  நீங்கள்  நிஜஸ்தர்  என்பதை  நான்  அறியும்படி  உங்கள்  சகோதரரில்  ஒருவனை  நீங்கள்  என்னிடத்தில்  விட்டு,  பஞ்சத்தினால்  வருந்துகிற  உங்கள்  குடும்பத்துக்குத்  தானியம்  வாங்கிக்  கொண்டுபோய்க்  கொடுத்து,  (ஆதியாகமம்  42:33)

appozhuthu  theasaththin  athibathiyaanavan:  neengga'l  nijasthar  enbathai  naan  a’riyumpadi  ungga'l  sagoathararil  oruvanai  neengga'l  ennidaththil  vittu,  pagnchaththinaal  varunthugi’ra  ungga'l  kudumbaththukkuth  thaaniyam  vaanggik  ko'ndupoayk  koduththu,  (aathiyaagamam  42:33)

உங்கள்  இளைய  சகோதரனை  என்னிடத்தில்  அழைத்துக்கொண்டுவாருங்கள்;  அதினாலே  நீங்கள்  வேவுகாரர்  அல்ல,  நிஜஸ்தர்  என்பதை  நான்  அறிந்துகொண்டு,  உங்கள்  சகோதரனை  விடுதலை  செய்வேன்;  நீங்கள்  இந்தத்  தேசத்திலே  வியாபாரமும்  பண்ணலாம்  என்றான்  என்று  சொன்னார்கள்.  (ஆதியாகமம்  42:34)

ungga'l  i'laiya  sagoatharanai  ennidaththil  azhaiththukko'nduvaarungga'l;  athinaalea  neengga'l  veavukaarar  alla,  nijasthar  enbathai  naan  a’rinthuko'ndu,  ungga'l  sagoatharanai  viduthalai  seyvean;  neengga'l  inthath  theasaththilea  viyaabaaramum  pa'n'nalaam  en’raan  en’ru  sonnaarga'l.  (aathiyaagamam  42:34)

அவர்கள்  தங்கள்  சாக்குகளிலுள்ள  தானியத்தைக்  கொட்டுகையில்,  இதோ,  அவனவன்  சாக்கிலே  அவனவன்  பணமுடிப்பு  இருந்தது;  அந்தப்  பணமுடிப்புகளை  அவர்களும்  அவர்கள்  தகப்பனும்  கண்டு  பயந்தார்கள்.  (ஆதியாகமம்  42:35)

avarga'l  thangga'l  saakkuga'lilu'l'la  thaaniyaththaik  kottugaiyil,  ithoa,  avanavan  saakkilea  avanavan  pa'namudippu  irunthathu;  anthap  pa'namudippuga'lai  avarga'lum  avarga'l  thagappanum  ka'ndu  bayanthaarga'l.  (aathiyaagamam  42:35)

அவர்கள்  தகப்பனாகிய  யாக்கோபு  அவர்களை  நோக்கி:  என்னைப்  பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்;  யோசேப்பும்  இல்லை,  சிமியோனும்  இல்லை;  பென்யமீனையும்  கொண்டுபோகப்  பார்க்கிறீர்கள்;  இதெல்லாம்  எனக்கு  விரோதமாய்  நேரிடுகிறது  என்றான்.  (ஆதியாகமம்  42:36)

avarga'l  thagappanaagiya  yaakkoabu  avarga'lai  noakki:  ennaip  pi'l'laiyat’ravanaakkugi’reerga'l;  yoaseappum  illai,  simiyoanum  illai;  benyameenaiyum  ko'ndupoagap  paarkki’reerga'l;  ithellaam  enakku  viroathamaay  nearidugi’rathu  en’raan.  (aathiyaagamam  42:36)

அப்பொழுது  ரூபன்  தன்  தகப்பனைப்  பார்த்து,  அவனை  என்  கையில்  ஒப்புவியும்,  நான்  அவனைத்  திரும்ப  உம்மிடத்தில்  கொண்டுவருவேன்;  அவனைக்  கொண்டுவராவிட்டால்,  என்  இரண்டு  குமாரரையும்  கொன்றுபோடும்  என்று  சொன்னான்.  (ஆதியாகமம்  42:37)

appozhuthu  rooban  than  thagappanaip  paarththu,  avanai  en  kaiyil  oppuviyum,  naan  avanaith  thirumba  ummidaththil  ko'nduvaruvean;  avanaik  ko'nduvaraavittaal,  en  ira'ndu  kumaararaiyum  kon’rupoadum  en’ru  sonnaan.  (aathiyaagamam  42:37)

அதற்கு  அவன்:  என்  மகன்  உங்களோடேகூடப்  போவதில்லை;  அவன்  தமையன்  இறந்துபோனான்,  இவன்  ஒருவன்  மீதியாயிருக்கிறான்;  நீங்கள்  போகும்  வழியில்  இவனுக்கு  மோசம்  நேரிட்டால்,  நீங்கள்  என்  நரைமயிரைச்  சஞ்சலத்தோடே  பாதாளத்தில்  இறங்கப்பண்ணுவீர்கள்  என்றான்.  (ஆதியாகமம்  42:38)

atha’rku  avan:  en  magan  ungga'loadeakoodap  poavathillai;  avan  thamaiyan  i’ranthupoanaan,  ivan  oruvan  meethiyaayirukki’raan;  neengga'l  poagum  vazhiyil  ivanukku  moasam  nearittaal,  neengga'l  en  naraimayiraich  sagnchalaththoadea  paathaa'laththil  i’ranggappa'n'nuveerga'l  en’raan.  (aathiyaagamam  42:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!