Monday, June 27, 2016

Aathiyaagamam 41 | ஆதியாகமம் 41 | Genesis 41


இரண்டு  வருஷம்  சென்றபின்பு,  பார்வோன்  ஒரு  சொப்பனம்  கண்டான்;  அது  என்னவென்றால்,  அவன்  நதியண்டையிலே  நின்றுகொண்டிருந்தான்.  (ஆதியாகமம்  41:1)

ira'ndu  varusham  sen’rapinbu,  paarvoan  oru  soppanam  ka'ndaan;  athu  ennaven’raal,  avan  nathiya'ndaiyilea  nin’ruko'ndirunthaan.  (aathiyaagamam  41:1)

அப்பொழுது  அழகும்  புஷ்டியுமான  ஏழு  பசுக்கள்  நதியிலிருந்து  ஏறிவந்து  புல்  மேய்ந்தது.  (ஆதியாகமம்  41:2)

appozhuthu  azhagum  pushdiyumaana  eazhu  pasukka'l  nathiyilirunthu  ea’rivanthu  pul  meaynthathu.  (aathiyaagamam  41:2)

அவைகளின்பின்  அவலட்சணமும்  கேவலமுமான  வேறே  ஏழு  பசுக்கள்  நதியிலிருந்து  ஏறிவந்து,  நதி  ஓரத்தில்  மற்றப்  பசுக்களண்டையிலே  நின்றது.  (ஆதியாகமம்  41:3)

avaiga'linpin  avaladcha'namum  keavalamumaana  vea’rea  eazhu  pasukka'l  nathiyilirunthu  ea’rivanthu,  nathi  oaraththil  mat’rap  pasukka'la'ndaiyilea  nin’rathu.  (aathiyaagamam  41:3)

அவலட்சணமும்  கேவலமுமான  பசுக்கள்  அழகும்  புஷ்டியுமான  ஏழு  பசுக்களையும்  பட்சித்துப்போட்டது;  இப்படிப்  பார்வோன்  கண்டு  விழித்துக்கொண்டான்.  (ஆதியாகமம்  41:4)

avaladcha'namum  keavalamumaana  pasukka'l  azhagum  pushdiyumaana  eazhu  pasukka'laiyum  padchiththuppoattathu;  ippadip  paarvoan  ka'ndu  vizhiththukko'ndaan.  (aathiyaagamam  41:4)

மறுபடியும்  அவன்  நித்திரைசெய்து,  இரண்டாம்விசை  ஒரு  சொப்பனம்  கண்டான்;  நல்ல  செழுமையான  ஏழு  கதிர்கள்  ஒரே  தாளிலிருந்து  ஓங்கி  வளர்ந்தது.  (ஆதியாகமம்  41:5)

ma’rupadiyum  avan  niththiraiseythu,  ira'ndaamvisai  oru  soppanam  ka'ndaan;  nalla  sezhumaiyaana  eazhu  kathirga'l  orea  thaa'lilirunthu  oanggi  va'larnthathu.  (aathiyaagamam  41:5)

பின்பு,  சாவியானதும்  கீழ்க்காற்றினால்  தீய்ந்ததுமான  ஏழு  கதிர்கள்  முளைத்தது.  (ஆதியாகமம்  41:6)

pinbu,  saaviyaanathum  keezhkkaat’rinaal  theeynthathumaana  eazhu  kathirga'l  mu'laiththathu.  (aathiyaagamam  41:6)

சாவியான  கதிர்கள்  செழுமையும்  நிறைமேனியுமான  அந்த  ஏழு  கதிர்களையும்  விழுங்கிப்போட்டது;  அப்பொழுது  பார்வோன்  விழித்துக்கொண்டு,  அது  சொப்பனம்  என்று  அறிந்தான்.  (ஆதியாகமம்  41:7)

saaviyaana  kathirga'l  sezhumaiyum  ni’raimeaniyumaana  antha  eazhu  kathirga'laiyum  vizhunggippoattathu;  appozhuthu  paarvoan  vizhiththukko'ndu,  athu  soppanam  en’ru  a’rinthaan.  (aathiyaagamam  41:7)

காலமே  பார்வோனுடைய  மனம்  கலக்கங்கொண்டிருந்தது;  அப்பொழுது  அவன்  எகிப்திலுள்ள  சகல  மந்திரவாதிகளையும்  சகல  சாஸ்திரிகளையும்  அழைப்பித்து,  அவர்களுக்குத்  தன்  சொப்பனத்தைச்  சொன்னான்;  ஒருவராலும்  அதின்  அர்த்தத்தைப்  பார்வோனுக்குச்  சொல்லக்கூடாமற்போயிற்று.  (ஆதியாகமம்  41:8)

kaalamea  paarvoanudaiya  manam  kalakkangko'ndirunthathu;  appozhuthu  avan  egipthilu'l'la  sagala  manthiravaathiga'laiyum  sagala  saasthiriga'laiyum  azhaippiththu,  avarga'lukkuth  than  soppanaththaich  sonnaan;  oruvaraalum  athin  arththaththaip  paarvoanukkuch  sollakkoodaama’rpoayit’ru.  (aathiyaagamam  41:8)

அப்பொழுது  பானபாத்திரக்காரரின்  தலைவன்  பார்வோனை  நோக்கி:  நான்  செய்த  குற்றம்  இன்றுதான்  என்  நினைவில்  வந்தது.  (ஆதியாகமம்  41:9)

appozhuthu  baanapaaththirakkaararin  thalaivan  paarvoanai  noakki:  naan  seytha  kut’ram  in’ruthaan  en  ninaivil  vanthathu.  (aathiyaagamam  41:9)

பார்வோன்  தம்முடைய  ஊழியக்காரர்மேல்  கடுங்கோபங்கொண்டு,  என்னையும்  சுயம்பாகிகளின்  தலைவனையும்  தலையாரிகளின்  அதிபதி  வீடாகிய  சிறைச்சாலையிலே  வைத்திருந்த  காலத்தில்,  (ஆதியாகமம்  41:10)

paarvoan  thammudaiya  oozhiyakkaararmeal  kadungkoabangko'ndu,  ennaiyum  suyambaagiga'lin  thalaivanaiyum  thalaiyaariga'lin  athibathi  veedaagiya  si’raichsaalaiyilea  vaiththiruntha  kaalaththil,  (aathiyaagamam  41:10)

நானும்  அவனும்  ஒரே  ராத்திரியிலே  வெவ்வேறு  பொருள்கொண்ட  சொப்பனம்  கண்டோம்.  (ஆதியாகமம்  41:11)

naanum  avanum  orea  raaththiriyilea  vevvea’ru  poru'lko'nda  soppanam  ka'ndoam.  (aathiyaagamam  41:11)

அப்பொழுது  தலையாரிகளின்  அதிபதிக்கு  வேலைக்காரனாகிய  எபிரெய  பிள்ளையாண்டான்  ஒருவன்  அங்கே  எங்களோடே  இருந்தான்;  அவனிடத்தில்  அவைகளைச்  சொன்னோம்,  அவன்  நாங்கள்  கண்ட  சொப்பனங்களுக்குரிய  வெவ்வேறு  அர்த்தத்தின்படியே  எங்கள்  சொப்பனத்தின்  பயனைச்  சொன்னான்.  (ஆதியாகமம்  41:12)

appozhuthu  thalaiyaariga'lin  athibathikku  vealaikkaaranaagiya  ebireya  pi'l'laiyaa'ndaan  oruvan  anggea  engga'loadea  irunthaan;  avanidaththil  avaiga'laich  sonnoam,  avan  naangga'l  ka'nda  soppanangga'lukkuriya  vevvea’ru  arththaththinpadiyea  engga'l  soppanaththin  payanaich  sonnaan.  (aathiyaagamam  41:12)

அவன்  எங்களுக்குச்  சொல்லிய  அர்த்தத்தின்படியே  நடந்தது;  என்னைத்  திரும்ப  என்  நிலையிலே  நிறுத்தி,  அவனைத்  தூக்கிப்போடுவித்தார்  என்றான்.  (ஆதியாகமம்  41:13)

avan  engga'lukkuch  solliya  arththaththinpadiyea  nadanthathu;  ennaith  thirumba  en  nilaiyilea  ni’ruththi,  avanaith  thookkippoaduviththaar  en’raan.  (aathiyaagamam  41:13)

அப்பொழுது  பார்வோன்  யோசேப்பை  அழைப்பித்தான்;  அவனைத்  தீவிரமாய்க்  காவல்கிடங்கிலிருந்து  கொண்டுவந்தார்கள்.  அவன்  சவரம்பண்ணிக்கொண்டு,  வேறு  வஸ்திரம்  தரித்து,  பார்வோனிடத்தில்  வந்தான்.  (ஆதியாகமம்  41:14)

appozhuthu  paarvoan  yoaseappai  azhaippiththaan;  avanaith  theeviramaayk  kaavalkidanggilirunthu  ko'nduvanthaarga'l.  avan  savarampa'n'nikko'ndu,  vea’ru  vasthiram  thariththu,  paarvoanidaththil  vanthaan.  (aathiyaagamam  41:14)

பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  ஒரு  சொப்பனம்  கண்டேன்;  அதின்  அர்த்தத்தைச்  சொல்ல  ஒருவரும்  இல்லை;  நீ  ஒரு  சொப்பனத்தைக்  கேட்டால்,  அதின்  அர்த்தத்தைச்  சொல்லுவாய்  என்று  உன்னைக்குறித்து  நான்  கேள்விப்பட்டேன்  என்றான்.  (ஆதியாகமம்  41:15)

paarvoan  yoaseappai  noakki:  oru  soppanam  ka'ndean;  athin  arththaththaich  solla  oruvarum  illai;  nee  oru  soppanaththaik  keattaal,  athin  arththaththaich  solluvaay  en’ru  unnaikku’riththu  naan  kea'lvippattean  en’raan.  (aathiyaagamam  41:15)

அப்பொழுது  யோசேப்பு  பார்வோனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  அல்ல,  தேவனே  பார்வோனுக்கு  மங்களமான  உத்தரவு  அருளிச்செய்வார்  என்றான்.  (ஆதியாகமம்  41:16)

appozhuthu  yoaseappu  paarvoanukkup  pirathiyuththaramaaga:  naan  alla,  theavanea  paarvoanukku  mangga'lamaana  uththaravu  aru'lichseyvaar  en’raan.  (aathiyaagamam  41:16)

பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  என்  சொப்பனத்திலே,  நான்  நதி  ஓரத்தில்  நின்றுகொண்டிருந்தேன்.  (ஆதியாகமம்  41:17)

paarvoan  yoaseappai  noakki:  en  soppanaththilea,  naan  nathi  oaraththil  nin’ruko'ndirunthean.  (aathiyaagamam  41:17)

அழகும்  புஷ்டியுமான  ஏழு  பசுக்கள்  நதியிலிருந்து  ஏறிவந்து  புல்மேய்ந்தது.  (ஆதியாகமம்  41:18)

azhagum  pushdiyumaana  eazhu  pasukka'l  nathiyilirunthu  ea’rivanthu  pulmeaynthathu.  (aathiyaagamam  41:18)

அவைகளின்பின்  இளைத்ததும்  மகா  அவலட்சணமும்  கேவலமுமான  வேறே  ஏழு  பசுக்கள்  ஏறிவந்தது;  இவைகளைப்  போல  அவலட்சணமான  பசுக்களை  எகிப்துதேசமெங்கும்  நான்  கண்டதில்லை.  (ஆதியாகமம்  41:19)

avaiga'linpin  i'laiththathum  mahaa  avaladcha'namum  keavalamumaana  vea’rea  eazhu  pasukka'l  ea’rivanthathu;  ivaiga'laip  poala  avaladcha'namaana  pasukka'lai  egipthutheasamenggum  naan  ka'ndathillai.  (aathiyaagamam  41:19)

கேவலமும்  அவலட்சணமுமான  பசுக்கள்  கொழுமையான  முந்தின  ஏழு  பசுக்களையும்  பட்சித்துப்போட்டது.  (ஆதியாகமம்  41:20)

keavalamum  avaladcha'namumaana  pasukka'l  kozhumaiyaana  munthina  eazhu  pasukka'laiyum  padchiththuppoattathu.  (aathiyaagamam  41:20)

அவைகள்  இவைகளின்  வயிற்றுக்குள்  போயும்,  வயிற்றுக்குள்  போயிற்றென்று  தோன்றாமல்,  முன்  இருந்தது  போலவே  அவலட்சணமாயிருந்தது;  இப்படிக்  கண்டு  விழித்துக்கொண்டேன்.  (ஆதியாகமம்  41:21)

avaiga'l  ivaiga'lin  vayit’rukku'l  poayum,  vayit’rukku'l  poayit’ren’ru  thoan’raamal,  mun  irunthathu  poalavea  avaladcha'namaayirunthathu;  ippadik  ka'ndu  vizhiththukko'ndean.  (aathiyaagamam  41:21)

பின்னும்  நான்  என்  சொப்பனத்திலே,  நிறைமேனியுள்ள  ஏழு  நல்ல  கதிர்கள்  ஒரே  தாளிலிருந்து  ஓங்கி  வளரக்கண்டேன்.  (ஆதியாகமம்  41:22)

pinnum  naan  en  soppanaththilea,  ni’raimeaniyu'l'la  eazhu  nalla  kathirga'l  orea  thaa'lilirunthu  oanggi  va'larakka'ndean.  (aathiyaagamam  41:22)

பின்பு  சாவியானவைகளும்  கீழ்க்காற்றினால்  தீய்ந்து  பதரானவைகளுமான  ஏழு  கதிர்கள்  முளைத்தது.  (ஆதியாகமம்  41:23)

pinbu  saaviyaanavaiga'lum  keezhkkaat’rinaal  theeynthu  patharaanavaiga'lumaana  eazhu  kathirga'l  mu'laiththathu.  (aathiyaagamam  41:23)

சாவியான  கதிர்கள்  அந்த  ஏழு  நல்ல  கதிர்களையும்  விழுங்கிப்போட்டது.  இதை  மந்திரவாதிகளிடத்தில்  சொன்னேன்;  இதின்  பொருளை  எனக்கு  விடுவிக்கிறவன்  ஒருவனும்  இல்லை  என்றான்.  (ஆதியாகமம்  41:24)

saaviyaana  kathirga'l  antha  eazhu  nalla  kathirga'laiyum  vizhunggippoattathu.  ithai  manthiravaathiga'lidaththil  sonnean;  ithin  poru'lai  enakku  viduvikki’ravan  oruvanum  illai  en’raan.  (aathiyaagamam  41:24)

அப்பொழுது  யோசேப்பு  பார்வோனை  நோக்கி:  பார்வோனின்  சொப்பனம்  ஒன்றுதான்;  தேவன்  தாம்  செய்யப்போகிறது  இன்னதென்று  பார்வோனுக்கு  அறிவித்திருக்கிறார்.  (ஆதியாகமம்  41:25)

appozhuthu  yoaseappu  paarvoanai  noakki:  paarvoanin  soppanam  on’ruthaan;  theavan  thaam  seyyappoagi’rathu  innathen’ru  paarvoanukku  a’riviththirukki’raar.  (aathiyaagamam  41:25)

அந்த  ஏழு  நல்ல  பசுக்களும்  ஏழு  வருஷமாம்;  அந்த  ஏழு  நல்ல  கதிர்களும்  ஏழு  வருஷமாம்;  சொப்பனம்  ஒன்றே.  (ஆதியாகமம்  41:26)

antha  eazhu  nalla  pasukka'lum  eazhu  varushamaam;  antha  eazhu  nalla  kathirga'lum  eazhu  varushamaam;  soppanam  on’rea.  (aathiyaagamam  41:26)

அவைகளின்பின்  ஏறிவந்த  கேவலமும்  அவலட்சணமுமான  ஏழு  பசுக்களும்  ஏழு  வருஷமாம்;  கீழ்க்காற்றினால்  தீய்ந்து  சாவியான  ஏழு  கதிர்களும்  ஏழு  வருஷமாம்;  இவைகள்  பஞ்சமுள்ள  ஏழு  வருஷமாம்.  (ஆதியாகமம்  41:27)

avaiga'linpin  ea’rivantha  keavalamum  avaladcha'namumaana  eazhu  pasukka'lum  eazhu  varushamaam;  keezhkkaat’rinaal  theeynthu  saaviyaana  eazhu  kathirga'lum  eazhu  varushamaam;  ivaiga'l  pagnchamu'l'la  eazhu  varushamaam.  (aathiyaagamam  41:27)

பார்வோனுக்கு  நான்  சொல்லவேண்டிய  காரியம்  இதுவே;  தேவன்  தாம்  செய்யப்போகிறதைப்  பார்வோனுக்குக்  காண்பித்திருக்கிறார்.  (ஆதியாகமம்  41:28)

paarvoanukku  naan  sollavea'ndiya  kaariyam  ithuvea;  theavan  thaam  seyyappoagi’rathaip  paarvoanukkuk  kaa'nbiththirukki’raar.  (aathiyaagamam  41:28)

எகிப்து  தேசமெங்கும்  பரிபூரணமான  விளைவு  உண்டாயிருக்கும்  ஏழு  வருஷம்  வரும்.  (ஆதியாகமம்  41:29)

egipthu  theasamenggum  paripoora'namaana  vi'laivu  u'ndaayirukkum  eazhu  varusham  varum.  (aathiyaagamam  41:29)

அதன்பின்  பஞ்சமுண்டாயிருக்கும்  ஏழு  வருஷம்  வரும்;  அப்பொழுது  எகிப்து  தேசத்தில்  அந்தப்  பரிபூரணமெல்லாம்  மறக்கப்பட்டுப்போம்;  அந்தப்  பஞ்சம்  தேசத்தைப்  பாழாக்கும்.  (ஆதியாகமம்  41:30)

athanpin  pagnchamu'ndaayirukkum  eazhu  varusham  varum;  appozhuthu  egipthu  theasaththil  anthap  paripoora'namellaam  ma’rakkappattuppoam;  anthap  pagncham  theasaththaip  paazhaakkum.  (aathiyaagamam  41:30)

வரப்போகிற  மகா  கொடுமையான  பஞ்சத்தால்  தேசத்தில்  முன்னிருந்த  பரிபூரணமெல்லாம்  ஒழிந்துபோம்.  (ஆதியாகமம்  41:31)

varappoagi’ra  mahaa  kodumaiyaana  pagnchaththaal  theasaththil  munniruntha  paripoora'namellaam  ozhinthupoam.  (aathiyaagamam  41:31)

இந்தக்  காரியம்  தேவனால்  நிச்சயிக்கப்பட்டிருக்கிறது  என்பதையும்,  தேவன்  இதைச்  சீக்கிரத்தில்  செய்வார்  என்பதையும்  குறிக்கும்பொருட்டு,  இந்தச்  சொப்பனம்  பார்வோனுக்கு  இரட்டித்தது.  (ஆதியாகமம்  41:32)

inthak  kaariyam  theavanaal  nichchayikkappattirukki’rathu  enbathaiyum,  theavan  ithaich  seekkiraththil  seyvaar  enbathaiyum  ku’rikkumporuttu,  inthach  soppanam  paarvoanukku  irattiththathu.  (aathiyaagamam  41:32)

ஆகையால்,  விவேகமும்  ஞானமுமுள்ள  ஒரு  மனுஷனைத்  தேடி,  அவனை  எகிப்துதேசத்துக்கு  அதிகாரியாகப்  பார்வோன்  ஏற்படுத்துவாராக.  (ஆதியாகமம்  41:33)

aagaiyaal,  viveagamum  gnaanamumu'l'la  oru  manushanaith  theadi,  avanai  egipthutheasaththukku  athigaariyaagap  paarvoan  ea’rpaduththuvaaraaga.  (aathiyaagamam  41:33)

இப்படிப்  பார்வோன்  செய்து,  தேசத்தின்மேல்  விசாரணைக்காரரை  வைத்து,  பரிபூரணமுள்ள  ஏழு  வருஷங்களில்  எகிப்துதேசத்திலே  விளையும்  விளைச்சலில்  ஐந்தில்  ஒரு  பங்கை  வாங்கும்படி  செய்வாராக.  (ஆதியாகமம்  41:34)

ippadip  paarvoan  seythu,  theasaththinmeal  visaara'naikkaararai  vaiththu,  paripoora'namu'l'la  eazhu  varushangga'lil  egipthutheasaththilea  vi'laiyum  vi'laichchalil  ainthil  oru  panggai  vaanggumpadi  seyvaaraaga.  (aathiyaagamam  41:34)

அவர்கள்  வரப்போகிற  நல்ல  வருஷங்களில்  விளையும்  தானியங்களையெல்லாம்  சேர்த்து,  பட்டணங்களில்  ஆகாரம்  உண்டாயிருக்கும்படிக்கு,  பார்வோனுடைய  அதிகாரத்துக்குள்ளாகத்  தானியங்களைப்  பத்திரப்படுத்தி  வைத்துவைப்பார்களாக.  (ஆதியாகமம்  41:35)

avarga'l  varappoagi’ra  nalla  varushangga'lil  vi'laiyum  thaaniyangga'laiyellaam  searththu,  patta'nangga'lil  aagaaram  u'ndaayirukkumpadikku,  paarvoanudaiya  athigaaraththukku'l'laagath  thaaniyangga'laip  paththirappaduththi  vaiththuvaippaarga'laaga.  (aathiyaagamam  41:35)

தேசம்  பஞ்சத்தினால்  அழிந்து  போகாதபடிக்கு,  அந்தத்  தானியம்  இனி  எகிப்துதேசத்தில்  உண்டாகும்  பஞ்சமுள்ள  ஏழு  வருஷங்களுக்காக  தேசத்திற்கு  ஒரு  வைப்பாயிருப்பதாக  என்றான்.  (ஆதியாகமம்  41:36)

theasam  pagnchaththinaal  azhinthu  poagaathapadikku,  anthath  thaaniyam  ini  egipthutheasaththil  u'ndaagum  pagnchamu'l'la  eazhu  varushangga'lukkaaga  theasaththi’rku  oru  vaippaayiruppathaaga  en’raan.  (aathiyaagamam  41:36)

இந்த  வார்த்தை  பார்வோனுடைய  பார்வைக்கும்  அவன்  ஊழியக்காரர்  எல்லாருடைய  பார்வைக்கும்  நன்றாய்க்  கண்டது.  (ஆதியாகமம்  41:37)

intha  vaarththai  paarvoanudaiya  paarvaikkum  avan  oozhiyakkaarar  ellaarudaiya  paarvaikkum  nan’raayk  ka'ndathu.  (aathiyaagamam  41:37)

அப்பொழுது  பார்வோன்  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  தேவ  ஆவியைப்  பெற்ற  இந்த  மனுஷனைப்போல  வேறொருவன்  உண்டோ  என்றான்.  (ஆதியாகமம்  41:38)

appozhuthu  paarvoan  than  oozhiyakkaararai  noakki:  theava  aaviyaip  pet’ra  intha  manushanaippoala  vea’roruvan  u'ndoa  en’raan.  (aathiyaagamam  41:38)

பின்பு,  பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  தேவன்  இவையெல்லாவற்றையும்  உனக்கு  வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,  உன்னைப்போல  விவேகமும்  ஞானமுமுள்ளவன்  வேறொருவனும்  இல்லை.  (ஆதியாகமம்  41:39)

pinbu,  paarvoan  yoaseappai  noakki:  theavan  ivaiyellaavat’raiyum  unakku  ve'lippaduththiyirukki’rapadiyaal,  unnaippoala  viveagamum  gnaanamumu'l'lavan  vea’roruvanum  illai.  (aathiyaagamam  41:39)

நீ  என்  அரமனைக்கு  அதிகாரியாயிருப்பாய்;  உன்  வாக்கின்படியே  என்  ஜனங்கள்  எல்லாரும்  அடங்கி  நடக்கக்கடவர்கள்;  சிங்காசனத்தில்மாத்திரம்  உன்னிலும்  நான்  பெரியவனாய்  இருப்பேன்  என்றான்.  (ஆதியாகமம்  41:40)

nee  en  aramanaikku  athigaariyaayiruppaay;  un  vaakkinpadiyea  en  janangga'l  ellaarum  adanggi  nadakkakkadavarga'l;  singgaasanaththilmaaththiram  unnilum  naan  periyavanaay  iruppean  en’raan.  (aathiyaagamam  41:40)

பின்னும்  பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  பார்,  எகிப்துதேசம்  முழுமைக்கும்  உன்னை  அதிகாரியாக்கினேன்  என்று  சொல்லி,  (ஆதியாகமம்  41:41)

pinnum  paarvoan  yoaseappai  noakki:  paar,  egipthutheasam  muzhumaikkum  unnai  athigaariyaakkinean  en’ru  solli,  (aathiyaagamam  41:41)

பார்வோன்  தன்  கையில்  போட்டிருந்த  தன்  முத்திரை  மோதிரத்தைக்  கழற்றி,  அதை  யோசேப்பின்  கையிலே  போட்டு,  மெல்லிய  வஸ்திரங்களை  அவனுக்கு  உடுத்தி,  பொன்  சரப்பணியை  அவன்  கழுத்திலே  தரித்து,  (ஆதியாகமம்  41:42)

paarvoan  than  kaiyil  poattiruntha  than  muththirai  moathiraththaik  kazhat’ri,  athai  yoaseappin  kaiyilea  poattu,  melliya  vasthirangga'lai  avanukku  uduththi,  pon  sarappa'niyai  avan  kazhuththilea  thariththu,  (aathiyaagamam  41:42)

தன்னுடைய  இரண்டாம்  இரதத்தின்மேல்  அவனை  ஏற்றி,  தெண்டனிட்டுப்  பணியுங்கள்  என்று  அவனுக்கு  முன்பாகக்  கூறுவித்து,  எகிப்துதேசம்  முழுமைக்கும்  அவனை  அதிகாரியாக்கினான்;  (ஆதியாகமம்  41:43)

thannudaiya  ira'ndaam  irathaththinmeal  avanai  eat’ri,  the'ndanittup  pa'niyungga'l  en’ru  avanukku  munbaagak  koo’ruviththu,  egipthutheasam  muzhumaikkum  avanai  athigaariyaakkinaan;  (aathiyaagamam  41:43)

பின்னும்  பார்வோன்  யோசேப்பை  நோக்கி:  நான்  பார்வோன்;  ஆனாலும்  எகிப்துதேசத்திலுள்ளவர்களில்  ஒருவனும்  உன்  உத்தரவில்லாமல்  தன்  கையையாவது  தன்  காலையாவது  அசைக்கக்கூடாது  என்றான்.  (ஆதியாகமம்  41:44)

pinnum  paarvoan  yoaseappai  noakki:  naan  paarvoan;  aanaalum  egipthutheasaththilu'l'lavarga'lil  oruvanum  un  uththaravillaamal  than  kaiyaiyaavathu  than  kaalaiyaavathu  asaikkakkoodaathu  en’raan.  (aathiyaagamam  41:44)

மேலும்,  பார்வோன்  யோசேப்புக்கு  சாப்நாத்பன்னேயா  என்கிற  பெயரையிட்டு;  ஓன்பட்டணத்து  ஆசாரியனாகிய  போத்திபிராவின்  குமாரத்தியாகிய  ஆஸ்நாத்தை  அவனுக்கு  மனைவியாகக்  கொடுத்தான்.  யோசேப்பு  எகிப்துதேசத்தைச்  சுற்றிப்பார்க்கும்படி  புறப்பட்டான்.  (ஆதியாகமம்  41:45)

mealum,  paarvoan  yoaseappukku  saapnaathpanneayaa  engi’ra  peyaraiyittu;  oanpatta'naththu  aasaariyanaagiya  poaththipiraavin  kumaaraththiyaagiya  aasnaaththai  avanukku  manaiviyaagak  koduththaan.  yoaseappu  egipthutheasaththaich  sut’rippaarkkumpadi  pu’rappattaan.  (aathiyaagamam  41:45)

யோசேப்பு  எகிப்தின்  ராஜாவாகிய  பார்வோனுக்கு  முன்பாக  நிற்கும்போது  முப்பது  வயதாயிருந்தான்;  யோசேப்பு  பார்வோனுடைய  சந்நிதியிலிருந்து  புறப்பட்டு,  எகிப்துதேசம்  எங்கும்  போய்ச்  சுற்றிப்பார்த்தான்.  (ஆதியாகமம்  41:46)

yoaseappu  egipthin  raajaavaagiya  paarvoanukku  munbaaga  ni’rkumpoathu  muppathu  vayathaayirunthaan;  yoaseappu  paarvoanudaiya  sannithiyilirunthu  pu’rappattu,  egipthutheasam  enggum  poaych  sut’rippaarththaan.  (aathiyaagamam  41:46)

பரிபூரணமுள்ள  ஏழு  வருஷங்களிலும்  பூமி  மிகுதியான  பலனைக்  கொடுத்தது.  (ஆதியாகமம்  41:47)

paripoora'namu'l'la  eazhu  varushangga'lilum  boomi  miguthiyaana  palanaik  koduththathu.  (aathiyaagamam  41:47)

அவ்வேழு  வருஷங்களில்  எகிப்து  தேசத்தில்  விளைந்த  தானியங்களையெல்லாம்  அவன்  சேர்த்து,  அந்தத்  தானியங்களைப்  பட்டணங்களில்  கட்டிவைத்தான்;  அந்தந்தப்  பட்டணத்தில்  அதினதின்  சுற்றுப்புறத்துத்  தானியங்களைக்  கட்டிவைத்தான்.  (ஆதியாகமம்  41:48)

avveazhu  varushangga'lil  egipthu  theasaththil  vi'laintha  thaaniyangga'laiyellaam  avan  searththu,  anthath  thaaniyangga'laip  patta'nangga'lil  kattivaiththaan;  anthanthap  patta'naththil  athinathin  sut’ruppu’raththuth  thaaniyangga'laik  kattivaiththaan.  (aathiyaagamam  41:48)

இப்படி  யோசேப்பு  அளவிறந்ததாய்க்  கடற்கரை  மணலைப்போல  மிகுதியாகத்  தானியத்தைச்  சேர்த்துவைத்தான்;  அது  அளவுக்கு  அடங்காததாயிருந்தது.  (ஆதியாகமம்  41:49)

ippadi  yoaseappu  a'lavi’ranthathaayk  kada’rkarai  ma'nalaippoala  miguthiyaagath  thaaniyaththaich  searththuvaiththaan;  athu  a'lavukku  adanggaathathaayirunthathu.  (aathiyaagamam  41:49)

பஞ்சமுள்ள  வருஷங்கள்  வருவதற்கு  முன்னே  யோசேப்புக்கு  இரண்டு  குமாரர்  பிறந்தார்கள்;  அவர்களை  ஓன்  பட்டணத்து  ஆசாரியனாகிய  போத்திபிராவின்  குமாரத்தியாகிய  ஆஸ்நாத்து  அவனுக்குப்  பெற்றாள்.  (ஆதியாகமம்  41:50)

pagnchamu'l'la  varushangga'l  varuvatha’rku  munnea  yoaseappukku  ira'ndu  kumaarar  pi’ranthaarga'l;  avarga'lai  oan  patta'naththu  aasaariyanaagiya  poaththipiraavin  kumaaraththiyaagiya  aasnaaththu  avanukkup  pet’raa'l.  (aathiyaagamam  41:50)

யோசேப்பு:  என்  வருத்தம்  யாவையும்  என்  தகப்பனுடைய  குடும்பம்  அனைத்தையும்  நான்  மறக்கும்படி  தேவன்  பண்ணினார்  என்று  சொல்லி,  மூத்தவனுக்கு  மனாசே  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  41:51)

yoaseappu:  en  varuththam  yaavaiyum  en  thagappanudaiya  kudumbam  anaiththaiyum  naan  ma’rakkumpadi  theavan  pa'n'ninaar  en’ru  solli,  mooththavanukku  manaasea  en’ru  pearittaan.  (aathiyaagamam  41:51)

நான்  சிறுமைப்பட்டிருந்த  தேசத்தில்  தேவன்  என்னைப்  பலுகப்பண்ணினார்  என்று  சொல்லி,  இளையவனுக்கு  எப்பிராயீம்  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  41:52)

naan  si’rumaippattiruntha  theasaththil  theavan  ennaip  palugappa'n'ninaar  en’ru  solli,  i'laiyavanukku  eppiraayeem  en’ru  pearittaan.  (aathiyaagamam  41:52)

எகிப்துதேசத்தில்  வந்த  பரிபூரணமுள்ள  ஏழு  வருஷங்களும்  முடிந்தபின்,  (ஆதியாகமம்  41:53)

egipthutheasaththil  vantha  paripoora'namu'l'la  eazhu  varushangga'lum  mudinthapin,  (aathiyaagamam  41:53)

யோசேப்பு  சொல்லியபடி  ஏழு  வருஷ  பஞ்சம்  தொடங்கினது;  சகல  தேசங்களிலும்  பஞ்சம்  உண்டாயிற்று;  ஆனாலும்  எகிப்துதேசமெங்கும்  ஆகாரம்  இருந்தது.  (ஆதியாகமம்  41:54)

yoaseappu  solliyapadi  eazhu  varusha  pagncham  thodangginathu;  sagala  theasangga'lilum  pagncham  u'ndaayit’ru;  aanaalum  egipthutheasamenggum  aagaaram  irunthathu.  (aathiyaagamam  41:54)

எகிப்துதேசமெங்கும்  பஞ்சம்  உண்டானபோது,  ஜனங்கள்  உணவுக்காகப்  பார்வோனை  நோக்கி  ஓலமிட்டார்கள்;  அதற்குப்  பார்வோன்:  நீங்கள்  யோசேப்பினிடத்துக்குப்  போய்,  அவன்  உங்களுக்குச்  சொல்லுகிறபடி  செய்யுங்கள்  என்று  எகிப்தியர்  எல்லாருக்கும்  சொன்னான்.  (ஆதியாகமம்  41:55)

egipthutheasamenggum  pagncham  u'ndaanapoathu,  janangga'l  u'navukkaagap  paarvoanai  noakki  oalamittaarga'l;  atha’rkup  paarvoan:  neengga'l  yoaseappinidaththukkup  poay,  avan  ungga'lukkuch  sollugi’rapadi  seyyungga'l  en’ru  egipthiyar  ellaarukkum  sonnaan.  (aathiyaagamam  41:55)

தேசமெங்கும்  பஞ்சம்  உண்டானபடியால்,  யோசேப்பு  களஞ்சியங்களையெல்லாம்  திறந்து,  எகிப்தியருக்கு  விற்றான்;  பஞ்சம்  எகிப்துதேசத்தில்  வரவரக்  கொடிதாயிற்று.  (ஆதியாகமம்  41:56)

theasamenggum  pagncham  u'ndaanapadiyaal,  yoaseappu  ka'lagnchiyangga'laiyellaam  thi’ranthu,  egipthiyarukku  vit’raan;  pagncham  egipthutheasaththil  varavarak  kodithaayit’ru.  (aathiyaagamam  41:56)

சகல  தேசங்களிலும்  பஞ்சம்  கொடிதாயிருந்தபடியால்,  சகல  தேசத்தார்களும்  யோசேப்பினிடத்தில்  தானியம்  கொள்ளும்படி  எகிப்துக்கு  வந்தார்கள்.  (ஆதியாகமம்  41:57)

sagala  theasangga'lilum  pagncham  kodithaayirunthapadiyaal,  sagala  theasaththaarga'lum  yoaseappinidaththil  thaaniyam  ko'l'lumpadi  egipthukku  vanthaarga'l.  (aathiyaagamam  41:57)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!