Sunday, June 26, 2016

Aathiyaagamam 13 | ஆதியாகமம் 13 | Genesis 13

ஆபிராமும்,  அவன்  மனைவியும்,  அவனுக்கு  உண்டான  யாவும்,  அவனுடனே  லோத்தும்,  எகிப்தை  விட்டு,  தென்திசையில்  வந்தார்கள்.  (ஆதியாகமம்  13:1)

aabiraamum,  avan  manaiviyum,  avanukku  u'ndaana  yaavum,  avanudanea  loaththum,  egipthai  vittu,  thenthisaiyil  vanthaarga'l.  (aathiyaagamam  13:1)

ஆபிராம்  மிருகஜீவன்களும்  வெள்ளியும்  பொன்னுமான  ஆஸ்திகளை  உடைய  சீமானாயிருந்தான்.  (ஆதியாகமம்  13:2)

aabiraam  mirugajeevanga'lum  ve'l'liyum  ponnumaana  aasthiga'lai  udaiya  seemaanaayirunthaan.  (aathiyaagamam  13:2)

அவன்  தன்  பிரயாணங்களிலே  தெற்கேயிருந்து  பெத்தேல்மட்டும்,  பெத்தேலுக்கும்  ஆயீக்கும்  நடுவாகத்  தான்  முன்பு  கூடாரம்போட்டதும்,  (ஆதியாகமம்  13:3)

avan  than  pirayaa'nangga'lilea  the’rkeayirunthu  beththealmattum,  beththealukkum  aayeekkum  naduvaagath  thaan  munbu  koodaarampoattathum,  (aathiyaagamam  13:3)

தான்  முதல்முதல்  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கினதுமான  ஸ்தலமட்டும்  போனான்;  அங்கே  ஆபிராம்  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டான்.  (ஆதியாகமம்  13:4)

thaan  muthalmuthal  oru  balipeedaththai  u'ndaakkinathumaana  sthalamattum  poanaan;  anggea  aabiraam  karththarudaiya  naamaththaith  thozhuthuko'ndaan.  (aathiyaagamam  13:4)

ஆபிராமுடனே  வந்த  லோத்துக்கும்  ஆடுமாடுகளும்  கூடாரங்களும்  இருந்தன.  (ஆதியாகமம்  13:5)

aabiraamudanea  vantha  loaththukkum  aadumaaduga'lum  koodaarangga'lum  irunthana.  (aathiyaagamam  13:5)

அவர்கள்  ஒருமித்துக்  குடியிருக்க  அந்தப்  பூமி  அவர்களைத்  தாங்கக்கூடாதிருந்தது;  அவர்களுடைய  ஆஸ்தி  மிகுதியாயிருந்தபடியால்,  அவர்கள்  ஒருமித்து  வாசம்பண்ண  ஏதுவில்லாமற்போயிற்று.  (ஆதியாகமம்  13:6)

avarga'l  orumiththuk  kudiyirukka  anthap  boomi  avarga'laith  thaanggakkoodaathirunthathu;  avarga'ludaiya  aasthi  miguthiyaayirunthapadiyaal,  avarga'l  orumiththu  vaasampa'n'na  eathuvillaama’rpoayit’ru.  (aathiyaagamam  13:6)

ஆபிராமுடைய  மந்தைமேய்ப்பருக்கும்  லோத்துடைய  மந்தைமேய்ப்பருக்கும்  வாக்குவாதம்  உண்டாயிற்று.  அக்காலத்திலே  கானானியரும்  பெரிசியரும்  அத்தேசத்தில்  குடியிருந்தார்கள்.  (ஆதியாகமம்  13:7)

aabiraamudaiya  manthaimeaypparukkum  loaththudaiya  manthaimeaypparukkum  vaakkuvaatham  u'ndaayit’ru.  akkaalaththilea  kaanaaniyarum  perisiyarum  aththeasaththil  kudiyirunthaarga'l.  (aathiyaagamam  13:7)

ஆபிராம்  லோத்தை  நோக்கி:  எனக்கும்  உனக்கும்,  என்  மேய்ப்பருக்கும்  உன்  மேய்ப்பருக்கும்  வாக்குவாதம்  வேண்டாம்;  நாம்  சகோதரர்.  (ஆதியாகமம்  13:8)

aabiraam  loaththai  noakki:  enakkum  unakkum,  en  meaypparukkum  un  meaypparukkum  vaakkuvaatham  vea'ndaam;  naam  sagoatharar.  (aathiyaagamam  13:8)

இந்தத்  தேசமெல்லாம்  உனக்குமுன்  இருக்கிறது  அல்லவா?  நீ  என்னைவிட்டுப்  பிரிந்துபோகலாம்;  நீ  இடதுபுறம்  போனால்,  நான்  வலதுபுறம்  போகிறேன்;  நீ  வலதுபுறம்  போனால்,  நான்  இடதுபுறம்  போகிறேன்  என்றான்.  (ஆதியாகமம்  13:9)

inthath  theasamellaam  unakkumun  irukki’rathu  allavaa?  nee  ennaivittup  pirinthupoagalaam;  nee  idathupu’ram  poanaal,  naan  valathupu’ram  poagi’rean;  nee  valathupu’ram  poanaal,  naan  idathupu’ram  poagi’rean  en’raan.  (aathiyaagamam  13:9)

அப்பொழுது  லோத்து  தன்  கண்களை  ஏறெடுத்துப்பார்த்து:  யோர்தான்  நதிக்கு  அருகான  சமபூமி  முழுவதும்  நீர்வளம்  பொருந்தினதாயிருக்கக்கண்டான்.  கர்த்தர்  சோதோமையும்  கொமோராவையும்  அழிக்கும்முன்னே,  சோவாருக்குப்  போம்  வழிமட்டும்  அது  கர்த்தருடைய  தோட்டத்தைப்போலவும்  எகிப்து  தேசத்தைப்போலவும்  இருந்தது.  (ஆதியாகமம்  13:10)

appozhuthu  loaththu  than  ka'nga'lai  ea’reduththuppaarththu:  yoarthaan  nathikku  arugaana  samaboomi  muzhuvathum  neerva'lam  porunthinathaayirukkakka'ndaan.  karththar  soathoamaiyum  komoaraavaiyum  azhikkummunnea,  soavaarukkup  poam  vazhimattum  athu  karththarudaiya  thoattaththaippoalavum  egipthu  theasaththaippoalavum  irunthathu.  (aathiyaagamam  13:10)

அப்பொழுது  லோத்து  யோர்தானுக்கு  அருகான  சமபூமி  முழுவதையும்  தெரிந்துகொண்டு,  கிழக்கே  பிரயாணப்பட்டுப்போனான்;  இப்படி  அவர்கள்  ஒருவரை  ஒருவர்  விட்டுப்  பிரிந்தார்கள்.  (ஆதியாகமம்  13:11)

appozhuthu  loaththu  yoarthaanukku  arugaana  samaboomi  muzhuvathaiyum  therinthuko'ndu,  kizhakkea  pirayaa'nappattuppoanaan;  ippadi  avarga'l  oruvarai  oruvar  vittup  pirinthaarga'l.  (aathiyaagamam  13:11)

ஆபிராம்  கானான்  தேசத்தில்  குடியிருந்தான்;  லோத்து  அந்த  யோர்தானுக்கு  அருகான  சமபூமியிலுள்ள  பட்டணங்களில்  வாசம்பண்ணி,  சோதோமுக்கு  நேரே  கூடாரம்  போட்டான்.  (ஆதியாகமம்  13:12)

aabiraam  kaanaan  theasaththil  kudiyirunthaan;  loaththu  antha  yoarthaanukku  arugaana  samaboomiyilu'l'la  patta'nangga'lil  vaasampa'n'ni,  soathoamukku  nearea  koodaaram  poattaan.  (aathiyaagamam  13:12)

சோதோமின்  ஜனங்கள்  பொல்லாதவர்களும்  கர்த்தருக்கு  முன்பாக  மகா  பாவிகளுமாய்  இருந்தார்கள்.  (ஆதியாகமம்  13:13)

soathoamin  janangga'l  pollaathavarga'lum  karththarukku  munbaaga  mahaa  paaviga'lumaay  irunthaarga'l.  (aathiyaagamam  13:13)

லோத்து  ஆபிராமைவிட்டுப்  பிரிந்தபின்பு,  கர்த்தர்  ஆபிராமை  நோக்கி:  உன்  கண்களை  ஏறெடுத்து,  நீ  இருக்கிற  இடத்திலிருந்து  வடக்கேயும்,  தெற்கேயும்,  கிழக்கேயும்,  மேற்கேயும்  நோக்கிப்பார்.  (ஆதியாகமம்  13:14)

loaththu  aabiraamaivittup  pirinthapinbu,  karththar  aabiraamai  noakki:  un  ka'nga'lai  ea’reduththu,  nee  irukki’ra  idaththilirunthu  vadakkeayum,  the’rkeayum,  kizhakkeayum,  mea’rkeayum  noakkippaar.  (aathiyaagamam  13:14)

நீ  பார்க்கிற  இந்தப்  பூமி  முழுவதையும்  நான்  உனக்கும்  உன்  சந்ததிக்கும்  என்றைக்கும்  இருக்கும்படி  கொடுத்து,  (ஆதியாகமம்  13:15)

nee  paarkki’ra  inthap  boomi  muzhuvathaiyum  naan  unakkum  un  santhathikkum  en’raikkum  irukkumpadi  koduththu,  (aathiyaagamam  13:15)

உன்  சந்ததியைப்  பூமியின்  தூளைப்போலப்  பெருகப்பண்ணுவேன்;  ஒருவன்  பூமியின்  தூளை  எண்ணக்கூடுமானால்,  உன்  சந்ததியும்  எண்ணப்படும்.  (ஆதியாகமம்  13:16)

un  santhathiyaip  boomiyin  thoo'laippoalap  perugappa'n'nuvean;  oruvan  boomiyin  thoo'lai  e'n'nakkoodumaanaal,  un  santhathiyum  e'n'nappadum.  (aathiyaagamam  13:16)

நீ  எழுந்து  தேசத்தின்  நீளமும்  அகலமும்  எம்மட்டோ,  அம்மட்டும்  நடந்து  திரி;  உனக்கு  அதைத்  தருவேன்  என்றார்.  (ஆதியாகமம்  13:17)

nee  ezhunthu  theasaththin  nee'lamum  agalamum  emmattoa,  ammattum  nadanthu  thiri;  unakku  athaith  tharuvean  en’raar.  (aathiyaagamam  13:17)

அப்பொழுது  ஆபிராம்  கூடாரத்தைப்  பெயர்த்துக்கொண்டுபோய்,  எபிரோனிலிருக்கும்  மம்ரேயின்  சமபூமியில்  சேர்ந்து  குடியிருந்து,  அங்கே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்.  (ஆதியாகமம்  13:18)

appozhuthu  aabiraam  koodaaraththaip  peyarththukko'ndupoay,  ebiroanilirukkum  mamreayin  samaboomiyil  searnthu  kudiyirunthu,  anggea  karththarukku  oru  balipeedaththaik  kattinaan.  (aathiyaagamam  13:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!