Sunday, June 26, 2016

Aathiyaagamam 24 | ஆதியாகமம் 24 | Genesis 24

ஆபிரகாம்  வயதுசென்று  முதிர்ந்தவனானான்.  கர்த்தர்  ஆபிரகாமைச்  சகல  காரியங்களிலும்  ஆசீர்வதித்துவந்தார்.  (ஆதியாகமம்  24:1)

aabirahaam  vayathusen’ru  muthirnthavanaanaan.  karththar  aabirahaamaich  sagala  kaariyangga'lilum  aaseervathiththuvanthaar.  (aathiyaagamam  24:1)

அப்பொழுது  ஆபிரகாம்  தன்  வீட்டிலுள்ளவர்களில்  வயதில்  மூத்தவனும்,  தனக்கு  உண்டான  எல்லாவற்றிற்கும்  அதிகாரியுமாகிய  தன்  ஊழியக்காரனை  நோக்கி:  (ஆதியாகமம்  24:2)

appozhuthu  aabirahaam  than  veettilu'l'lavarga'lil  vayathil  mooththavanum,  thanakku  u'ndaana  ellaavat’ri’rkum  athigaariyumaagiya  than  oozhiyakkaaranai  noakki:  (aathiyaagamam  24:2)

நான்  குடியிருக்கிற  கானானியருடைய  குமாரத்திகளில்  நீ  என்  குமாரனுக்குப்  பெண்கொள்ளாமல்;  (ஆதியாகமம்  24:3)

naan  kudiyirukki’ra  kaanaaniyarudaiya  kumaaraththiga'lil  nee  en  kumaaranukkup  pe'nko'l'laamal;  (aathiyaagamam  24:3)

நீ  என்  தேசத்துக்கும்  என்  இனத்தாரிடத்துக்கும்  போய்,  என்  குமாரனாகிய  ஈசாக்குக்குப்  பெண்கொள்வேன்  என்று,  வானத்துக்குத்  தேவனும்  பூமிக்குத்  தேவனுமாகிய  கர்த்தர்பேரில்  எனக்கு  ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு,  நீ  உன்  கையை  என்  தொடையின்கீழ்  வை  என்றான்.  (ஆதியாகமம்  24:4)

nee  en  theasaththukkum  en  inaththaaridaththukkum  poay,  en  kumaaranaagiya  eesaakkukkup  pe'nko'lvean  en’ru,  vaanaththukkuth  theavanum  boomikkuth  theavanumaagiya  karththarpearil  enakku  aa'naiyittukkodukkumpadikku,  nee  un  kaiyai  en  thodaiyinkeezh  vai  en’raan.  (aathiyaagamam  24:4)

அதற்கு  அந்த  ஊழியக்காரன்:  அவ்விடத்துப்  பெண்  என்  பின்னே  இந்தத்  தேசத்துக்கு  வர  மனதில்லாதிருந்தால்,  நீர்  விட்டுவந்த  தேசத்திற்குத்தானே  உம்முடைய  குமாரனை  மறுபடியும்  அழைத்துப்போகவேண்டுமோ  என்று  கேட்டான்.  (ஆதியாகமம்  24:5)

atha’rku  antha  oozhiyakkaaran:  avvidaththup  pe'n  en  pinnea  inthath  theasaththukku  vara  manathillaathirunthaal,  neer  vittuvantha  theasaththi’rkuththaanea  ummudaiya  kumaaranai  ma’rupadiyum  azhaiththuppoagavea'ndumoa  en’ru  keattaan.  (aathiyaagamam  24:5)

அதற்கு  ஆபிரகாம்:  நீ  என்  குமாரனை  மறுபடியும்  அங்கே  அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு  எச்சரிக்கையாயிரு.  (ஆதியாகமம்  24:6)

atha’rku  aabirahaam:  nee  en  kumaaranai  ma’rupadiyum  anggea  azhaiththukko'ndupoagaathapadikku  echcharikkaiyaayiru.  (aathiyaagamam  24:6)

என்னை  என்  தகப்பனுடைய  வீட்டிலும்  என்  இனத்தார்  இருக்கிற  தேசத்திலுமிருந்து  அழைத்து  வந்தவரும்,  உன்  சந்ததிக்கு  இந்த  தேசத்தைத்  தருவேன்  என்று  எனக்குச்  சொல்லி  ஆணையிட்டவருமான  வானத்துக்குத்  தேவனாகிய  கர்த்தர்,  நீ  அங்கேயிருந்து  என்  குமாரனுக்கு  ஒரு  பெண்ணைக்  கொண்டுவரும்படிக்கு,  தம்முடைய  தூதனை  உனக்கு  முன்பாக  அனுப்புவார்.  (ஆதியாகமம்  24:7)

ennai  en  thagappanudaiya  veettilum  en  inaththaar  irukki’ra  theasaththilumirunthu  azhaiththu  vanthavarum,  un  santhathikku  intha  theasaththaith  tharuvean  en’ru  enakkuch  solli  aa'naiyittavarumaana  vaanaththukkuth  theavanaagiya  karththar,  nee  anggeayirunthu  en  kumaaranukku  oru  pe'n'naik  ko'nduvarumpadikku,  thammudaiya  thoothanai  unakku  munbaaga  anuppuvaar.  (aathiyaagamam  24:7)

பெண்  உன்  பின்னே  வர  மனதில்லாதிருந்தாளேயாகில்,  அப்பொழுது  நீ  இந்த  என்  ஆணைக்கு  நீங்கலாயிருப்பாய்;  அங்கேமாத்திரம்  என்  குமாரனை  மறுபடியும்  அழைத்துக்கொண்டு  போகவேண்டாம்  என்றான்.  (ஆதியாகமம்  24:8)

pe'n  un  pinnea  vara  manathillaathirunthaa'leayaagil,  appozhuthu  nee  intha  en  aa'naikku  neenggalaayiruppaay;  anggeamaaththiram  en  kumaaranai  ma’rupadiyum  azhaiththukko'ndu  poagavea'ndaam  en’raan.  (aathiyaagamam  24:8)

அப்பொழுது  அந்த  ஊழியக்காரன்  தன்  கையைத்  தன்  எஜமானாகிய  ஆபிரகாமுடைய  தொடையின்கீழ்  வைத்து,  இந்தக்  காரியத்தைக்குறித்து  அவனுக்கு  ஆணையிட்டுக்கொடுத்தான்.  (ஆதியாகமம்  24:9)

appozhuthu  antha  oozhiyakkaaran  than  kaiyaith  than  ejamaanaagiya  aabirahaamudaiya  thodaiyinkeezh  vaiththu,  inthak  kaariyaththaikku’riththu  avanukku  aa'naiyittukkoduththaan.  (aathiyaagamam  24:9)

பின்பு  அந்த  ஊழியக்காரன்  தன்  எஜமானுடைய  ஒட்டகங்களில்  பத்து  ஒட்டகங்களைத்  தன்னுடனே  கொண்டுபோனான்;  தன்  எஜமானுடைய  சகலவித  உச்சிதமான  பொருள்களும்  அவன்  கையில்  இருந்தன;  அவன்  எழுந்து  புறப்பட்டுப்போய்,  மெசொப்பொத்தாமியாவிலே  நாகோருடைய  ஊரில்  சேர்ந்து,  (ஆதியாகமம்  24:10)

pinbu  antha  oozhiyakkaaran  than  ejamaanudaiya  ottagangga'lil  paththu  ottagangga'laith  thannudanea  ko'ndupoanaan;  than  ejamaanudaiya  sagalavitha  uchchithamaana  poru'lga'lum  avan  kaiyil  irunthana;  avan  ezhunthu  pu’rappattuppoay,  mesoppoththaamiyaavilea  naagoarudaiya  ooril  searnthu,  (aathiyaagamam  24:10)

ஊருக்குப்  புறம்பே  ஒரு  தண்ணீர்த்  துரவண்டையிலே,  தண்ணீர்  மொள்ள  ஸ்திரீகள்  புறப்படுகிற  சாயங்கால  வேளையிலே,  ஒட்டகங்களை  மடக்கி,  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டது  என்னவென்றால்:  (ஆதியாகமம்  24:11)

oorukkup  pu’rambea  oru  tha'n'neerth  thurava'ndaiyilea,  tha'n'neer  mo'l'la  sthireega'l  pu’rappadugi’ra  saayanggaala  vea'laiyilea,  ottagangga'lai  madakki,  thanakku'l'lea  sollikko'ndathu  ennaven’raal:  (aathiyaagamam  24:11)

என்  எஜமானாகிய  ஆபிரகாமுக்கு  தேவனாயிருக்கிற  கர்த்தாவே,  இன்றைக்கு  நீர்  எனக்குக்  காரியம்  சித்திக்கப்பண்ணி,  என்  எஜமானாகிய  ஆபிரகாமுக்குத்  தயவுசெய்தருளும்.  (ஆதியாகமம்  24:12)

en  ejamaanaagiya  aabirahaamukku  theavanaayirukki’ra  karththaavea,  in’raikku  neer  enakkuk  kaariyam  siththikkappa'n'ni,  en  ejamaanaagiya  aabirahaamukkuth  thayavuseytharu'lum.  (aathiyaagamam  24:12)

இதோ,  நான்  இந்தத்  தண்ணீர்த்  துரவண்டையிலே  நிற்கிறேன்,  இந்த  ஊராருடைய  பெண்கள்  தண்ணீர்  மொள்ளப்  புறப்பட்டு  வருவார்களே.  (ஆதியாகமம்  24:13)

ithoa,  naan  inthath  tha'n'neerth  thurava'ndaiyilea  ni’rki’rean,  intha  ooraarudaiya  pe'nga'l  tha'n'neer  mo'l'lap  pu’rappattu  varuvaarga'lea.  (aathiyaagamam  24:13)

நான்  குடிக்க  உன்  குடத்தைச்  சாய்க்க  வேண்டும்  என்று  நான்  சொல்லும்போது:  குடி  என்றும்,  உன்  ஒட்டகங்களும்  குடிக்கும்படி  வார்ப்பேன்  என்றும்  சொல்லும்  பெண்  எவளோ,  அவளே  நீர்  உம்முடைய  ஊழியக்காரனாகிய  ஈசாக்குக்கு  நியமித்தவளாயிருக்கவும்,  என்  எஜமானுக்கு  அநுக்கிரகம்  செய்தீர்  என்று  நான்  அதினாலே  அறியவும்  செய்தருளும்  என்றான்.  (ஆதியாகமம்  24:14)

naan  kudikka  un  kudaththaich  saaykka  vea'ndum  en’ru  naan  sollumpoathu:  kudi  en’rum,  un  ottagangga'lum  kudikkumpadi  vaarppean  en’rum  sollum  pe'n  eva'loa,  ava'lea  neer  ummudaiya  oozhiyakkaaranaagiya  eesaakkukku  niyamiththava'laayirukkavum,  en  ejamaanukku  anukkiragam  seytheer  en’ru  naan  athinaalea  a’riyavum  seytharu'lum  en’raan.  (aathiyaagamam  24:14)

அவன்  இப்படிச்  சொல்லி  முடிக்கும்  முன்னே,  இதோ,  ஆபிரகாமுடைய  சகோதரனாகிய  நாகோரின்  மனைவி  மில்க்காளுடைய  குமாரனாயிருக்கிற  பெத்துவேலுக்குப்  பிறந்த  ரெபெக்காள்  குடத்தைத்  தோள்மேல்  வைத்துக்கொண்டு  புறப்பட்டு  வந்தாள்.  (ஆதியாகமம்  24:15)

avan  ippadich  solli  mudikkum  munnea,  ithoa,  aabirahaamudaiya  sagoatharanaagiya  naagoarin  manaivi  milkkaa'ludaiya  kumaaranaayirukki’ra  beththuvealukkup  pi’rantha  rebekkaa'l  kudaththaith  thoa'lmeal  vaiththukko'ndu  pu’rappattu  vanthaa'l.  (aathiyaagamam  24:15)

அந்தப்  பெண்  மகா  ரூபவதியும்,  புருஷனை  அறியாத  கன்னிகையுமாய்  இருந்தாள்;  அவள்  துரவில்  இறங்கி,  தன்  குடத்தை  நிரப்பிக்கொண்டு  ஏறிவந்தாள்.  (ஆதியாகமம்  24:16)

anthap  pe'n  mahaa  roobavathiyum,  purushanai  a’riyaatha  kannigaiyumaay  irunthaa'l;  ava'l  thuravil  i’ranggi,  than  kudaththai  nirappikko'ndu  ea’rivanthaa'l.  (aathiyaagamam  24:16)

அப்பொழுது  அந்த  ஊழியக்காரன்,  அவளுக்கு  எதிர்கொண்டோடி:  உன்  குடத்திலிருக்கிற  தண்ணீரில்  கொஞ்சம்  குடிக்கத்  தரவேண்டும்  என்றான்.  (ஆதியாகமம்  24:17)

appozhuthu  antha  oozhiyakkaaran,  ava'lukku  ethirko'ndoadi:  un  kudaththilirukki’ra  tha'n'neeril  kogncham  kudikkath  tharavea'ndum  en’raan.  (aathiyaagamam  24:17)

அதற்கு  அவள்:  குடியும்  என்  ஆண்டவனே  என்று  சீக்கிரமாய்க்  குடத்தைத்  தன்  கையில்  இறக்கிக்கொண்டு,  அவனுக்குக்  குடிக்கக்  கொடுத்தாள்.  (ஆதியாகமம்  24:18)

atha’rku  ava'l:  kudiyum  en  aa'ndavanea  en’ru  seekkiramaayk  kudaththaith  than  kaiyil  i’rakkikko'ndu,  avanukkuk  kudikkak  koduththaa'l.  (aathiyaagamam  24:18)

கொடுத்தபின்,  உம்முடைய  ஒட்டகங்களும்  குடித்துத்  தீருமட்டும்  அவைகளுக்கும்  மொண்டு  வார்ப்பேன்  என்று  சொல்லி;  (ஆதியாகமம்  24:19)

koduththapin,  ummudaiya  ottagangga'lum  kudiththuth  theerumattum  avaiga'lukkum  mo'ndu  vaarppean  en’ru  solli;  (aathiyaagamam  24:19)

சீக்கிரமாய்த்  தன்  குடத்துத்  தண்ணீரைத்  தொட்டியிலே  ஊற்றிவிட்டு,  இன்னும்  மொண்டுவரத்  துரவண்டையில்  ஓடி,  அவனுடைய  ஒட்டகங்களுக்கெல்லாம்  மொண்டு  வார்த்தாள்.  (ஆதியாகமம்  24:20)

seekkiramaayth  than  kudaththuth  tha'n'neeraith  thottiyilea  oot’rivittu,  innum  mo'nduvarath  thurava'ndaiyil  oadi,  avanudaiya  ottagangga'lukkellaam  mo'ndu  vaarththaa'l.  (aathiyaagamam  24:20)

அந்த  மனிதன்  அவளைக்குறித்து  ஆச்சரியப்பட்டு,  கர்த்தர்  தன்  பிரயாணத்தை  வாய்க்கப்பண்ணினாரோ  இல்லையோ  என்று  அறியும்பொருட்டு  மவுனமாயிருந்தான்.  (ஆதியாகமம்  24:21)

antha  manithan  ava'laikku’riththu  aachchariyappattu,  karththar  than  pirayaa'naththai  vaaykkappa'n'ninaaroa  illaiyoa  en’ru  a’riyumporuttu  mavunamaayirunthaan.  (aathiyaagamam  24:21)

ஒட்டகங்கள்  குடித்துத்  தீர்ந்தபின்,  அந்த  மனிதன்  அரைச்சேக்கல்  எடையுள்ள  பொற்காதணியையும்,  அவள்  கைகளுக்குப்  பத்துச்  சேக்கல்  எடைப்  பொன்னுள்ள  இரண்டு  கடகங்களையும்  எடுத்துக்கொடுத்து,  (ஆதியாகமம்  24:22)

ottagangga'l  kudiththuth  theernthapin,  antha  manithan  araichseakkal  edaiyu'l'la  po’rkaatha'niyaiyum,  ava'l  kaiga'lukkup  paththuch  seakkal  edaip  ponnu'l'la  ira'ndu  kadagangga'laiyum  eduththukkoduththu,  (aathiyaagamam  24:22)

நீ  யாருடைய  மகள்,  எனக்குச்  சொல்லவேண்டும்;  நாங்கள்  உன்  தகப்பன்  வீட்டில்  இராத்தங்க  இடம்  உண்டா  என்றான்.  (ஆதியாகமம்  24:23)

nee  yaarudaiya  maga'l,  enakkuch  sollavea'ndum;  naangga'l  un  thagappan  veettil  iraaththangga  idam  u'ndaa  en’raan.  (aathiyaagamam  24:23)

அதற்கு  அவள்:  நான்  நாகோருக்கு  மில்க்காள்  பெற்ற  குமாரனாகிய  பெத்துவேலின்  மகள்  என்று  சொன்னதுமன்றி,  (ஆதியாகமம்  24:24)

atha’rku  ava'l:  naan  naagoarukku  milkkaa'l  pet’ra  kumaaranaagiya  beththuvealin  maga'l  en’ru  sonnathuman’ri,  (aathiyaagamam  24:24)

எங்களிடத்தில்  வைக்கோலும்  தீவனமும்  வேண்டியமட்டும்  இருக்கிறது;  இராத்தங்க  இடமும்  உண்டு  என்றாள்.  (ஆதியாகமம்  24:25)

engga'lidaththil  vaikkoalum  theevanamum  vea'ndiyamattum  irukki’rathu;  iraaththangga  idamum  u'ndu  en’raa'l.  (aathiyaagamam  24:25)

அப்பொழுது  அந்த  மனிதன்  தலைகுனிந்து,  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  (ஆதியாகமம்  24:26)

appozhuthu  antha  manithan  thalaikuninthu,  karththaraip  pa'ninthuko'ndu,  (aathiyaagamam  24:26)

என்  எஜமானாகிய  ஆபிரகாமின்  தேவனாயிருக்கிற  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  தம்முடைய  கிருபையையும்,  தம்முடைய  உண்மையையும்  என்  எஜமானை  விட்டு  நீக்கவில்லை;  நான்  பிரயாணம்பண்ணிவருகையில்,  கர்த்தர்  என்  எஜமானுடைய  சகோதரர்  வீட்டுக்கு  என்னை  அழைத்துக்கொண்டுவந்தார்  என்றான்.  (ஆதியாகமம்  24:27)

en  ejamaanaagiya  aabirahaamin  theavanaayirukki’ra  karththarukku  sthoaththiram;  avar  thammudaiya  kirubaiyaiyum,  thammudaiya  u'nmaiyaiyum  en  ejamaanai  vittu  neekkavillai;  naan  pirayaa'nampa'n'nivarugaiyil,  karththar  en  ejamaanudaiya  sagoatharar  veettukku  ennai  azhaiththukko'nduvanthaar  en’raan.  (aathiyaagamam  24:27)

அந்தப்  பெண்  ஓடி,  இந்தக்  காரியங்களைத்  தன்  தாயின்  வீட்டிலுள்ளவர்களுக்கு  அறிவித்தாள்.  (ஆதியாகமம்  24:28)

anthap  pe'n  oadi,  inthak  kaariyangga'laith  than  thaayin  veettilu'l'lavarga'lukku  a’riviththaa'l.  (aathiyaagamam  24:28)

ரெபெக்காளுக்கு  ஒரு  சகோதரன்  இருந்தான்;  அவனுக்கு  லாபான்  என்று  பேர்;  அந்த  லாபான்  வெளியே  துரவண்டையில்  இருந்த  அந்த  மனிதனிடத்துக்கு  ஓடினான்.  (ஆதியாகமம்  24:29)

rebekkaa'lukku  oru  sagoatharan  irunthaan;  avanukku  laabaan  en’ru  pear;  antha  laabaan  ve'liyea  thurava'ndaiyil  iruntha  antha  manithanidaththukku  oadinaan.  (aathiyaagamam  24:29)

அவன்  தன்  சகோதரி  தரித்திருந்த  அந்தக்  காதணியையும்,  அவள்  கைகளில்  போட்டிருந்த  கடகங்களையும்  பார்த்து,  இன்ன  இன்னபடி  அந்த  மனிதன்  என்னோடே  பேசினானென்று  தன்  சகோதரி  ரெபெக்காள்  சொன்ன  வார்த்தைகளைக்  கேட்டமாத்திரத்தில்,  அந்த  மனிதனிடத்தில்  வந்தான்;  அவன்  துரவு  அருகே  ஒட்டகங்கள்  அண்டையில்  நின்றுகொண்டிருந்தான்.  (ஆதியாகமம்  24:30)

avan  than  sagoathari  thariththiruntha  anthak  kaatha'niyaiyum,  ava'l  kaiga'lil  poattiruntha  kadagangga'laiyum  paarththu,  inna  innapadi  antha  manithan  ennoadea  peasinaanen’ru  than  sagoathari  rebekkaa'l  sonna  vaarththaiga'laik  keattamaaththiraththil,  antha  manithanidaththil  vanthaan;  avan  thuravu  arugea  ottagangga'l  a'ndaiyil  nin’ruko'ndirunthaan.  (aathiyaagamam  24:30)

அப்பொழுது  அவன்:  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்பட்டவரே,  உள்ளே  வாரும்;  நீர்  வெளியே  நிற்பானேன்?  உமக்கு  வீடும்,  ஒட்டகங்களுக்கு  இடமும்  ஆயத்தம்பண்ணியிருக்கிறேன்  என்றான்.  (ஆதியாகமம்  24:31)

appozhuthu  avan:  karththaraal  aaseervathikkappattavarea,  u'l'lea  vaarum;  neer  ve'liyea  ni’rpaanean?  umakku  veedum,  ottagangga'lukku  idamum  aayaththampa'n'niyirukki’rean  en’raan.  (aathiyaagamam  24:31)

அப்பொழுது  அந்த  மனிதன்  வீட்டுக்குப்  போனான்.  லாபான்  ஒட்டகங்களின்  கட்டவிழ்த்து,  ஒட்டகங்களுக்கு  வைக்கோலும்  தீவனமும்  போட்டு,  அவனும்,  அவனோடே  வந்தவர்களும்  தங்கள்  கால்களைக்  கழுவிக்கொள்ளத்  தண்ணீர்  கொடுத்தான்.  (ஆதியாகமம்  24:32)

appozhuthu  antha  manithan  veettukkup  poanaan.  laabaan  ottagangga'lin  kattavizhththu,  ottagangga'lukku  vaikkoalum  theevanamum  poattu,  avanum,  avanoadea  vanthavarga'lum  thangga'l  kaalga'laik  kazhuvikko'l'lath  tha'n'neer  koduththaan.  (aathiyaagamam  24:32)

பின்பு,  அவனுக்கு  முன்பாக  போஜனம்  வைக்கப்பட்டது.  அப்பொழுது  அவன்:  நான்  வந்த  காரியத்தைச்  சொல்லுமுன்னே  புசிக்கமாட்டேன்  என்றான்.  அதற்கு  அவன்,  சொல்லும்  என்றான்.  (ஆதியாகமம்  24:33)

pinbu,  avanukku  munbaaga  poajanam  vaikkappattathu.  appozhuthu  avan:  naan  vantha  kaariyaththaich  sollumunnea  pusikkamaattean  en’raan.  atha’rku  avan,  sollum  en’raan.  (aathiyaagamam  24:33)

அப்பொழுது  அவன்:  நான்  ஆபிரகாமுடைய  ஊழியக்காரன்.  (ஆதியாகமம்  24:34)

appozhuthu  avan:  naan  aabirahaamudaiya  oozhiyakkaaran.  (aathiyaagamam  24:34)

கர்த்தர்  என்  எஜமானை  மிகவும்  ஆசீர்வதித்திருக்கிறார்,  அவர்  சீமானாயிருக்கிறார்;  கர்த்தர்  அவருக்கு  ஆடுமாடுகளையும்,  வெள்ளியையும்,  பொன்னையும்,  வேலைக்காரரையும்,  வேலைக்காரிகளையும்,  ஒட்டகங்களையும்,  கழுதைகளையும்  கொடுத்திருக்கிறார்.  (ஆதியாகமம்  24:35)

karththar  en  ejamaanai  migavum  aaseervathiththirukki’raar,  avar  seemaanaayirukki’raar;  karththar  avarukku  aadumaaduga'laiyum,  ve'l'liyaiyum,  ponnaiyum,  vealaikkaararaiyum,  vealaikkaariga'laiyum,  ottagangga'laiyum,  kazhuthaiga'laiyum  koduththirukki’raar.  (aathiyaagamam  24:35)

என்  எஜமானுடைய  மனைவியாகிய  சாராள்  முதிர்வயதானபோது,  என்  எஜமானுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அவர்  தமக்கு  உண்டான  யாவையும்  அவனுக்குக்  கொடுத்திருக்கிறார்.  (ஆதியாகமம்  24:36)

en  ejamaanudaiya  manaiviyaagiya  saaraa'l  muthirvayathaanapoathu,  en  ejamaanukku  oru  kumaaranaip  pet’raa'l;  avar  thamakku  u'ndaana  yaavaiyum  avanukkuk  koduththirukki’raar.  (aathiyaagamam  24:36)

என்  எஜமான்  என்னை  நோக்கி:  நான்  குடியிருக்கிற  கானான்  தேசத்தாருடைய  குமாரத்திகளில்  நீ  என்  குமாரனுக்குப்  பெண்கொள்ளாமல்,  (ஆதியாகமம்  24:37)

en  ejamaan  ennai  noakki:  naan  kudiyirukki’ra  kaanaan  theasaththaarudaiya  kumaaraththiga'lil  nee  en  kumaaranukkup  pe'nko'l'laamal,  (aathiyaagamam  24:37)

நீ  என்  தகப்பன்  வீட்டுக்கும்,  என்  இனத்தாரிடத்துக்கும்  போய்,  என்  குமாரனுக்குப்  பெண்கொள்ளவேண்டும்  என்று  ஆணையிட்டுக்கொடுக்கும்படி  சொன்னார்.  (ஆதியாகமம்  24:38)

nee  en  thagappan  veettukkum,  en  inaththaaridaththukkum  poay,  en  kumaaranukkup  pe'nko'l'lavea'ndum  en’ru  aa'naiyittukkodukkumpadi  sonnaar.  (aathiyaagamam  24:38)

அப்பொழுது  நான்  என்  எஜமானை  நோக்கி:  ஒருவேளை  அந்தப்  பெண்  என்பின்னே  வராதேபோனாலோ  என்று  கேட்டதற்கு,  (ஆதியாகமம்  24:39)

appozhuthu  naan  en  ejamaanai  noakki:  oruvea'lai  anthap  pe'n  enpinnea  varaatheapoanaaloa  en’ru  keattatha’rku,  (aathiyaagamam  24:39)

அவர்:  நான்  வழிபடும்  கர்த்தர்  உன்னோடே  தம்முடைய  தூதனை  அனுப்பி,  உன்  பிரயாணத்தை  வாய்க்கப்பண்ணுவார்;  என்  இனத்தாரிடத்திலும்,  என்  தகப்பன்  வீட்டிலும்  நீ  என்  குமாரனுக்குப்  பெண்கொள்வாய்.  (ஆதியாகமம்  24:40)

avar:  naan  vazhipadum  karththar  unnoadea  thammudaiya  thoothanai  anuppi,  un  pirayaa'naththai  vaaykkappa'n'nuvaar;  en  inaththaaridaththilum,  en  thagappan  veettilum  nee  en  kumaaranukkup  pe'nko'lvaay.  (aathiyaagamam  24:40)

நீ  என்  இனத்தாரிடத்துக்குப்  போனால்,  என்  ஆணைக்கு  நீங்கலாயிருப்பாய்;  அவர்கள்  உனக்குப்  பெண்கொடாமற்போனாலும்,  நீ  என்  ஆணைக்கு  நீங்கலாயிருப்பாய்  என்றார்.  (ஆதியாகமம்  24:41)

nee  en  inaththaaridaththukkup  poanaal,  en  aa'naikku  neenggalaayiruppaay;  avarga'l  unakkup  pe'nkodaama’rpoanaalum,  nee  en  aa'naikku  neenggalaayiruppaay  en’raar.  (aathiyaagamam  24:41)

அப்படியே  நான்  இன்று  துரவண்டையிலே  வந்து:  என்  எஜமானாகிய  ஆபிரகாமின்  தேவனாகிய  கர்த்தரே,  என்  பிரயாணத்தை  நீர்  இப்பொழுது  வாய்க்கப்பண்ணுவீரானால்,  (ஆதியாகமம்  24:42)

appadiyea  naan  in’ru  thurava'ndaiyilea  vanthu:  en  ejamaanaagiya  aabirahaamin  theavanaagiya  karththarea,  en  pirayaa'naththai  neer  ippozhuthu  vaaykkappa'n'nuveeraanaal,  (aathiyaagamam  24:42)

இதோ,  நான்  தண்ணீர்த்  துரவண்டையிலே  நிற்கிறேன்,  தண்ணீர்  மொள்ள  வரப்போகிற  கன்னிகையை  நான்  நோக்கி:  உன்  குடத்திலிருக்கிற  தண்ணீரில்  கொஞ்சம்  எனக்குக்  குடிக்கத்  தரவேண்டும்  என்று  கேட்கும்போது:  (ஆதியாகமம்  24:43)

ithoa,  naan  tha'n'neerth  thurava'ndaiyilea  ni’rki’rean,  tha'n'neer  mo'l'la  varappoagi’ra  kannigaiyai  naan  noakki:  un  kudaththilirukki’ra  tha'n'neeril  kogncham  enakkuk  kudikkath  tharavea'ndum  en’ru  keadkumpoathu:  (aathiyaagamam  24:43)

நீ  குடி  என்றும்,  உன்  ஒட்டகங்களுக்கும்  மொண்டு  வார்ப்பேன்  என்றும்  சொல்லும்  பெண்ணே  கர்த்தர்  என்  எஜமானுடைய  குமாரனுக்கு  நியமித்த  ஸ்திரீயாகவேண்டும்  என்றேன்.  (ஆதியாகமம்  24:44)

nee  kudi  en’rum,  un  ottagangga'lukkum  mo'ndu  vaarppean  en’rum  sollum  pe'n'nea  karththar  en  ejamaanudaiya  kumaaranukku  niyamiththa  sthireeyaagavea'ndum  en’rean.  (aathiyaagamam  24:44)

நான்  இதை  என்  இருதயத்தில்  சொல்லி  முடிக்குமுன்னே,  இதோ,  ரெபெக்காள்  தன்  குடத்தைத்  தோள்மேல்  வைத்துக்கொண்டு  புறப்பட்டுவந்து,  துரவில்  இறங்கிப்போய்த்  தண்ணீர்  மொண்டாள்.  அப்பொழுது  நான்:  எனக்குக்  குடிக்கத்  தரவேண்டும்  என்றேன்.  (ஆதியாகமம்  24:45)

naan  ithai  en  iruthayaththil  solli  mudikkumunnea,  ithoa,  rebekkaa'l  than  kudaththaith  thoa'lmeal  vaiththukko'ndu  pu’rappattuvanthu,  thuravil  i’ranggippoayth  tha'n'neer  mo'ndaa'l.  appozhuthu  naan:  enakkuk  kudikkath  tharavea'ndum  en’rean.  (aathiyaagamam  24:45)

அவள்  சீக்கிரமாய்த்  தன்  தோள்மேலிருந்த  குடத்தை  இறக்கி,  குடியும்,  உம்முடைய  ஒட்டகங்களுக்கும்  வார்ப்பேன்  என்றாள்.  நான்  குடித்தேன்;  ஒட்டகங்களுக்கும்  வார்த்தாள்.  (ஆதியாகமம்  24:46)

ava'l  seekkiramaayth  than  thoa'lmealiruntha  kudaththai  i’rakki,  kudiyum,  ummudaiya  ottagangga'lukkum  vaarppean  en’raa'l.  naan  kudiththean;  ottagangga'lukkum  vaarththaa'l.  (aathiyaagamam  24:46)

அப்பொழுது:  நீ  யாருடைய  மகள்  என்று  அவளைக்  கேட்டேன்;  அதற்கு  அவள்:  நான்  மில்க்காள்  நாகோருக்குப்  பெற்ற  குமாரனாகிய  பெத்துவேலின்  மகள்  என்றாள்;  அப்பொழுது  அவளுக்குக்  காதணியையும்,  அவள்  கைகளிலே  கடகங்களையும்  போட்டு;  (ஆதியாகமம்  24:47)

appozhuthu:  nee  yaarudaiya  maga'l  en’ru  ava'laik  keattean;  atha’rku  ava'l:  naan  milkkaa'l  naagoarukkup  pet’ra  kumaaranaagiya  beththuvealin  maga'l  en’raa'l;  appozhuthu  ava'lukkuk  kaatha'niyaiyum,  ava'l  kaiga'lilea  kadagangga'laiyum  poattu;  (aathiyaagamam  24:47)

தலைகுனிந்து,  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  நான்  என்  எஜமானுடைய  சகோதரன்  குமாரத்தியை  அவர்  குமாரனுக்குக்  கொள்ள  என்னை  நேர்வழியாய்  நடத்திவந்த  என்  எஜமானாகிய  ஆபிரகாமின்  தேவனாயிருக்கிற  கர்த்தரை  ஸ்தோத்திரித்தேன்.  (ஆதியாகமம்  24:48)

thalaikuninthu,  karththaraip  pa'ninthuko'ndu,  naan  en  ejamaanudaiya  sagoatharan  kumaaraththiyai  avar  kumaaranukkuk  ko'l'la  ennai  nearvazhiyaay  nadaththivantha  en  ejamaanaagiya  aabirahaamin  theavanaayirukki’ra  karththarai  sthoaththiriththean.  (aathiyaagamam  24:48)

இப்பொழுதும்  நீங்களும்  என்  எஜமானுக்குத்  தயையும்  உண்மையும்  உடையவர்களாய்  நடக்க  மனதுள்ளவர்களானால்,  எனக்குச்  சொல்லுங்கள்;  இல்லையென்றால்  அதையும்  எனக்குச்  சொல்லுங்கள்,  அப்பொழுது  நான்  வலதுபுறத்தையாகிலும்  இடதுபுறத்தையாகிலும்  நோக்கிப்  போவேன்  என்றான்.  (ஆதியாகமம்  24:49)

ippozhuthum  neengga'lum  en  ejamaanukkuth  thayaiyum  u'nmaiyum  udaiyavarga'laay  nadakka  manathu'l'lavarga'laanaal,  enakkuch  sollungga'l;  illaiyen’raal  athaiyum  enakkuch  sollungga'l,  appozhuthu  naan  valathupu’raththaiyaagilum  idathupu’raththaiyaagilum  noakkip  poavean  en’raan.  (aathiyaagamam  24:49)

அப்பொழுது  லாபானும்  பெத்துவேலும்  பிரதியுத்தரமாக:  இந்தக்  காரியம்  கர்த்தரால்  வந்தது,  உமக்கு  நாங்கள்  நலம்  பொலம்  ஒன்றும்  சொல்லக்கூடாது.  (ஆதியாகமம்  24:50)

appozhuthu  laabaanum  beththuvealum  pirathiyuththaramaaga:  inthak  kaariyam  karththaraal  vanthathu,  umakku  naangga'l  nalam  polam  on’rum  sollakkoodaathu.  (aathiyaagamam  24:50)

இதோ,  ரெபெக்காள்  உமக்கு  முன்பாக  இருக்கிறாள்;  கர்த்தர்  சொன்னபடியே  அவள்  உமது  எஜமானுடைய  குமாரனுக்கு  மனைவியாகும்படிக்கு,  அவளை  அழைத்துக்கொண்டுபோம்  என்றார்கள்.  (ஆதியாகமம்  24:51)

ithoa,  rebekkaa'l  umakku  munbaaga  irukki’raa'l;  karththar  sonnapadiyea  ava'l  umathu  ejamaanudaiya  kumaaranukku  manaiviyaagumpadikku,  ava'lai  azhaiththukko'ndupoam  en’raarga'l.  (aathiyaagamam  24:51)

ஆபிரகாமின்  ஊழியக்காரன்  அவர்கள்  வார்த்தைகளைக்  கேட்டபோது,  தரைமட்டும்  குனிந்து,  கர்த்தரைப்  பணிந்துகொண்டான்.  (ஆதியாகமம்  24:52)

aabirahaamin  oozhiyakkaaran  avarga'l  vaarththaiga'laik  keattapoathu,  tharaimattum  kuninthu,  karththaraip  pa'ninthuko'ndaan.  (aathiyaagamam  24:52)

பின்பு  அந்த  ஊழியக்காரன்  வெள்ளியுடைமைகளையும்,  பொன்னுடைமைகளையும்,  வஸ்திரங்களையும்  எடுத்து,  ரெபெக்காளுக்குக்  கொடுத்ததுமன்றி,  அவளுடைய  சகோதரனுக்கும்  தாய்க்கும்  சில  உச்சிதங்களையும்  கொடுத்தான்.  (ஆதியாகமம்  24:53)

pinbu  antha  oozhiyakkaaran  ve'l'liyudaimaiga'laiyum,  ponnudaimaiga'laiyum,  vasthirangga'laiyum  eduththu,  rebekkaa'lukkuk  koduththathuman’ri,  ava'ludaiya  sagoatharanukkum  thaaykkum  sila  uchchithangga'laiyum  koduththaan.  (aathiyaagamam  24:53)

பின்பு  அவனும்  அவனோடிருந்த  மனிதரும்  புசித்துக்  குடித்து,  இராத்தங்கினார்கள்;  காலையிலே  எழுந்திருந்து,  அவன்:  என்  எஜமானிடத்துக்கு  என்னை  அனுப்பிவிடுங்கள்  என்றான்.  (ஆதியாகமம்  24:54)

pinbu  avanum  avanoadiruntha  manitharum  pusiththuk  kudiththu,  iraaththangginaarga'l;  kaalaiyilea  ezhunthirunthu,  avan:  en  ejamaanidaththukku  ennai  anuppividungga'l  en’raan.  (aathiyaagamam  24:54)

அப்பொழுது  அவள்  சகோதரனும்  அவள்  தாயும்,  பத்து  நாளாகிலும்  பெண்  எங்களோடிருக்கட்டும்,  பிற்பாடு  போகலாம்  என்றார்கள்.  (ஆதியாகமம்  24:55)

appozhuthu  ava'l  sagoatharanum  ava'l  thaayum,  paththu  naa'laagilum  pe'n  engga'loadirukkattum,  pi’rpaadu  poagalaam  en’raarga'l.  (aathiyaagamam  24:55)

அதற்கு  அவன்:  கர்த்தர்  என்  பிரயாணத்தை  வாய்க்கப்பண்ணியிருக்க,  நீங்கள்  எனக்குத்  தடைசெய்யாதிருங்கள்;  நான்  என்  எஜமானிடத்துக்குப்போக  என்னை  அனுப்பிவிடவேண்டும்  என்றான்.  (ஆதியாகமம்  24:56)

atha’rku  avan:  karththar  en  pirayaa'naththai  vaaykkappa'n'niyirukka,  neengga'l  enakkuth  thadaiseyyaathirungga'l;  naan  en  ejamaanidaththukkuppoaga  ennai  anuppividavea'ndum  en’raan.  (aathiyaagamam  24:56)

அப்பொழுது  அவர்கள்:  பெண்ணை  அழைத்து,  அவள்  வாய்ப்பிறப்பைக்  கேட்போம்  என்று  சொல்லி,  (ஆதியாகமம்  24:57)

appozhuthu  avarga'l:  pe'n'nai  azhaiththu,  ava'l  vaayppi’rappaik  keadpoam  en’ru  solli,  (aathiyaagamam  24:57)

ரெபெக்காளை  அழைத்து:  நீ  இந்த  மனிதனோடேகூடப்  போகிறாயா  என்று  கேட்டார்கள்.  அவள்:  போகிறேன்  என்றாள்.  (ஆதியாகமம்  24:58)

rebekkaa'lai  azhaiththu:  nee  intha  manithanoadeakoodap  poagi’raayaa  en’ru  keattaarga'l.  ava'l:  poagi’rean  en’raa'l.  (aathiyaagamam  24:58)

அப்படியே  அவர்கள்  தங்கள்  சகோதரியாகிய  ரெபெக்காளையும்,  அவள்  தாதியையும்,  ஆபிரகாமின்  ஊழியக்காரனையும்,  அவன்  மனிதரையும்  அனுப்புவித்து,  (ஆதியாகமம்  24:59)

appadiyea  avarga'l  thangga'l  sagoathariyaagiya  rebekkaa'laiyum,  ava'l  thaathiyaiyum,  aabirahaamin  oozhiyakkaaranaiyum,  avan  manitharaiyum  anuppuviththu,  (aathiyaagamam  24:59)

ரெபெக்காளை  வாழ்த்தி:  எங்கள்  சகோதரியே,  நீ  கோடாகோடியாய்ப்  பெருகுவாயாக;  உன்  சந்ததியார்  தங்கள்  பகைஞருடைய  வாசல்களைச்  சுதந்தரித்துக்கொள்வார்களாக  என்று  ஆசீர்வதித்தார்கள்.  (ஆதியாகமம்  24:60)

rebekkaa'lai  vaazhththi:  engga'l  sagoathariyea,  nee  koadaakoadiyaayp  peruguvaayaaga;  un  santhathiyaar  thangga'l  pagaignarudaiya  vaasalga'laich  suthanthariththukko'lvaarga'laaga  en’ru  aaseervathiththaarga'l.  (aathiyaagamam  24:60)

அப்பொழுது  ரெபெக்காளும்  அவள்  வேலைக்காரிகளும்  எழுந்து  ஒட்டகங்கள்மேல்  ஏறி,  அந்த  மனிதனோடேகூடப்  போனார்கள்.  ஊழியக்காரன்  ரெபெக்காளை  அழைத்துக்கொண்டுபோனான்.  (ஆதியாகமம்  24:61)

appozhuthu  rebekkaa'lum  ava'l  vealaikkaariga'lum  ezhunthu  ottagangga'lmeal  ea’ri,  antha  manithanoadeakoodap  poanaarga'l.  oozhiyakkaaran  rebekkaa'lai  azhaiththukko'ndupoanaan.  (aathiyaagamam  24:61)

ஈசாக்கு  தென்தேசத்தில்  குடியிருந்தான்.  அப்பொழுது  அவன்:  லகாய்ரோயீ  என்னப்பட்ட  துரவின்  வழியாய்ப்  புறப்பட்டுவந்தான்.  (ஆதியாகமம்  24:62)

eesaakku  thentheasaththil  kudiyirunthaan.  appozhuthu  avan:  lagaayroayee  ennappatta  thuravin  vazhiyaayp  pu’rappattuvanthaan.  (aathiyaagamam  24:62)

ஈசாக்கு  சாயங்காலவேளையிலே  தியானம்பண்ண  வெளியிலே  போயிருந்து,  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  ஒட்டகங்கள்  வரக்கண்டான்.  (ஆதியாகமம்  24:63)

eesaakku  saayanggaalavea'laiyilea  thiyaanampa'n'na  ve'liyilea  poayirunthu,  than  ka'nga'lai  ea’reduththup  paarththapoathu,  ottagangga'l  varakka'ndaan.  (aathiyaagamam  24:63)

ரெபெக்காளும்  தன்  கண்களை  ஏறெடுத்து  ஈசாக்கைக்  கண்டபோது,  (ஆதியாகமம்  24:64)

rebekkaa'lum  than  ka'nga'lai  ea’reduththu  eesaakkaik  ka'ndapoathu,  (aathiyaagamam  24:64)

ஊழியக்காரனை  நோக்கி:  அங்கே  வெளியிலே  நமக்கு  எதிராக  நடந்துவருகிற  அந்த  மனிதன்  யார்  என்று  கேட்டாள்.  அவர்தான்  என்  எஜமான்  என்று  ஊழியக்காரன்  சொன்னான்.  அப்பொழுது  அவள்  ஒட்டகத்தை  விட்டிறங்கி  முக்காடிட்டுக்கொண்டாள்.  (ஆதியாகமம்  24:65)

oozhiyakkaaranai  noakki:  anggea  ve'liyilea  namakku  ethiraaga  nadanthuvarugi’ra  antha  manithan  yaar  en’ru  keattaa'l.  avarthaan  en  ejamaan  en’ru  oozhiyakkaaran  sonnaan.  appozhuthu  ava'l  ottagaththai  vitti’ranggi  mukkaadittukko'ndaa'l.  (aathiyaagamam  24:65)

ஊழியக்காரன்  தான்  செய்த  சகல  காரியங்களையும்  ஈசாக்குக்கு  விவரித்துச்  சொன்னான்.  (ஆதியாகமம்  24:66)

oozhiyakkaaran  thaan  seytha  sagala  kaariyangga'laiyum  eesaakkukku  vivariththuch  sonnaan.  (aathiyaagamam  24:66)

அப்பொழுது  ஈசாக்கு  ரெபெக்காளைத்  தன்  தாய்  சாராளுடைய  கூடாரத்துக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  அவளைத்  தனக்கு  மனைவியாக்கிக்கொண்டு,  அவளை  நேசித்தான்.  ஈசாக்கு  தன்  தாய்க்காகக்  கொண்டிருந்த  துக்கம்  நீங்கி  ஆறுதல்  அடைந்தான்.  (ஆதியாகமம்  24:67)

appozhuthu  eesaakku  rebekkaa'laith  than  thaay  saaraa'ludaiya  koodaaraththukku  azhaiththukko'ndupoay,  ava'laith  thanakku  manaiviyaakkikko'ndu,  ava'lai  neasiththaan.  eesaakku  than  thaaykkaagak  ko'ndiruntha  thukkam  neenggi  aa’ruthal  adainthaan.  (aathiyaagamam  24:67)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!