Monday, June 27, 2016

Aathiyaagamam 35 | ஆதியாகமம் 35 | Genesis 35

தேவன்  யாக்கோபை  நோக்கி:  நீ  எழுந்து  பெத்தேலுக்குப்  போய்,  அங்கே  குடியிருந்து,  நீ  உன்  சகோதரனாகிய  ஏசாவின்  முகத்திற்கு  விலகி  ஓடிப்போகிறபோது,  உனக்குத்  தரிசனமான  தேவனுக்கு  அங்கே  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கு  என்றார்.  (ஆதியாகமம்  35:1)

theavan  yaakkoabai  noakki:  nee  ezhunthu  beththealukkup  poay,  anggea  kudiyirunthu,  nee  un  sagoatharanaagiya  easaavin  mugaththi’rku  vilagi  oadippoagi’rapoathu,  unakkuth  tharisanamaana  theavanukku  anggea  oru  balipeedaththai  u'ndaakku  en’raar.  (aathiyaagamam  35:1)

அப்பொழுது  யாக்கோபு  தன்  வீட்டாரையும்  தன்னோடேகூட  இருந்த  மற்ற  அனைவரையும்  நோக்கி:  உங்களிடத்தில்  இருக்கிற  அந்நிய  தெய்வங்களை  விலக்கிப்போட்டு,  உங்களைச்  சுத்தம்பண்ணிக்கொண்டு,  உங்கள்  வஸ்திரங்களை  மாற்றுங்கள்.  (ஆதியாகமம்  35:2)

appozhuthu  yaakkoabu  than  veettaaraiyum  thannoadeakooda  iruntha  mat’ra  anaivaraiyum  noakki:  ungga'lidaththil  irukki’ra  anniya  theyvangga'lai  vilakkippoattu,  ungga'laich  suththampa'n'nikko'ndu,  ungga'l  vasthirangga'lai  maat’rungga'l.  (aathiyaagamam  35:2)

நாம்  எழுந்து  பெத்தேலுக்குப்  போவோம்  வாருங்கள்;  எனக்கு  ஆபத்து  நேரிட்ட  நாளில்  என்  விண்ணப்பத்துக்கு  உத்தரவு  அருளிச்செய்து,  நான்  நடந்த  வழியிலே  என்னோடேகூட  இருந்த  தேவனுக்கு  அங்கே  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்குவேன்  என்றான்.  (ஆதியாகமம்  35:3)

naam  ezhunthu  beththealukkup  poavoam  vaarungga'l;  enakku  aabaththu  nearitta  naa'lil  en  vi'n'nappaththukku  uththaravu  aru'lichseythu,  naan  nadantha  vazhiyilea  ennoadeakooda  iruntha  theavanukku  anggea  oru  balipeedaththai  u'ndaakkuvean  en’raan.  (aathiyaagamam  35:3)

அப்பொழுது  அவர்கள்  தங்கள்  கையில்  இருந்த  எல்லா  அந்நிய  தெய்வங்களையும்,  தங்கள்  காதணிகளையும்  யாக்கோபிடத்தில்  கொடுத்தார்கள்;  யாக்கோபு  அவைகளைச்  சீகேம்  ஊர்  அருகே  இருந்த  ஒரு  கர்வாலி  மரத்தின்கீழே  புதைத்துப்போட்டான்.  (ஆதியாகமம்  35:4)

appozhuthu  avarga'l  thangga'l  kaiyil  iruntha  ellaa  anniya  theyvangga'laiyum,  thangga'l  kaatha'niga'laiyum  yaakkoabidaththil  koduththaarga'l;  yaakkoabu  avaiga'laich  seekeam  oor  arugea  iruntha  oru  karvaali  maraththinkeezhea  puthaiththuppoattaan.  (aathiyaagamam  35:4)

பின்பு  பிரயாணம்  புறப்பட்டார்கள்;  அவர்களைச்  சுற்றிலும்  இருந்த  பட்டணத்தாருக்குத்  தேவனாலே  பயங்கரம்  உண்டானதினால்,  அவர்கள்  யாக்கோபின்  குமாரரைப்  பின்தொடராதிருந்தார்கள்.  (ஆதியாகமம்  35:5)

pinbu  pirayaa'nam  pu’rappattaarga'l;  avarga'laich  sut’rilum  iruntha  patta'naththaarukkuth  theavanaalea  bayanggaram  u'ndaanathinaal,  avarga'l  yaakkoabin  kumaararaip  pinthodaraathirunthaarga'l.  (aathiyaagamam  35:5)

யாக்கோபும்  அவனோடேகூட  இருந்த  எல்லா  ஜனங்களும்  கானான்தேசத்திலுள்ள  பெத்தேல்  என்னும்  லூசுக்கு  வந்தார்கள்.  (ஆதியாகமம்  35:6)

yaakkoabum  avanoadeakooda  iruntha  ellaa  janangga'lum  kaanaantheasaththilu'l'la  beththeal  ennum  loosukku  vanthaarga'l.  (aathiyaagamam  35:6)

அங்கே  அவன்  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  தன்  சகோதரனுடைய  முகத்துக்குத்  தப்பி  ஓடினபோது,  அங்கே  தனக்கு  தேவன்  தரிசனமானபடியால்,  அந்த  ஸ்தலத்திற்கு  ஏல்பெத்தேல்  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  35:7)

anggea  avan  oru  balipeedaththaik  katti,  than  sagoatharanudaiya  mugaththukkuth  thappi  oadinapoathu,  anggea  thanakku  theavan  tharisanamaanapadiyaal,  antha  sthalaththi’rku  ealbeththeal  en’ru  pearittaan.  (aathiyaagamam  35:7)

ரெபெக்காளின்  தாதியாகிய  தெபொராள்  மரித்து,  பெத்தேலுக்குச்  சமீபமாயிருந்த  ஒரு  கர்வாலி  மரத்தின்கீழ்  அடக்கம்பண்ணப்பட்டாள்;  அதற்கு  அல்லோன்பாகூத்  என்னும்  பேர்  உண்டாயிற்று.  (ஆதியாகமம்  35:8)

rebekkaa'lin  thaathiyaagiya  theboraa'l  mariththu,  beththealukkuch  sameebamaayiruntha  oru  karvaali  maraththinkeezh  adakkampa'n'nappattaa'l;  atha’rku  alloanbaagooth  ennum  pear  u'ndaayit’ru.  (aathiyaagamam  35:8)

யாக்கோபு  பதான்  அராமிலிருந்து  வந்தபின்பு  தேவன்  அவனுக்கு  மறுபடியும்  தரிசனமாகி,  அவனை  ஆசீர்வதித்து:  (ஆதியாகமம்  35:9)

yaakkoabu  pathaan  araamilirunthu  vanthapinbu  theavan  avanukku  ma’rupadiyum  tharisanamaagi,  avanai  aaseervathiththu:  (aathiyaagamam  35:9)

இப்பொழுது  உன்  பேர்  யாக்கோபு,  இனி  உன்  பேர்  யாக்கோபு  என்னப்படாமல்,  இஸ்ரவேல்  என்று  உனக்குப்  பேர்  வழங்கும்  என்று  சொல்லி,  அவனுக்கு  இஸ்ரவேல்  என்று  பேரிட்டார்.  (ஆதியாகமம்  35:10)

ippozhuthu  un  pear  yaakkoabu,  ini  un  pear  yaakkoabu  ennappadaamal,  israveal  en’ru  unakkup  pear  vazhanggum  en’ru  solli,  avanukku  israveal  en’ru  pearittaar.  (aathiyaagamam  35:10)

பின்னும்  தேவன்  அவனை  நோக்கி:  நான்  சர்வவல்லமையுள்ள  தேவன்,  நீ  பலுகிப்  பெருகுவாயாக;  ஒரு  ஜாதியும்  பற்பல  ஜாதிகளின்  கூட்டங்களும்  உன்னிலிருந்து  உண்டாகும்;  ராஜாக்களும்  உன்  சந்ததியில்  பிறப்பார்கள்.  (ஆதியாகமம்  35:11)

pinnum  theavan  avanai  noakki:  naan  sarvavallamaiyu'l'la  theavan,  nee  palugip  peruguvaayaaga;  oru  jaathiyum  pa’rpala  jaathiga'lin  koottangga'lum  unnilirunthu  u'ndaagum;  raajaakka'lum  un  santhathiyil  pi’rappaarga'l.  (aathiyaagamam  35:11)

நான்  ஆபிரகாமுக்கும்  ஈசாக்குக்கும்  கொடுத்த  தேசத்தை  உனக்குக்  கொடுப்பேன்;  உனக்குப்பின்  உன்  சந்ததிக்கும்  இந்த  தேசத்தைக்  கொடுப்பேன்  என்று  சொல்லி,  (ஆதியாகமம்  35:12)

naan  aabirahaamukkum  eesaakkukkum  koduththa  theasaththai  unakkuk  koduppean;  unakkuppin  un  santhathikkum  intha  theasaththaik  koduppean  en’ru  solli,  (aathiyaagamam  35:12)

தேவன்  அவனோடே  பேசின  ஸ்தலத்திலிருந்து  அவனைவிட்டு  எழுந்தருளிப்போனார்.  (ஆதியாகமம்  35:13)

theavan  avanoadea  peasina  sthalaththilirunthu  avanaivittu  ezhuntharu'lippoanaar.  (aathiyaagamam  35:13)

அப்பொழுது  யாக்கோபு  தன்னோடே  அவர்  பேசின  ஸ்தலத்திலே  ஒரு  கற்றூணை  நிறுத்தி,  அதின்மேல்  பானபலியை  ஊற்றி,  எண்ணெயையும்  வார்த்தான்.  (ஆதியாகமம்  35:14)

appozhuthu  yaakkoabu  thannoadea  avar  peasina  sthalaththilea  oru  kat’roo'nai  ni’ruththi,  athinmeal  baanabaliyai  oot’ri,  e'n'neyaiyum  vaarththaan.  (aathiyaagamam  35:14)

தேவன்  தன்னோடே  பேசின  அந்த  ஸ்தலத்திற்கு  யாக்கோபு  பெத்தேல்  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  35:15)

theavan  thannoadea  peasina  antha  sthalaththi’rku  yaakkoabu  beththeal  en’ru  pearittaan.  (aathiyaagamam  35:15)

பின்பு,  பெத்தேலை  விட்டுப்  பிரயாணம்  புறப்பட்டார்கள்.  எப்பிராத்தாவுக்கு  வர  இன்னும்  கொஞ்சம்  தூரமிருக்கும்போது,  ராகேல்  பிள்ளைபெற்றாள்;  பிரசவத்தில்  அவளுக்குக்  கடும்வேதனை  உண்டாயிற்று.  (ஆதியாகமம்  35:16)

pinbu,  beththealai  vittup  pirayaa'nam  pu’rappattaarga'l.  eppiraaththaavukku  vara  innum  kogncham  thooramirukkumpoathu,  raakeal  pi'l'laipet’raa'l;  pirasavaththil  ava'lukkuk  kadumveathanai  u'ndaayit’ru.  (aathiyaagamam  35:16)

பிரசவிக்கும்போது,  அவளுக்குக்  கடும்வேதனையாயிருக்கையில்,  மருத்துவச்சி  அவளைப்  பார்த்து:  பயப்படாதே,  இந்த  முறையும்  புத்திரனைப்  பெறுவாய்  என்றாள்.  (ஆதியாகமம்  35:17)

pirasavikkumpoathu,  ava'lukkuk  kadumveathanaiyaayirukkaiyil,  maruththuvachchi  ava'laip  paarththu:  bayappadaathea,  intha  mu’raiyum  puththiranaip  pe’ruvaay  en’raa'l.  (aathiyaagamam  35:17)

மரணகாலத்தில்  அவள்  ஆத்துமா  பிரியும்போது,  அவள்  அவனுக்கு  பெனொனி  என்று  பேரிட்டாள்;  அவன்  தகப்பனோ,  அவனுக்கு  பென்யமீன்  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  35:18)

mara'nakaalaththil  ava'l  aaththumaa  piriyumpoathu,  ava'l  avanukku  benoni  en’ru  pearittaa'l;  avan  thagappanoa,  avanukku  benyameen  en’ru  pearittaan.  (aathiyaagamam  35:18)

ராகேல்  மரித்து,  பெத்லெகேம்  என்னும்  எப்பிராத்தா  ஊருக்குப்  போகிற  வழியிலே  அடக்கம்பண்ணப்பட்டாள்.  (ஆதியாகமம்  35:19)

raakeal  mariththu,  bethleheam  ennum  eppiraaththaa  oorukkup  poagi’ra  vazhiyilea  adakkampa'n'nappattaa'l.  (aathiyaagamam  35:19)

அவள்  கல்லறையின்மேல்  யாக்கோபு  ஒரு  தூணை  நிறுத்தினான்;  அதுவே  இந்நாள்வரைக்கும்  இருக்கிற  ராகேலுடைய  கல்லறையின்  தூண்.  (ஆதியாகமம்  35:20)

ava'l  kalla’raiyinmeal  yaakkoabu  oru  thoo'nai  ni’ruththinaan;  athuvea  innaa'lvaraikkum  irukki’ra  raakealudaiya  kalla’raiyin  thoo'n.  (aathiyaagamam  35:20)

இஸ்ரவேல்  பிரயாணம்பண்ணி,  ஏதேர்  என்கிற  கோபுரத்திற்கு  அப்புறத்தில்  கூடாரம்  போட்டான்.  (ஆதியாகமம்  35:21)

israveal  pirayaa'nampa'n'ni,  eathear  engi’ra  koapuraththi’rku  appu’raththil  koodaaram  poattaan.  (aathiyaagamam  35:21)

இஸ்ரவேல்  அந்தத்  தேசத்தில்  தங்கிக்  குடியிருக்கும்போது,  ரூபன்  போய்,  தன்  தகப்பனுடைய  மறுமனையாட்டியாகிய  பில்காளோடே  சயனித்தான்;  அதை  இஸ்ரவேல்  கேள்விப்பட்டான்.  (ஆதியாகமம்  35:22)

israveal  anthath  theasaththil  thanggik  kudiyirukkumpoathu,  rooban  poay,  than  thagappanudaiya  ma’rumanaiyaattiyaagiya  bilkaa'loadea  sayaniththaan;  athai  israveal  kea'lvippattaan.  (aathiyaagamam  35:22)

யாக்கோபின்  குமாரர்  பன்னிரண்டு  பேர்.  யாக்கோபின்  மூத்தமகனாகிய  ரூபன்,  சிமியோன்,  லேவி,  யூதா,  இசக்கார்,  செபுலோன்  என்பவர்கள்  லேயாள்  பெற்ற  குமாரர்.  (ஆதியாகமம்  35:23)

yaakkoabin  kumaarar  pannira'ndu  pear.  yaakkoabin  mooththamaganaagiya  rooban,  simiyoan,  leavi,  yoothaa,  isakkaar,  sebuloan  enbavarga'l  leayaa'l  pet’ra  kumaarar.  (aathiyaagamam  35:23)

யோசேப்பு,  பென்யமீன்  என்பவர்கள்  ராகேல்  பெற்ற  குமாரர்.  (ஆதியாகமம்  35:24)

yoaseappu,  benyameen  enbavarga'l  raakeal  pet’ra  kumaarar.  (aathiyaagamam  35:24)

தாண்,  நப்தலி  என்பவர்கள்  ராகேலுடைய  பணிவிடைக்காரியாகிய  பில்காள்  பெற்ற  குமாரர்.  (ஆதியாகமம்  35:25)

thaa'n,  napthali  enbavarga'l  raakealudaiya  pa'nividaikkaariyaagiya  bilkaa'l  pet’ra  kumaarar.  (aathiyaagamam  35:25)

காத்,  ஆசேர்  என்பவர்கள்  லேயாளின்  பணிவிடைக்காரியாகிய  சில்பாள்  பெற்ற  குமாரர்;  இவர்களே  யாக்கோபுக்குப்  பதான்  அராமிலே  பிறந்த  குமாரர்.  (ஆதியாகமம்  35:26)

kaath,  aasear  enbavarga'l  leayaa'lin  pa'nividaikkaariyaagiya  silpaa'l  pet’ra  kumaarar;  ivarga'lea  yaakkoabukkup  pathaan  araamilea  pi’rantha  kumaarar.  (aathiyaagamam  35:26)

பின்பு,  யாக்கோபு  அர்பாவின்  ஊராகிய  மம்ரேக்கு  தன்  தகப்பனாகிய  ஈசாக்கினிடத்தில்  வந்தான்;  அது  ஆபிரகாமும்  ஈசாக்கும்  தங்கியிருந்த  எபிரோன்  என்னும்  ஊர்.  (ஆதியாகமம்  35:27)

pinbu,  yaakkoabu  arbaavin  ooraagiya  mamreakku  than  thagappanaagiya  eesaakkinidaththil  vanthaan;  athu  aabirahaamum  eesaakkum  thanggiyiruntha  ebiroan  ennum  oor.  (aathiyaagamam  35:27)

ஈசாக்கு  விருத்தாப்பியமும்  பூரண  ஆயுசுமுள்ளவனாகி,  நூற்றெண்பது  வருஷம்  ஜீவித்திருந்து,  (ஆதியாகமம்  35:28)

eesaakku  viruththaappiyamum  poora'na  aayusumu'l'lavanaagi,  noot’re'nbathu  varusham  jeeviththirunthu,  (aathiyaagamam  35:28)

பிராணன்போய்  மரித்து,  தன்  ஜனத்தாரோடே  சேர்க்கப்பட்டான்.  அவன்  குமாரராகிய  ஏசாவும்  யாக்கோபும்  அவனை  அடக்கம்பண்ணினார்கள்.  (ஆதியாகமம்  35:29)

piraa'nanpoay  mariththu,  than  janaththaaroadea  searkkappattaan.  avan  kumaararaagiya  easaavum  yaakkoabum  avanai  adakkampa'n'ninaarga'l.  (aathiyaagamam  35:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!