Monday, June 27, 2016

Aathiyaagamam 39 | ஆதியாகமம் 39 | Genesis 39


யோசேப்பு  எகிப்துக்குக்  கொண்டுபோகப்பட்டான்.  பார்வோனுடைய  பிரதானியும்  தலையாரிகளுக்கு  அதிபதியுமாகிய  போத்திபார்  என்னும்  எகிப்து  தேசத்தான்  அவனை  அவ்விடத்திற்குக்  கொண்டுவந்த  இஸ்மவேலரிடத்தில்  விலைக்கு  வாங்கினான்.  (ஆதியாகமம்  39:1)

yoaseappu  egipthukkuk  ko'ndupoagappattaan.  paarvoanudaiya  pirathaaniyum  thalaiyaariga'lukku  athibathiyumaagiya  poaththipaar  ennum  egipthu  theasaththaan  avanai  avvidaththi’rkuk  ko'nduvantha  ismavealaridaththil  vilaikku  vaangginaan.  (aathiyaagamam  39:1)

கர்த்தர்  யோசேப்போடே  இருந்தார்,  அவன்  காரியசித்தியுள்ளவனானான்;  அவன்  எகிப்தியனாகிய  தன்  எஜமானுடைய  வீட்டிலே  இருந்தான்.  (ஆதியாகமம்  39:2)

karththar  yoaseappoadea  irunthaar,  avan  kaariyasiththiyu'l'lavanaanaan;  avan  egipthiyanaagiya  than  ejamaanudaiya  veettilea  irunthaan.  (aathiyaagamam  39:2)

கர்த்தர்  அவனோடே  இருக்கிறார்  என்றும்,  அவன்  செய்கிற  யாவையும்  கர்த்தர்  வாய்க்கப்பண்ணுகிறார்  என்றும்,  அவன்  எஜமான்  கண்டு;  (ஆதியாகமம்  39:3)

karththar  avanoadea  irukki’raar  en’rum,  avan  seygi’ra  yaavaiyum  karththar  vaaykkappa'n'nugi’raar  en’rum,  avan  ejamaan  ka'ndu;  (aathiyaagamam  39:3)

யோசேப்பினிடத்தில்  தயவுவைத்து,  அவனைத்  தனக்கு  ஊழியக்காரனும்  தன்  வீட்டுக்கு  விசாரணைக்காரனுமாக்கி,  தனக்கு  உண்டான  யாவற்றையும்  அவன்  கையில்  ஒப்புவித்தான்.  (ஆதியாகமம்  39:4)

yoaseappinidaththil  thayavuvaiththu,  avanaith  thanakku  oozhiyakkaaranum  than  veettukku  visaara'naikkaaranumaakki,  thanakku  u'ndaana  yaavat’raiyum  avan  kaiyil  oppuviththaan.  (aathiyaagamam  39:4)

அவனைத்  தன்  வீட்டுக்கும்  தனக்கு  உண்டான  எல்லாவற்றிற்கும்  விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு,  கர்த்தர்  யோசேப்பினிமித்தம்  அந்த  எகிப்தியன்  வீட்டை  ஆசீர்வதித்தார்;  வீட்டிலும்  வெளியிலும்  அவனுக்கு  உண்டானவைகள்  எல்லாவற்றிலும்  கர்த்தருடைய  ஆசீர்வாதம்  இருந்தது.  (ஆதியாகமம்  39:5)

avanaith  than  veettukkum  thanakku  u'ndaana  ellaavat’ri’rkum  visaara'naikkaaranaakkinathumutha’rko'ndu,  karththar  yoaseappinimiththam  antha  egipthiyan  veettai  aaseervathiththaar;  veettilum  ve'liyilum  avanukku  u'ndaanavaiga'l  ellaavat’rilum  karththarudaiya  aaseervaatham  irunthathu.  (aathiyaagamam  39:5)

ஆகையால்,  அவன்  தனக்கு  உண்டானதையெல்லாம்  யோசேப்பின்  கையிலே  ஒப்புக்கொடுத்துவிட்டு,  தான்  புசிக்கிற  போஜனம்தவிர  தன்னிடத்திலிருந்த  மற்றொன்றைக்குறித்தும்  விசாரியாதிருந்தான்.  யோசேப்பு  அழகான  ரூபமும்  சௌந்தரிய  முகமும்  உள்ளவனாயிருந்தான்.  (ஆதியாகமம்  39:6)

aagaiyaal,  avan  thanakku  u'ndaanathaiyellaam  yoaseappin  kaiyilea  oppukkoduththuvittu,  thaan  pusikki’ra  poajanamthavira  thannidaththiliruntha  mat’ron’raikku’riththum  visaariyaathirunthaan.  yoaseappu  azhagaana  roobamum  saunthariya  mugamum  u'l'lavanaayirunthaan.  (aathiyaagamam  39:6)

சிலநாள்  சென்றபின்,  அவனுடைய  எஜமானின்  மனைவி  யோசேப்பின்மேல்  கண்போட்டு,  என்னோடே  சயனி  என்றாள்.  (ஆதியாகமம்  39:7)

silanaa'l  sen’rapin,  avanudaiya  ejamaanin  manaivi  yoaseappinmeal  ka'npoattu,  ennoadea  sayani  en’raa'l.  (aathiyaagamam  39:7)

அவனோ  தன்  எஜமானுடைய  மனைவியின்  சொல்லுக்கு  இணங்காமல்,  அவளை  நோக்கி:  இதோ,  வீட்டிலே  என்னிடத்தில்  இருக்கிறவைகளில்  யாதொன்றைக்குறித்தும்  என்  ஆண்டவன்  விசாரியாமல்,  தமக்கு  உண்டான  எல்லாவற்றையும்  என்  கையில்  ஒப்பித்திருக்கிறார்.  (ஆதியாகமம்  39:8)

avanoa  than  ejamaanudaiya  manaiviyin  sollukku  i'nanggaamal,  ava'lai  noakki:  ithoa,  veettilea  ennidaththil  irukki’ravaiga'lil  yaathon’raikku’riththum  en  aa'ndavan  visaariyaamal,  thamakku  u'ndaana  ellaavat’raiyum  en  kaiyil  oppiththirukki’raar.  (aathiyaagamam  39:8)

இந்த  வீட்டிலே  என்னிலும்  பெரியவன்  இல்லை;  நீ  அவருடைய  மனைவியாயிருக்கிறபடியால்  உன்னைத்தவிர  வேறொன்றையும்  அவர்  எனக்கு  விலக்கி  வைக்கவில்லை;  இப்படியிருக்க,  நான்  இத்தனை  பெரிய  பொல்லாங்குக்கு  உடன்பட்டு,  தேவனுக்கு  விரோதமாய்ப்  பாவம்  செய்வது  எப்படி  என்றான்.  (ஆதியாகமம்  39:9)

intha  veettilea  ennilum  periyavan  illai;  nee  avarudaiya  manaiviyaayirukki’rapadiyaal  unnaiththavira  vea’ron’raiyum  avar  enakku  vilakki  vaikkavillai;  ippadiyirukka,  naan  iththanai  periya  pollaanggukku  udanpattu,  theavanukku  viroathamaayp  paavam  seyvathu  eppadi  en’raan.  (aathiyaagamam  39:9)

அவள்  நித்தம்  நித்தம்  யோசேப்போடே  இப்படிப்  பேசிக்கொண்டு  வந்தும்,  அவன்  அவளுடனே  சயனிக்கவும்  அவளுடனே  இருக்கவும்  சம்மதிக்கவில்லை.  (ஆதியாகமம்  39:10)

ava'l  niththam  niththam  yoaseappoadea  ippadip  peasikko'ndu  vanthum,  avan  ava'ludanea  sayanikkavum  ava'ludanea  irukkavum  sammathikkavillai.  (aathiyaagamam  39:10)

இப்படியிருக்கும்போது,  ஒருநாள்  அவன்  தன்  வேலையைச்  செய்கிறதற்கு  வீட்டுக்குள்  போனான்;  வீட்டு  மனிதரில்  ஒருவரும்  வீட்டில்  இல்லை.  (ஆதியாகமம்  39:11)

ippadiyirukkumpoathu,  orunaa'l  avan  than  vealaiyaich  seygi’ratha’rku  veettukku'l  poanaan;  veettu  manitharil  oruvarum  veettil  illai.  (aathiyaagamam  39:11)

அப்பொழுது  அவள்  அவனுடைய  வஸ்திரத்தைப்  பற்றிப்  பிடித்து,  என்னோடே  சயனி  என்றாள்.  அவனோ  தன்  வஸ்திரத்தை  அவள்  கையிலே  விட்டு  வெளியே  ஓடிப்போனான்.  (ஆதியாகமம்  39:12)

appozhuthu  ava'l  avanudaiya  vasthiraththaip  pat’rip  pidiththu,  ennoadea  sayani  en’raa'l.  avanoa  than  vasthiraththai  ava'l  kaiyilea  vittu  ve'liyea  oadippoanaan.  (aathiyaagamam  39:12)

அவன்  தன்  வஸ்திரத்தை  அவள்  கையிலே  விட்டு  வெளியே  ஓடிப்போனதை  அவள்  கண்டபோது,  (ஆதியாகமம்  39:13)

avan  than  vasthiraththai  ava'l  kaiyilea  vittu  ve'liyea  oadippoanathai  ava'l  ka'ndapoathu,  (aathiyaagamam  39:13)

அவள்  தன்  வீட்டு  மனிதரைக்  கூப்பிட்டு:  பாருங்கள்,  எபிரெய  மனுஷன்  நம்மிடத்தில்  சரசம்பண்ணும்படிக்கு  அவனை  நமக்குள்  கொண்டுவந்தார்,  அவன்  என்னோடே  சயனிக்கும்படிக்கு  என்னிடத்தில்  வந்தான்;  நான்  மிகுந்த  சத்தமிட்டுக்  கூப்பிட்டேன்.  (ஆதியாகமம்  39:14)

ava'l  than  veettu  manitharaik  kooppittu:  paarungga'l,  ebireya  manushan  nammidaththil  sarasampa'n'numpadikku  avanai  namakku'l  ko'nduvanthaar,  avan  ennoadea  sayanikkumpadikku  ennidaththil  vanthaan;  naan  miguntha  saththamittuk  kooppittean.  (aathiyaagamam  39:14)

நான்  சத்தமிட்டுக்  கூப்பிடுகிறதை  அவன்  கேட்டு,  தன்  வஸ்திரத்தை  என்னிடத்தில்  விட்டு,  வெளியே  ஓடிப்போய்விட்டான்  என்று  சொன்னாள்.  (ஆதியாகமம்  39:15)

naan  saththamittuk  kooppidugi’rathai  avan  keattu,  than  vasthiraththai  ennidaththil  vittu,  ve'liyea  oadippoayvittaan  en’ru  sonnaa'l.  (aathiyaagamam  39:15)

அவனுடைய  எஜமான்  வீட்டுக்கு  வருமளவும்  அவனுடைய  வஸ்திரத்தைத்  தன்னிடத்தில்  வைத்திருந்து,  (ஆதியாகமம்  39:16)

avanudaiya  ejamaan  veettukku  varuma'lavum  avanudaiya  vasthiraththaith  thannidaththil  vaiththirunthu,  (aathiyaagamam  39:16)

அவனை  நோக்கி:  நீர்  நம்மிடத்தில்  கொண்டுவந்த  அந்த  எபிரெய  வேலைக்காரன்  சரசம்பண்ணும்படிக்கு  என்னிடத்தில்  வந்தான்.  (ஆதியாகமம்  39:17)

avanai  noakki:  neer  nammidaththil  ko'nduvantha  antha  ebireya  vealaikkaaran  sarasampa'n'numpadikku  ennidaththil  vanthaan.  (aathiyaagamam  39:17)

அப்பொழுது  நான்  சத்தமிட்டுக்  கூப்பிட்டேன்,  அவன்  தன்  வஸ்திரத்தை  என்னிடத்தில்  விட்டு  வெளியே  ஓடிப்போனான்  என்றாள்.  (ஆதியாகமம்  39:18)

appozhuthu  naan  saththamittuk  kooppittean,  avan  than  vasthiraththai  ennidaththil  vittu  ve'liyea  oadippoanaan  en’raa'l.  (aathiyaagamam  39:18)

உம்முடைய  வேலைக்காரன்  எனக்கு  இப்படிச்  செய்தான்  என்று  தன்  மனைவி  தன்னோடே  சொன்ன  வார்த்தைகளை  அவனுடைய  எஜமான்  கேட்டபோது,  அவனுக்குக்  கோபம்  மூண்டது.  (ஆதியாகமம்  39:19)

ummudaiya  vealaikkaaran  enakku  ippadich  seythaan  en’ru  than  manaivi  thannoadea  sonna  vaarththaiga'lai  avanudaiya  ejamaan  keattapoathu,  avanukkuk  koabam  moo'ndathu.  (aathiyaagamam  39:19)

யோசேப்பின்  எஜமான்  அவனைப்  பிடித்து,  ராஜாவின்  கட்டளையால்  காவலில்  வைக்கப்பட்டவர்கள்  இருக்கும்  சிறைச்சாலையிலே  அவனை  ஒப்புவித்தான்.  அந்தச்  சிறைச்சாலையில்  அவன்  இருந்தான்.  (ஆதியாகமம்  39:20)

yoaseappin  ejamaan  avanaip  pidiththu,  raajaavin  katta'laiyaal  kaavalil  vaikkappattavarga'l  irukkum  si’raichsaalaiyilea  avanai  oppuviththaan.  anthach  si’raichsaalaiyil  avan  irunthaan.  (aathiyaagamam  39:20)

கர்த்தரோ  யோசேப்போடே  இருந்து,  அவன்மேல்  கிருபைவைத்து,  சிறைச்சாலைத்  தலைவனுடைய  தயவு  அவனுக்குக்  கிடைக்கும்படி  செய்தார்.  (ஆதியாகமம்  39:21)

karththaroa  yoaseappoadea  irunthu,  avanmeal  kirubaivaiththu,  si’raichsaalaith  thalaivanudaiya  thayavu  avanukkuk  kidaikkumpadi  seythaar.  (aathiyaagamam  39:21)

சிறைச்சாலைத்  தலைவன்  சிறைச்சாலையில்  வைக்கப்பட்ட  யாவரையும்  யோசேப்பின்  கையிலே  ஒப்புவித்தான்;  அங்கே  அவர்கள்  செய்வதெல்லாவற்றையும்  யோசேப்பு  செய்வித்தான்.  (ஆதியாகமம்  39:22)

si’raichsaalaith  thalaivan  si’raichsaalaiyil  vaikkappatta  yaavaraiyum  yoaseappin  kaiyilea  oppuviththaan;  anggea  avarga'l  seyvathellaavat’raiyum  yoaseappu  seyviththaan.  (aathiyaagamam  39:22)

கர்த்தர்  அவனோடே  இருந்தபடியினாலும்,  அவன்  எதைச்  செய்தானோ  அதைக்  கர்த்தர்  வாய்க்கப்பண்ணினபடியினாலும்,  அவன்  வசமாயிருந்த  யாதொன்றையும்  குறித்துச்  சிறைச்சாலைத்  தலைவன்  விசாரிக்கவில்லை.  (ஆதியாகமம்  39:23)

karththar  avanoadea  irunthapadiyinaalum,  avan  ethaich  seythaanoa  athaik  karththar  vaaykkappa'n'ninapadiyinaalum,  avan  vasamaayiruntha  yaathon’raiyum  ku’riththuch  si’raichsaalaith  thalaivan  visaarikkavillai.  (aathiyaagamam  39:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!