Monday, June 06, 2016

1 Thesaloanikkeayar 3 | 1 தெசலோனிக்கேயர் 3 | 1 Thessalonians 3

ஆகையால்,  நாங்கள்  இனிப்  பொறுத்திருக்கக்கூடாமல்,  அத்தேனே  பட்டணத்தில்  தனித்துவிடப்படுகிறது  நன்மையென்று  நினைத்து,  (1தெசலோனிக்கேயர்  3:1)

aagaiyaal,  naangga'l  inip  po’ruththirukkakkoodaamal,  aththeanea  patta'naththil  thaniththuvidappadugi’rathu  nanmaiyen’ru  ninaiththu,  (1thesaloanikkeayar  3:1)

இந்த  உபத்திரவங்களினாலே  ஒருவனும்  அசைக்கப்படாதபடிக்கு  உங்களைத்  திடப்படுத்தவும்,  உங்கள்  விசுவாசத்தைப்பற்றி  உங்களுக்குப்  புத்திசொல்லவும்,  நம்முடைய  சகோதரனும்  தேவ  ஊழியக்காரனும்  கிறிஸ்துவின்  சுவிசேஷத்தில்  எங்கள்  உடன்வேலையாளுமாகிய  தீமோத்தேயுவை  அனுப்பினோம்.  (1தெசலோனிக்கேயர்  3:2)

intha  ubaththiravangga'linaalea  oruvanum  asaikkappadaathapadikku  ungga'laith  thidappaduththavum,  ungga'l  visuvaasaththaippat’ri  ungga'lukkup  buththisollavum,  nammudaiya  sagoatharanum  theava  oozhiyakkaaranum  ki’risthuvin  suviseashaththil  engga'l  udanvealaiyaa'lumaagiya  theemoaththeayuvai  anuppinoam.  (1thesaloanikkeayar  3:2)

இப்படிப்பட்ட  உபத்திரவங்களைச்  சகிக்க  நாம்  நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்களே.  (1தெசலோனிக்கேயர்  3:3)

ippadippatta  ubaththiravangga'laich  sagikka  naam  niyamikkappattirukki’roamen’ru  neengga'l  a’rinthirukki’reerga'lea.  (1thesaloanikkeayar  3:3)

நமக்கு  உபத்திரவம்  வருமென்று  நாங்கள்  உங்களிடத்திலிருந்தபோது,  உங்களுக்கு  முன்னறிவித்தோம்;  அப்படியே  வந்து  நேரிட்டதென்றும்  அறிந்திருக்கிறீர்கள்.  (1தெசலோனிக்கேயர்  3:4)

namakku  ubaththiravam  varumen’ru  naangga'l  ungga'lidaththilirunthapoathu,  ungga'lukku  munna’riviththoam;  appadiyea  vanthu  nearittathen’rum  a’rinthirukki’reerga'l.  (1thesaloanikkeayar  3:4)

ஆகையால்,  நான்  இனிப்  பொறுத்திருக்கக்கூடாமல்,  எங்கள்  வேலை  வீணாய்ப்  போகத்தக்கதாகச்  சோதனைக்காரன்  உங்களைச்  சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று,  உங்கள்  விசுவாசத்தை  அறியும்படிக்கு,  அவனை  அனுப்பினேன்.  (1தெசலோனிக்கேயர்  3:5)

aagaiyaal,  naan  inip  po’ruththirukkakkoodaamal,  engga'l  vealai  vee'naayp  poagaththakkathaagach  soathanaikkaaran  ungga'laich  soathanaikkudpaduththinathu'ndoaven’ru,  ungga'l  visuvaasaththai  a’riyumpadikku,  avanai  anuppinean.  (1thesaloanikkeayar  3:5)

இப்பொழுது  தீமோத்தேயு  உங்களிடத்திலிருந்து  எங்களிடத்தில்  வந்து,  உங்கள்  விசுவாசத்தையும்  அன்பையும்  குறித்தும்,  நீங்கள்  எப்பொழுதும்  எங்களைப்  பட்சமாய்  நினைத்துக்கொண்டு,  நாங்கள்  உங்களைக்  காண  வாஞ்சையாயிருக்கிறதுபோல  நீங்களும்  எங்களைக்  காண  வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக்குறித்தும்,  எங்களுக்கு  நற்செய்தி  சொன்னதினாலே,  (1தெசலோனிக்கேயர்  3:6)

ippozhuthu  theemoaththeayu  ungga'lidaththilirunthu  engga'lidaththil  vanthu,  ungga'l  visuvaasaththaiyum  anbaiyum  ku’riththum,  neengga'l  eppozhuthum  engga'laip  padchamaay  ninaiththukko'ndu,  naangga'l  ungga'laik  kaa'na  vaagnchaiyaayirukki’rathupoala  neengga'lum  engga'laik  kaa'na  vaagnchaiyaayirukki’reerga'lenbathaikku’riththum,  engga'lukku  na’rseythi  sonnathinaalea,  (1thesaloanikkeayar  3:6)

சகோதரரே,  எங்களுக்கு  நேரிட்ட  எல்லா  இக்கட்டிலும்  உபத்திரவத்திலும்  உங்கள்  விசுவாசத்தினாலே  உங்களைக்குறித்து  ஆறுதலடைந்தோம்.  (1தெசலோனிக்கேயர்  3:7)

sagoathararea,  engga'lukku  nearitta  ellaa  ikkattilum  ubaththiravaththilum  ungga'l  visuvaasaththinaalea  ungga'laikku’riththu  aa’ruthaladainthoam.  (1thesaloanikkeayar  3:7)

நீங்கள்  கர்த்தருக்குள்  நிலைத்திருந்தால்  நாங்கள்  பிழைத்திருப்போம்.  (1தெசலோனிக்கேயர்  3:8)

neengga'l  karththarukku'l  nilaiththirunthaal  naangga'l  pizhaiththiruppoam.  (1thesaloanikkeayar  3:8)

மேலும்,  நம்முடைய  தேவனுக்கு  முன்பாக  நாங்கள்  உங்களைக்குறித்து  அடைந்திருக்கிற  மிகுந்த  சந்தோஷத்திற்காக,  நாங்கள்  தேவனுக்கு  எவ்விதமாய்  ஸ்தோத்திரம்  செலுத்துவோம்?  (1தெசலோனிக்கேயர்  3:9)

mealum,  nammudaiya  theavanukku  munbaaga  naangga'l  ungga'laikku’riththu  adainthirukki’ra  miguntha  santhoashaththi’rkaaga,  naangga'l  theavanukku  evvithamaay  sthoaththiram  seluththuvoam?  (1thesaloanikkeayar  3:9)

உங்கள்  முகத்தைக்  கண்டு,  உங்கள்  விசுவாசத்தின்  குறைவுகளை  நிறைவாக்கும்பொருட்டு,  இரவும்  பகலும்  மிகவும்  வேண்டிக்கொள்ளுகிறோமே.  (1தெசலோனிக்கேயர்  3:10)

ungga'l  mugaththaik  ka'ndu,  ungga'l  visuvaasaththin  ku’raivuga'lai  ni’raivaakkumporuttu,  iravum  pagalum  migavum  vea'ndikko'l'lugi’roamea.  (1thesaloanikkeayar  3:10)

நம்முடைய  பிதாவாகிய  தேவனும்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்  உங்களிடத்திற்கு  எங்களை  நேராக  வழிநடத்துவாராக.  (1தெசலோனிக்கேயர்  3:11)

nammudaiya  pithaavaagiya  theavanum  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvum  ungga'lidaththi’rku  engga'lai  nearaaga  vazhinadaththuvaaraaga.  (1thesaloanikkeayar  3:11)

நாங்கள்  உங்களிடத்தில்  வைத்திருக்கிற  அன்புக்கொப்பாய்,  நீங்களும்  ஒருவரிடத்தில்  ஒருவர்  வைக்கும்  அன்பிலும்  மற்றெல்லா  மனுஷரிடத்தில்  வைக்கும்  அன்பிலும்  கர்த்தர்  உங்களைப்  பெருகவும்  நிலைத்தோங்கவும்  செய்து,  (1தெசலோனிக்கேயர்  3:12)

naangga'l  ungga'lidaththil  vaiththirukki’ra  anbukkoppaay,  neengga'lum  oruvaridaththil  oruvar  vaikkum  anbilum  mat’rellaa  manusharidaththil  vaikkum  anbilum  karththar  ungga'laip  perugavum  nilaiththoanggavum  seythu,  (1thesaloanikkeayar  3:12)

இவ்விதமாய்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து  தமது  பரிசுத்தவான்கள்  அனைவரோடுங்கூட  வரும்போது,  நீங்கள்  நம்முடைய  பிதாவாகிய  தேவனுக்கு  முன்பாகப்  பிழையற்ற  பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி  உங்கள்  இருதயங்களை  ஸ்திரப்படுத்துவாராக.  (1தெசலோனிக்கேயர்  3:13)

ivvithamaay  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthu  thamathu  parisuththavaanga'l  anaivaroadungkooda  varumpoathu,  neengga'l  nammudaiya  pithaavaagiya  theavanukku  munbaagap  pizhaiyat’ra  parisuththamu'l'lavarga'laayirukkumpadi  ungga'l  iruthayangga'lai  sthirappaduththuvaaraaga.  (1thesaloanikkeayar  3:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!