Sunday, June 26, 2016

Aathiyaagamam 3 | ஆதியாகமம் 3 | Genesis 3

தேவனாகிய  கர்த்தர்  உண்டாக்கின  சகல  காட்டு  ஜீவன்களைப்பார்க்கிலும்  சர்ப்பமானது  தந்திரமுள்ளதாயிருந்தது.  அது  ஸ்திரீயை  நோக்கி:  நீங்கள்  தோட்டத்திலுள்ள  சகல  விருட்சங்களின்  கனியையும்  புசிக்கவேண்டாம்  என்று  தேவன்  சொன்னது  உண்டோ  என்றது.  (ஆதியாகமம்  3:1)

theavanaagiya  karththar  u'ndaakkina  sagala  kaattu  jeevanga'laippaarkkilum  sarppamaanathu  thanthiramu'l'lathaayirunthathu.  athu  sthireeyai  noakki:  neengga'l  thoattaththilu'l'la  sagala  virudchangga'lin  kaniyaiyum  pusikkavea'ndaam  en'ru  theavan  sonnathu  u'ndoa  en'rathu.  (aathiyaagamam  3:1)

ஸ்திரீ  சர்ப்பத்தைப்  பார்த்து:  நாங்கள்  தோட்டத்திலுள்ள  விருட்சங்களின்  கனிகளைப்  புசிக்கலாம்;  (ஆதியாகமம்  3:2)

sthiree  sarppaththaip  paarththu:  naangga'l  thoattaththilu'l'la  virudchangga'lin  kaniga'laip  pusikkalaam;  (aathiyaagamam  3:2)

ஆனாலும்,  தோட்டத்தின்  நடுவில்  இருக்கிற  விருட்சத்தின்  கனியைக்  குறித்து,  தேவன்:  நீங்கள்  சாகாதபடிக்கு  அதைப்  புசிக்கவும்  அதைத்  தொடவும்  வேண்டாம்  என்று  சொன்னார்  என்றாள்.  (ஆதியாகமம்  3:3)

aanaalum,  thoattaththin  naduvil  irukki'ra  virudchaththin  kaniyaik  ku'riththu,  theavan:  neengga'l  saagaathapadikku  athaip  pusikkavum  athaith  thodavum  vea'ndaam  en'ru  sonnaar  en'raa'l.  (aathiyaagamam  3:3)

அப்பொழுது  சர்ப்பம்  ஸ்திரீயை  நோக்கி:  நீங்கள்  சாகவே  சாவதில்லை;  (ஆதியாகமம்  3:4)

appozhuthu  sarppam  sthireeyai  noakki:  neengga'l  saagavea  saavathillai;  (aathiyaagamam  3:4)

நீங்கள்  இதைப்  புசிக்கும்  நாளிலே  உங்கள்  கண்கள்  திறக்கப்படும்  என்றும்,  நீங்கள்  நன்மை  தீமை  அறிந்து  தேவர்களைப்போல்  இருப்பீர்கள்  என்றும்  தேவன்  அறிவார்  என்றது.  (ஆதியாகமம்  3:5)

neengga'l  ithaip  pusikkum  naa'lilea  ungga'l  ka'nga'l  thi'rakkappadum  en'rum,  neengga'l  nanmai  theemai  a'rinthu  theavarga'laippoal  iruppeerga'l  en'rum  theavan  a'rivaar  en'rathu.  (aathiyaagamam  3:5)

அப்பொழுது  ஸ்திரீயானவள்,  அந்த  விருட்சம்  புசிப்புக்கு  நல்லதும்,  பார்வைக்கு  இன்பமும்,  புத்தியைத்  தெளிவிக்கிறதற்கு  இச்சிக்கப்படத்தக்க  விருட்சமுமாய்  இருக்கிறது  என்று  கண்டு,  அதின்  கனியைப்  பறித்து,  புசித்து,  தன்  புருஷனுக்கும்  கொடுத்தாள்;  அவனும்  புசித்தான்.  (ஆதியாகமம்  3:6)

appozhuthu  sthireeyaanava'l,  antha  virudcham  pusippukku  nallathum,  paarvaikku  inbamum,  buththiyaith  the'livikki'ratha’rku  ichchikkappadaththakka  virudchamumaay  irukki'rathu  en'ru  ka'ndu,  athin  kaniyaip  pa'riththu,  pusiththu,  than  purushanukkum  koduththaa'l;  avanum  pusiththaan.  (aathiyaagamam  3:6)

அப்பொழுது  அவர்கள்  இருவருடைய  கண்களும்  திறக்கப்பட்டது;  அவர்கள்  தாங்கள்  நிர்வாணிகள்  என்று  அறிந்து,  அத்தியிலைகளைத்  தைத்து,  தங்களுக்கு  அரைக்கச்சைகளை  உண்டுபண்ணினார்கள்.  (ஆதியாகமம்  3:7)

appozhuthu  avarga'l  iruvarudaiya  ka'nga'lum  thi'rakkappattathu;  avarga'l  thaangga'l  nirvaa'niga'l  en'ru  a'rinthu,  aththiyilaiga'laith  thaiththu,  thangga'lukku  araikkachchaiga'lai  u'ndupa'n'ninaarga'l.  (aathiyaagamam  3:7)

பகலில்  குளிர்ச்சியான  வேளையிலே  தோட்டத்தில்  உலாவுகிற  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்தை  அவர்கள்  கேட்டார்கள்.  அப்பொழுது  ஆதாமும்  அவன்  மனைவியும்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதிக்கு  விலகி,  தோட்டத்தின்  விருட்சங்களுக்குள்ளே  ஒளித்துக்கொண்டார்கள்.  (ஆதியாகமம்  3:8)

pagalil  ku'lirchchiyaana  vea'laiyilea  thoattaththil  ulaavugi'ra  theavanaagiya  karththarudaiya  saththaththai  avarga'l  keattaarga'l.  appozhuthu  aathaamum  avan  manaiviyum  theavanaagiya  karththarudaiya  sannithikku  vilagi,  thoattaththin  virudchangga'lukku'l'lea  o'liththukko'ndaarga'l.  (aathiyaagamam  3:8)

அப்பொழுது  தேவனாகிய  கர்த்தர்  ஆதாமைக்  கூப்பிட்டு:  நீ  எங்கே  இருக்கிறாய்  என்றார்.  (ஆதியாகமம்  3:9)

appozhuthu  theavanaagiya  karththar  aathaamaik  kooppittu:  nee  enggea  irukki'raay  en'raar.  (aathiyaagamam  3:9)

அதற்கு  அவன்:  நான்  தேவரீருடைய  சத்தத்தைத்  தோட்டத்திலே  கேட்டு,  நான்  நிர்வாணியாயிருப்பதினால்  பயந்து,  ஒளித்துக்கொண்டேன்  என்றான்.  (ஆதியாகமம்  3:10)

atha’rku  avan:  naan  theavareerudaiya  saththaththaith  thoattaththilea  keattu,  naan  nirvaa'niyaayiruppathinaal  bayanthu,  o'liththukko'ndean  en'raan.  (aathiyaagamam  3:10)

அப்பொழுது  அவர்:  நீ  நிர்வாணி  என்று  உனக்கு  அறிவித்தவன்  யார்?  புசிக்கவேண்டாம்  என்று  நான்  உனக்கு  விலக்கின  விருட்சத்தின்  கனியைப்  புசித்தாயோ  என்றார்.  (ஆதியாகமம்  3:11)

appozhuthu  avar:  nee  nirvaa'ni  en'ru  unakku  a'riviththavan  yaar?  pusikkavea'ndaam  en'ru  naan  unakku  vilakkina  virudchaththin  kaniyaip  pusiththaayoa  en'raar.  (aathiyaagamam  3:11)

அதற்கு  ஆதாம்:  என்னுடனே  இருக்கும்படி  தேவரீர்  தந்த  ஸ்திரீயானவள்  அவ்விருட்சத்தின்  கனியை  எனக்குக்  கொடுத்தாள்,  நான்  புசித்தேன்  என்றான்.  (ஆதியாகமம்  3:12)

atha’rku  aathaam:  ennudanea  irukkumpadi  theavareer  thantha  sthireeyaanava'l  avvirudchaththin  kaniyai  enakkuk  koduththaa'l,  naan  pusiththean  en'raan.  (aathiyaagamam  3:12)

அப்பொழுது  தேவனாகிய  கர்த்தர்  ஸ்திரீயை  நோக்கி:  நீ  இப்படிச்  செய்தது  என்ன  என்றார்.  ஸ்திரீயானவள்:  சர்ப்பம்  என்னை  வஞ்சித்தது,  நான்  புசித்தேன்  என்றாள்.  (ஆதியாகமம்  3:13)

appozhuthu  theavanaagiya  karththar  sthireeyai  noakki:  nee  ippadich  seythathu  enna  en'raar.  sthireeyaanava'l:  sarppam  ennai  vagnchiththathu,  naan  pusiththean  en'raa'l.  (aathiyaagamam  3:13)

அப்பொழுது  தேவனாகிய  கர்த்தர்  சர்ப்பத்தைப்  பார்த்து:  நீ  இதைச்  செய்தபடியால்  சகல  நாட்டு  மிருகங்களிலும்  சகல  காட்டு  மிருகங்களிலும்  சபிக்கப்பட்டிருப்பாய்,  நீ  உன்  வயிற்றினால்  நகர்ந்து,  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  மண்ணைத்  தின்பாய்;  (ஆதியாகமம்  3:14)

appozhuthu  theavanaagiya  karththar  sarppaththaip  paarththu:  nee  ithaich  seythapadiyaal  sagala  naattu  mirugangga'lilum  sagala  kaattu  mirugangga'lilum  sabikkappattiruppaay,  nee  un  vayit’rinaal  nagarnthu,  uyiroadirukkum  naa'lellaam  ma'n'naith  thinbaay;  (aathiyaagamam  3:14)

உனக்கும்  ஸ்திரீக்கும்,  உன்  வித்துக்கும்  அவள்  வித்துக்கும்  பகை  உண்டாக்குவேன்;  அவர்  உன்  தலையை  நசுக்குவார்,  நீ  அவர்  குதிங்காலை  நசுக்குவாய்  என்றார்.  (ஆதியாகமம்  3:15)

unakkum  sthireekkum,  un  viththukkum  ava'l  viththukkum  pagai  u'ndaakkuvean;  avar  un  thalaiyai  nasukkuvaar,  nee  avar  kuthingkaalai  nasukkuvaay  en'raar.  (aathiyaagamam  3:15)

அவர்  ஸ்திரீயை  நோக்கி:  நீ  கர்ப்பவதியாயிருக்கும்போது  உன்  வேதனையை  மிகவும்  பெருகப்பண்ணுவேன்;  வேதனையோடே  பிள்ளை  பெறுவாய்;  உன்  ஆசை  உன்  புருஷனைப்  பற்றியிருக்கும்,  அவன்  உன்னை  ஆண்டுகொள்ளுவான்  என்றார்.  (ஆதியாகமம்  3:16)

avar  sthireeyai  noakki:  nee  karppavathiyaayirukkumpoathu  un  veathanaiyai  migavum  perugappa'n'nuvean;  veathanaiyoadea  pi'l'lai  pe'ruvaay;  un  aasai  un  purushanaip  pat’riyirukkum,  avan  unnai  aa'nduko'l'luvaan  en'raar.  (aathiyaagamam  3:16)

பின்பு  அவர்  ஆதாமை  நோக்கி:  நீ  உன்  மனைவியின்  வார்த்தைக்குச்  செவிகொடுத்து,  புசிக்கவேண்டாம்  என்று  நான்  உனக்கு  விலக்கின  விருட்சத்தின்  கனியைப்  புசித்தபடியினாலே,  பூமி  உன்  நிமித்தம்  சபிக்கப்பட்டிருக்கும்;  நீ  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  வருத்தத்தோடே  அதின்  பலனைப்  புசிப்பாய்.  (ஆதியாகமம்  3:17)

pinbu  avar  aathaamai  noakki:  nee  un  manaiviyin  vaarththaikkuch  sevikoduththu,  pusikkavea'ndaam  en'ru  naan  unakku  vilakkina  virudchaththin  kaniyaip  pusiththapadiyinaalea,  boomi  un  nimiththam  sabikkappattirukkum;  nee  uyiroadirukkum  naa'lellaam  varuththaththoadea  athin  palanaip  pusippaay.  (aathiyaagamam  3:17)

அது  உனக்கு  முள்ளும்  குருக்கும்  முளைப்பிக்கும்;  வெளியின்  பயிர்வகைகளைப்  புசிப்பாய்.  (ஆதியாகமம்  3:18)

athu  unakku  mu'l'lum  kurukkum  mu'laippikkum;  ve'liyin  payirvagaiga'laip  pusippaay.  (aathiyaagamam  3:18)

நீ  பூமியிலிருந்து  எடுக்கப்பட்டபடியால்,  நீ  பூமிக்குத்  திரும்புமட்டும்  உன்  முகத்தின்  வேர்வையால்  ஆகாரம்  புசிப்பாய்;  நீ  மண்ணாயிருக்கிறாய்,  மண்ணுக்குத்  திரும்புவாய்  என்றார்.  (ஆதியாகமம்  3:19)

nee  boomiyilirunthu  edukkappattapadiyaal,  nee  boomikkuth  thirumbumattum  un  mugaththin  vearvaiyaal  aagaaram  pusippaay;  nee  ma'n'naayirukki'raay,  ma'n'nukkuth  thirumbuvaay  en'raar.  (aathiyaagamam  3:19)

ஆதாம்  தன்  மனைவிக்கு  ஏவாள்  என்று  பேரிட்டான்;  ஏனெனில்,  அவள்  ஜீவனுள்ளோருக்கெல்லாம்  தாயானவள்.  (ஆதியாகமம்  3:20)

aathaam  than  manaivikku  eavaa'l  en'ru  pearittaan;  eanenil,  ava'l  jeevanu'l'loarukkellaam  thaayaanava'l.  (aathiyaagamam  3:20)

தேவனாகிய  கர்த்தர்  ஆதாமுக்கும்  அவன்  மனைவிக்கும்  தோல்  உடைகளை  உண்டாக்கி  அவர்களுக்கு  உடுத்தினார்.  (ஆதியாகமம்  3:21)

theavanaagiya  karththar  aathaamukkum  avan  manaivikkum  thoal  udaiga'lai  u'ndaakki  avarga'lukku  uduththinaar.  (aathiyaagamam  3:21)

பின்பு  தேவனாகிய  கர்த்தர்:  இதோ,  மனுஷன்  நன்மை  தீமை  அறியத்தக்கவனாய்  நம்மில்  ஒருவரைப்போல்  ஆனான்;  இப்பொழுதும்  அவன்  தன்  கையை  நீட்டி  ஜீவவிருட்சத்தின்  கனியையும்  பறித்து,  புசித்து,  என்றைக்கும்  உயிரோடிராதபடிக்குச்  செய்யவேண்டும்  என்று,  (ஆதியாகமம்  3:22)

pinbu  theavanaagiya  karththar:  ithoa,  manushan  nanmai  theemai  a'riyaththakkavanaay  nammil  oruvaraippoal  aanaan;  ippozhuthum  avan  than  kaiyai  neetti  jeevavirudchaththin  kaniyaiyum  pa'riththu,  pusiththu,  en'raikkum  uyiroadiraathapadikkuch  seyyavea'ndum  en'ru,  (aathiyaagamam  3:22)

அவன்  எடுக்கப்பட்ட  மண்ணைப்  பண்படுத்த  தேவனாகிய  கர்த்தர்  அவனை  ஏதேன்  தோட்டத்திலிருந்து  அனுப்பிவிட்டார்.  (ஆதியாகமம்  3:23)

avan  edukkappatta  ma'n'naip  pa'npaduththa  theavanaagiya  karththar  avanai  eathean  thoattaththilirunthu  anuppivittaar.  (aathiyaagamam  3:23)

அவர்  மனுஷனைத்  துரத்திவிட்டு,  ஜீவவிருட்சத்துக்குப்  போம்  வழியைக்  காவல்செய்ய  ஏதேன்  தோட்டத்துக்குக்  கிழக்கே  கேருபீன்களையும்,  வீசிக்கொண்டிருக்கிற  சுடரொளி  பட்டயத்தையும்  வைத்தார்.  (ஆதியாகமம்  3:24)

avar  manushanaith  thuraththivittu,  jeevavirudchaththukkup  poam  vazhiyaik  kaavalseyya  eathean  thoattaththukkuk  kizhakkea  kearubeenga'laiyum,  veesikko'ndirukki'ra  sudaro'li  pattayaththaiyum  vaiththaar.  (aathiyaagamam  3:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!