Sunday, June 26, 2016

Aathiyaagamam 12 | ஆதியாகமம் 12 | Genesis 12

கர்த்தர்  ஆபிராமை  நோக்கி:  நீ  உன்  தேசத்தையும்,  உன்  இனத்தையும்,  உன்  தகப்பனுடைய  வீட்டையும்  விட்டுப்  புறப்பட்டு,  நான்  உனக்குக்  காண்பிக்கும்  தேசத்துக்குப்  போ.  (ஆதியாகமம்  12:1)

karththar  aabiraamai  noakki:  nee  un  theasaththaiyum,  un  inaththaiyum,  un  thagappanudaiya  veettaiyum  vittup  pu’rappattu,  naan  unakkuk  kaa'nbikkum  theasaththukkup  poa.  (aathiyaagamam  12:1)

நான்  உன்னைப்  பெரிய  ஜாதியாக்கி,  உன்னை  ஆசீர்வதித்து,  உன்  பேரைப்  பெருமைப்படுத்துவேன்;  நீ  ஆசீர்வாதமாய்  இருப்பாய்.  (ஆதியாகமம்  12:2)

naan  unnaip  periya  jaathiyaakki,  unnai  aaseervathiththu,  un  pearaip  perumaippaduththuvean;  nee  aaseervaathamaay  iruppaay.  (aathiyaagamam  12:2)

உன்னை  ஆசீர்வதிக்கிறவர்களை  ஆசீர்வதிப்பேன்,  உன்னைச்  சபிக்கிறவனைச்  சபிப்பேன்;  பூமியிலுள்ள  வம்சங்களெல்லாம்  உனக்குள்  ஆசீர்வதிக்கப்படும்  என்றார்.  (ஆதியாகமம்  12:3)

unnai  aaseervathikki’ravarga'lai  aaseervathippean,  unnaich  sabikki’ravanaich  sabippean;  boomiyilu'l'la  vamsangga'lellaam  unakku'l  aaseervathikkappadum  en’raar.  (aathiyaagamam  12:3)

கர்த்தர்  ஆபிராமுக்குச்  சொன்னபடியே  அவன்  புறப்பட்டுப்போனான்;  லோத்தும்  அவனோடேகூடப்  போனான்.  ஆபிராம்  ஆரானைவிட்டுப்  புறப்பட்டபோது,  எழுபத்தைந்து  வயதுள்ளவனாயிருந்தான்.  (ஆதியாகமம்  12:4)

karththar  aabiraamukkuch  sonnapadiyea  avan  pu’rappattuppoanaan;  loaththum  avanoadeakoodap  poanaan.  aabiraam  aaraanaivittup  pu’rappattapoathu,  ezhubaththainthu  vayathu'l'lavanaayirunthaan.  (aathiyaagamam  12:4)

ஆபிராம்  தன்  மனைவியாகிய  சாராயையும்,  தன்  சகோதரனுடைய  குமாரனாகிய  லோத்தையும்,  தாங்கள்  சம்பாதித்திருந்த  தங்கள்  சம்பத்தெல்லாவற்றையும்,  ஆரானிலே  சவதரித்த  ஜனங்களையும்  கூட்டிக்கொண்டு,  அவர்கள்  கானான்  தேசத்துக்குப்  புறப்பட்டுப்போய்,  கானான்  தேசத்தில்  சேர்ந்தார்கள்.  (ஆதியாகமம்  12:5)

aabiraam  than  manaiviyaagiya  saaraayaiyum,  than  sagoatharanudaiya  kumaaranaagiya  loaththaiyum,  thaangga'l  sambaathiththiruntha  thangga'l  sambaththellaavat’raiyum,  aaraanilea  savathariththa  janangga'laiyum  koottikko'ndu,  avarga'l  kaanaan  theasaththukkup  pu’rappattuppoay,  kaanaan  theasaththil  searnthaarga'l.  (aathiyaagamam  12:5)

ஆபிராம்  அந்தத்  தேசத்தில்  சுற்றித்திரிந்து  சீகேம்  என்னும்  இடத்துக்குச்  சமீபமான  மோரே  என்னும்  சமபூமிமட்டும்  வந்தான்;  அக்காலத்திலே  கானானியர்  அத்தேசத்தில்  இருந்தார்கள்.  (ஆதியாகமம்  12:6)

aabiraam  anthath  theasaththil  sut’riththirinthu  seekeam  ennum  idaththukkuch  sameebamaana  moarea  ennum  samaboomimattum  vanthaan;  akkaalaththilea  kaanaaniyar  aththeasaththil  irunthaarga'l.  (aathiyaagamam  12:6)

கர்த்தர்  ஆபிராமுக்குத்  தரிசனமாகி:  உன்  சந்ததிக்கு  இந்தத்  தேசத்தைக்  கொடுப்பேன்  என்றார்.  அப்பொழுது  அவன்  தனக்குத்  தரிசனமான  கர்த்தருக்கு  அங்கே  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்.  (ஆதியாகமம்  12:7)

karththar  aabiraamukkuth  tharisanamaagi:  un  santhathikku  inthath  theasaththaik  koduppean  en’raar.  appozhuthu  avan  thanakkuth  tharisanamaana  karththarukku  anggea  oru  balipeedaththaik  kattinaan.  (aathiyaagamam  12:7)

பின்பு  அவன்  அவ்விடம்விட்டுப்  பெயர்ந்து,  பெத்தேலுக்குக்  கிழக்கே  இருக்கும்  மலைக்குப்  போய்,  பெத்தேல்  தனக்கு  மேற்காகவும்  ஆயீ  கிழக்காகவும்  இருக்கக்  கூடாரம்போட்டு,  அங்கே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டான்.  (ஆதியாகமம்  12:8)

pinbu  avan  avvidamvittup  peyarnthu,  beththealukkuk  kizhakkea  irukkum  malaikkup  poay,  beththeal  thanakku  mea’rkaagavum  aayee  kizhakkaagavum  irukkak  koodaarampoattu,  anggea  karththarukku  oru  balipeedaththaik  katti,  karththarudaiya  naamaththaith  thozhuthuko'ndaan.  (aathiyaagamam  12:8)

அதின்பின்  ஆபிராம்  புறப்பட்டு,  தெற்கே  பிரயாணம்பண்ணிக்கொண்டுபோனான்.  (ஆதியாகமம்  12:9)

athinpin  aabiraam  pu’rappattu,  the’rkea  pirayaa'nampa'n'nikko'ndupoanaan.  (aathiyaagamam  12:9)

அத்தேசத்திலே  பஞ்சம்  உண்டாயிற்று;  தேசத்திலே  பஞ்சம்  கொடிதாயிருந்தபடியால்,  ஆபிராம்  எகிப்து  தேசத்திலே  தங்கும்படி  அவ்விடத்துக்குப்  போனான்.  (ஆதியாகமம்  12:10)

aththeasaththilea  pagncham  u'ndaayit’ru;  theasaththilea  pagncham  kodithaayirunthapadiyaal,  aabiraam  egipthu  theasaththilea  thanggumpadi  avvidaththukkup  poanaan.  (aathiyaagamam  12:10)

அவன்  எகிப்துக்குச்  சமீபமாய்  வந்தபோது,  தன்  மனைவி  சாராயைப்  பார்த்து:  நீ  பார்வைக்கு  அழகுள்ள  ஸ்திரீ  என்று  அறிவேன்.  (ஆதியாகமம்  12:11)

avan  egipthukkuch  sameebamaay  vanthapoathu,  than  manaivi  saaraayaip  paarththu:  nee  paarvaikku  azhagu'l'la  sthiree  en’ru  a’rivean.  (aathiyaagamam  12:11)

எகிப்தியர்  உன்னைக்  காணும்போது,  இவள்  அவனுடைய  மனைவி  என்று  சொல்லி,  என்னைக்  கொன்றுபோட்டு,  உன்னை  உயிரோடே  வைப்பார்கள்.  (ஆதியாகமம்  12:12)

egipthiyar  unnaik  kaa'numpoathu,  iva'l  avanudaiya  manaivi  en’ru  solli,  ennaik  kon’rupoattu,  unnai  uyiroadea  vaippaarga'l.  (aathiyaagamam  12:12)

ஆகையால்,  உன்னிமித்தம்  எனக்கு  நன்மை  உண்டாகும்படிக்கும்,  உன்னாலே  என்  உயிர்  பிழைக்கும்படிக்கும்,  நீ  உன்னை  என்  சகோதரி  என்று  சொல்  என்றான்.  (ஆதியாகமம்  12:13)

aagaiyaal,  unnimiththam  enakku  nanmai  u'ndaagumpadikkum,  unnaalea  en  uyir  pizhaikkumpadikkum,  nee  unnai  en  sagoathari  en’ru  sol  en’raan.  (aathiyaagamam  12:13)

ஆபிராம்  எகிப்திலே  வந்தபோது,  எகிப்தியர்  அந்த  ஸ்திரீயை  மிகுந்த  அழகுள்ளவளென்று  கண்டார்கள்.  (ஆதியாகமம்  12:14)

aabiraam  egipthilea  vanthapoathu,  egipthiyar  antha  sthireeyai  miguntha  azhagu'l'lava'len’ru  ka'ndaarga'l.  (aathiyaagamam  12:14)

பார்வோனுடைய  பிரபுக்களும்  அவளைக்  கண்டு,  பார்வோனுக்கு  முன்பாக  அவளைப்  புகழ்ந்தார்கள்.  அப்பொழுது  அந்த  ஸ்திரீ  பார்வோனுடைய  அரமனைக்குக்  கொண்டுபோகப்பட்டாள்.  (ஆதியாகமம்  12:15)

paarvoanudaiya  pirabukka'lum  ava'laik  ka'ndu,  paarvoanukku  munbaaga  ava'laip  pugazhnthaarga'l.  appozhuthu  antha  sthiree  paarvoanudaiya  aramanaikkuk  ko'ndupoagappattaa'l.  (aathiyaagamam  12:15)

அவள்  நிமித்தம்  அவன்  ஆபிராமுக்குத்  தயைபாராட்டினான்;  அவனுக்கு  ஆடுமாடுகளும்,  கழுதைகளும்,  வேலைக்காரரும்,  வேலைக்காரிகளும்,  கோளிகைக்  கழுதைகளும்,  ஒட்டகங்களும்  கிடைத்தது.  (ஆதியாகமம்  12:16)

ava'l  nimiththam  avan  aabiraamukkuth  thayaipaaraattinaan;  avanukku  aadumaaduga'lum,  kazhuthaiga'lum,  vealaikkaararum,  vealaikkaariga'lum,  koa'ligaik  kazhuthaiga'lum,  ottagangga'lum  kidaiththathu.  (aathiyaagamam  12:16)

ஆபிராமுடைய  மனைவியாகிய  சாராயின்  நிமித்தம்  கர்த்தர்  பார்வோனையும்,  அவன்  வீட்டாரையும்  மகா  வாதைகளால்  வாதித்தார்.  (ஆதியாகமம்  12:17)

aabiraamudaiya  manaiviyaagiya  saaraayin  nimiththam  karththar  paarvoanaiyum,  avan  veettaaraiyum  mahaa  vaathaiga'laal  vaathiththaar.  (aathiyaagamam  12:17)

அப்பொழுது  பார்வோன்  ஆபிராமை  அழைத்து:  நீ  எனக்கு  ஏன்  இப்படிச்  செய்தாய்?  இவள்  உன்  மனைவி  என்று  நீ  எனக்கு  அறிவியாமற்போனதென்ன?  (ஆதியாகமம்  12:18)

appozhuthu  paarvoan  aabiraamai  azhaiththu:  nee  enakku  ean  ippadich  seythaay?  iva'l  un  manaivi  en’ru  nee  enakku  a’riviyaama’rpoanathenna?  (aathiyaagamam  12:18)

இவளை  உன்  சகோதரி  என்று  நீ  சொல்லவேண்டுவது  என்ன?  இவளை  நான்  எனக்கு  மனைவியாகக்கொண்டிருப்பேனே;  இதோ  உன்  மனைவி;  இவளை  அழைத்துக்கொண்டுபோ  என்று  சொன்னான்.  (ஆதியாகமம்  12:19)

iva'lai  un  sagoathari  en’ru  nee  sollavea'nduvathu  enna?  iva'lai  naan  enakku  manaiviyaagakko'ndiruppeanea;  ithoa  un  manaivi;  iva'lai  azhaiththukko'ndupoa  en’ru  sonnaan.  (aathiyaagamam  12:19)

பார்வோன்  அவனைக்  குறித்துத்  தன்  மனுஷருக்குக்  கட்டளை  கொடுத்தான்;  அவர்கள்  அவனையும்,  அவன்  மனைவியையும்  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  அனுப்பிவிட்டார்கள்.  (ஆதியாகமம்  12:20)

paarvoan  avanaik  ku’riththuth  than  manusharukkuk  katta'lai  koduththaan;  avarga'l  avanaiyum,  avan  manaiviyaiyum  avanukku  u'ndaana  ellaavat’raiyum  anuppivittaarga'l.  (aathiyaagamam  12:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!