Wednesday, June 08, 2016

2 Theemoaththeayu 2 | 2 தீமோத்தேயு 2 | 2 Timothy 2

ஆதலால்,  என்  குமாரனே,  நீ  கிறிஸ்து  இயேசுவிலுள்ள  கிருபையில்  பலப்படு.  (2தீமோத்தேயு  2:1)

aathalaal,  en  kumaaranea,  nee  ki’risthu  iyeasuvilu'l'la  kirubaiyil  balappadu.  (2theemoaththeayu  2:1)

அநேக  சாட்சிகளுக்கு  முன்பாக  நீ  என்னிடத்தில்  கேட்டவைகளை  மற்றவர்களுக்குப்  போதிக்கத்தக்க  உண்மையுள்ள  மனுஷர்களிடத்தில்  ஒப்புவி.  (2தீமோத்தேயு  2:2)

aneaga  saadchiga'lukku  munbaaga  nee  ennidaththil  keattavaiga'lai  mat’ravarga'lukkup  poathikkaththakka  u'nmaiyu'l'la  manusharga'lidaththil  oppuvi.  (2theemoaththeayu  2:2)

நீயும்  இயேசுகிறிஸ்துவுக்கு  நல்ல  போர்ச்சேவகனாய்த்  தீங்கநுபவி.  (2தீமோத்தேயு  2:3)

neeyum  iyeasuki’risthuvukku  nalla  poarchseavaganaayth  theengganubavi.  (2theemoaththeayu  2:3)

தண்டில்  சேவகம்பண்ணுகிற  எவனும்,  தன்னைச்  சேவகமெழுதிக்கொண்டவனுக்கு  ஏற்றவனாயிருக்கும்படி,  பிழைப்புக்கடுத்த  அலுவல்களில்  சிக்கிக்கொள்ளமாட்டான்.  (2தீமோத்தேயு  2:4)

tha'ndil  seavagampa'n'nugi’ra  evanum,  thannaich  seavagamezhuthikko'ndavanukku  eat’ravanaayirukkumpadi,  pizhaippukkaduththa  aluvalga'lil  sikkikko'l'lamaattaan.  (2theemoaththeayu  2:4)

மேலும்  ஒருவன்  மல்யுத்தம்பண்ணினாலும்,  சட்டத்தின்படி  பண்ணாவிட்டால்  முடிசூட்டப்படான்.  (2தீமோத்தேயு  2:5)

mealum  oruvan  malyuththampa'n'ninaalum,  sattaththinpadi  pa'n'naavittaal  mudisoottappadaan.  (2theemoaththeayu  2:5)

பிரயாசப்பட்டுப்  பயிரிடுகிறவன்  பலனில்  முந்திப்  பங்கடையவேண்டும்.  (2தீமோத்தேயு  2:6)

pirayaasappattup  payiridugi’ravan  palanil  munthip  panggadaiyavea'ndum.  (2theemoaththeayu  2:6)

நான்  சொல்லுகிறவைகளைச்  சிந்தித்துக்கொள்;  கர்த்தர்  எல்லாக்  காரியங்களிலும்  உனக்குப்  புத்தியைத்  தந்தருளுவார்.  (2தீமோத்தேயு  2:7)

naan  sollugi’ravaiga'laich  sinthiththukko'l;  karththar  ellaak  kaariyangga'lilum  unakkup  buththiyaith  thantharu'luvaar.  (2theemoaththeayu  2:7)

தாவீதின்  சந்ததியில்  பிறந்த  இயேசுகிறிஸ்து,  என்  சுவிசேஷத்தின்படியே,  மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று  நினைத்துக்கொள்.  (2தீமோத்தேயு  2:8)

thaaveethin  santhathiyil  pi’rantha  iyeasuki’risthu,  en  suviseashaththinpadiyea,  mariththoarilirunthezhuppappattavaren’ru  ninaiththukko'l.  (2theemoaththeayu  2:8)

இந்தச்  சுவிசேஷத்தினிமித்தம்  நான்  பாதகன்போலக்  கட்டப்பட்டு,  துன்பத்தை  அநுபவிக்கிறேன்;  தேவவசனமோ  கட்டப்பட்டிருக்கவில்லை.  (2தீமோத்தேயு  2:9)

inthach  suviseashaththinimiththam  naan  paathaganpoalak  kattappattu,  thunbaththai  anubavikki’rean;  theavavasanamoa  kattappattirukkavillai.  (2theemoaththeayu  2:9)

ஆகையால்,  தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்  கிறிஸ்து  இயேசுவினால்  உண்டான  இரட்சிப்பை  நித்திய  மகிமையோடே  பெற்றுக்கொள்ளும்படி,  சகலத்தையும்  அவர்கள்  நிமித்தமாகச்  சகிக்கிறேன்.  (2தீமோத்தேயு  2:10)

aagaiyaal,  therinthuko'l'lappattavarga'l  ki’risthu  iyeasuvinaal  u'ndaana  iradchippai  niththiya  magimaiyoadea  pet’rukko'l'lumpadi,  sagalaththaiyum  avarga'l  nimiththamaagach  sagikki’rean.  (2theemoaththeayu  2:10)

இந்த  வார்த்தை  உண்மையுள்ளது;  என்னவெனில்,  நாம்  அவரோடேகூட  மரித்தோமானால்,  அவரோடேகூடப்  பிழைத்துமிருப்போம்;  (2தீமோத்தேயு  2:11)

intha  vaarththai  u'nmaiyu'l'lathu;  ennavenil,  naam  avaroadeakooda  mariththoamaanaal,  avaroadeakoodap  pizhaiththumiruppoam;  (2theemoaththeayu  2:11)

அவரோடேகூடப்  பாடுகளைச்  சகித்தோமானால்  அவரோடேகூட  ஆளுகையும்  செய்வோம்;  நாம்  அவரை  மறுதலித்தால்,  அவரும்  நம்மை  மறுதலிப்பார்;  (2தீமோத்தேயு  2:12)

avaroadeakoodap  paaduga'laich  sagiththoamaanaal  avaroadeakooda  aa'lugaiyum  seyvoam;  naam  avarai  ma’ruthaliththaal,  avarum  nammai  ma’ruthalippaar;  (2theemoaththeayu  2:12)

நாம்  உண்மையில்லாதவர்களாயிருந்தாலும்,  அவர்  உண்மையுள்ளவராயிருக்கிறார்;  அவர்  தம்மைத்தாம்  மறுதலிக்கமாட்டார்.  (2தீமோத்தேயு  2:13)

naam  u'nmaiyillaathavarga'laayirunthaalum,  avar  u'nmaiyu'l'lavaraayirukki’raar;  avar  thammaiththaam  ma’ruthalikkamaattaar.  (2theemoaththeayu  2:13)

இவைகளை  அவர்களுக்கு  நினைப்பூட்டி,  ஒன்றுக்கும்  பிரயோஜனமில்லாமல்,  கேட்கிறவர்களைக்  கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான  வாக்குவாதம்  செய்யாதபடிக்கு,  கர்த்தருக்கு  முன்பாக  அவர்களுக்கு  எச்சரித்துப்  புத்திசொல்லு.  (2தீமோத்தேயு  2:14)

ivaiga'lai  avarga'lukku  ninaippootti,  on’rukkum  pirayoajanamillaamal,  keadki’ravarga'laik  kavizhththuppoadugi’ratha’rkeathuvaana  vaakkuvaatham  seyyaathapadikku,  karththarukku  munbaaga  avarga'lukku  echchariththup  buththisollu.  (2theemoaththeayu  2:14)

நீ  வெட்கப்படாத  ஊழியக்காரனாயும்  சத்திய  வசனத்தை  நிதானமாய்ப்  பகுத்துப்  போதிக்கிறவனாயும்  உன்னைத்  தேவனுக்கு  முன்பாக  உத்தமனாக  நிறுத்தும்படி  ஜாக்கிரதையாயிரு.  (2தீமோத்தேயு  2:15)

nee  vedkappadaatha  oozhiyakkaaranaayum  saththiya  vasanaththai  nithaanamaayp  paguththup  poathikki’ravanaayum  unnaith  theavanukku  munbaaga  uththamanaaga  ni’ruththumpadi  jaakkirathaiyaayiru.  (2theemoaththeayu  2:15)

சீர்கேடான  வீண்பேச்சுகளுக்கு  விலகியிரு;  அவைகளால்  (கள்ளப்போதகர்களான)  அவர்கள்  அதிக  அவபக்தியுள்ளவர்களாவார்கள்;  (2தீமோத்தேயு  2:16)

seerkeadaana  vee'npeachchuga'lukku  vilagiyiru;  avaiga'laal  (ka'l'lappoathagarga'laana)  avarga'l  athiga  avabakthiyu'l'lavarga'laavaarga'l;  (2theemoaththeayu  2:16)

அவர்களுடைய  வார்த்தை  அரிபிளவையைப்போலப்  படரும்;  இமெநேயும்  பிலேத்தும்  அப்படிப்பட்டவர்கள்;  (2தீமோத்தேயு  2:17)

avarga'ludaiya  vaarththai  aripi'lavaiyaippoalap  padarum;  imeneayum  pileaththum  appadippattavarga'l;  (2theemoaththeayu  2:17)

அவர்கள்  சத்தியத்தை  விட்டு  விலகி,  உயிர்த்தெழுதல்  நடந்தாயிற்றென்று  சொல்லி,  சிலருடைய  விசுவாசத்தைக்  கவிழ்த்துப்போடுகிறார்கள்.  (2தீமோத்தேயு  2:18)

avarga'l  saththiyaththai  vittu  vilagi,  uyirththezhuthal  nadanthaayit’ren’ru  solli,  silarudaiya  visuvaasaththaik  kavizhththuppoadugi’raarga'l.  (2theemoaththeayu  2:18)

ஆகிலும்  தேவனுடைய  உறுதியான  அஸ்திபாரம்  நிலைத்திருக்கிறது;  கர்த்தர்  தம்முடையவர்களை  அறிவாரென்பதும்,  கிறிஸ்துவின்  நாமத்தைச்  சொல்லுகிற  எவனும்  அநியாயத்தைவிட்டு  விலகக்கடவனென்பதும்,  அதற்கு  முத்திரையாயிருக்கிறது.  (2தீமோத்தேயு  2:19)

aagilum  theavanudaiya  u’ruthiyaana  asthibaaram  nilaiththirukki’rathu;  karththar  thammudaiyavarga'lai  a’rivaarenbathum,  ki’risthuvin  naamaththaich  sollugi’ra  evanum  aniyaayaththaivittu  vilagakkadavanenbathum,  atha’rku  muththiraiyaayirukki’rathu.  (2theemoaththeayu  2:19)

ஒரு  பெரிய  வீட்டிலே  பொன்னும்  வெள்ளியுமான  பாத்திரங்களுமல்லாமல்,  மரமும்  மண்ணுமான  பாத்திரங்களுமுண்டு;  அவைகளில்  சில  கனத்திற்கும்  சில  கனவீனத்திற்குமானவைகள்.  (2தீமோத்தேயு  2:20)

oru  periya  veettilea  ponnum  ve'l'liyumaana  paaththirangga'lumallaamal,  maramum  ma'n'numaana  paaththirangga'lumu'ndu;  avaiga'lil  sila  kanaththi’rkum  sila  kanaveenaththi’rkumaanavaiga'l.  (2theemoaththeayu  2:20)

ஆகையால்  ஒருவன்  இவைகளை  விட்டு,  தன்னைச்  சுத்திகரித்துக்கொண்டால்,  அவன்  பரிசுத்தமாக்கப்பட்டதும்,  எஜமானுக்கு  உபயோகமானதும்,  எந்த  நற்கிரியைக்கும்  ஆயத்தமாக்கப்பட்டதுமான  கனத்துக்குரிய  பாத்திரமாயிருப்பான்.  (2தீமோத்தேயு  2:21)

aagaiyaal  oruvan  ivaiga'lai  vittu,  thannaich  suththigariththukko'ndaal,  avan  parisuththamaakkappattathum,  ejamaanukku  ubayoagamaanathum,  entha  na’rkiriyaikkum  aayaththamaakkappattathumaana  kanaththukkuriya  paaththiramaayiruppaan.  (2theemoaththeayu  2:21)

அன்றியும்,  பாலியத்துக்குரிய  இச்சைகளுக்கு  நீ  விலகியோடி,  சுத்த  இருதயத்தோடே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுகிறவர்களுடனே,  நீதியையும்  விசுவாசத்தையும்  அன்பையும்  சமாதானத்தையும்  அடையும்படி  நாடு.  (2தீமோத்தேயு  2:22)

an’riyum,  paaliyaththukkuriya  ichchaiga'lukku  nee  vilagiyoadi,  suththa  iruthayaththoadea  karththaraith  thozhuthuko'l'lugi’ravarga'ludanea,  neethiyaiyum  visuvaasaththaiyum  anbaiyum  samaathaanaththaiyum  adaiyumpadi  naadu.  (2theemoaththeayu  2:22)

புத்தியீனமும்  அயுக்தமுமான  தர்க்கங்கள்  சண்டைகளைப்  பிறப்பிக்குமென்று  அறிந்து,  அவைகளுக்கு  விலகியிரு.  (2தீமோத்தேயு  2:23)

buththiyeenamum  ayukthamumaana  tharkkangga'l  sa'ndaiga'laip  pi’rappikkumen’ru  a’rinthu,  avaiga'lukku  vilagiyiru.  (2theemoaththeayu  2:23)

கர்த்தருடைய  ஊழியக்காரன்  சண்டைபண்ணுகிறவனாயிராமல்,  எல்லாரிடத்திலும்  சாந்தமுள்ளவனும்,  போதகசமர்த்தனும்,  தீமையைச்  சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.  (2தீமோத்தேயு  2:24)

karththarudaiya  oozhiyakkaaran  sa'ndaipa'n'nugi’ravanaayiraamal,  ellaaridaththilum  saanthamu'l'lavanum,  poathagasamarththanum,  theemaiyaich  sagikki’ravanumaayirukkavea'ndum.  (2theemoaththeayu  2:24)

எதிர்பேசுகிறவர்கள்  சத்தியத்தை  அறியும்படி  தேவன்  அவர்களுக்கு  மனந்திரும்புதலை  அருளத்தக்கதாகவும்,  (2தீமோத்தேயு  2:25)

ethirpeasugi’ravarga'l  saththiyaththai  a’riyumpadi  theavan  avarga'lukku  mananthirumbuthalai  aru'laththakkathaagavum,  (2theemoaththeayu  2:25)

பிசாசானவனுடைய  இச்சையின்படி  செய்ய  அவனால்  பிடிபட்டிருக்கிற  அவர்கள்  மறுபடியும்  மயக்கந்தெளிந்து  அவன்  கண்ணிக்கு  நீங்கத்தக்கதாகவும்,  சாந்தமாய்  அவர்களுக்கு  உபதேசிக்கவேண்டும்.  (2தீமோத்தேயு  2:26)

pisaasaanavanudaiya  ichchaiyinpadi  seyya  avanaal  pidipattirukki’ra  avarga'l  ma’rupadiyum  mayakkanthe'linthu  avan  ka'n'nikku  neenggaththakkathaagavum,  saanthamaay  avarga'lukku  ubatheasikkavea'ndum.  (2theemoaththeayu  2:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!