Sunday, June 26, 2016

Aathiyaagamam 22 | ஆதியாகமம் 22 | Genesis 22

இந்தக்  காரியங்கள்  நடந்தபின்பு,  தேவன்  ஆபிரகாமைச்  சோதித்தார்;  எப்படியெனில்,  அவர்  அவனை  நோக்கி:  ஆபிரகாமே  என்றார்;  அவன்:  இதோ  அடியேன்  என்றான்.  (ஆதியாகமம்  22:1)

inthak  kaariyangga'l  nadanthapinbu,  theavan  aabirahaamaich  soathiththaar;  eppadiyenil,  avar  avanai  noakki:  aabirahaamea  en’raar;  avan:  ithoa  adiyean  en’raan.  (aathiyaagamam  22:1)

அப்பொழுது  அவர்:  உன்  புத்திரனும்  உன்  ஏகசுதனும்  உன்  நேசகுமாரனுமாகிய  ஈசாக்கை  நீ  இப்பொழுது  அழைத்துக்கொண்டு,  மோரியா  தேசத்துக்குப்  போய்,  அங்கே  நான்  உனக்குக்  குறிக்கும்  மலைகள்  ஒன்றின்மேல்  அவனைத்  தகனபலியாகப்  பலியிடு  என்றார்.  (ஆதியாகமம்  22:2)

appozhuthu  avar:  un  puththiranum  un  eagasuthanum  un  neasakumaaranumaagiya  eesaakkai  nee  ippozhuthu  azhaiththukko'ndu,  moariyaa  theasaththukkup  poay,  anggea  naan  unakkuk  ku’rikkum  malaiga'l  on’rinmeal  avanaith  thaganabaliyaagap  baliyidu  en’raar.  (aathiyaagamam  22:2)

ஆபிரகாம்  அதிகாலையில்  எழுந்து,  தன்  கழுதையின்மேல்  சேணங்கட்டி,  தன்  வேலைக்காரரில்  இரண்டுபேரையும்  தன்  குமாரன்  ஈசாக்கையும்  கூட்டிக்கொண்டு,  தகனபலிக்குக்  கட்டைகளையும்  பிளந்துகொண்டு,  தேவன்  தனக்குக்  குறித்த  இடத்திற்குப்  புறப்பட்டுப்போனான்.  (ஆதியாகமம்  22:3)

aabirahaam  athikaalaiyil  ezhunthu,  than  kazhuthaiyinmeal  sea'nangkatti,  than  vealaikkaararil  ira'ndupearaiyum  than  kumaaran  eesaakkaiyum  koottikko'ndu,  thaganabalikkuk  kattaiga'laiyum  pi'lanthuko'ndu,  theavan  thanakkuk  ku’riththa  idaththi’rkup  pu’rappattuppoanaan.  (aathiyaagamam  22:3)

மூன்றாம்  நாளில்  ஆபிரகாம்  தன்  கண்களை  ஏறெடுத்துப்பார்த்து,  தூரத்திலே  அந்த  இடத்தைக்  கண்டான்.  (ஆதியாகமம்  22:4)

moon’raam  naa'lil  aabirahaam  than  ka'nga'lai  ea’reduththuppaarththu,  thooraththilea  antha  idaththaik  ka'ndaan.  (aathiyaagamam  22:4)

அப்பொழுது  ஆபிரகாம்  தன்  வேலைக்காரரை  நோக்கி:  நீங்கள்  கழுதையை  நிறுத்தி  இங்கே  காத்திருங்கள்,  நானும்  பிள்ளையாண்டானும்  அவ்விடமட்டும்  போய்,  தொழுதுகொண்டு,  உங்களிடத்துக்குத்  திரும்பி  வருவோம்  என்றான்.  (ஆதியாகமம்  22:5)

appozhuthu  aabirahaam  than  vealaikkaararai  noakki:  neengga'l  kazhuthaiyai  ni’ruththi  inggea  kaaththirungga'l,  naanum  pi'l'laiyaa'ndaanum  avvidamattum  poay,  thozhuthuko'ndu,  ungga'lidaththukkuth  thirumbi  varuvoam  en’raan.  (aathiyaagamam  22:5)

ஆபிரகாம்  தகனபலிக்குக்  கட்டைகளை  எடுத்து,  தன்  குமாரனாகிய  ஈசாக்கின்மேல்  வைத்து,  தன்  கையிலே  நெருப்பையும்  கத்தியையும்  எடுத்துக்கொண்டான்;  இருவரும்  கூடிப்போனார்கள்.  (ஆதியாகமம்  22:6)

aabirahaam  thaganabalikkuk  kattaiga'lai  eduththu,  than  kumaaranaagiya  eesaakkinmeal  vaiththu,  than  kaiyilea  neruppaiyum  kaththiyaiyum  eduththukko'ndaan;  iruvarum  koodippoanaarga'l.  (aathiyaagamam  22:6)

அப்பொழுது  ஈசாக்கு  தன்  தகப்பனாகிய  ஆபிரகாமை  நோக்கி:  என்  தகப்பனே  என்றான்;  அதற்கு  அவன்:  என்  மகனே,  இதோ,  இருக்கிறேன்  என்றான்;  அப்பொழுது  அவன்:  இதோ,  நெருப்பும்  கட்டையும்  இருக்கிறது,  தகனபலிக்கு  ஆட்டுக்குட்டி  எங்கே  என்றான்.  (ஆதியாகமம்  22:7)

appozhuthu  eesaakku  than  thagappanaagiya  aabirahaamai  noakki:  en  thagappanea  en’raan;  atha’rku  avan:  en  maganea,  ithoa,  irukki’rean  en’raan;  appozhuthu  avan:  ithoa,  neruppum  kattaiyum  irukki’rathu,  thaganabalikku  aattukkutti  enggea  en’raan.  (aathiyaagamam  22:7)

அதற்கு  ஆபிரகாம்:  என்  மகனே,  தேவன்  தமக்குத்  தகனபலிக்கான  ஆட்டுக்குட்டியைப்  பார்த்துக்கொள்வார்  என்றான்;  அப்புறம்  இருவரும்  கூடிப்போய்,  (ஆதியாகமம்  22:8)

atha’rku  aabirahaam:  en  maganea,  theavan  thamakkuth  thaganabalikkaana  aattukkuttiyaip  paarththukko'lvaar  en’raan;  appu’ram  iruvarum  koodippoay,  (aathiyaagamam  22:8)

தேவன்  அவனுக்குச்  சொல்லியிருந்த  இடத்துக்கு  வந்தார்கள்;  அங்கே  ஆபிரகாம்  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கி,  கட்டைகளை  அடுக்கி,  தன்  குமாரனாகிய  ஈசாக்கைக்  கட்டி,  அந்தப்  பலிபீடத்தில்  அடுக்கிய  கட்டைகளின்மேல்  அவனைக்  கிடத்தினான்.  (ஆதியாகமம்  22:9)

theavan  avanukkuch  solliyiruntha  idaththukku  vanthaarga'l;  anggea  aabirahaam  oru  balipeedaththai  u'ndaakki,  kattaiga'lai  adukki,  than  kumaaranaagiya  eesaakkaik  katti,  anthap  balipeedaththil  adukkiya  kattaiga'linmeal  avanaik  kidaththinaan.  (aathiyaagamam  22:9)

பின்பு  ஆபிரகாம்  தன்  குமாரனை  வெட்டும்படிக்குத்  தன்  கையை  நீட்டிக்  கத்தியை  எடுத்தான்.  (ஆதியாகமம்  22:10)

pinbu  aabirahaam  than  kumaaranai  vettumpadikkuth  than  kaiyai  neettik  kaththiyai  eduththaan.  (aathiyaagamam  22:10)

அப்பொழுது  கர்த்தருடைய  தூதனானவர்  வானத்திலிருந்து,  ஆபிரகாமே,  ஆபிரகாமே  என்று  கூப்பிட்டார்;  அவன்:  இதோ,  அடியேன்  என்றான்.  (ஆதியாகமம்  22:11)

appozhuthu  karththarudaiya  thoothanaanavar  vaanaththilirunthu,  aabirahaamea,  aabirahaamea  en’ru  kooppittaar;  avan:  ithoa,  adiyean  en’raan.  (aathiyaagamam  22:11)

அப்பொழுது  அவர்:  பிள்ளையாண்டான்மேல்  உன்  கையைப்  போடாதே,  அவனுக்கு  ஒன்றும்  செய்யாதே;  நீ  அவனை  உன்  புத்திரன்  என்றும்,  உன்  ஏகசுதன்  என்றும்  பாராமல்  எனக்காக  ஒப்புக்கொடுத்தபடியினால்  நீ  தேவனுக்குப்  பயப்படுகிறவன்  என்று  இப்பொழுது  அறிந்திருக்கிறேன்  என்றார்.  (ஆதியாகமம்  22:12)

appozhuthu  avar:  pi'l'laiyaa'ndaanmeal  un  kaiyaip  poadaathea,  avanukku  on’rum  seyyaathea;  nee  avanai  un  puththiran  en’rum,  un  eagasuthan  en’rum  paaraamal  enakkaaga  oppukkoduththapadiyinaal  nee  theavanukkup  bayappadugi’ravan  en’ru  ippozhuthu  a’rinthirukki’rean  en’raar.  (aathiyaagamam  22:12)

ஆபிரகாம்  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பார்க்கும்போது,  இதோ,  பின்னாகப்  புதரிலே  தன்  கொம்புகள்  சிக்கிக்கொண்டிருந்த  ஒரு  ஆட்டுக்கடாவைக்  கண்டான்;  அப்பொழுது  ஆபிரகாம்  போய்,  கடாவைப்  பிடித்து,  அதைத்  தன்  குமாரனுக்குப்  பதிலாகத்  தகனபலியிட்டான்.  (ஆதியாகமம்  22:13)

aabirahaam  than  ka'nga'lai  ea’reduththup  paarkkumpoathu,  ithoa,  pinnaagap  putharilea  than  kombuga'l  sikkikko'ndiruntha  oru  aattukkadaavaik  ka'ndaan;  appozhuthu  aabirahaam  poay,  kadaavaip  pidiththu,  athaith  than  kumaaranukkup  bathilaagath  thaganabaliyittaan.  (aathiyaagamam  22:13)

ஆபிரகாம்  அந்த  இடத்துக்கு  யேகோவாயீரே  என்று  பேரிட்டான்;  அதினாலே  கர்த்தருடைய  பர்வதத்திலே  பார்த்துக்கொள்ளப்படும்  என்று  இந்நாள்வரைக்கும்  சொல்லப்பட்டு  வருகிறது.  (ஆதியாகமம்  22:14)

aabirahaam  antha  idaththukku  yeagoavaayeerea  en’ru  pearittaan;  athinaalea  karththarudaiya  parvathaththilea  paarththukko'l'lappadum  en’ru  innaa'lvaraikkum  sollappattu  varugi’rathu.  (aathiyaagamam  22:14)

கர்த்தருடைய  தூதனானவர்  இரண்டாந்தரம்  வானத்திலிருந்து  ஆபிரகாமைக்  கூப்பிட்டு:  (ஆதியாகமம்  22:15)

karththarudaiya  thoothanaanavar  ira'ndaantharam  vaanaththilirunthu  aabirahaamaik  kooppittu:  (aathiyaagamam  22:15)

நீ  உன்  புத்திரன்  என்றும்,  உன்  ஏகசுதன்  என்றும்  பாராமல்  அவனை  ஒப்புக்கொடுத்து  இந்தக்  காரியத்தைச்  செய்தபடியால்;  (ஆதியாகமம்  22:16)

nee  un  puththiran  en’rum,  un  eagasuthan  en’rum  paaraamal  avanai  oppukkoduththu  inthak  kaariyaththaich  seythapadiyaal;  (aathiyaagamam  22:16)

நான்  உன்னை  ஆசீர்வதிக்கவே  ஆசீர்வதித்து,  உன்  சந்ததியை  வானத்து  நட்சத்திரங்களைப்போலவும்,  கடற்கரை  மணலைப்போலவும்  பெருகவே  பெருகப்பண்ணுவேன்  என்றும்,  உன்  சந்ததியார்  தங்கள்  சத்துருக்களின்  வாசல்களைச்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்  என்றும்,  (ஆதியாகமம்  22:17)

naan  unnai  aaseervathikkavea  aaseervathiththu,  un  santhathiyai  vaanaththu  nadchaththirangga'laippoalavum,  kada’rkarai  ma'nalaippoalavum  perugavea  perugappa'n'nuvean  en’rum,  un  santhathiyaar  thangga'l  saththurukka'lin  vaasalga'laich  suthanthariththukko'l'luvaarga'l  en’rum,  (aathiyaagamam  22:17)

நீ  என்  சொல்லுக்குக்  கீழ்ப்படிந்தபடியினால்,  உன்  சந்ததிக்குள்  பூமியிலுள்ள  சகல  ஜாதிகளும்  ஆசீர்வதிக்கப்படும்  என்றும்  என்பேரில்  ஆணையிட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (ஆதியாகமம்  22:18)

nee  en  sollukkuk  keezhppadinthapadiyinaal,  un  santhathikku'l  boomiyilu'l'la  sagala  jaathiga'lum  aaseervathikkappadum  en’rum  enpearil  aa'naiyittean  en’ru  karththar  sollugi’raar  en’raar.  (aathiyaagamam  22:18)

ஆபிரகாம்  தன்  வேலைக்காரரிடத்துக்குத்  திரும்பிவந்தான்;  அவர்கள்  எழுந்து  புறப்பட்டு,  ஏகமாய்ப்  பெயெர்செபாவுக்குப்  போனார்கள்;  ஆபிரகாம்  பெயெர்செபாவிலே  குடியிருந்தான்.  (ஆதியாகமம்  22:19)

aabirahaam  than  vealaikkaararidaththukkuth  thirumbivanthaan;  avarga'l  ezhunthu  pu’rappattu,  eagamaayp  beyersebaavukkup  poanaarga'l;  aabirahaam  beyersebaavilea  kudiyirunthaan.  (aathiyaagamam  22:19)

இந்தக்  காரியங்கள்  நடந்தபின்பு,  ஒருவன்  ஆபிரகாமிடத்தில்  வந்து:  மில்க்காளும்  உன்  சகோதரனாகிய  நாகோருக்குப்  பிள்ளைகளைப்  பெற்றாள்;  (ஆதியாகமம்  22:20)

inthak  kaariyangga'l  nadanthapinbu,  oruvan  aabirahaamidaththil  vanthu:  milkkaa'lum  un  sagoatharanaagiya  naagoarukkup  pi'l'laiga'laip  pet’raa'l;  (aathiyaagamam  22:20)

அவர்கள்  யாரென்றால்,  முதற்பேறான  ஊத்ஸ்,  அவன்  தம்பியாகிய  பூஸ்,  ஆராமுக்குத்  தகப்பனாகிய  கேமுவேல்,  (ஆதியாகமம்  22:21)

avarga'l  yaaren’raal,  mutha’rpea’raana  ooths,  avan  thambiyaagiya  boos,  aaraamukkuth  thagappanaagiya  keamuveal,  (aathiyaagamam  22:21)

கேசேத்,  ஆசோ,  பில்தாஸ்,  இத்லாப்,  பெத்துவேல்  என்பவர்கள்;  பெத்துவேல்  ரெபெக்காளைப்  பெற்றான்  என்று  அறிவித்தான்.  (ஆதியாகமம்  22:22)

keaseath,  aasoa,  pilthaas,  ithlaap,  beththuveal  enbavarga'l;  beththuveal  rebekkaa'laip  pet’raan  en’ru  a’riviththaan.  (aathiyaagamam  22:22)

அந்த  எட்டுப்பேரை  மில்க்காள்  ஆபிரகாமுடைய  சகோதரனாகிய  நாகோருக்குப்  பெற்றாள்.  (ஆதியாகமம்  22:23)

antha  ettuppearai  milkkaa'l  aabirahaamudaiya  sagoatharanaagiya  naagoarukkup  pet’raa'l.  (aathiyaagamam  22:23)

ரேயுமாள்  என்று  பேர்கொண்ட  அவனுடைய  மறுமனையாட்டியும்,  தேபா,  காகாம்,  தாகாஸ்,  மாகா  என்பவர்களைப்  பெற்றாள்.  (ஆதியாகமம்  22:24)

reayumaa'l  en’ru  pearko'nda  avanudaiya  ma’rumanaiyaattiyum,  theabaa,  kaagaam,  thaagaas,  maakaa  enbavarga'laip  pet’raa'l.  (aathiyaagamam  22:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!