Monday, June 06, 2016

2 Thesaloanikkeayar 1 | 2 தெசலோனிக்கேயர் 1 | 2 Thessalonians 1

பவுலும்,  சில்வானும்,  தீமோத்தேயும்,  நம்முடைய  பிதாவாகிய  தேவனுக்குள்ளும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்குள்ளும்  இருக்கிற  தெசலோனிக்கேயர்  சபைக்கு  எழுதுகிறதாவது:  (2தெசலோனிக்கேயர்  1:1)

pavulum,  silvaanum,  theemoaththeayum,  nammudaiya  pithaavaagiya  theavanukku'l'lum,  karththaraagiya  iyeasuki’risthuvukku'l'lum  irukki’ra  thesaloanikkeayar  sabaikku  ezhuthugi’rathaavathu:  (2thesaloanikkeayar  1:1)

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (2தெசலோனிக்கேயர்  1:2)

nammudaiya  pithaavaagiya  theavanaalum  karththaraagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (2thesaloanikkeayar  1:2)

சகோதரரே,  நாங்கள்  எப்பொழுதும்  உங்களுக்காகத்  தேவனை  ஸ்தோத்திரிக்கக்  கடனாளிகளாயிருக்கிறோம்;  உங்கள்  விசுவாசம்  மிகவும்  பெருகுகிறபடியினாலும்,  நீங்களெல்லாரும்  ஒருவரிலொருவர்  வைத்திருக்கிற  அன்பு  அதிகரிக்கிறபடியினாலும்,  அப்படிச்  செய்கிறது  தகுதியாயிருக்கிறது.  (2தெசலோனிக்கேயர்  1:3)

sagoathararea,  naangga'l  eppozhuthum  ungga'lukkaagath  theavanai  sthoaththirikkak  kadanaa'liga'laayirukki’roam;  ungga'l  visuvaasam  migavum  perugugi’rapadiyinaalum,  neengga'lellaarum  oruvariloruvar  vaiththirukki’ra  anbu  athigarikki’rapadiyinaalum,  appadich  seygi’rathu  thaguthiyaayirukki’rathu.  (2thesaloanikkeayar  1:3)

நீங்கள்  சகிக்கிற  சகல  துன்பங்களிலும்  உபத்திரவங்களிலும்  பொறுமையையும்  விசுவாசத்தையும்  காண்பிக்கிறதினிமித்தம்  உங்களைக்குறித்து  நாங்கள்  தேவனுடைய  சபைகளில்  மேன்மைபாராட்டுகிறோம்.  (2தெசலோனிக்கேயர்  1:4)

neengga'l  sagikki’ra  sagala  thunbangga'lilum  ubaththiravangga'lilum  po’rumaiyaiyum  visuvaasaththaiyum  kaa'nbikki’rathinimiththam  ungga'laikku’riththu  naangga'l  theavanudaiya  sabaiga'lil  meanmaipaaraattugi’roam.  (2thesaloanikkeayar  1:4)

நீங்கள்  தேவனுடைய  ராஜ்யத்தினிமித்தம்  பாடு  அநுபவிக்கிறவர்களாயிருக்க,  அந்த  ராஜ்யத்திற்கு  நீங்கள்  பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு,  தேவன்  நியாயமான  தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு,  அதுவே  அத்தாட்சியாயிருக்கிறது.  (2தெசலோனிக்கேயர்  1:5)

neengga'l  theavanudaiya  raajyaththinimiththam  paadu  anubavikki’ravarga'laayirukka,  antha  raajyaththi’rku  neengga'l  paaththiraren’re'n'nappadumpadikku,  theavan  niyaayamaana  theerppuchseygi’ravarenbatha’rku,  athuvea  aththaadchiyaayirukki’rathu.  (2thesaloanikkeayar  1:5)

உங்களை  உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு  உபத்திரவத்தையும்,  உபத்திரவப்படுகிற  உங்களுக்கு  எங்களோடேகூட  இளைப்பாறுதலையும்  பிரதிபலனாகக்  கொடுப்பது  தேவனுக்கு  நீதியாயிருக்கிறதே.  (2தெசலோனிக்கேயர்  1:6)

ungga'lai  ubaththiravappaduththugi’ravarga'lukku  ubaththiravaththaiyum,  ubaththiravappadugi’ra  ungga'lukku  engga'loadeakooda  i'laippaa’ruthalaiyum  pirathipalanaagak  koduppathu  theavanukku  neethiyaayirukki’rathea.  (2thesaloanikkeayar  1:6)

தேவனை  அறியாதவர்களுக்கும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  சுவிசேஷத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களுக்கும்  நீதியுள்ள  ஆக்கினையைச்  செலுத்தும்படிக்கு,  (2தெசலோனிக்கேயர்  1:7)

theavanai  a’riyaathavarga'lukkum,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  suviseashaththi’rkuk  keezhppadiyaathavarga'lukkum  neethiyu'l'la  aakkinaiyaich  seluththumpadikku,  (2thesaloanikkeayar  1:7)

கர்த்தராகிய  இயேசு  தமது  வல்லமையின்  தூதரோடும்,  ஜுவாலித்து  எரிகிற  அக்கினியோடும்,  வானத்திலிருந்து  வெளிப்படும்போது  அப்படியாகும்.  (2தெசலோனிக்கேயர்  1:8)

karththaraagiya  iyeasu  thamathu  vallamaiyin  thootharoadum,  juvaaliththu  erigi’ra  akkiniyoadum,  vaanaththilirunthu  ve'lippadumpoathu  appadiyaagum.  (2thesaloanikkeayar  1:8)

அந்நாளிலே  தம்முடைய  பரிசுத்தவான்களில்  மகிமைப்படத்தக்கவராயும்,  நீங்கள்  எங்களுடைய  சாட்சியை  விசுவாசித்தபடியினாலே  உங்களிடத்திலும்,  விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும்  ஆச்சரியப்படத்தக்கவராயும்,  அவர்  வரும்போது,  (2தெசலோனிக்கேயர்  1:9)

annaa'lilea  thammudaiya  parisuththavaanga'lil  magimaippadaththakkavaraayum,  neengga'l  engga'ludaiya  saadchiyai  visuvaasiththapadiyinaalea  ungga'lidaththilum,  visuvaasikki’ravarga'lellaaridaththilum  aachchariyappadaththakkavaraayum,  avar  varumpoathu,  (2thesaloanikkeayar  1:9)

அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதானத்திலிருந்தும்,  அவருடைய  வல்லமை  பொருந்திய  மகிமையிலிருந்தும்  நீங்கலாகி,  நித்திய  அழிவாகிய  தண்டனையை  அடைவார்கள்.  (2தெசலோனிக்கேயர்  1:10)

avarga'l  karththarudaiya  sannithaanaththilirunthum,  avarudaiya  vallamai  porunthiya  magimaiyilirunthum  neenggalaagi,  niththiya  azhivaagiya  tha'ndanaiyai  adaivaarga'l.  (2thesaloanikkeayar  1:10)

ஆகையால்,  நம்முடைய  தேவனும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்  அளிக்கும்  கிருபையின்படியே,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  நாமம்  உங்களிடத்திலும்,  நீங்கள்  அவரிடத்திலும்  மகிமைப்படும்பொருட்டாக;  (2தெசலோனிக்கேயர்  1:11)

aagaiyaal,  nammudaiya  theavanum  karththaraagiya  iyeasuki’risthuvum  a'likkum  kirubaiyinpadiyea,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  naamam  ungga'lidaththilum,  neengga'l  avaridaththilum  magimaippadumporuttaaga;  (2thesaloanikkeayar  1:11)

நம்முடைய  தேவன்  உங்களைத்  தமது  அழைப்புக்குப்  பாத்திரராக்கவும்,  தமது  தயையுள்ள  சித்தம்  முழுவதையும்  விசுவாசத்தின்  கிரியையையும்  பலமாய்  உங்களிடத்தில்  நிறைவேற்றவும்  வேண்டுமென்று,  எப்பொழுதும்  உங்களுக்காக  வேண்டிக்கொள்ளுகிறோம்.  (2தெசலோனிக்கேயர்  1:12)

nammudaiya  theavan  ungga'laith  thamathu  azhaippukkup  paaththiraraakkavum,  thamathu  thayaiyu'l'la  siththam  muzhuvathaiyum  visuvaasaththin  kiriyaiyaiyum  balamaay  ungga'lidaththil  ni’raiveat’ravum  vea'ndumen’ru,  eppozhuthum  ungga'lukkaaga  vea'ndikko'l'lugi’roam.  (2thesaloanikkeayar  1:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!