Wednesday, June 08, 2016

2 Theemoaththeayu 1 | 2 தீமோத்தேயு 1 | 2 Timothy 1

கிறிஸ்து  இயேசுவினால்  உண்டாயிருக்கிற  ஜீவனைப்பற்றிய  வாக்குத்தத்தத்தின்படி,  தேவனுடைய  சித்தத்தினாலே,  இயேசுகிறிஸ்துவின்  அப்போஸ்தலனாயிருக்கிற  பவுல்,  (2தீமோத்தேயு  1:1)

ki’risthu  iyeasuvinaal  u'ndaayirukki’ra  jeevanaippat’riya  vaakkuththaththaththinpadi,  theavanudaiya  siththaththinaalea,  iyeasuki’risthuvin  appoasthalanaayirukki’ra  pavul,  (2theemoaththeayu  1:1)

பிரியமுள்ள  குமாரனாகிய  தீமோத்தேயுவுக்கு  எழுதுகிறதாவது:  பிதாவாகிய  தேவனாலும்  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவினாலும்  கிருபையும்  இரக்கமும்  சமாதானமும்  உண்டாவதாக.  (2தீமோத்தேயு  1:2)

piriyamu'l'la  kumaaranaagiya  theemoaththeayuvukku  ezhuthugi’rathaavathu:  pithaavaagiya  theavanaalum  nammudaiya  karththaraagiya  ki’risthu  iyeasuvinaalum  kirubaiyum  irakkamum  samaathaanamum  u'ndaavathaaga.  (2theemoaththeayu  1:2)

நான்  இரவும்  பகலும்  இடைவிடாமல்  என்  ஜெபங்களில்  உன்னை  நினைத்து,  உன்  கண்ணீரை  ஞாபகம்பண்ணி,  சந்தோஷத்தால்  நிறையப்படும்படிக்கு  உன்னைக்  காண  வாஞ்சையாயிருந்து,  (2தீமோத்தேயு  1:3)

naan  iravum  pagalum  idaividaamal  en  jebangga'lil  unnai  ninaiththu,  un  ka'n'neerai  gnaabagampa'n'ni,  santhoashaththaal  ni’raiyappadumpadikku  unnaik  kaa'na  vaagnchaiyaayirunthu,  (2theemoaththeayu  1:3)

உன்னிலுள்ள  மாயமற்ற  விசுவாசத்தை  நினைவுகூருகிறதினால்,  என்  முன்னோர்கள்  முதற்கொண்டு  சுத்த  மனச்சாட்சியோடே  ஆராதித்துவரும்  தேவனை  நான்  ஸ்தோத்திரிக்கிறேன்.  (2தீமோத்தேயு  1:4)

unnilu'l'la  maayamat’ra  visuvaasaththai  ninaivukoorugi’rathinaal,  en  munnoarga'l  mutha’rko'ndu  suththa  manachsaadchiyoadea  aaraathiththuvarum  theavanai  naan  sthoaththirikki’rean.  (2theemoaththeayu  1:4)

அந்த  விசுவாசம்  முந்தி  உன்  பாட்டியாகிய  லோவிசாளுக்குள்ளும்  உன்  தாயாகிய  ஐனிக்கேயாளுக்குள்ளும்  நிலைத்திருந்தது;  அது  உனக்குள்ளும்  நிலைத்திருக்கிறதென்று  நிச்சயித்திருக்கிறேன்.  (2தீமோத்தேயு  1:5)

antha  visuvaasam  munthi  un  paattiyaagiya  loavisaa'lukku'l'lum  un  thaayaagiya  ainikkeayaa'lukku'l'lum  nilaiththirunthathu;  athu  unakku'l'lum  nilaiththirukki’rathen’ru  nichchayiththirukki’rean.  (2theemoaththeayu  1:5)

இதினிமித்தமாக,  நான்  உன்மேல்  என்  கைகளை  வைத்ததினால்  உனக்கு  உண்டான  தேவவரத்தை  நீ  அனல்மூட்டி  எழுப்பிவிடும்படி  உனக்கு  நினைப்பூட்டுகிறேன்.  (2தீமோத்தேயு  1:6)

ithinimiththamaaga,  naan  unmeal  en  kaiga'lai  vaiththathinaal  unakku  u'ndaana  theavavaraththai  nee  analmootti  ezhuppividumpadi  unakku  ninaippoottugi’rean.  (2theemoaththeayu  1:6)

தேவன்  நமக்குப்  பயமுள்ள  ஆவியைக்  கொடாமல்,  பலமும்  அன்பும்  தெளிந்த  புத்தியுள்ள  ஆவியையே  கொடுத்திருக்கிறார்.  (2தீமோத்தேயு  1:7)

theavan  namakkup  bayamu'l'la  aaviyaik  kodaamal,  balamum  anbum  the'lintha  buththiyu'l'la  aaviyaiyea  koduththirukki’raar.  (2theemoaththeayu  1:7)

ஆகையால்  நம்முடைய  கர்த்தரைப்  பற்றிய  சாட்சியைக்குறித்தாவது,  அவர்  நிமித்தம்  கட்டப்பட்டிருக்கிற  என்னைக்  குறித்தாவது,  நீ  வெட்கப்படாமல்,  தேவவல்லமைக்கேற்றபடி  சுவிசேஷத்திற்காக  என்னோடேகூடத்  தீங்கநுபவி.  (2தீமோத்தேயு  1:8)

aagaiyaal  nammudaiya  karththaraip  pat’riya  saadchiyaikku’riththaavathu,  avar  nimiththam  kattappattirukki’ra  ennaik  ku’riththaavathu,  nee  vedkappadaamal,  theavavallamaikkeat’rapadi  suviseashaththi’rkaaga  ennoadeakoodath  theengganubavi.  (2theemoaththeayu  1:8)

அவர்  நம்முடைய  கிரியைகளின்படி  நம்மை  இரட்சிக்காமல்,  தம்முடைய  தீர்மானத்தின்படியும்,  ஆதிகாலமுதல்  கிறிஸ்து  இயேசுவுக்குள்  நமக்கு  அருளப்பட்ட  கிருபையின்படியும்,  நம்மை  இரட்சித்து,  பரிசுத்த  அழைப்பினாலே  அழைத்தார்.  (2தீமோத்தேயு  1:9)

avar  nammudaiya  kiriyaiga'linpadi  nammai  iradchikkaamal,  thammudaiya  theermaanaththinpadiyum,  aathikaalamuthal  ki’risthu  iyeasuvukku'l  namakku  aru'lappatta  kirubaiyinpadiyum,  nammai  iradchiththu,  parisuththa  azhaippinaalea  azhaiththaar.  (2theemoaththeayu  1:9)

நம்முடைய  இரட்சகராகிய  இயேசுகிறிஸ்து  பிரசன்னமானதினாலே  அந்தக்  கிருபை  இப்பொழுது  வெளிப்படுத்தப்பட்டது;  அவர்  மரணத்தைப்  பரிகரித்து,  ஜீவனையும்  அழியாமையையும்  சுவிசேஷத்தினாலே  வெளியரங்கமாக்கினார்.  (2தீமோத்தேயு  1:10)

nammudaiya  iradchagaraagiya  iyeasuki’risthu  pirasannamaanathinaalea  anthak  kirubai  ippozhuthu  ve'lippaduththappattathu;  avar  mara'naththaip  parigariththu,  jeevanaiyum  azhiyaamaiyaiyum  suviseashaththinaalea  ve'liyaranggamaakkinaar.  (2theemoaththeayu  1:10)

அதற்கு  நான்  பிரசங்கியாகவும்,  அப்போஸ்தலனாகவும்,  புறஜாதியாருக்குப்  போதகனாகவும்  நியமிக்கப்பட்டேன்.  (2தீமோத்தேயு  1:11)

atha’rku  naan  pirasanggiyaagavum,  appoasthalanaagavum,  pu’rajaathiyaarukkup  poathaganaagavum  niyamikkappattean.  (2theemoaththeayu  1:11)

அதினிமித்தம்  நான்  இந்தப்  பாடுகளையும்  அனுபவிக்கிறேன்;  ஆயினும்,  நான்  வெட்கப்படுகிறதில்லை;  ஏனென்றால்,  நான்  விசுவாசித்திருக்கிறவர்  இன்னார்  என்று  அறிவேன்,  நான்  அவரிடத்தில்  ஒப்புக்கொடுத்ததை  அவர்  அந்நாள்வரைக்கும்  காத்துக்கொள்ள  வல்லவராயிருக்கிறாரென்று  நிச்சயித்துமிருக்கிறேன்.  (2தீமோத்தேயு  1:12)

athinimiththam  naan  inthap  paaduga'laiyum  anubavikki’rean;  aayinum,  naan  vedkappadugi’rathillai;  eanen’raal,  naan  visuvaasiththirukki’ravar  innaar  en’ru  a’rivean,  naan  avaridaththil  oppukkoduththathai  avar  annaa'lvaraikkum  kaaththukko'l'la  vallavaraayirukki’raaren’ru  nichchayiththumirukki’rean.  (2theemoaththeayu  1:12)

நீ  கிறிஸ்து  இயேசுவைப்பற்றும்  விசுவாசத்தோடும்  அன்போடும்  என்னிடத்தில்  கேட்டிருக்கிற  ஆரோக்கியமான  வசனங்களின்  சட்டத்தைக்  கைக்கொண்டிரு.  (2தீமோத்தேயு  1:13)

nee  ki’risthu  iyeasuvaippat’rum  visuvaasaththoadum  anboadum  ennidaththil  keattirukki’ra  aaroakkiyamaana  vasanangga'lin  sattaththaik  kaikko'ndiru.  (2theemoaththeayu  1:13)

உன்னிடத்தில்  ஒப்புவிக்கப்பட்ட  அந்த  நற்பொருளை  நமக்குள்ளே  வாசம்பண்ணுகிற  பரிசுத்த  ஆவியினாலே  காத்துக்கொள்.  (2தீமோத்தேயு  1:14)

unnidaththil  oppuvikkappatta  antha  na’rporu'lai  namakku'l'lea  vaasampa'n'nugi’ra  parisuththa  aaviyinaalea  kaaththukko'l.  (2theemoaththeayu  1:14)

ஆசியாநாட்டிலிருக்கிற  யாவரும்,  அவர்களில்  பிகெல்லு  எர்மொகெனே  முதலாய்  என்னைவிட்டு  விலகினார்களென்று  அறிந்திருக்கிறாய்.  (2தீமோத்தேயு  1:15)

aasiyaanaattilirukki’ra  yaavarum,  avarga'lil  pigellu  ermogenea  muthalaay  ennaivittu  vilaginaarga'len’ru  a’rinthirukki’raay.  (2theemoaththeayu  1:15)

ஒநேசிப்போருவின்  வீட்டாருக்குக்  கர்த்தர்  இரக்கங்  கட்டளையிடுவாராக;  அவன்  அநேகந்தரம்  என்னை  இளைப்பாற்றினான்;  என்  விலங்கைக்குறித்து  அவன்  வெட்கப்படவுமில்லை;  (2தீமோத்தேயு  1:16)

oneasippoaruvin  veettaarukkuk  karththar  irakkang  katta'laiyiduvaaraaga;  avan  aneagantharam  ennai  i'laippaat’rinaan;  en  vilanggaikku’riththu  avan  vedkappadavumillai;  (2theemoaththeayu  1:16)

அவன்  ரோமாவில்  வந்திருந்தபோது  அதிக  ஜாக்கிரதையாய்  என்னைத்  தேடிக்  கண்டுபிடித்தான்.  (2தீமோத்தேயு  1:17)

avan  roamaavil  vanthirunthapoathu  athiga  jaakkirathaiyaay  ennaith  theadik  ka'ndupidiththaan.  (2theemoaththeayu  1:17)

அந்நாளிலே  அவன்  கர்த்தரிடத்தில்  இரக்கத்தைக்  கண்டடையும்படி,  கர்த்தர்  அவனுக்கு  அனுக்கிரகஞ்செய்வாராக;  அவன்  எபேசுவிலே  செய்த  பற்பல  உதவிகளையும்  நீ  நன்றாய்  அறிந்திருக்கிறாயே.  (2தீமோத்தேயு  1:18)

annaa'lilea  avan  karththaridaththil  irakkaththaik  ka'ndadaiyumpadi,  karththar  avanukku  anukkiragagnseyvaaraaga;  avan  ebeasuvilea  seytha  pa’rpala  uthaviga'laiyum  nee  nan’raay  a’rinthirukki’raayea.  (2theemoaththeayu  1:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!