Saturday, June 11, 2016

2 Peathuru 1 | 2 பேதுரு 1 | 2 Peter 1


நம்முடைய  தேவனும்  இரட்சகருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்துவினுடைய  நீதியால்  எங்களைப்போல  அருமையான  விசுவாசத்தைப்  பெற்றவர்களுக்கு,  இயேசுகிறிஸ்துவின்  ஊழியக்காரனும்  அப்போஸ்தலனுமாகிய  சீமோன்  பேதுரு  எழுதுகிறதாவது:  (2பேதுரு  1:1)

nammudaiya  theavanum  iradchagarumaayirukki’ra  iyeasuki’risthuvinudaiya  neethiyaal  engga'laippoala  arumaiyaana  visuvaasaththaip  pet’ravarga'lukku,  iyeasuki’risthuvin  oozhiyakkaaranum  appoasthalanumaagiya  seemoan  peathuru  ezhuthugi’rathaavathu:  (2peathuru  1:1)

தேவனையும்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுவையும்  அறிகிற  அறிவினால்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  பெருகக்கடவது.  (2பேதுரு  1:2)

theavanaiyum  nammudaiya  karththaraagiya  iyeasuvaiyum  a’rigi’ra  a’rivinaal  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  perugakkadavathu.  (2peathuru  1:2)

தம்முடைய  மகிமையினாலும்  காருணியத்தினாலும்  நம்மை  அழைத்தவரை  அறிகிற  அறிவினாலே  ஜீவனுக்கும்  தேவபக்திக்கும்  வேண்டிய  யாவற்றையும்,  அவருடைய  திவ்விய  வல்லமையானது  நமக்குத்  தந்தருளினதுமன்றி,  (2பேதுரு  1:3)

thammudaiya  magimaiyinaalum  kaaru'niyaththinaalum  nammai  azhaiththavarai  a’rigi’ra  a’rivinaalea  jeevanukkum  theavabakthikkum  vea'ndiya  yaavat’raiyum,  avarudaiya  thivviya  vallamaiyaanathu  namakkuth  thantharu'linathuman’ri,  (2peathuru  1:3)

இச்சையினால்  உலகத்திலுண்டான  கேட்டுக்குத்  தப்பி,  திவ்விய  சுபாவத்துக்குப்  பங்குள்ளவர்களாகும்பொருட்டு,  மகா  மேன்மையும்  அருமையுமான  வாக்குத்தத்தங்களும்  அவைகளினாலே  நமக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.  (2பேதுரு  1:4)

ichchaiyinaal  ulagaththilu'ndaana  keattukkuth  thappi,  thivviya  subaavaththukkup  panggu'l'lavarga'laagumporuttu,  mahaa  meanmaiyum  arumaiyumaana  vaakkuththaththangga'lum  avaiga'linaalea  namakku  a'likkappattirukki’rathu.  (2peathuru  1:4)

இப்படியிருக்க,  நீங்கள்  அதிக  ஜாக்கிரதையுள்ளவர்களாய்  உங்கள்  விசுவாசத்தோடே  தைரியத்தையும்,  தைரியத்தோடே  ஞானத்தையும்,  (2பேதுரு  1:5)

ippadiyirukka,  neengga'l  athiga  jaakkirathaiyu'l'lavarga'laay  ungga'l  visuvaasaththoadea  thairiyaththaiyum,  thairiyaththoadea  gnaanaththaiyum,  (2peathuru  1:5)

ஞானத்தோடே  இச்சையடக்கத்தையும்,  இச்சையடக்கத்தோடே  பொறுமையையும்,  பொறுமையோடே  தேவபக்தியையும்,  (2பேதுரு  1:6)

gnaanaththoadea  ichchaiyadakkaththaiyum,  ichchaiyadakkaththoadea  po’rumaiyaiyum,  po’rumaiyoadea  theavabakthiyaiyum,  (2peathuru  1:6)

தேவபக்தியோடே  சகோதர  சிநேகத்தையும்,  சகோதர  சிநேகத்தோடே  அன்பையும்  கூட்டி  வழங்குங்கள்.  (2பேதுரு  1:7)

theavabakthiyoadea  sagoathara  sineagaththaiyum,  sagoathara  sineagaththoadea  anbaiyum  kootti  vazhanggungga'l.  (2peathuru  1:7)

இவைகள்  உங்களுக்கு  உண்டாயிருந்து  பெருகினால்,  உங்களை  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை  அறிகிற  அறிவிலே  வீணரும்  கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.  (2பேதுரு  1:8)

ivaiga'l  ungga'lukku  u'ndaayirunthu  peruginaal,  ungga'lai  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvai  a’rigi’ra  a’rivilea  vee'narum  kaniyat’ravarga'lumaayirukkavottaathu.  (2peathuru  1:8)

இவைகள்  இல்லாதவன்  எவனோ,  அவன்  முன்செய்த  பாவங்களறத்  தான்  சுத்திகரிக்கப்பட்டதை  மறந்து  கண்சொருகிப்போன  குருடனாயிருக்கிறான்.  (2பேதுரு  1:9)

ivaiga'l  illaathavan  evanoa,  avan  munseytha  paavangga'la’rath  thaan  suththigarikkappattathai  ma’ranthu  ka'nsorugippoana  kurudanaayirukki’raan.  (2peathuru  1:9)

ஆகையால்,  சகோதரரே,  உங்கள்  அழைப்பையும்  தெரிந்துகொள்ளுதலையும்  உறுதியாக்கும்படி  ஜாக்கிரதையாயிருங்கள்;  இவைகளைச்  செய்தால்  நீங்கள்  ஒருக்காலும்  இடறிவிழுவதில்லை.  (2பேதுரு  1:10)

aagaiyaal,  sagoathararea,  ungga'l  azhaippaiyum  therinthuko'l'luthalaiyum  u’ruthiyaakkumpadi  jaakkirathaiyaayirungga'l;  ivaiga'laich  seythaal  neengga'l  orukkaalum  ida’rivizhuvathillai.  (2peathuru  1:10)

இவ்விதமாய்,  நம்முடைய  கர்த்தரும்  இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவினுடைய  நித்திய  ராஜ்யத்துக்குட்படும்  பிரவேசம்  உங்களுக்குப்  பரிபூரணமாய்  அளிக்கப்படும்.  (2பேதுரு  1:11)

ivvithamaay,  nammudaiya  karththarum  iradchagarumaagiya  iyeasuki’risthuvinudaiya  niththiya  raajyaththukkudpadum  piraveasam  ungga'lukkup  paripoora'namaay  a'likkappadum.  (2peathuru  1:11)

இதினிமித்தம்,  இவைகளை  நீங்கள்  அறிந்தும்,  நீங்கள்  இப்பொழுது  அறிந்திருக்கிற  சத்தியத்தில்  உறுதிப்பட்டிருந்தும்,  உங்களுக்கு  இவைகளை  எப்பொழுதும்  நினைப்பூட்ட  நான்  அசதியாயிரேன்.  (2பேதுரு  1:12)

ithinimiththam,  ivaiga'lai  neengga'l  a’rinthum,  neengga'l  ippozhuthu  a’rinthirukki’ra  saththiyaththil  u’ruthippattirunthum,  ungga'lukku  ivaiga'lai  eppozhuthum  ninaippootta  naan  asathiyaayirean.  (2peathuru  1:12)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  எனக்கு  அறிவித்தபடி  நான்  என்  கூடாரத்தைவிட்டுப்போவது  சீக்கிரத்தில்  நேரிடுமென்று  அறிந்து,  (2பேதுரு  1:13)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthu  enakku  a’riviththapadi  naan  en  koodaaraththaivittuppoavathu  seekkiraththil  nearidumen’ru  a’rinthu,  (2peathuru  1:13)

இந்தக்  கூடாரத்தில்  நான்  இருக்குமளவும்  உங்களை  நினைப்பூட்டி  எழுப்பிவிடுவது  நியாயமென்று  எண்ணுகிறேன்.  (2பேதுரு  1:14)

inthak  koodaaraththil  naan  irukkuma'lavum  ungga'lai  ninaippootti  ezhuppividuvathu  niyaayamen’ru  e'n'nugi’rean.  (2peathuru  1:14)

மேலும்,  நான்  சென்றுபோனபின்பு  இவைகளை  நீங்கள்  எப்பொழுதும்  நினைத்துக்கொள்ள  ஏதுவுண்டாயிருக்கும்படி  பிரயத்தனம்பண்ணுவேன்.  (2பேதுரு  1:15)

mealum,  naan  sen’rupoanapinbu  ivaiga'lai  neengga'l  eppozhuthum  ninaiththukko'l'la  eathuvu'ndaayirukkumpadi  pirayaththanampa'n'nuvean.  (2peathuru  1:15)

நாங்கள்  தந்திரமான  கட்டுக்கதைகளைப்  பின்பற்றினவர்களாக  அல்ல,  அவருடைய  மகத்துவத்தைக்  கண்ணாரக்  கண்டவர்களாகவே  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  வல்லமையையும்  வருகையையும்  உங்களுக்கு  அறிவித்தோம்.  (2பேதுரு  1:16)

naangga'l  thanthiramaana  kattukkathaiga'laip  pinpat’rinavarga'laaga  alla,  avarudaiya  magaththuvaththaik  ka'n'naarak  ka'ndavarga'laagavea  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  vallamaiyaiyum  varugaiyaiyum  ungga'lukku  a’riviththoam.  (2peathuru  1:16)

இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவரிடத்தில்  பிரியமாயிருக்கிறேன்  என்று  சொல்லுகிற  சத்தம்  உன்னதமான  மகிமையிலிருந்து  அவருக்கு  உண்டாகி,  பிதாவாகிய  தேவனால்  அவர்  கனத்தையும்  மகிமையையும்  பெற்றபோது,  (2பேதுரு  1:17)

ivar  ennudaiya  neasakumaaran,  ivaridaththil  piriyamaayirukki’rean  en’ru  sollugi’ra  saththam  unnathamaana  magimaiyilirunthu  avarukku  u'ndaagi,  pithaavaagiya  theavanaal  avar  kanaththaiyum  magimaiyaiyum  pet’rapoathu,  (2peathuru  1:17)

அவரோடேகூட  நாங்கள்  பரிசுத்த  பருவதத்திலிருக்கையில்,  வானத்திலிருந்து  பிறந்த  அந்தச்  சத்தத்தைக்கேட்டோம்.  (2பேதுரு  1:18)

avaroadeakooda  naangga'l  parisuththa  paruvathaththilirukkaiyil,  vaanaththilirunthu  pi’rantha  anthach  saththaththaikkeattoam.  (2peathuru  1:18)

அதிக  உறுதியான  தீர்க்கதரிசனவசனமும்  நமக்கு  உண்டு;  பொழுது  விடிந்து  விடிவெள்ளி  உங்கள்  இருதயங்களில்  உதிக்குமளவும்  இருளுள்ள  ஸ்தலத்தில்  பிரகாசிக்கிற  விளக்கைப்போன்ற  அவ்வசனத்தைக்  கவனித்திருப்பது  நலமாயிருக்கும்.  (2பேதுரு  1:19)

athiga  u’ruthiyaana  theerkkatharisanavasanamum  namakku  u'ndu;  pozhuthu  vidinthu  vidive'l'li  ungga'l  iruthayangga'lil  uthikkuma'lavum  iru'lu'l'la  sthalaththil  piragaasikki’ra  vi'lakkaippoan’ra  avvasanaththaik  kavaniththiruppathu  nalamaayirukkum.  (2peathuru  1:19)

வேதத்திலுள்ள  எந்தத்  தீர்க்கதரிசனமும்  சுயதோற்றமான  பொருளையுடையதாயிராதென்று  நீங்கள்  முந்தி  அறியவேண்டியது.  (2பேதுரு  1:20)

veathaththilu'l'la  enthath  theerkkatharisanamum  suyathoat’ramaana  poru'laiyudaiyathaayiraathen’ru  neengga'l  munthi  a’riyavea'ndiyathu.  (2peathuru  1:20)

தீர்க்கதரிசனமானது  ஒருகாலத்திலும்  மனுஷருடைய  சித்தத்தினாலே  உண்டாகவில்லை;  தேவனுடைய  பரிசுத்த  மனுஷர்கள்  பரிசுத்த  ஆவியினாலே  ஏவப்பட்டுப்  பேசினார்கள்.  (2பேதுரு  1:21)

theerkkatharisanamaanathu  orukaalaththilum  manusharudaiya  siththaththinaalea  u'ndaagavillai;  theavanudaiya  parisuththa  manusharga'l  parisuththa  aaviyinaalea  eavappattup  peasinaarga'l.  (2peathuru  1:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!