Monday, June 27, 2016

Aathiyaagamam 33 | ஆதியாகமம் 33 | Genesis 33

யாக்கோபு  தன்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  ஏசாவும்  அவனோடேகூட  நானூறு  மனிதரும்  வருகிறதைக்  கண்டு,  பிள்ளைகளை  லேயாளிடத்திலும்  ராகேலிடத்திலும்  இரண்டு  பணிவிடைக்காரிகளிடத்திலும்  வெவ்வேறாகப்  பிரித்துவைத்து,  (ஆதியாகமம்  33:1)

yaakkoabu  than  ka'nga'lai  ea’reduththu,  ithoa,  easaavum  avanoadeakooda  naanoo’ru  manitharum  varugi’rathaik  ka'ndu,  pi'l'laiga'lai  leayaa'lidaththilum  raakealidaththilum  ira'ndu  pa'nividaikkaariga'lidaththilum  vevvea’raagap  piriththuvaiththu,  (aathiyaagamam  33:1)

பணிவிடைக்காரிகளையும்  அவர்கள்  பிள்ளைகளையும்  முதலிலும்,  லேயாளையும்  அவள்  பிள்ளைகளையும்  இடையிலும்,  ராகேலையும்  யோசேப்பையும்  கடையிலும்  நிறுத்தி:  (ஆதியாகமம்  33:2)

pa'nividaikkaariga'laiyum  avarga'l  pi'l'laiga'laiyum  muthalilum,  leayaa'laiyum  ava'l  pi'l'laiga'laiyum  idaiyilum,  raakealaiyum  yoaseappaiyum  kadaiyilum  ni’ruththi:  (aathiyaagamam  33:2)

தான்  அவர்களுக்கு  முன்னாக  நடந்துபோய்,  ஏழுவிசை  தரைமட்டும்  குனிந்து  வணங்கி,  தன்  சகோதரன்  கிட்டச்  சேர்ந்தான்.  (ஆதியாகமம்  33:3)

thaan  avarga'lukku  munnaaga  nadanthupoay,  eazhuvisai  tharaimattum  kuninthu  va'nanggi,  than  sagoatharan  kittach  searnthaan.  (aathiyaagamam  33:3)

அப்பொழுது  ஏசா  எதிர்கொண்டு  ஓடிவந்து,  அவனைத்  தழுவி,  அவன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு,  அவனை  முத்தஞ்செய்தான்;  இருவரும்  அழுதார்கள்.  (ஆதியாகமம்  33:4)

appozhuthu  easaa  ethirko'ndu  oadivanthu,  avanaith  thazhuvi,  avan  kazhuththaik  kattikko'ndu,  avanai  muththagnseythaan;  iruvarum  azhuthaarga'l.  (aathiyaagamam  33:4)

அவன்  தன்  கண்களை  ஏறெடுத்து,  ஸ்திரீகளையும்  பிள்ளைகளையும்  கண்டு:  உன்னோடிருக்கிற  இவர்கள்  யார்?  என்றான்.  அதற்கு  அவன்:  தேவன்  உமது  அடியானுக்கு  அருளின  பிள்ளைகள்  என்றான்.  (ஆதியாகமம்  33:5)

avan  than  ka'nga'lai  ea’reduththu,  sthireega'laiyum  pi'l'laiga'laiyum  ka'ndu:  unnoadirukki’ra  ivarga'l  yaar?  en’raan.  atha’rku  avan:  theavan  umathu  adiyaanukku  aru'lina  pi'l'laiga'l  en’raan.  (aathiyaagamam  33:5)

அப்பொழுது  பணிவிடைக்காரிகளும்  அவர்கள்  பிள்ளைகளும்  சேர்ந்துவந்து  வணங்கினார்கள்.  (ஆதியாகமம்  33:6)

appozhuthu  pa'nividaikkaariga'lum  avarga'l  pi'l'laiga'lum  searnthuvanthu  va'nangginaarga'l.  (aathiyaagamam  33:6)

லேயாளும்  அவள்  பிள்ளைகளும்  சேர்ந்துவந்து  வணங்கினார்கள்;  பின்பு  யோசேப்பும்  ராகேலும்  சேர்ந்துவந்து  வணங்கினார்கள்.  (ஆதியாகமம்  33:7)

leayaa'lum  ava'l  pi'l'laiga'lum  searnthuvanthu  va'nangginaarga'l;  pinbu  yoaseappum  raakealum  searnthuvanthu  va'nangginaarga'l.  (aathiyaagamam  33:7)

அப்பொழுது  அவன்:  எனக்கு  எதிர்கொண்டுவந்த  அந்த  மந்தையெல்லாம்  என்னத்துக்கு  என்றான்.  அதற்கு  அவன்:  என்  ஆண்டவனுடைய  கண்களில்  எனக்குத்  தயவு  கிடைக்கிறதற்கு  என்றான்.  (ஆதியாகமம்  33:8)

appozhuthu  avan:  enakku  ethirko'nduvantha  antha  manthaiyellaam  ennaththukku  en’raan.  atha’rku  avan:  en  aa'ndavanudaiya  ka'nga'lil  enakkuth  thayavu  kidaikki’ratha’rku  en’raan.  (aathiyaagamam  33:8)

அதற்கு  ஏசா:  என்  சகோதரனே,  எனக்குப்  போதுமானது  உண்டு;  உன்னுடையது  உனக்கு  இருக்கட்டும்  என்றான்.  (ஆதியாகமம்  33:9)

atha’rku  easaa:  en  sagoatharanea,  enakkup  poathumaanathu  u'ndu;  unnudaiyathu  unakku  irukkattum  en’raan.  (aathiyaagamam  33:9)

அதற்கு  யாக்கோபு:  அப்படி  அல்ல,  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயவு  கிடைத்ததேயானால்,  என்  வெகுமதியை  என்  கையிலிருந்து  ஏற்றுக்கொள்ளும்;  நீர்  என்மேல்  பிரியமானீர்,  நான்  உம்முடைய  முகத்தைக்  கண்டது  தேவனுடைய  முகத்தைக்  கண்டதுபோல  இருக்கிறது.  (ஆதியாகமம்  33:10)

atha’rku  yaakkoabu:  appadi  alla,  ummudaiya  ka'nga'lil  enakkuth  thayavu  kidaiththatheayaanaal,  en  vegumathiyai  en  kaiyilirunthu  eat’rukko'l'lum;  neer  enmeal  piriyamaaneer,  naan  ummudaiya  mugaththaik  ka'ndathu  theavanudaiya  mugaththaik  ka'ndathupoala  irukki’rathu.  (aathiyaagamam  33:10)

தேவன்  எனக்கு  அநுக்கிரகம்  செய்திருக்கிறார்;  வேண்டியதெல்லாம்  எனக்கு  உண்டு;  ஆகையால்  உமக்குக்  கொண்டுவரப்பட்ட  என்  காணிக்கையை  ஏற்றுக்கொள்ளும்  என்று  சொல்லி,  அவனை  வருந்திக்  கேட்டுக்கொண்டான்;  அப்பொழுது  அவன்  அதை  ஏற்றுக்கொண்டான்.  (ஆதியாகமம்  33:11)

theavan  enakku  anukkiragam  seythirukki’raar;  vea'ndiyathellaam  enakku  u'ndu;  aagaiyaal  umakkuk  ko'nduvarappatta  en  kaa'nikkaiyai  eat’rukko'l'lum  en’ru  solli,  avanai  varunthik  keattukko'ndaan;  appozhuthu  avan  athai  eat’rukko'ndaan.  (aathiyaagamam  33:11)

பின்பு  அவன்:  நாம்  புறப்பட்டுப்போவோம்  வா,  நான்  உனக்கு  முன்  நடப்பேன்  என்றான்.  (ஆதியாகமம்  33:12)

pinbu  avan:  naam  pu’rappattuppoavoam  vaa,  naan  unakku  mun  nadappean  en’raan.  (aathiyaagamam  33:12)

அதற்கு  அவன்:  பிள்ளைகள்  இளம்  பிள்ளைகள்  என்றும்,  கறவையான  ஆடுமாடுகள்  என்னிடத்தில்  இருக்கிறது  என்றும்  என்  ஆண்டவனுக்குத்  தெரியும்;  அவைகளை  ஒரு  நாளாவது  துரிதமாய்  ஓட்டினால்,  மந்தையெல்லாம்  மாண்டுபோம்.  (ஆதியாகமம்  33:13)

atha’rku  avan:  pi'l'laiga'l  i'lam  pi'l'laiga'l  en’rum,  ka’ravaiyaana  aadumaaduga'l  ennidaththil  irukki’rathu  en’rum  en  aa'ndavanukkuth  theriyum;  avaiga'lai  oru  naa'laavathu  thurithamaay  oattinaal,  manthaiyellaam  maa'ndupoam.  (aathiyaagamam  33:13)

என்  ஆண்டவனாகிய  நீர்  உமது  அடியானுக்கு  முன்னே  போம்;  நான்  சேயீருக்கு  என்  ஆண்டவனிடத்தில்  வருமளவும்,  எனக்குமுன்  நடக்கிற  மந்தைகளின்  கால்நடைக்கும்  பிள்ளைகளின்  கால்நடைக்கும்  தக்கதாக,  மெதுவாய்  அவைகளை  நடத்திக்கொண்டு  வருகிறேன்  என்றான்.  (ஆதியாகமம்  33:14)

en  aa'ndavanaagiya  neer  umathu  adiyaanukku  munnea  poam;  naan  seayeerukku  en  aa'ndavanidaththil  varuma'lavum,  enakkumun  nadakki’ra  manthaiga'lin  kaalnadaikkum  pi'l'laiga'lin  kaalnadaikkum  thakkathaaga,  methuvaay  avaiga'lai  nadaththikko'ndu  varugi’rean  en’raan.  (aathiyaagamam  33:14)

அப்பொழுது  ஏசா:  என்னிடத்திலிருக்கிற  ஜனங்களில்  சிலரை  நான்  உன்னிடத்தில்  நிறுத்திவிட்டுப்  போகட்டுமா  என்றான்.  அதற்கு  அவன்:  அது  என்னத்திற்கு,  என்  ஆண்டவனுடைய  கண்களில்  எனக்குத்  தயவுகிடைத்தால்  மாத்திரம்  போதும்  என்றான்.  (ஆதியாகமம்  33:15)

appozhuthu  easaa:  ennidaththilirukki’ra  janangga'lil  silarai  naan  unnidaththil  ni’ruththivittup  poagattumaa  en’raan.  atha’rku  avan:  athu  ennaththi’rku,  en  aa'ndavanudaiya  ka'nga'lil  enakkuth  thayavukidaiththaal  maaththiram  poathum  en’raan.  (aathiyaagamam  33:15)

அன்றைத்தினம்  ஏசா  திரும்பித்  தான்  வந்த  வழியே  சேயீருக்குப்  போனான்.  (ஆதியாகமம்  33:16)

an’raiththinam  easaa  thirumbith  thaan  vantha  vazhiyea  seayeerukkup  poanaan.  (aathiyaagamam  33:16)

யாக்கோபு  சுக்கோத்திற்குப்  பிரயாணம்பண்ணி,  தனக்கு  ஒரு  வீடு  கட்டி,  தன்  மிருகஜீவன்களுக்குக்  கொட்டாரங்களைப்  போட்டான்;  அதினாலே  அந்த  ஸ்தலத்துக்குச்  சுக்கோத்  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  33:17)

yaakkoabu  sukkoaththi’rkup  pirayaa'nampa'n'ni,  thanakku  oru  veedu  katti,  than  mirugajeevanga'lukkuk  kottaarangga'laip  poattaan;  athinaalea  antha  sthalaththukkuch  sukkoath  en’ru  pearittaan.  (aathiyaagamam  33:17)

யாக்கோபு  பதான்  அராமிலிருந்து  வந்தபின்  கானான்தேசத்திலிருக்கிற  சாலேம்  என்னும்  சீகேமுடைய  பட்டணத்திற்கு  அருகே  சென்று  பட்டணத்திற்கு  எதிரே  கூடாரம்போட்டான்.  (ஆதியாகமம்  33:18)

yaakkoabu  pathaan  araamilirunthu  vanthapin  kaanaantheasaththilirukki’ra  saaleam  ennum  seekeamudaiya  patta'naththi’rku  arugea  sen’ru  patta'naththi’rku  ethirea  koodaarampoattaan.  (aathiyaagamam  33:18)

தான்  கூடாரம்போட்ட  வெளியின்  நிலத்தைச்  சீகேமின்  தகப்பனாகிய  ஏமோரின்  புத்திரர்  கையிலே  நூறு  வெள்ளிக்காசுக்குக்  கொண்டு,  (ஆதியாகமம்  33:19)

thaan  koodaarampoatta  ve'liyin  nilaththaich  seekeamin  thagappanaagiya  eamoarin  puththirar  kaiyilea  noo’ru  ve'l'likkaasukkuk  ko'ndu,  (aathiyaagamam  33:19)

அங்கே  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  அதற்கு  ஏல்எல்லோகே  இஸ்ரவேல்  என்று  பேரிட்டான்.  (ஆதியாகமம்  33:20)

anggea  oru  balipeedaththaik  katti,  atha’rku  ealelloagea  israveal  en’ru  pearittaan.  (aathiyaagamam  33:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!