Sunday, June 26, 2016

Aathiyaagamam 17 | ஆதியாகமம் 17 | Genesis 17

ஆபிராம்  தொண்ணூற்றொன்பது  வயதானபோது,  கர்த்தர்  ஆபிராமுக்குத்  தரிசனமாகி:  நான்  சர்வவல்லமையுள்ள  தேவன்;  நீ  எனக்கு  முன்பாக  நடந்துகொண்டு  உத்தமனாயிரு.  (ஆதியாகமம்  17:1)

aabiraam  tho'n'noot’ronbathu  vayathaanapoathu,  karththar  aabiraamukkuth  tharisanamaagi:  naan  sarvavallamaiyu'l'la  theavan;  nee  enakku  munbaaga  nadanthuko'ndu  uththamanaayiru.  (aathiyaagamam  17:1)

நான்  உனக்கும்  எனக்கும்  நடுவாக  என்  உடன்படிக்கையை  ஏற்படுத்தி,  உன்னை  மிகவும்  திரளாய்ப்  பெருகப்பண்ணுவேன்  என்றார்.  (ஆதியாகமம்  17:2)

naan  unakkum  enakkum  naduvaaga  en  udanpadikkaiyai  ea’rpaduththi,  unnai  migavum  thira'laayp  perugappa'n'nuvean  en’raar.  (aathiyaagamam  17:2)

அப்பொழுது  ஆபிராம்  முகங்குப்புற  விழுந்து  வணங்கினான்.  தேவன்  அவனோடே  பேசி:  (ஆதியாகமம்  17:3)

appozhuthu  aabiraam  mugangkuppu’ra  vizhunthu  va'nangginaan.  theavan  avanoadea  peasi:  (aathiyaagamam  17:3)

நான்  உன்னோடே  பண்ணுகிற  என்  உடன்படிக்கை  என்னவென்றால்,  நீ  திரளான  ஜாதிகளுக்குத்  தகப்பனாவாய்.  (ஆதியாகமம்  17:4)

naan  unnoadea  pa'n'nugi’ra  en  udanpadikkai  ennaven’raal,  nee  thira'laana  jaathiga'lukkuth  thagappanaavaay.  (aathiyaagamam  17:4)

இனி  உன்  பேர்  ஆபிராம்  என்னப்படாமல்,  நான்  உன்னைத்  திரளான  ஜாதிகளுக்குத்  தகப்பனாக  ஏற்படுத்தினபடியால்,  உன்  பேர்  ஆபிரகாம்  என்னப்படும்.  (ஆதியாகமம்  17:5)

ini  un  pear  aabiraam  ennappadaamal,  naan  unnaith  thira'laana  jaathiga'lukkuth  thagappanaaga  ea’rpaduththinapadiyaal,  un  pear  aabirahaam  ennappadum.  (aathiyaagamam  17:5)

உன்னை  மிகவும்  அதிகமாய்ப்  பலுகப்பண்ணி,  உன்னிலே  ஜாதிகளை  உண்டாக்குவேன்;  உன்னிடத்திலிருந்து  ராஜாக்கள்  தோன்றுவார்கள்.  (ஆதியாகமம்  17:6)

unnai  migavum  athigamaayp  palugappa'n'ni,  unnilea  jaathiga'lai  u'ndaakkuvean;  unnidaththilirunthu  raajaakka'l  thoan’ruvaarga'l.  (aathiyaagamam  17:6)

உனக்கும்  உனக்குப்  பின்வரும்  உன்  சந்ததிக்கும்  நான்  தேவனாயிருக்கும்படி  எனக்கும்  உனக்கும்,  உனக்குப்பின்  தலைமுறை  தலைமுறையாக  வரும்  உன்  சந்ததிக்கும்  நடுவே,  என்  உடன்படிக்கையை  நித்திய  உடன்படிக்கையாக  ஸ்தாபிப்பேன்.  (ஆதியாகமம்  17:7)

unakkum  unakkup  pinvarum  un  santhathikkum  naan  theavanaayirukkumpadi  enakkum  unakkum,  unakkuppin  thalaimu’rai  thalaimu’raiyaaga  varum  un  santhathikkum  naduvea,  en  udanpadikkaiyai  niththiya  udanpadikkaiyaaga  sthaabippean.  (aathiyaagamam  17:7)

நீ  பரதேசியாய்த்  தங்கிவருகிற  கானான்  தேசமுழுவதையும்,  உனக்கும்  உனக்குப்  பின்வரும்  உன்  சந்ததிக்கும்  நித்திய  சுதந்தரமாகக்  கொடுத்து,  நான்  அவர்களுக்குத்  தேவனாயிருப்பேன்  என்றார்.  (ஆதியாகமம்  17:8)

nee  paratheasiyaayth  thanggivarugi’ra  kaanaan  theasamuzhuvathaiyum,  unakkum  unakkup  pinvarum  un  santhathikkum  niththiya  suthantharamaagak  koduththu,  naan  avarga'lukkuth  theavanaayiruppean  en’raar.  (aathiyaagamam  17:8)

பின்னும்  தேவன்  ஆபிரகாமை  நோக்கி:  இப்பொழுது  நீயும்,  உனக்குப்  பின்  தலைமுறை  தலைமுறையாக  வரும்  உன்  சந்ததியும்,  என்  உடன்படிக்கையைக்  கைக்கொள்ளுங்கள்.  (ஆதியாகமம்  17:9)

pinnum  theavan  aabirahaamai  noakki:  ippozhuthu  neeyum,  unakkup  pin  thalaimu’rai  thalaimu’raiyaaga  varum  un  santhathiyum,  en  udanpadikkaiyaik  kaikko'l'lungga'l.  (aathiyaagamam  17:9)

எனக்கும்  உங்களுக்கும்,  உனக்குப்  பின்வரும்  உன்  சந்ததிக்கும்  நடுவே  உண்டாகிறதும்,  நீங்கள்  கைக்கொள்ளவேண்டியதுமான  என்  உடன்படிக்கை  என்னவென்றால்,  உங்களுக்குள்  பிறக்கும்  சகல  ஆண்பிள்ளைகளும்  விருத்தசேதனம்  பண்ணப்படவேண்டும்;  (ஆதியாகமம்  17:10)

enakkum  ungga'lukkum,  unakkup  pinvarum  un  santhathikkum  naduvea  u'ndaagi’rathum,  neengga'l  kaikko'l'lavea'ndiyathumaana  en  udanpadikkai  ennaven’raal,  ungga'lukku'l  pi’rakkum  sagala  aa'npi'l'laiga'lum  viruththaseathanam  pa'n'nappadavea'ndum;  (aathiyaagamam  17:10)

உங்கள்  நுனித்தோலின்  மாம்சத்தை  விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்;  அது  எனக்கும்  உங்களுக்குமுள்ள  உடன்படிக்கைக்கு  அடையாளமாயிருக்கும்.  (ஆதியாகமம்  17:11)

ungga'l  nuniththoalin  maamsaththai  viruththaseathanampa'n'nakkadaveerga'l;  athu  enakkum  ungga'lukkumu'l'la  udanpadikkaikku  adaiyaa'lamaayirukkum.  (aathiyaagamam  17:11)

உங்களில்  தலைமுறை  தலைமுறையாகப்  பிறக்கும்  ஆண்பிள்ளைகளெல்லாம்  எட்டாம்நாளிலே  விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;  வீட்டிலே  பிறந்த  பிள்ளையும்  உன்  வித்தல்லாத  அந்நியனிடத்தில்  பணத்திற்குக்  கொள்ளப்பட்ட  எந்தப்  பிள்ளையும்,  அப்படியே  விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.  (ஆதியாகமம்  17:12)

ungga'lil  thalaimu’rai  thalaimu’raiyaagap  pi’rakkum  aa'npi'l'laiga'lellaam  ettaamnaa'lilea  viruththaseathanampa'n'nappadavea'ndum;  veettilea  pi’rantha  pi'l'laiyum  un  viththallaatha  anniyanidaththil  pa'naththi’rkuk  ko'l'lappatta  enthap  pi'l'laiyum,  appadiyea  viruththaseathanampa'n'nappadavea'ndum.  (aathiyaagamam  17:12)

உன்  வீட்டிலே  பிறந்த  பிள்ளையும்,  உன்  பணத்திற்குக்  கொள்ளப்பட்டவனும்,  விருத்தசேதனம்  பண்ணப்படவேண்டியது  அவசியம்;  இப்படி  என்  உடன்படிக்கை  உங்கள்  மாம்சத்திலே  நித்திய  உடன்படிக்கையாக  இருக்கக்கடவது.  (ஆதியாகமம்  17:13)

un  veettilea  pi’rantha  pi'l'laiyum,  un  pa'naththi’rkuk  ko'l'lappattavanum,  viruththaseathanam  pa'n'nappadavea'ndiyathu  avasiyam;  ippadi  en  udanpadikkai  ungga'l  maamsaththilea  niththiya  udanpadikkaiyaaga  irukkakkadavathu.  (aathiyaagamam  17:13)

நுனித்தோலின்  மாம்சம்  விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற  நுனித்தோலுள்ள  ஆண்பிள்ளையிருந்தால்,  அந்த  ஆத்துமா  என்  உடன்படிக்கையை  மீறினபடியால்,  தன்  ஜனத்தில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்  என்றார்.  (ஆதியாகமம்  17:14)

nuniththoalin  maamsam  viruththaseathanampa'n'nappadaathirukki’ra  nuniththoalu'l'la  aa'npi'l'laiyirunthaal,  antha  aaththumaa  en  udanpadikkaiyai  mee’rinapadiyaal,  than  janaththil  iraathapadikku  a’ruppu'ndupoavaan  en’raar.  (aathiyaagamam  17:14)

பின்னும்  தேவன்  ஆபிரகாமை  நோக்கி:  உன்  மனைவி  சாராயை  இனி  சாராய்  என்று  அழையாதிருப்பாயாக;  சாராள்  என்பது  அவளுக்குப்  பேராயிருக்கும்.  (ஆதியாகமம்  17:15)

pinnum  theavan  aabirahaamai  noakki:  un  manaivi  saaraayai  ini  saaraay  en’ru  azhaiyaathiruppaayaaga;  saaraa'l  enbathu  ava'lukkup  pearaayirukkum.  (aathiyaagamam  17:15)

நான்  அவளை  ஆசீர்வதித்து,  அவளாலே  உனக்கு  ஒரு  குமாரனையும்  தருவேன்;  அவள்  ஜாதிகளுக்குத்  தாயாகவும்,  அவளாலே  ஜாதிகளின்  ராஜாக்கள்  உண்டாகவும்,  அவளை  ஆசீர்வதிப்பேன்  என்றார்.  (ஆதியாகமம்  17:16)

naan  ava'lai  aaseervathiththu,  ava'laalea  unakku  oru  kumaaranaiyum  tharuvean;  ava'l  jaathiga'lukkuth  thaayaagavum,  ava'laalea  jaathiga'lin  raajaakka'l  u'ndaagavum,  ava'lai  aaseervathippean  en’raar.  (aathiyaagamam  17:16)

அப்பொழுது  ஆபிரகாம்  முகங்குப்புற  விழுந்து  நகைத்து:  நூறுவயதானவனுக்குப்  பிள்ளை  பிறக்குமோ?  தொண்ணூறு  வயதான  சாராள்  பிள்ளை  பெறுவாளோ?  என்று  தன்  இருதயத்திலே  சொல்லிக்கொண்டு,  (ஆதியாகமம்  17:17)

appozhuthu  aabirahaam  mugangkuppu’ra  vizhunthu  nagaiththu:  noo’ruvayathaanavanukkup  pi'l'lai  pi’rakkumoa?  tho'n'noo’ru  vayathaana  saaraa'l  pi'l'lai  pe’ruvaa'loa?  en’ru  than  iruthayaththilea  sollikko'ndu,  (aathiyaagamam  17:17)

இஸ்மவேல்  உமக்கு  முன்பாகப்  பிழைப்பானாக!  என்று  ஆபிரகாம்  தேவனிடத்தில்  விண்ணப்பம்பண்ணினான்.  (ஆதியாகமம்  17:18)

ismaveal  umakku  munbaagap  pizhaippaanaaga!  en’ru  aabirahaam  theavanidaththil  vi'n'nappampa'n'ninaan.  (aathiyaagamam  17:18)

அப்பொழுது  தேவன்:  உன்  மனைவியாகிய  சாராள்  நிச்சயமாய்  உனக்கு  ஒரு  குமாரனைப்  பெறுவாள்,  அவனுக்கு  ஈசாக்கு  என்று  பேரிடுவாயாக;  என்  உடன்படிக்கையை  அவனுக்கும்  அவனுக்குப்  பின்வரும்  அவன்  சந்ததிக்கும்  நித்திய  உடன்படிக்கையாக  ஸ்தாபிப்பேன்.  (ஆதியாகமம்  17:19)

appozhuthu  theavan:  un  manaiviyaagiya  saaraa'l  nichchayamaay  unakku  oru  kumaaranaip  pe’ruvaa'l,  avanukku  eesaakku  en’ru  peariduvaayaaga;  en  udanpadikkaiyai  avanukkum  avanukkup  pinvarum  avan  santhathikkum  niththiya  udanpadikkaiyaaga  sthaabippean.  (aathiyaagamam  17:19)

இஸ்மவேலுக்காகவும்  நீ  செய்த  விண்ணப்பத்தைக்  கேட்டேன்;  நான்  அவனை  ஆசீர்வதித்து,  அவனை  மிகவும்  அதிகமாகப்  பலுகவும்  பெருகவும்  பண்ணுவேன்;  அவன்  பன்னிரண்டு  பிரபுக்களைப்  பெறுவான்;  அவனைப்  பெரிய  ஜாதியாக்குவேன்.  (ஆதியாகமம்  17:20)

ismavealukkaagavum  nee  seytha  vi'n'nappaththaik  keattean;  naan  avanai  aaseervathiththu,  avanai  migavum  athigamaagap  palugavum  perugavum  pa'n'nuvean;  avan  pannira'ndu  pirabukka'laip  pe’ruvaan;  avanaip  periya  jaathiyaakkuvean.  (aathiyaagamam  17:20)

வருகிற  வருஷத்தில்  குறித்தகாலத்திலே  சாராள்  உனக்குப்  பெறப்போகிற  ஈசாக்கோடே  நான்  என்  உடன்படிக்கையை  ஏற்படுத்துவேன்  என்றார்.  (ஆதியாகமம்  17:21)

varugi’ra  varushaththil  ku’riththakaalaththilea  saaraa'l  unakkup  pe’rappoagi’ra  eesaakkoadea  naan  en  udanpadikkaiyai  ea’rpaduththuvean  en’raar.  (aathiyaagamam  17:21)

தேவன்  ஆபிரகாமோடே  பேசி  முடிந்தபின்பு,  அவர்  அவனைவிட்டு  எழுந்தருளினார்.  (ஆதியாகமம்  17:22)

theavan  aabirahaamoadea  peasi  mudinthapinbu,  avar  avanaivittu  ezhuntharu'linaar.  (aathiyaagamam  17:22)

அப்பொழுது  ஆபிரகாம்  தன்  குமாரனாகிய  இஸ்மவேலையும்,  தன்  வீட்டிலே  பிறந்த  யாவரையும்,  தான்  பணத்திற்குக்  கொண்ட  அனைவருமாகிய  தன்  வீட்டிலுள்ள  ஆண்பிள்ளைகள்  எல்லாரையும்  சேர்த்து,  தேவன்  தனக்குச்  சொன்னபடி,  அவர்கள்  நுனித்தோலின்  மாம்சத்தை  அந்நாளிலேதானே  விருத்தசேதனம்பண்ணினான்.  (ஆதியாகமம்  17:23)

appozhuthu  aabirahaam  than  kumaaranaagiya  ismavealaiyum,  than  veettilea  pi’rantha  yaavaraiyum,  thaan  pa'naththi’rkuk  ko'nda  anaivarumaagiya  than  veettilu'l'la  aa'npi'l'laiga'l  ellaaraiyum  searththu,  theavan  thanakkuch  sonnapadi,  avarga'l  nuniththoalin  maamsaththai  annaa'lileathaanea  viruththaseathanampa'n'ninaan.  (aathiyaagamam  17:23)

ஆபிரகாமுடைய  நுனித்தோலின்  மாம்சம்  விருத்தசேதனம்பண்ணப்படும்போது,  அவன்  தொண்ணூற்றொன்பது  வயதாயிருந்தான்.  (ஆதியாகமம்  17:24)

aabirahaamudaiya  nuniththoalin  maamsam  viruththaseathanampa'n'nappadumpoathu,  avan  tho'n'noot’ronbathu  vayathaayirunthaan.  (aathiyaagamam  17:24)

அவனுடைய  குமாரன்  இஸ்மவேலுடைய  நுனித்தோலின்  மாம்சம்  விருத்தசேதனம்பண்ணப்படும்போது,  அவன்  பதின்மூன்று  வயதாயிருந்தான்.  (ஆதியாகமம்  17:25)

avanudaiya  kumaaran  ismavealudaiya  nuniththoalin  maamsam  viruththaseathanampa'n'nappadumpoathu,  avan  pathinmoon’ru  vayathaayirunthaan.  (aathiyaagamam  17:25)

ஒரேநாளில்  ஆபிரகாமும்  அவன்  குமாரன்  இஸ்மவேலும்  விருத்தசேதனம்  பண்ணப்பட்டார்கள்.  (ஆதியாகமம்  17:26)

oreanaa'lil  aabirahaamum  avan  kumaaran  ismavealum  viruththaseathanam  pa'n'nappattaarga'l.  (aathiyaagamam  17:26)

வீட்டிலே  பிறந்தவர்களும்  அந்நியரிடத்திலே  பணத்திற்குக்  கொள்ளப்பட்டவர்களுமாகிய  அவன்  வீட்டு  மனுஷர்கள்  எல்லாரும்  அவனோடேகூட  விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.  (ஆதியாகமம்  17:27)

veettilea  pi’ranthavarga'lum  anniyaridaththilea  pa'naththi’rkuk  ko'l'lappattavarga'lumaagiya  avan  veettu  manusharga'l  ellaarum  avanoadeakooda  viruththaseathanampa'n'nappattaarga'l.  (aathiyaagamam  17:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!