Monday, June 27, 2016

Aathiyaagamam 40 | ஆதியாகமம் 40 | Genesis 40


இந்த  நடபடிகளுக்குப்பின்பு,  எகிப்து  ராஜாவுக்குப்  பானபாத்திரக்காரனும்  சுயம்பாகியும்  எகிப்து  ராஜாவாகிய  தங்கள்  ஆண்டவனுக்குக்  குற்றம்  செய்தார்கள்.  (ஆதியாகமம்  40:1)

intha  nadapadiga'lukkuppinbu,  egipthu  raajaavukkup  baanapaaththirakkaaranum  suyambaagiyum  egipthu  raajaavaagiya  thangga'l  aa'ndavanukkuk  kut’ram  seythaarga'l.  (aathiyaagamam  40:1)

பார்வோன்  தன்  பானபாத்திரக்காரரின்  தலைவனும்  சுயம்பாகிகளின்  தலைவனும்  ஆகிய  இவ்விரண்டு  பிரதானிகள்  மேலும்  கடுங்கோபங்கொண்டு,  (ஆதியாகமம்  40:2)

paarvoan  than  baanapaaththirakkaararin  thalaivanum  suyambaagiga'lin  thalaivanum  aagiya  ivvira'ndu  pirathaaniga'l  mealum  kadungkoabangko'ndu,  (aathiyaagamam  40:2)

அவர்களை  யோசேப்பு  வைக்கப்பட்டிருந்த  இடமும்  தலையாரிகளின்  அதிபதியின்  வீடுமாகிய  சிறைச்சாலையிலே  காவல்  பண்ணுவித்தான்.  (ஆதியாகமம்  40:3)

avarga'lai  yoaseappu  vaikkappattiruntha  idamum  thalaiyaariga'lin  athibathiyin  veedumaagiya  si’raichsaalaiyilea  kaaval  pa'n'nuviththaan.  (aathiyaagamam  40:3)

தலையாரிகளின்  அதிபதி  அவர்களை  விசாரிக்கும்படி  யோசேப்பின்  வசத்தில்  ஒப்புவித்தான்;  அவன்  அவர்களை  விசாரித்துவந்தான்;  அவர்கள்  அநேகநாள்  காவலில்  இருந்தார்கள்.  (ஆதியாகமம்  40:4)

thalaiyaariga'lin  athibathi  avarga'lai  visaarikkumpadi  yoaseappin  vasaththil  oppuviththaan;  avan  avarga'lai  visaariththuvanthaan;  avarga'l  aneaganaa'l  kaavalil  irunthaarga'l.  (aathiyaagamam  40:4)

எகிப்து  ராஜாவுக்குப்  பானபாத்திரக்காரனும்  சுயம்பாகியுமாகிய  அவ்விரண்டுபேரும்  சிறைச்சாலையில்  இருக்கும்போது,  ஒரே  ராத்திரியிலே  வெவ்வேறு  பொருள்கொண்ட  சொப்பனம்  கண்டார்கள்.  (ஆதியாகமம்  40:5)

egipthu  raajaavukkup  baanapaaththirakkaaranum  suyambaagiyumaagiya  avvira'ndupearum  si’raichsaalaiyil  irukkumpoathu,  orea  raaththiriyilea  vevvea’ru  poru'lko'nda  soppanam  ka'ndaarga'l.  (aathiyaagamam  40:5)

காலமே  யோசேப்பு  அவர்களிடத்தில்  போய்,  அவர்களைப்  பார்க்கும்போது,  அவர்கள்  கலங்கியிருந்தார்கள்.  (ஆதியாகமம்  40:6)

kaalamea  yoaseappu  avarga'lidaththil  poay,  avarga'laip  paarkkumpoathu,  avarga'l  kalanggiyirunthaarga'l.  (aathiyaagamam  40:6)

அப்பொழுது  அவன்  தன்  எஜமானுடைய  வீட்டில்  தன்னோடே  காவல்பண்ணப்பட்டிருந்த  பார்வோனுடைய  பிரதானிகளை  நோக்கி:  உங்கள்  முகங்கள்  இன்று  துக்கமாயிருக்கிறது  என்ன  என்று  கேட்டான்.  (ஆதியாகமம்  40:7)

appozhuthu  avan  than  ejamaanudaiya  veettil  thannoadea  kaavalpa'n'nappattiruntha  paarvoanudaiya  pirathaaniga'lai  noakki:  ungga'l  mugangga'l  in’ru  thukkamaayirukki’rathu  enna  en’ru  keattaan.  (aathiyaagamam  40:7)

அதற்கு  அவர்கள்:  சொப்பனம்  கண்டோம்,  அதற்கு  அர்த்தம்  சொல்லுகிறவன்  ஒருவனும்  இல்லை  என்றார்கள்.  அதற்கு  யோசேப்பு:  சொப்பனத்துக்கு  அர்த்தம்  சொல்லுதல்  தேவனுக்குரியதல்லவா?  அவைகளை  என்னிடத்தில்  சொல்லுங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  40:8)

atha’rku  avarga'l:  soppanam  ka'ndoam,  atha’rku  arththam  sollugi’ravan  oruvanum  illai  en’raarga'l.  atha’rku  yoaseappu:  soppanaththukku  arththam  solluthal  theavanukkuriyathallavaa?  avaiga'lai  ennidaththil  sollungga'l  en’raan.  (aathiyaagamam  40:8)

அப்பொழுது  பானபாத்திரக்காரரின்  தலைவன்  யோசேப்பை  நோக்கி:  என்  சொப்பனத்திலே  ஒரு  திராட்சச்செடி  எனக்கு  முன்பாக  இருக்கக்கண்டேன்.  (ஆதியாகமம்  40:9)

appozhuthu  baanapaaththirakkaararin  thalaivan  yoaseappai  noakki:  en  soppanaththilea  oru  thiraadchachsedi  enakku  munbaaga  irukkakka'ndean.  (aathiyaagamam  40:9)

அந்தத்  திராட்சச்செடியிலே  மூன்று  கொடிகள்  இருந்தது;  அது  துளிர்க்கிறதாயிருந்தது;  அதில்  பூக்கள்  மலர்ந்திருந்தது;  அதின்  குலைகள்  பழுத்த  பழங்களாயிருந்தது.  (ஆதியாகமம்  40:10)

anthath  thiraadchachsediyilea  moon’ru  kodiga'l  irunthathu;  athu  thu'lirkki’rathaayirunthathu;  athil  pookka'l  malarnthirunthathu;  athin  kulaiga'l  pazhuththa  pazhangga'laayirunthathu.  (aathiyaagamam  40:10)

பார்வோனுடைய  பாத்திரம்  என்  கையிலே  இருந்தது;  நான்  அந்தப்  பழங்களைப்  பறித்து,  அவைகளைப்  பார்வோனுடைய  பாத்திரத்தில்  பிழிந்து,  அந்தப்  பாத்திரத்தைப்  பார்வோனுடைய  கையிலே  கொடுத்தேன்  என்று,  தன்  சொப்பனத்தைச்  சொன்னான்.  (ஆதியாகமம்  40:11)

paarvoanudaiya  paaththiram  en  kaiyilea  irunthathu;  naan  anthap  pazhangga'laip  pa’riththu,  avaiga'laip  paarvoanudaiya  paaththiraththil  pizhinthu,  anthap  paaththiraththaip  paarvoanudaiya  kaiyilea  koduththean  en’ru,  than  soppanaththaich  sonnaan.  (aathiyaagamam  40:11)

அதற்கு  யோசேப்பு:  அந்த  மூன்று  கொடிகளும்  மூன்று  நாளாம்.  (ஆதியாகமம்  40:12)

atha’rku  yoaseappu:  antha  moon’ru  kodiga'lum  moon’ru  naa'laam.  (aathiyaagamam  40:12)

மூன்று  நாளைக்குள்ளே  பார்வோன்  உன்  தலையை  உயர்த்தி,  உன்னை  மறுபடியும்  உன்  நிலையிலே  நிறுத்துவார்;  முன்னே  அவருக்குப்  பானம்  கொடுத்துவந்த  வழக்கத்தின்படி  பார்வோனின்  பாத்திரத்தை  அவர்  கையிலே  கொடுப்பாய்;  (ஆதியாகமம்  40:13)

moon’ru  naa'laikku'l'lea  paarvoan  un  thalaiyai  uyarththi,  unnai  ma’rupadiyum  un  nilaiyilea  ni’ruththuvaar;  munnea  avarukkup  baanam  koduththuvantha  vazhakkaththinpadi  paarvoanin  paaththiraththai  avar  kaiyilea  koduppaay;  (aathiyaagamam  40:13)

இதுதான்  அதின்  அர்த்தம்  என்று  சொன்னதும்  அன்றி,  நீ  வாழ்வடைந்திருக்கும்போது,  என்னை  நினைத்து,  என்மேல்  தயவுவைத்து,  என்  காரியத்தைப்  பார்வோனுக்கு  அறிவித்து,  இந்த  இடத்திலிருந்து  என்னை  விடுதலையாக்கவேண்டும்.  (ஆதியாகமம்  40:14)

ithuthaan  athin  arththam  en’ru  sonnathum  an’ri,  nee  vaazhvadainthirukkumpoathu,  ennai  ninaiththu,  enmeal  thayavuvaiththu,  en  kaariyaththaip  paarvoanukku  a’riviththu,  intha  idaththilirunthu  ennai  viduthalaiyaakkavea'ndum.  (aathiyaagamam  40:14)

நான்  எபிரெயருடைய  தேசத்திலிருந்து  களவாய்க்  கொண்டுவரப்பட்டேன்;  என்னை  இந்தக்  காவல்  கிடங்கில்  வைக்கும்படிக்கும்  நான்  இவ்விடத்தில்  ஒன்றும்  செய்யவில்லை  என்றும்  சொன்னான்.  (ஆதியாகமம்  40:15)

naan  ebireyarudaiya  theasaththilirunthu  ka'lavaayk  ko'nduvarappattean;  ennai  inthak  kaaval  kidanggil  vaikkumpadikkum  naan  ivvidaththil  on’rum  seyyavillai  en’rum  sonnaan.  (aathiyaagamam  40:15)

அர்த்தம்  நன்றாயிருக்கிறது  என்று  சுயம்பாகிகளின்  தலைவன்  கண்டு,  யோசேப்பை  நோக்கி:  நானும்  என்  சொப்பனத்தில்  மூன்று  வெள்ளைக்  கூடைகள்  என்  தலையின்மேல்  இருக்கக்கண்டேன்;  (ஆதியாகமம்  40:16)

arththam  nan’raayirukki’rathu  en’ru  suyambaagiga'lin  thalaivan  ka'ndu,  yoaseappai  noakki:  naanum  en  soppanaththil  moon’ru  ve'l'laik  koodaiga'l  en  thalaiyinmeal  irukkakka'ndean;  (aathiyaagamam  40:16)

மேற்கூடையிலே  பார்வோனுக்காகச்  சமைக்கப்பட்ட  சகலவித  பலகாரங்களிலும்  கொஞ்சம்  கொஞ்சம்  இருந்தது;  என்  தலையின்மேல்  கூடையில்  இருந்தவைகளைப்  பறவைகள்  வந்து  பட்சித்தது  என்றான்.  (ஆதியாகமம்  40:17)

mea’rkoodaiyilea  paarvoanukkaagach  samaikkappatta  sagalavitha  palagaarangga'lilum  kogncham  kogncham  irunthathu;  en  thalaiyinmeal  koodaiyil  irunthavaiga'laip  pa’ravaiga'l  vanthu  padchiththathu  en’raan.  (aathiyaagamam  40:17)

அதற்கு  யோசேப்பு:  அந்த  மூன்று  கூடைகளும்  மூன்று  நாளாம்.  (ஆதியாகமம்  40:18)

atha’rku  yoaseappu:  antha  moon’ru  koodaiga'lum  moon’ru  naa'laam.  (aathiyaagamam  40:18)

இன்னும்  மூன்று  நாளைக்குள்ளே  பார்வோன்  உன்  தலையை  உயர்த்தி,  உன்னை  மரத்திலே  தூக்கிப்போடுவார்;  அப்பொழுது  பறவைகள்  உன்  மாம்சத்தைத்  தின்னும்,  இதுதான்  அதின்  அர்த்தம்  என்று  சொன்னான்.  (ஆதியாகமம்  40:19)

innum  moon’ru  naa'laikku'l'lea  paarvoan  un  thalaiyai  uyarththi,  unnai  maraththilea  thookkippoaduvaar;  appozhuthu  pa’ravaiga'l  un  maamsaththaith  thinnum,  ithuthaan  athin  arththam  en’ru  sonnaan.  (aathiyaagamam  40:19)

மூன்றாம்  நாள்  பார்வோனுடைய  ஜன்ம  நாளாயிருந்தது;  அவன்  தன்  ஊழியக்காரர்  எல்லாருக்கும்  விருந்துபண்ணி,  பானபாத்திரக்காரருடைய  தலைவன்  தலையையும்  சுயம்பாகிகளுடைய  தலைவன்  தலையையும்  தன்  உத்தியோகஸ்தரின்  நடுவே  உயர்த்தி,  (ஆதியாகமம்  40:20)

moon’raam  naa'l  paarvoanudaiya  janma  naa'laayirunthathu;  avan  than  oozhiyakkaarar  ellaarukkum  virunthupa'n'ni,  baanapaaththirakkaararudaiya  thalaivan  thalaiyaiyum  suyambaagiga'ludaiya  thalaivan  thalaiyaiyum  than  uththiyoagastharin  naduvea  uyarththi,  (aathiyaagamam  40:20)

பானபாத்திரக்காரரின்  தலைவனைப்  பானங்கொடுக்கிற  தன்  உத்தியோகத்திலே  மறுபடியும்  வைத்தான்;  அந்தப்படியே  அவன்  பார்வோனுடைய  கையிலே  பாத்திரத்தைக்  கொடுத்தான்.  (ஆதியாகமம்  40:21)

baanapaaththirakkaararin  thalaivanaip  baanangkodukki’ra  than  uththiyoagaththilea  ma’rupadiyum  vaiththaan;  anthappadiyea  avan  paarvoanudaiya  kaiyilea  paaththiraththaik  koduththaan.  (aathiyaagamam  40:21)

சுயம்பாகிகளின்  தலைவனையோ  தூக்கிப்போட்டான்.  யோசேப்பு  அவர்களுக்குச்  சொன்ன  அர்த்தத்தின்படியே  சம்பவித்தது.  (ஆதியாகமம்  40:22)

suyambaagiga'lin  thalaivanaiyoa  thookkippoattaan.  yoaseappu  avarga'lukkuch  sonna  arththaththinpadiyea  sambaviththathu.  (aathiyaagamam  40:22)

ஆனாலும்  பானபாத்திரக்காரரின்  தலைவன்  யோசேப்பை  நினையாமல்  அவனை  மறந்துவிட்டான்.  (ஆதியாகமம்  40:23)

aanaalum  baanapaaththirakkaararin  thalaivan  yoaseappai  ninaiyaamal  avanai  ma’ranthuvittaan.  (aathiyaagamam  40:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!